Advertisment

தந்தை - மகன் உறவை பலப்படுதும் குறிஞ்சிப்பாடி கும்பேஸ்வரர்! - பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/om/kurinjipadi-kumbheswarar-strengthens-father-son-relationship-pao-balajiganesh

நாம் பெற்ற பிள்ளைகள் நம் பேச்சைக் கேட்பதில்லை' என்று வருந்தும் பெற்றோர் கள் ஏராளம். அந்தக் குறையைப் போக்க ஒரு கோவில் உள்ளது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் அமைந் துள்ள மங்களாம்பிகை உடனுறை கும்பேஸ் வரர் ஆலயம்தான் அது.

Advertisment

"என் மகன் குமரன் இருக்கும் இடத்தி லேயே எனக்குக் கோவில் கட்டுங்கள்' என்று பரமனே கூறி கட்டப்பட்ட கோவில் இது. சூரசம்ஹார நிகழ்வில் மூன்று நாட்கள் தனித்தனியாக சூரசம்ஹாரம் நடக்கும் ஆலயமும் இதுதான்.

kk

சுமார் 500 ஆண்டுகளுக்குமுன் குறிஞ்சிப்பாடி ஒரு சின்னஞ்சிறு கிராமம். இதில் வணிகம் செய்யும் செங்குந்தர் இனத் தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வந்தனர். சின்னஞ்சிறு கிராமம் என்பதால் இந்த கிராமத்தில் கோவில்கள் கிடையாது. இவ்வூர் வணிகர்கள் "நமது ஊரில் ஒரு ஆலயம் வேண்டும்' என்னும் கோரிக்கையை ஊர்க் கூட்டத்தில் வைத்தனர்.

ஊர்த் தலைவரும் அதையேற்றார். பொதுமக்கள் விருப்பப்படியே ஒரு கோவில் அமைக்க திட்டமிட்டனர். என்ன கோவில் அமைக்கலாம் என்ற ஒரு குழப்பம் இருந்தது. எல்லாருமே ஒருமித்த குரலாக செங்குந்த மரபினரின் இஷ்ட தெய்வமான முருகனுக்கு ஆலயம் அமைக்க முடிவுசெய்தனர்.

ஆனால் அதில் ஒருவர் மட்டும் "சிவாலயம் அமைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்க, அங்கிருந்தவர்கள் அனைவரும் நிராகரித்துவிட்டனர். "ஊரே கூடி ஒரு முடிவு செய்யும்போது நாம் என்ன செய்யப்போகி றோம்' என்னும் வருத்தத்தோடு, "பரமனே, நீ எங்கிருந்தாலும் உன்னை நான் நேசிப்பேன்' என்று கூறி, அன்று முதல் திருப்பாதிரிப்புலியூரில் இருக்கும் பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு தினமும் சென்று வணங்கிவந்தார்.

ஊர்மக்கள் விருப்பப்படியே அங்கு தண்டபாணி ஆலயம் சிறிதாக கீற்றுக் கொட்டகையில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர்.

காலங்கள் உருண்டோடின. வயது மூப்பு காரணமாக தினந்தோறும் திருப்பாதிரிப்புலியூர் சென்றுவர அந்த சிவ பக்தருக்கு முடிய வில்லை. அவர் மகேஸ்வரனிடம், "பரமனே, உன்னைக் காண எங்கள் ஊரில் ஒரு ஆலயம் கட்ட

நாம் பெற்ற பிள்ளைகள் நம் பேச்சைக் கேட்பதில்லை' என்று வருந்தும் பெற்றோர் கள் ஏராளம். அந்தக் குறையைப் போக்க ஒரு கோவில் உள்ளது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் அமைந் துள்ள மங்களாம்பிகை உடனுறை கும்பேஸ் வரர் ஆலயம்தான் அது.

Advertisment

"என் மகன் குமரன் இருக்கும் இடத்தி லேயே எனக்குக் கோவில் கட்டுங்கள்' என்று பரமனே கூறி கட்டப்பட்ட கோவில் இது. சூரசம்ஹார நிகழ்வில் மூன்று நாட்கள் தனித்தனியாக சூரசம்ஹாரம் நடக்கும் ஆலயமும் இதுதான்.

kk

சுமார் 500 ஆண்டுகளுக்குமுன் குறிஞ்சிப்பாடி ஒரு சின்னஞ்சிறு கிராமம். இதில் வணிகம் செய்யும் செங்குந்தர் இனத் தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வந்தனர். சின்னஞ்சிறு கிராமம் என்பதால் இந்த கிராமத்தில் கோவில்கள் கிடையாது. இவ்வூர் வணிகர்கள் "நமது ஊரில் ஒரு ஆலயம் வேண்டும்' என்னும் கோரிக்கையை ஊர்க் கூட்டத்தில் வைத்தனர்.

ஊர்த் தலைவரும் அதையேற்றார். பொதுமக்கள் விருப்பப்படியே ஒரு கோவில் அமைக்க திட்டமிட்டனர். என்ன கோவில் அமைக்கலாம் என்ற ஒரு குழப்பம் இருந்தது. எல்லாருமே ஒருமித்த குரலாக செங்குந்த மரபினரின் இஷ்ட தெய்வமான முருகனுக்கு ஆலயம் அமைக்க முடிவுசெய்தனர்.

ஆனால் அதில் ஒருவர் மட்டும் "சிவாலயம் அமைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்க, அங்கிருந்தவர்கள் அனைவரும் நிராகரித்துவிட்டனர். "ஊரே கூடி ஒரு முடிவு செய்யும்போது நாம் என்ன செய்யப்போகி றோம்' என்னும் வருத்தத்தோடு, "பரமனே, நீ எங்கிருந்தாலும் உன்னை நான் நேசிப்பேன்' என்று கூறி, அன்று முதல் திருப்பாதிரிப்புலியூரில் இருக்கும் பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு தினமும் சென்று வணங்கிவந்தார்.

ஊர்மக்கள் விருப்பப்படியே அங்கு தண்டபாணி ஆலயம் சிறிதாக கீற்றுக் கொட்டகையில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர்.

காலங்கள் உருண்டோடின. வயது மூப்பு காரணமாக தினந்தோறும் திருப்பாதிரிப்புலியூர் சென்றுவர அந்த சிவ பக்தருக்கு முடிய வில்லை. அவர் மகேஸ்வரனிடம், "பரமனே, உன்னைக் காண எங்கள் ஊரில் ஒரு ஆலயம் கட்டவேண்டும். அதற்கு நீதான் வழிவகை செய்யவேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

ஒருநாள் கோவிலிலேயே தங்கக்கூடிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் ஒரு வயதான முதியவர் தள்ளாடித் தள்ளாடி நடந்து இவரிடம் வந்து, "ஐயா, நீங்கள் மகேஸ்வரனிடம் கூறியதை நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். காலையில் ஊருக்குச் செல்லுங்கள். உங்கள் ஊர்த் தலைவரிடம் இதுபற்றி கூறுங்கள். நிச்சயமாக கோவில் கட்ட சம்மதிப்பார்கள்'' என்று கூறினார் அந்த முதியவர். "நீங்கள் யார் ஐயா?'' என்று சிவபக்தர் கேட்டார். "எல்லாரையும் எனக்குத் தெரியும். எல்லாமும் எனக்குத் தெரியும்'' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இவருக்கு ஒரே குழப்பம்.

காலையில் குறிஞ்சிப் பாடி நோக்கிப் பயணம் மேற்கொண்டார். ஊர்த் தலைவரிடம் இதைப் பற்றிக் கூறினார். ஊர்த் தலைவர் ஆச்சரியப்பட்டுப் போனார். "பெரியவரே, நேற்றிரவு என் கனவில் வந்த அதே நபர்தான் உன்னிடம் நேரில் வந்து கூறியிருக்கிறார். "என் மகனுக்காக நீங்கள் கட்டிய ஆலயத்தோடு, எனக்கும் ஆலயத்தை சேர்த்துக் கட்டுங்கள்' என்று கூறினார்.

உங்களுக்கு நேரில் காட்சி கொடுத்ததும், எனக்கு கனவில் வந்ததும் நிச்சயமாக அந்த மகேஸ்வரன்தான். அவரது அற்புதம் தான் இது. உடனடியாக கோவில் கட்ட நாம் முயற்சிகள் மேற்கொள்ளலாம்'' என்று கூறி, கோவில் கட்ட ஏற்பாடுகளைத் தொடங்கினார்.

சிவ பக்தருக்கு நேரிலும் ஊர்த் தலைவருக்கு கனவிலும் வந்த அந்த நாள் மாசிமகம். மாசி மகத்தின் நாயகன் கும்பகோணம் கும்பேஸ்வரர். அதனால் "இந்த ஆலயத்தில் நாம் பிரதிஷ்டை செய்யப்போகும் சிவனுக்கு கும்பேஸ்வரர் என்று திருநாமத்தைச் சூட்டலாம்' என்று அனைவரும் முடிவுசெய்து அதன்படியே சூட்டினர்.

முன்னால் அழகான அலங்கார வளைவு. அதில் சோமாஸ்கந்தர் நடுநாயகமாக காட்சிதர, இடப்பக்கம் பாலமுருகன், வலப்பக்கம் விநாயகர். இருபுறமும் நந்தி.

Advertisment

ff

அதைக் கடந்து உள்ளே செல்லும்பொழுது அலங்கார வளைவின்கீழே மாடத்தில் சுயசாம்பிகை, அதிகார நந்தியெம்பெருமான் அழகுற காட்சிதர, அவர்களை வணங்கி விட்டு உள்ளே சென்றால் மிகப்பெரிய மகாமண்டபம் உள்ளது. அதன் நடுவில் நந்தி, பலிபீடம். வலப்பக்கம் தெற்குதிசை நோக்கி மங்களாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது.

அர்த்த மண்ட பத்தின் முன்னர் இருபுறமும் துவார பாலகர்களான ஜெயன், விஜயன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்கள். அவர் களை வணங்கி விட்டு அர்த்த மண்டபத்திற்குச் சென்றால் மனோன் மணி அம்மை சந்நிதி உள்ளது.

கருவறையில் கிழக்குநோக்கி வட்ட பீடத்தில் பான லிங்கமாய் கும்பேஸ் வரர் தெய்வீகக் காட்சி தருகிறார்.

மேலே ருத்ராட்சங் களான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கோஷ்டத்தில் அண்ணாமலையார், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

கோஷ்டத்திற்கு அடுத்த பிராகாரத்தில் முதலில் நால்வர் சந்நிதி. அடுத்து மகா கணபதி, தர்மசாஸ்தா, ஐயப்பன், காசிவிசுவநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் காட்சி தருகிறார்கள். 63 நாயன்மார்களும் உற்சவர் திருமேனிகளாக காட்சியளிக்கிறார் கள். சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் மூர்த்தி நால்வருடன் தனிச் சந்நிதியில் உள்ளனர். நவகிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர் சந்நிதிகள் உள்ளன. ஆலயத்தில் மூலவராக முதன்முதலில் வழிபாடு செய்த தண்டபாணி சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது.

தந்தை- மகன் உறவு என்றும் சுமூகமாக இருக்கவேண்டும்; அதில் துளிகூட விரிசல் ஏற்படக்கூடாதென்று நாம் ஆசைப்படுவது நியாயம்தானே. ஏதோவொரு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சில விரிசல்கள் ஏற்படுவது சகஜம்தான். அந்த சிறு விரிசல்கள் பெரிதாகி விடாமல் தடுத்து நிறுத்த இவ்வாலயம் வந்து மகேஸ்வரனை மனதார வணங்கினால் போதும்; அப்பா- பிள்ளை உறவு ஒற்றுமையாக- மகிழ்ச்சியாக வாழ்நாள் முழுவதும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

ff

பொதுவாக கந்த சஷ்டி என்றால் சூரசம் ஹார நிகழ்வு கடைசி நாள் சஷ்டியன்று நிகழும். இதுதான் திருச் செந்தூர் உட்பட அனைத்து கோவில் களிலும் நடைபெறும் வைபவம். ஆனால் இக்கோவிலில் மூன்று நாட்கள் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுவது ஒரு ஆச்சரியமென்று கூறலாம்.

கந்தசஷ்டி உற்சவம் ஏழு நாட்கள் கொடியேற்றத்துடன் துவங்கி, காலை- மாலை இருவேளையும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, நவ வீரர்கள் புடைசூழ வீரபாகு மாடவீதி உலாவரும் நிகழ்வும் நடைபெறும்.

உற்சவத்தின் நான்காம் நாள் மங்களாம் பிகை சந்நிதியில் வேல் வாங்கப்பட்டு, ஐந்தாம் நாள் இரவு யானை முகாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வும். ஆறாம் நாள் இரவு சிங்கமுகாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வும், ஏழாம் நாள் சஷ்டியன்று சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வும் அற்புதமாய் நடைபெறும். இந்த மூன்று நாள் நிகழ்விலும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள்.

சூரசம்ஹாரம் நிறைவு பெற்ற மறுநாள் மாலை சுப்பிரமணியர்- வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

நீண்டநாட்களாகத் திருமணம் தடைப் பட்டு, மாங்கல்ய பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்கள், இவ்வாலயத்திலுள்ள கும்பேஸ்வரர் மற்றும் சுப்பிரமணியர் ஆகிய இரு சந்நிதிகளிலும் பிரார்த்தனை செய்யவேண்டும். பிரார்த்தனை நிறைவேறி திருமணம் கைகூடியவுடன், இவ்வாலயத்திலேயே திருமண வைபவத்தை நடத்துகிறார்கள். வெளியில் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றாலும், மங்கலநாண் எனப்படும் தாலிசூட்டும் நிகழ்வை கும்பேஸ்வரர் சந்நிதி முன்தான் நடத்துகிறார்கள்.

அதுமட்டுமல்ல; பிரார்த்தனை நிறைவேறியவுடன் பரமனுக்கு விபூதிக் காப்பு அணிவித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் வீட்டில் மழலைச் செல்வம் இல்லையென்றால் நம் வீடு களைகட்டாது. மழலைச் செல்வம் இல்லாத பெருங்குறையை இவ்வாலய மங்களாம்பிகை நிவர்த்திசெய்து வைக்கி றாள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மங்களாம்பிகை சந்நிதிமுன் நின்று கணவன்- மனைவி சமேதராக தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பிரார்த்தனை செய்தால்போதும். நிச்சயம் ஒரு வருடத்திற் குள் அவர்களுக்கு நல்ல செய்தி வருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். குழந்தை பிறந்த வுடன் 16 நாட்கள் கழித்து ஆலயத்திற்குக் கொண்டுவந்து பரமனின் சந்நிதியிலும் சுப்பிரமணியரின் சந்நிதியிலும் படுக்க வைத்து, "இது நீ கொடுத்த மழலைச் செல்வம். இது உன்னுடையது. நாங்கள் வளர்க்கிறோம்'' என்னும் உறுதிமொழியோடு குழந்தைகளைத் தூக்கிச் செல்கின்றனர்.

ஆடிப்பூரத்தன்று மங்களாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வளையல் சாற்றப்படும். அம்பாளுக்கு சாற்றப்பட்ட வளையல் மற்றும் மங்கலப் பொருட்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கிச் செல்லும் பக்தர்கள் தங்கள் பூஜையறையில் வைத்து தினமும் வழிபாடு செய்தால் வீட்டில் குறையில்லாமல் மகிழ்ச்சியான வாழ்க்கை நிறைவாகக் கிடைப்பதாக மெய்சிலிர்ப்புடன் கூறுகின்றனர்.

விநாயகப் பெருமானுக்கு மாத சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுப்பிரமணியருக்கு சஷ்டி திருக்கார்த்திகை, விசாகம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்.

ஐப்பசி மாதம் அன்னாபிஷேக நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் சோமவார நிகழ்வு நடைபெறுகிறது. இதில் பெண்கள் 108 எண்ணிக்கையில் வில்வம் அல்லது பூக்கள் வைத்து, "ஓம் நமசிவாயா' என்னும் மந்திரத்தை உச்சரித்தபடி ஆலயப் பிராகாரத்தை வலம்வருகிறார்கள். கார்த்திகை சோமவார தினத்தில் 108 வலம்புரிச் சங்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

63 நாயன்மார்களும் முக்தியடைந்த நட்சத்திரத்தில் குரு பூஜை நடைபெறுகிறது.

துர்க்கையம்மனுக்கு செவ்வாய், ஞாயிறு, வெள்ளி ஆகிய கிழமைகளில் ராகுகால நேரத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

காசி விஸ்வநாதர் சந்நிதி முன்பு பக்தர்கள் தியானத்தில் ஈடுபடும் காட்சியைக் காணலாம். கண்மூடி "ஓம் நமசிவாய' என்னும் மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தால் மன அமைதி, புத்துணர்ச்சி கிடைப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

பல சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தைக் கண்டுகளித்து இன்புற குறிஞ்சிப்பாடி வாருங்கள்.

om010522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe