லலிதாம்பிகை தரும் பெருஞ்செல்வம்!

/idhalgal/om/lalaitaamapaikaai-tarauma-paeraunacaelavama

பொதுவாகப் பெண்கள் ஆடை, ஆபரணங்கள், அலங்காரம் ஆகியவற்றை அதிகம் விரும்புவார்கள். விதவிதமான ஆபரணங்களை வாங்குவார்கள். மனிதர்களுக்கே இப்படியென்றால் நம்மையாளும் உலகநாயகியான அம்பிகையின் பேரழகையும், அவளுக்கு செய்யப்படும் அலங்காரத்தைப் பற்றியும் சொல்லவும் வேண்டுமா? எத்தனை வகையான அலங்காரங்கள், ஆபரணங்கள் உண்டோ அத்தனையையும் கோவில்களில் குடிகொண்ட அம்பிகைக்கு அணிவித்து பக்தர்கள் அழகுபார்ப்பார்கள். அத்தகைய அன்னை தனக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்களில், காலுக்கு அழகுசேர்க்கும் கொலுசு இல்லாததால் அதைத் தன்னுடைய பக்தையிடம் கேட்டு அணிந்து மகிழ்ந்தாள். இந்த சம்பவம் நடைபெற்ற இடம் திருமீயச்சூர்.

திருவாரூர் மாவட்டத்தில் பேரளம் அருகேயுள்ள திருமீயச்சூரில் குடிகொண்டுள்ள லலிதாம்பிகா சமேத மேகநாத சுவாமி திருக்கோவில் (பெருங்கோவில்) சூரிய பகவான் வழிபட்டுப் பேறுபெற்ற புனிதத் தலம். இந்த தலத்தின் சிறப்பைப் பற்றி திருஞான சம்பந்தர்-"காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டிமாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்மீயச்சூரைத் தொழுது வினையை வீட்டுமே' என்னும் திருப்பதிகத்தை (இரண்டாம் திருமுறை) பாடினார்.

அதேபோன்று பெருங்கோவிலின் வடக்குப் பிராகாரத்தில் தனிக்கோவிலாக இருக்கும் இளங்கோவிலான- மின்னும் மேகலை சமேத புவனேஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி,

"தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்

வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்

கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையாற்

கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே'

பொதுவாகப் பெண்கள் ஆடை, ஆபரணங்கள், அலங்காரம் ஆகியவற்றை அதிகம் விரும்புவார்கள். விதவிதமான ஆபரணங்களை வாங்குவார்கள். மனிதர்களுக்கே இப்படியென்றால் நம்மையாளும் உலகநாயகியான அம்பிகையின் பேரழகையும், அவளுக்கு செய்யப்படும் அலங்காரத்தைப் பற்றியும் சொல்லவும் வேண்டுமா? எத்தனை வகையான அலங்காரங்கள், ஆபரணங்கள் உண்டோ அத்தனையையும் கோவில்களில் குடிகொண்ட அம்பிகைக்கு அணிவித்து பக்தர்கள் அழகுபார்ப்பார்கள். அத்தகைய அன்னை தனக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்களில், காலுக்கு அழகுசேர்க்கும் கொலுசு இல்லாததால் அதைத் தன்னுடைய பக்தையிடம் கேட்டு அணிந்து மகிழ்ந்தாள். இந்த சம்பவம் நடைபெற்ற இடம் திருமீயச்சூர்.

திருவாரூர் மாவட்டத்தில் பேரளம் அருகேயுள்ள திருமீயச்சூரில் குடிகொண்டுள்ள லலிதாம்பிகா சமேத மேகநாத சுவாமி திருக்கோவில் (பெருங்கோவில்) சூரிய பகவான் வழிபட்டுப் பேறுபெற்ற புனிதத் தலம். இந்த தலத்தின் சிறப்பைப் பற்றி திருஞான சம்பந்தர்-"காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டிமாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்மீயச்சூரைத் தொழுது வினையை வீட்டுமே' என்னும் திருப்பதிகத்தை (இரண்டாம் திருமுறை) பாடினார்.

அதேபோன்று பெருங்கோவிலின் வடக்குப் பிராகாரத்தில் தனிக்கோவிலாக இருக்கும் இளங்கோவிலான- மின்னும் மேகலை சமேத புவனேஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி,

"தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்

வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்

கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையாற்

கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே'

என்னும் பதிகத்தை (திருக்குறுந்தொகை)

திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.

lalithambigaiசுயம்புவான ஸ்ரீமேகநாத சுவாமி, ஸ்ரீசகலபுவனேஸ்வரர் ஆகிய இரண்டு சிவபெருமான் கோவில்களை ஒருங்கே கொண்ட இந்த ஆலயம் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது.

முன்னொரு சமயம் சூரிய பகவான் தவறு செய்து சிவபெருமான் கோபத்தினால் சாபம் பெற்றார். அதைப் போக்கிக்கொள்ள திருமீயச்சூரில் ஏழு மாதங்கள் கடுந்தவம் செய்து சாபவிமோசனம் பெற்றார். இதனால் சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமும், அவரை வணங்கவும் ஒவ்வொரு வருடம் சித்திரை மாதம் 21-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதிவரை சூரியனின் ஒளியானது உதயகாலத்தில் மூலவர் மேகநாத சுவாமியின்மீது படர்கிறது. இந்த அதிசய நிகழ்ச்சியானது சோழர்காலக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

சூரிய பகவானுக்கு சாபவிமோசனம் கொடுக்கும் விஷயத்தில் சற்று கோபமடைந்தாள் பார்வதிதேவி. அதனைத் தணிக்க பார்வதிதேவியின் முகத்தினருகே சிவபெருமான் கையை வைத்து சாந்தப்படுத்தும் கோலம் க்ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பத்தில் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த பார்வதிதேவியின் வலப்புற முகத்தைப் பார்த்தால் கோபமாகவும், இடப்புறம் சிரித்த முகமாகவும் இருக்கும்படி அற்புதமாகச் செதுக்கியுள்ளனர். இல்லற வாழ்க்கையில் கணவன்- மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்னும் வாழ்வியல் அடிப்படைத் தத்துவத்தை உணர்த்தும் இந்த க்ஷேத்திர புராணேஸ்வரரை வழிபட்டால் கணவன்- மனைவிக்கிடையே உறவு மேலும் மேம்படும் என்பது ஐதீகம்.

சங்க இலக்கியங்களில் "கொற்றவை' என அழைக்கப்பட்ட துர்க்கையை வீரத்தின் வெற்றிக்கடவுளாக அன்றைய தமிழர்கள் மதித்தனர்.

"மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அத்தினைப் புறனே'

என தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.

"வெற்றிவேல் போர்க் கொற்றவை சிறுவ' என திருமுருகாற்றுப்படையில் பாடப்பட்டுள்ளது. இப்படி சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல சங்க இலக்கியங்களில் கொற்றவை பற்றிக் குறிப்புகள் உள்ளன. மற்ற இடங்களில் இருப்பதைக் காட்டிலும் மாறுபட்ட நிலையில் இக்கோவிலில் இருக்கும் அஷ்டபுஜ துர்க்கை சிலையை அமைத்துள்ளனர்.

துர்க்கை தனது இடக்கையில் சுகப்பிரம்மமான கிளியுடன் சாந்தநிலையில் காட்சியளிக்கிறாள். இந்த துர்க்கையிடம் நமது கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு மனமுருகி வேண்டிக்கொண்டால், பச்சைக்கிளியானது இங்கிருந்து பறந்து அம்பாளிடம் நமக்காகத் தூது செல்லுகிறது. கிளி பறந்து சென்று வரும் அதிசயக் காட்சியை இங்கு மட்டுமே காணலாம். மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உருவ பொம்மை மட்டுமே உண்டு.

பெருங்கோவிலானது, படுத்திருக்கும் யானையின் பின்புறம் போன்ற அமைப்பில் (கஜப்பிருஷ்ட விமானம்) கம்பீரமாகத் திகழ்கிறது.

பாண்டாஸுரனை அழிப்பதற்காக அக்னியிலிருந்து தோன்றிய பராசக்தியின் உருவத்திற்கு "லலிதா' என்று பெயர். லலிதா என்றால் சந்தோஷத்தைத் தருபவள் என்னும் பொருளுண்டு.

ஸம்பத்கரீ, அச்வாரூடா, வாராஹி, சியாமளா, பாலா போன்ற முக்கிய பரிவார தேவதைகளுடன் சக்ர ராஜம் எனும் ரதத்தில் ஏறி பாண்டாஸுரனுடன் அன்னை லலிதாம்பிகை போர்புரிந்து, அசுரனை வென்று உலகைக் காப்பாற்றிய செய்தியை புராணங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

பகவான் வேதவியாசர் இயற்றிய பதினெண் புராணங்களில் பிரம்மாண்ட புராணத்தின் உத்தர காண்டத்தில், எல்லா மந்திரங்களுக்கும் ஒரு மகுடமாக விளங்கும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை அமைத்தார்.

"ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராக்ஞீ

ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேஸ்வரீ

சிதக்னிகுண்ட ஸம்பூதா

தேவகார்ய ஸமுத்யதா'

எனத் தொடங்கும் ஸ்ரீலலிதா சஹஸ்ர

நாமத்தை மகாவிஷ்ணுவின் அம்சமான ஹயக்ரீவர் அகத்திய முனிவருக்கு முதலில் உபதேசித்து, திருமீயச்சூர் சென்று அன்னையை வழிபடுமாறு பணித்தார்.

தெற்கு நோக்கி ஸ்ரீசக்கர பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சிதரும் அன்னை லலிதாம்பிகையை அகத்திய முனிவர் வழிபட்டு வைரம், நீலம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், வைடூர்யம் போன்ற நவரத்தினங்களை அடிப்படையாகக் கொண்டு, "மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே' எனத் தொடங்கும் "ஸ்ரீலலிதா நவரத்தின மாலை' எனும் நூலை அழகுத் தமிழில் இயற்றியுள்ளார்.

அன்னையின் திருநாமத்தைப் போற்றி இயற்றப்பட்ட ஸ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தையும், ஸ்ரீலலிதா நவரத்தின மாலையையும் பாராயணம் செய்தால் எல்லா தோஷங்களும் நீங்கி செல்வவளம் கிட்டும். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நாட்களில் மாலை நேரத்தில் நம் இல்லங்களில் படித்தால் நன்மைகளைத் தங்குதடையின்றிப் பெறலாம்.

பெங்களூரில் வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் பக்தியுடன் லலிதா சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும் வழக்கமுடையவர். 1999-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் இவருடைய கனவில் அம்பாள் (லலிதாம்பிகை) தோன்றி, தன் காலுக்கு வெள்ளிக்கொலுசு செய்து போடுமாறு கூறி மறைந்தாள். கனவில் வந்த அம்பாள் எந்த கோவிலில் வீற்றிருக்கிறாள் என்பதையறிய பல கோவில்களுக்குச் சென்று விசாரித்தார்.

ஒருவழியாக திருமீயச்சூர் லலிதாம்பிகை என்பதை உறுதிசெய்து, கோவிலுக்கு வந்து அர்ச்சகர்களிடம் தான் கண்ட கனவைப் பற்றித் தெரிவித்து, கொலுசு அணிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

"அம்பாளுக்கு இதுவரை வெள்ளிக்கொலுசு அணிவிக்கும் முறை இல்லை.

மேலும் காலில் கொலுசுப் போடவேண்டுமானால் துவாரம் இருக்கவேண்டும்' எனக் கூறி, அந்த அம்மையாரின் கோரிக்கையை நிராகரித்தனர்.

இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்தியதால் அர்ச்சகர்கள் அம்பாளின் கால் பகுதியை நன்கு பரிசோதித்தபோது கொலுசு போடுவதற்கான துவாரம் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

ஆலய நிர்வாகிகளும், அர்ச்சகர்களும் திகைத்தனர். பல ஆண்டுகளாக அம்பாளுக்கு தினமும் அபிஷேகம் செய்வதால், அபிஷேகப் பொருட்கள் அடைத்துக்கொண்டதால் துவாரம் வெளியே தெரியவில்லை. அந்த அம்மையார் கொண்டுவந்த வெள்ளிக் கொலுசினை லலிதாம்பிகையின் இரு கால்களுக்கும் அணிவித்து சிறப்புப் பூஜை செய்தனர். அன்றுமுதல் அம்பாளுக்கு பக்தர்கள் தங்களின் பிரார்த்தனை நிறைவேற வெள்ளிக்கொலுசு அணிவிக்கும் வழக்கம் தொடங்கியது.

கலையழகுடன் காட்சி தரும் லலிதாம்பிகையை வணங்கினால் நம் வாழ்வில் சகல சௌபாக்கியமும், செல்வமும், செழிப்பும் உண்டாகும்.

இதையும் படியுங்கள்
Subscribe