Advertisment

உலகிலேயே மிகப்பெரிய காசி பைரவர் திருக்கோவில்! - விஜயா கண்ணன்

/idhalgal/om/largest-kasi-bhairava-temple-world-vijaya-kannan

சிவனின் மறு அவதாரம்தான் ஸ்வர்ணாகர்ஷண பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் காலபைரவரின் சந்நிதியானது சிறிய அளவில் தெற்குநோக்கி அமைந்திருக்கும். ஈரோடு மாவட்டம், காங்கேயம் மெயின்ரோடு, அவல்பூந்துறை இராட்டைசுற்றி பாளையத்தில் அமைந் துள்ள கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதுவரை உலகில் எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது, 39 அடி காலபைரவர் சிலை மிகப் பிரம்மாண்டமாக நிறுவப் பட்டுள்ளது.

Advertisment

இந்த சிலை 'மய்ண்வ்ன்ங் இர்ர்ந் ர்ச் ரர்ழ்ப்க் தங்ஸ்ரீர்ழ்க்' எனும

சிவனின் மறு அவதாரம்தான் ஸ்வர்ணாகர்ஷண பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் காலபைரவரின் சந்நிதியானது சிறிய அளவில் தெற்குநோக்கி அமைந்திருக்கும். ஈரோடு மாவட்டம், காங்கேயம் மெயின்ரோடு, அவல்பூந்துறை இராட்டைசுற்றி பாளையத்தில் அமைந் துள்ள கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதுவரை உலகில் எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது, 39 அடி காலபைரவர் சிலை மிகப் பிரம்மாண்டமாக நிறுவப் பட்டுள்ளது.

Advertisment

இந்த சிலை 'மய்ண்வ்ன்ங் இர்ர்ந் ர்ச் ரர்ழ்ப்க் தங்ஸ்ரீர்ழ்க்' எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது. இக் கோவிலின் திருப்பணியானது ஏழு வருடங்களாக பல குரு மார்களின் ஆசியோடும், பெரியோர்களின் ஆசிர்வாதத் தோடும் நடைபெற்றுவந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி (மாசி 29) திங்கட்கிழமை காலை 10.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறவுள் ளது.

ff

ஒரு கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டால் மூன்று ஜென்மங்களின் பாவங்கள் தீரு மென்பது ஐதீகம். இதுவரை எந்தக் கோவில் கும்பாபிஷேகத்தி லும் இல்லாதவாறு, இந்தக் கோவிலில் மக்கள் பார்வை யாளராக மட்டுமல்லாமல் ஒரு அங்கமாகக் கலந்துகொண்டு அபிஷேக ஆராதனை செய்யும் வாய்ப்பிருப்பது தனிச்சிறப்பு. இக்கோவிலின் மூலவரான ஸ்வர்ணாகஷர்ண பைரவர் ஆரோக்கியத்திற்கும் செல்வ வளத்திற்குமான அட்சய பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு அமையப்பெற்றுள்ளார். நாம் எதை முழுமனதாக அர்ப்பணிக்கிறோமோ அதைப் பலமடங்காகப் பெருக்கிக் கொடுக்கும் வல்லமை பெற்றவர். இந்த ஆலயத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள 650 கிலோ பஞ்சலோக சிலைக்கு ஆரோக்கியத்தின் வடிவமாக நெய்யும், செல்வத்தின் வடிவமாக நாணயங்களும் அர்ப் பணிக்கப்படும்.

இந்த பைரவர் கோவிலில் சமீபத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த பக்தி சம்பவம் நடந்துள்ளது. ஸ்வர்ண பைரவர் சிலையைத்தேடி நாகம் ஒன்று இந்த திருக்கோவிலிலுள்ளே நுழைந்து பைரவரின் சிலையின்மீது ஏறிநின்று படமெடுத்தாடி பைரவரை வணங்கிவிட்டு, பூஜை செய்வதுபோல் பைரவர் காலடியில் பூக்களைப்போட்டும் சென்றுள்ளது. இதையறிந்த அக்கம்பக்கத்து கிராம மக்கள், ஊர்மக்கள் அனைவரும் வந்து இந்த அதிசய சம்பவத்தை சி.சி.டிவி கேமராவில் எடுக்கப்பட்டதைப் பார்த்து பரவசமடைந்தார்கள்.

Advertisment

ff

இந்த தென்காசி பைரவர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக நட்சத்திர கலசத்திற்கான முன்பதிவு இப்போது நடைபெற்றுவருகிறது. உங்கள் பிறந்த நட்சத்திரங்களைக்கொண்டு உருவேற்றிய தண்ணீரில் ஸ்ரீஸ்வர்ண பைரவருக்கு அபிஷேகம் செய்து, அபிஷேக கலசம், அர்ச்சனைப் பிரசாதம், பைரவர் விபூதியுடன் சக்திவாய்ந்த ஸ்வர்ண பைரவர் மகா யந்திரம், பூஜை செய்த காப்புகளும், ஆர்வமுடன் விவரம் கேட்கும் பக்தகோடிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.

கால் பெருவிரல் ரேகை ஜோதிடர் விஜய் சுவாமிஜி இந்த திருக்கோவில் கும்பா பிஷேக ஏற்பாடுகளை தலைமை யேற்று செய்துவருகிறார்.

ஈரோடு பைரவர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்குபெற விரும்பும் பக்தர்கள் மேலும் விவரங்களைப்பெற தொடர்பு கைபேசி எண்கள்: 98424 99006, 95857 66669.

om010123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe