சிவ அவதாரமான ஆதிசங்கரரையே ஒருவன் ஆபிசாரப் பிரயோகம் செய்து கடும் வயிற்றுவ-க்கு ஆளாக்கினான். அவர் கர்நாடக ஆத்ம-ங்க சிவனை வேண்ட, அவர் திருச்செந்தூர் சென்று கந்தனை வணங்குமாறு கூறினார். அவ்வாறே வந்து "சுப்ரமண்ய புஜங்கம்' என்னும் 33 துதிகளை முருகன்மீது பாடி நோய் நீங்கப்பெற்றார். முருகனது துதிகள் பக்தர்களின் அனைத்து இன்னல்களையும் போக்குபவை. கந்தசஷ்டி சமயத்தில் அவற்றைத் துதித்து நலம்பெறுவோம்.

முருகனின் திருநாமம் அனைத்து வினைகளையும் களைய வல்லது.

"குமார ஈசஸுனோ குஹ ஸ்கந்த

ஸேனாபதே சக்தி பாணே மயூராதிரூட

Advertisment

புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்திஹாரின்

ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம்.'

ஆதிசங்கரர் அருளிய இந்த சுலோகத்தின் தமிழாக்கம் பின் வருமாறு:

Advertisment

"பரமன்தன் குமரா, சேனாதிபதியே, குஹா, கந்தா, வேலா,

குறமகள் வள்ளிதனைக்கொண்டவா, குறையில் செல்வா

அறங்கொல் தாரகனை மாய்த்த அருளாளா அடியார்க்கு இன்ப

வரம்தரும் மயில்மேல்வீரா, வந்து என்னைக் காப்பாய் என்றும்!'

ஆதிசங்கரர் இந்தத் துதியில் முருகனின் பதினோரு நாமங்களைக் கூறி, தன்னை என்றும் ரட்சிக்க வேண்டுமென்று வேண்டுகிறார். என்னென்ன பெயர்களைக் கூறுகி றார்? குமரனே, பரமேஸ்வரனின் புதல்வனே, குஹனே, கந்தனே, தேவசேனாதிபதியே, சக்திவேலைத் தாங்கும் வேலவனே, மயில்மீது அமர் பவனே, வள்ளி மணவாளனே, பக்தர்களின் துயர்தீர்ப்பவனே, பிரபுவே, தாரகனை சம்ஹாரம் செய்தவனே ஆகிய பெயர்களைக்கூறி வேண்டுகிறார். ருத்ர ஏகாதசி என்று சொல்லுவதுபோலே 11 நாமங்கள். மகாவிஷ்ணுவுக்கு ஏகாதசி உபவாசம், துதி சிறந்தது என்றால், கந்தனுக்கு இந்த ஒருதுதியே போதும். உருக்கமான துதி. எளிமையான நாமங்களுடன்கூடிய துதி. காலையும் மாலையும், இரவில் தூங்கும் முன்பும், தூங்கி விழித்ததும் இந்த நாமங்கள் கூறிட அந்தநாள் பொன்நாளாகும் என்பதில் ஐயமில்லை. ஸ்காந்தம், சம்பவகாண்ட முதல் அத்தியாயம் 16 நாமங்களைக் கூறும்.

1. ஞானசக்த்யாத்மா- ஞானவேலை உடையவன், ஞான ஸ்வரூபன்.

2. ஸ்கந்த- ஒன்று சேர்ந்தவன், ஆதாரமானவன், சத்ருக்களை அழிப்பவன்.

3. அக்னிபூ- அக்னிப்பிழம்பு.

4. பாஹுலேயன்- கார்த்திகை மாதர்களின் புதல்வன். வீரதீரம் பொருந்திய கைகள் உடையவன்.

5. காங்கேயன்- கங்கையின் புதல்வன்.

6. சரவணோத்பவன்- சரவண பொய்கையில் உதித்தவன்.

7. கார்த்திகேயன்- கார்த்திகை மாதர்களால் பாலூட்டப்பட்டவன்.

8. குமாரன்- குழந்தையாக இருப்பவன்.

9. ஷண்முகன்- ஆறுமுகங்கள் உடையவன்.

10. குக்குடத்வஜன்- கோழிக்கொடியை உடையவன்.

11. சக்திதரன்- வேலைத் தாங்குபவன், வடிவேலன்.

12. குஹன்- சித்குகையில் இருப்பவன்.

13. ப்ரம்மசாரி- ப்ரம்மத்திலேயே லயித்திருப்பவன். (ஸுப்ரம்மண்யன்).

14. ஷாண்மாதுரன்- ஆறு கிருத்திகை மாதர்களைத் தாயாய்க் கொண்டவன்.

15. க்ரௌஞ்சபித்- க்ரௌஞ்சம் என்ற மலையைப் பிளந்தவன்; க்ரௌஞ்சனை வென்றவன்.

16. சிகிவாஹனன்- மயிலை வாகனமாக உடையவன்.

இந்த 16 நாமங்களைத் துதிக்க என்ன பலன் கிடைக்கும் என ஸ்காந்தம் சொல்கிறது. திருமணம் தடையின்றி நன்று நடைபெறும். செல்லமுடியாத வழியில் செல்லநேரும்போது தடைகள் இருக்காது.

dd

வெல்லமுடியாத காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.

கவிபுனைவதிலும், சாஸ்திரங்கள் படிப்பதிலும், நுணுக்க விஞ்ஞான அறிவுகளிலும் உன்னதம் கிடைக்கும். கன்னிகை கோருபவன் கன்னிகையையும், காரியங்களில் வெற்றியை வேண்டுபவன் வெற்றி யையும், சந்தான சௌபாக்கியம் வேண்டுபவனுக்கு குழந்தைகளும், பணத்தை வேண்டுபவனுக்கு பணமும் கிடைக்கப்பெறும்.

ஸ்காந்தத்தில் 35-ஆவது சம்பவ காண்டத்தில், முருகனின் மகிமைகளை சிவன் உமைக்கு ரகசியமாகக் கூறுகிறார். அதனில் இந்த 11 நாமங்களின் மகிமையை எவ்வாறு கூறுகிறார் என்று பார்ப்போமா!

குமார- குழந்தையாக, அழகாக இருப்பவன்.

ஈசஸுனோ- எனது, உனது ஸ்வரூபத்தைச் சேர்த்துக் கொண்டவன் முருகன். ஆகையால் ஆறுமுகன்.

குஹா- வேதாந்தங்களில் ஹ்ருதய கமலத்தில் நடுவிலுள்ள ஆகாசம் (இடைவெளி) குகை எனப்படுகிறது. அந்த இதயக்கமலத்தில் வசிப்பதால் குஹன்.

ஸ்கந்த- மூவுலகத்திலும் பராக்ரமத்தால் ஆக்ரமித்து சஞ்சரித்ததால் ஸ்கந்தன்.

ஸேனாபதே- தேவர்களால் நமஸ்கரிக்கப் படுபவன்; தேவர்களுக்கெல்லாம் தலைவன்; தேவர்கள் துக்கத்தைப் போக்குபவன்.

சக்திபாணே- வேலேந்தும் வேலவன்.

மயூராதிரூட- மயிலை வாகனமாக உடையவன்.

புளிந்தாத்மஜாகாந்த- வேடுவராஜனான நம்பியின் புதல்வி வள்ளியின் கணவன்.

ப்ரபோ- யாவருக்கும் தலைவன்.

தாரகாரி- தாரகாசுரனை அழித்தவன்.

பக்தார்த்திஹாரின்- பக்தர்களின் கஷ்டங்களை அழிப்பவன்.

சிவன் மேலும் கூறுவார். கந்தனுடைய நாமங் கள் பல. அவற்றில் ஏதாவது ஒன்றைக் கூறினா லும் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த் தங்களையும் பெறலாம். பிரம்மஹத்தி பாவங் களும் அண்டுவதில்லையாம். என்னே நாம் மகிமை!

இதற்கேற்ற அருணகிரியாரது கந்தரனுபூதி ஒன்று பார்ப்போமா.

"எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ

சிந்தாகுலமானவை தீர்த்து எனையாள்

கந்தா கதிர்வேலவனே உமையாள்

மைந்தா குமரா மறை நாயகனே.'

மற்றொரு கந்தர் அலங்காரம் சிந்திப்போமா.

"சேந்தனைக் கந்தனை செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல்

வேந்தனை செந்தமிழ் நூல்விரித்தோனை விளங்கு வள்ளி

காந்தனை கந்தக் கடம்பனை கார்மயில் வாகனனை

சாந்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒருதாழ்வில்லையே.'

கந்தன் திருநாமங்கள் பலவுள்ள இந்தத் துதியை நினைந்துருகிப் பருகி, குக கருணானந்த வெள்ளத்தில் அமிழ்வோமாக. "காயந்தம த்ராயதே இதி காயத்ரி'- அதாவது, சொல்பவ னைக் காப்பாற்றும் மந்திரம் காயத்ரி. "மனனாத் த்ராயதே இதி மந்த்ரம்.' மனதில் நினைத்திட காப்பாற்றுவதே மந்திரம் எனப்படும்.

நாமங்கள் மிகுந்த உத்தமமான துதி இது.

ஆக முருகனின் பல உருவ காயத்ரி மந்திரங் களையும் இச்சமயம் நினைவுகூர்வது சாலச்சிறந் ததே!

குமார: தத் குமாராய வித்மஹே கார்த்தி கேயாய தீமஹி

தன்ன: ஸ்கந்த: ப்ரசோதயாத்

குஹா: ஷண்முகாய வித்மஹே ஸ்வாமிநாதாய தீமஹி

தன்ன: குருகுஹ ப்ரசோதயாத்

ஸ்கந்த: சரவணபவாய வித்மஹே ஷடான

னாய தீமஹி

தன்ன: ஸ்கந்த: ப்ரசோதயாத்

மஹாஸேன :மஹாஸேனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி

தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

சக்திபாணி: கார்த்திகேயாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி

தன்ன: குஹ ப்ரசோதயாத்

மயில்: நீலகண்டாய வித்மஹே சித்ர பக்ஷாய தீமஹி

தன்ன: மயூர ப்ரசோதயாத்

வள்ளி: மஹாதேவ்யைச வித்மஹே ஸ்கந்த பத்னியைச தீமஹி

தன்ன: வல்- ப்ரசோதயாத்

தேவஸேனா : தேவஸேனாயைச வித்மஹே அம்ருதவல்யைச தீமஹி

தன்ன: ஸ்கந்தபத்னி ப்ரசோதயாத்

சேவல்: குக்குடத்வஜாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி

தன்ன: ஸ்கந்த ப்ரசோயாத்

வேல், மயில், செந்தில், கந்தன் யாவும் தொழும் மற்றொரு துதி பார்ப்போமா...

"எழும்போதும் வேலும் மயிலும் என்பேன் எழுந்து மகிழ்ந்து

தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன் தொழுது உருகி

அழும்போதும் வேலும் மயிலும் என்பேன் அடியேன் சடலம்

விழும்போதும் வேலும் மயிலும் என்பேன் செந்தில் கந்தனே...'

திருச்செந்தூர் தலபுராண போற்றியுடன் இந்த துதியை நிறைவு செய்வோம்.

"பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மயிலாய் போற்றி

முன்னிய கருணை ஆறு முகப்பரம் பொருளே போற்றி

கன்னியர் இருவர் நீங்கா கருணைவாரிதியே போற்றி

என்னிரு கண்ணே கண்ணுள் இருக்கும் மாமணியே போற்றி'.

மேலும் காஞ்சி குமரகோட்ட கந்தன் முதலடி அருளிட, கச்சியப்பர் பாடிய கந்தபுராணப் போற்றியுடனும் கந்தனை வணங்குவோம்:

"மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி

ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி

காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி

அன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி.'

நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படை வெண்பாவில் இவ்வாறு வ-யுறுத்துகிறார்.

"அஞ்சும் முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்

நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்

முருகா என்று ஓதுவார் முன்னே!'

"முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

மருகனே ஈசன் மகனே ஒருகை முகன்

தம்பியே நின்னுடைய தன்னடக்கால் எப்போதும்

நம்பியே கைதொழுவேன் யான்.'

"உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை

கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்

வேலப்பா செந்தில் வாழ்வே.'

கந்தனை எண்ணுதல் தவிர வேறுகதியில்லை என்று சிந்தையில் பக்தியுடன் துதித்தால், அவன் மனமிரங்கி அருளுவது நிச்சயம் என்று இத்துதிகளால் நன்கு விளங்கும். நம்பினோ ரைக் காப்பவன் தும்பிக்கையான் சோதரன் கந்தன் என்பது உறுதி. அக்கந்தனை வந்தனைசெய்து, பந்தவினைகளை அறுத்து, சந்ததமும் ஆனந்தக் கட-ல் அமிழ்வோம்.