குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதில-சக்தி வழிபாடு!(15) -அருண் ராதாகிருஷ்ணன்

/idhalgal/om/kumara-wisdom-kandaranupoodila-shakti-worship-15-arun-radhakrishnan

செய்யுள்-28

"ஆனா அமுதே அயில்வேல் அரசே

ஞானாகரனே நவிலத் தகுமோ

யானாகிய என்னை விழுங்கி வெறும்

தானாய் நிலைநின்றது தற்பரமே.'

பொருள்: கெடுதல் ஏதுமில்லாத அமுதம் போன்றவரே, கூரிய வேலை உடையவரே, ஞானத்தின் சொரூபமானவரே, இதற்கும் மேலும் சொல்லத் தகுமோ. நான் என்ற என்னை விழுங்கி, தானாக மட்டுமே நின்று வியாபித்தவரே.

இந்தப் பாடலில் அருணகிரிநாதர் மிகுந்த வேதாந்த விஷயங்களையும், தாந்திர உள்ளர்த்தங்களையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். சென்ற பாடலில் "பொன்னே, மணியே' என்று இறைவனைப் புகழ்ந்து, அவர் தாள்தனில் உண்மையான சரணாகதி ஏற்பட்ட மாத்திரத்தில் சாதகனுக்கு இறைவனின் அருட்கடாட்சம் உடனடியாகக் கிடைக்கிறது. மேலும் இத்துணை நாட்களாக சாதகன் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகியதுடன், அவனுடைய கர்மவினைகளின் வெளிப்பாடுகளால் இறைவனின் அண்மையை உணரமுடியாமலும் இருந்தது.

ஆனால் இப்போது சரணாகதி ஏற்பட்ட மாத்திரத்தில் அவரின் கிருபை இவனுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது.

தாந்திர யோகங்களில், குண்டலினி சக்தியானது விழிப்படைந்து, சோமச்சக்கரம் என்று கூறப்படும் இடத்தை அடையும் சமயம், அமுதமானது சாதகனின் உடலில் சுரக்கும். இந்த அமுதம் சாதகனுக்கு பசி, தாகம், தூக்கம் போன்ற உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும் வெளிப்புறச் சார்புகளை நீக்கும். இந்த அமுதத்தின் பயனால்தான் சித்தர்களும் முனிவர்களும் நெடுங்காலம் உணவு, நீரின்றி இறை தியானத்தில் மூழ்கியிருக்க முடிகிறது. இந்த அமுதத்தைதான் சாதகன் இறையருளால் அடைகிறான் என்று இந்த பாடலில் முதலிரண்டு சொற்களில் அருணகிரிநாதர் கூறுகிறார்.

சாதகன் உடலில் அமுதம் சுரந்தபின்பு, இயற்கையின் இடர்கள் ஏதுமில்லாமல், ஆழ்ந்த தியானம் கைவரப் பெறுகிறான்.

அவனால் இறைவனை நெடுநேரம் தியானித்து இறைநிலையிலேயே தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. இந்த நிலை யில் இறைவனைவிட்டு சாதகன் அகலவுமில்லை; இறைவனிடம் ஒன்றறக் கலக்கவுமில்லை. அதே போல் இறைவனைவிட்டுப் பிரிவதுமில்லை. எப்போதும் இறைவனு டன் இருக்கிறான். அதனால் தான் அருணகிரிநாதர் இந்த நிலையைக் கூறும்போது, "அயில் வேல்' என்று வேலின் கூர்மையைப் பற்றிக் கூறுகிறார். இங்கு சாதகன் இறைவனின் சொரூபத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுகிறான் என்

செய்யுள்-28

"ஆனா அமுதே அயில்வேல் அரசே

ஞானாகரனே நவிலத் தகுமோ

யானாகிய என்னை விழுங்கி வெறும்

தானாய் நிலைநின்றது தற்பரமே.'

பொருள்: கெடுதல் ஏதுமில்லாத அமுதம் போன்றவரே, கூரிய வேலை உடையவரே, ஞானத்தின் சொரூபமானவரே, இதற்கும் மேலும் சொல்லத் தகுமோ. நான் என்ற என்னை விழுங்கி, தானாக மட்டுமே நின்று வியாபித்தவரே.

இந்தப் பாடலில் அருணகிரிநாதர் மிகுந்த வேதாந்த விஷயங்களையும், தாந்திர உள்ளர்த்தங்களையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். சென்ற பாடலில் "பொன்னே, மணியே' என்று இறைவனைப் புகழ்ந்து, அவர் தாள்தனில் உண்மையான சரணாகதி ஏற்பட்ட மாத்திரத்தில் சாதகனுக்கு இறைவனின் அருட்கடாட்சம் உடனடியாகக் கிடைக்கிறது. மேலும் இத்துணை நாட்களாக சாதகன் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகியதுடன், அவனுடைய கர்மவினைகளின் வெளிப்பாடுகளால் இறைவனின் அண்மையை உணரமுடியாமலும் இருந்தது.

ஆனால் இப்போது சரணாகதி ஏற்பட்ட மாத்திரத்தில் அவரின் கிருபை இவனுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது.

தாந்திர யோகங்களில், குண்டலினி சக்தியானது விழிப்படைந்து, சோமச்சக்கரம் என்று கூறப்படும் இடத்தை அடையும் சமயம், அமுதமானது சாதகனின் உடலில் சுரக்கும். இந்த அமுதம் சாதகனுக்கு பசி, தாகம், தூக்கம் போன்ற உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும் வெளிப்புறச் சார்புகளை நீக்கும். இந்த அமுதத்தின் பயனால்தான் சித்தர்களும் முனிவர்களும் நெடுங்காலம் உணவு, நீரின்றி இறை தியானத்தில் மூழ்கியிருக்க முடிகிறது. இந்த அமுதத்தைதான் சாதகன் இறையருளால் அடைகிறான் என்று இந்த பாடலில் முதலிரண்டு சொற்களில் அருணகிரிநாதர் கூறுகிறார்.

சாதகன் உடலில் அமுதம் சுரந்தபின்பு, இயற்கையின் இடர்கள் ஏதுமில்லாமல், ஆழ்ந்த தியானம் கைவரப் பெறுகிறான்.

அவனால் இறைவனை நெடுநேரம் தியானித்து இறைநிலையிலேயே தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. இந்த நிலை யில் இறைவனைவிட்டு சாதகன் அகலவுமில்லை; இறைவனிடம் ஒன்றறக் கலக்கவுமில்லை. அதே போல் இறைவனைவிட்டுப் பிரிவதுமில்லை. எப்போதும் இறைவனு டன் இருக்கிறான். அதனால் தான் அருணகிரிநாதர் இந்த நிலையைக் கூறும்போது, "அயில் வேல்' என்று வேலின் கூர்மையைப் பற்றிக் கூறுகிறார். இங்கு சாதகன் இறைவனின் சொரூபத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுகிறான் என்பது, வேலின் கூர்மையைக்கொண்டு விவரிக்கப்படுகிறது, அதே போல் மோட்சத்தின் மூன்று நிலைகளையும் அருணகிரிநாதர் இந்தப் பாடலின் ஒரு வரியிலேயே உணர்த்துகிறார்.

1. சாலோக முக்தி- இறைவனின் உலகத்தி லேயே இறைவனுக்கு சேவை செய்து தாமும் உடனிருப்பது, உதாரணம்- நாயன்மார்கள் கயிலாயம் சென்றது. இங்கு இறைவனின் கைவேல் சாலோக முக்திக்கு எடுத்துக்காட் டாக இருக்கிறது. வேலா னது இறைவனின் ஆயுத மாக இருந்து சேவைகள் பல செய்து இறைவனின் உலகத்தில் இருக்கிறது.

2. சாமீப முக்தி- இறைவனுக்கு அண்மையிலேயே எப்போதும் இருப்பது. இதற்கு உதாரணம் அனுமன். எப்போதும் ராமபிரானுக்கு அருகிலேயே வாசம்செய்வது. இங்கும் வேல் இறைவனின் கையைவிட்டுப் பிரிவதே இல்லை. வேல் இல்லாமல் முருகன் இருந்ததே இல்லை.

3. சாரூப முக்தி- இறைவனின் சொரூபத்தையே சாதகன் அடைவது அல்லது இறைவனைப் போலவே சாதகன் இருப்பது. பல மகான்கள் இறைவனா கவே காட்சியளித்தது இதனால் தான். இங்கும் முருகனை வழிபடு பவர்கள், வேலையே முருகனாக வழிபடும் வழக்கமுண்டு. மருதமலையின் அடிவாரத்தில் வேல்கோட்டம் என்னுமிடத்தில் முருகனை வேல் வடிவில் வழிபடுவது ஒருவிதமான சாரூப முக்தியே. இந்தவொரு பாடலின் அரை வரியில் அருளாளர் சாதகன் அடையும் பேறுகளைக் கூறுகிறார். இறைவனின் தியானம் எத்தகைய வலிமையானது என்றும் கூறுகிறார்.

இரண்டாவது பிரிவில் வரும் "யானாகிய என்னை விழுங்கி' என்ற பதத்தில், சாதகனின் அகங்காரம் அழிந்து பூரணமாக இறைநிலையை அறிந்துவிடுகி றான் என்று கூறுகிறார். இங்கு "யான்' என்ற "நான்' ஆகிய அகங்காரத்தை, இவ்வளவு நாட்களாக இந்த "நான்' தான் தன்னுடைய உண்மை சொரூபமென்று நினைத் திருந்தான். ஆனால் இந்த "நான்' என்ற தன்மை அழிந்தபின், இறைவன் மட்டுமே வியாபித்திருக்கும் நிலையில், இந்த சொரூபம்தான் தன்னுடைய உண்மை நிலை யென்று சாதகன் உணர்கிறான். இந்த நிலையே வேத வாக்கியம் கூறும் "தத்வமஸி.' இங்கு "தத்' என்று கூறப் படும் இறைவனும், "த்வம்- நீ' என்று பொருள்படும் இருவரும் ஒருவரே என்று பொருள்படும்படி "அஸி' என்ற பதம் வருகிறது. இங்கு சைவத்தின் அத்வைத சித்தாந்தம் வெளிப்படுகிறது.

இந்தப் பாடலில் "நவிலத் தகுமோ' என்று கூறுவது, இறைவனின் அனுபவத்தைச் சொல்லமுடியவில்லை அல்லது சொல்லிப் புரியவைக்கும் வகையில் அந்த அனுபவத்தை வார்த்தைகளில் அடைக்க முடியவில்லை என்றும் கூறுகிறார். அனுபூதியில் "பேசா அனுபூதி பிறந்ததுவே' என்று கூறுவதும் இதையேதான்.

mm

லலிதையின் நாமங்களில் "சுதா சாராபி வர்ஷினி' என்னும் நாமம், லலிதைதான் இந்த அமுதத்தைப் பொழியச்செய்கிறாள் என்றும், "ஆத்மா,' "பரமா' என்ற நாமங்களில் இவளே எல்லாருள்ளும் ஆன்மாவாக இருக்கிறாள் என்றும், "முக்தி நிலயா' என்ற நாமத்தில், அனைத்துவிதமான முக்திகளையும் அருள்பவள் இவளே என்றும், "நிர்வாண சுக தாயினீ' என்ற நாமத்தில், பந்தங்களிலிருந்து விடுவிப்பவள் என்றும் கூறப்படுகிறது. இந்த பந்தங்கள் உடல், மனம், ஆன்மா ஆகிய எல்லாவற்றுக்கும் பொருந்தும். இவ்வாறாக லலிதையின் நாமங்களும் கந்தர் அனுபூதியும் ஒரே இறைவனை இருவேறுவிதமாக வழிபட்டு சாதகனுக்கு வேண்டிய ஆன்ம முன்னேற்றத்தைக் கொடுக்கின்றன.

செய்யுள்-29

"இல்லேஎனும் மாயையில் இட்டனை நீ

பொல்லேன் அறியாமை பொறுத்திலையே

மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்

சொல்லே புனையும் சுடர் வேலவனே.'

பொருள்: மல்யுத்தம் செய்யும் வீரனே, அந்த வீரம்பொருந்திய உன் பன்னிரு தோள்களில் என் பாடல்களை மாலையாக அணிந்துகொண்டவரே, ஒளிவீசும் வேலாயுதத்தை உடையவரே! என்னை இந்த மாயமான உலகில் தள்ளிவிட்டீரே! என்னுடைய அறியாமையைப் பொறுக்க வில்லையே.

சென்ற பாடலில் சாதகன் இறையனுபவம் பெறுகிறான். ஆனால் மீண்டும் இறைநிலையிலிருந்து தன் வாழ்க்கையின் அனுபவ நிலைக்கு வருகிறான். இறை நிலையை அனுபவித்த ஒருவன் மீண்டும் விதிப்பயனால் அமைந்த சாதாரண நிலையை அடைவது பெருந்துயரைத் தரும். அந்தத் துயரின் வெளிப்பாடே இந்தப் பாடல். இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இறைநிலையைக் கண்டபின்னும் ஏன் சாதகனுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று சற்று ஆராய வேண்டும்.

இறைவன் கருணையே வடிவாக இருந்தும், அவரை அறிந்த பின்னும் அருண கிரிநாதர் இங்கு "பொல்லேன் அறியாமை பொறுத்திலேயே' என்று கூறுகிறார். இதிலிருந்தே தம் கர்மவினைகளின் காரணம் தன்னுடைய பொல்லாத செயல்கள்தான் என்று சாதகன் உணர்ந்துகொண்டது தெரிகிறது. இறைவனின் கருணை அளப் பரியதாக இருந்தாலும், கர்மவினைகள் சாதகனை அறியாமையிலேயேதான் இழுத்துவிடுகிறது. இந்த அறியாமை மறைய இறைவனும் அருள்செய்யவில்லை என்பதை "பொறுத்திலையே' என்ற பதம் உணர்த்துகிறது.

சாதகன் தன்னை "பொல்லேன்' என்று கூற மற்றொரு காரணமும் உண்டு. அவன் நீண்ட மற்றும் ஆழ்ந்த இறைநிலை தியானத்தில் இருந்தபோது அவனுடைய அத்துணை ஜென்மங்களின் பதிவுகளையும் அவனால் பார்க்க முடிந்து, தன்னுடைய இந்த நிலைக்குக் காரணமும் அவனுக்குப் புலப்படுகிறது. தான் பொல்லாத செயல்களைச் செய்ததால்தான் இந்த நிலைக்கு ஆளானோமென்று புரிந்ததால்தான் "பொல்லேன்' என்று தன்னைத் தானே கூறிக்கொள்கிறான். மேலும் இந்த செயல்கள் அத்தனையும் அறியாமையால் தான் செய்ததையும், அந்த அறியாமையை இறைவன் மன்னிக்காததையும் அறிந்தபிறகு அவனுடைய துயரம், சுய பச்சாதாபமாகிறது. இதுநாள்வரை இந்த உலகம் மட்டுமே உண்மையென்று நம்பியிருந்தவன், இப்போதோ இறைவன் ஒருவனே உண்மையானவன்; மற்றவையெல்லாம் இல்லாமல் இருப்பதுபோல் ஒரு தோற்றமே என்று உணர்ந்தபிறகு, தனது இந்த இருப்பை "இல்லாத மாயை' என்று கூறுகிறான். மேலும் இன்னும் கர்மவினைகள் முடியாமலிருப்பதால்தான் தன்னால் இறைவனை முழுமையாக அடையமுடியவில்லை என்றும் உணர்ந்துகொள்கிறான்.

தம்மால் இயன்றவரை கவிகள் புனைந்து இறைவனைப் புகழ்கிறார் அருணகிரிநாதர். இவ்வாறு கவிகளால் மகிழ்ந்த முருகன் அருணகிரிநாதருக்கு காட்சியளித்து உபதேசம் நல்கி, தியானம் கூட்டி, சமாதியில் இருத்தி இன்னும் அவரை ஆன்மிக வாழ்வில் மேல்நிலைகளுக்கு அழைத்துச்செல்கிறார்.

இவ்வாறு நடப்பதற்கெல்லாம் காரணம் அருணகிரிநாதர் இறைவனைப் பாடிய கவிகள்தாம். அதனால் சாதகன் இறைவனின் புகழ்பாட, இறைவன் அவற்றை மகிழ்ந்தேற்று சாதகனை ஆட்கொள்கிறார் என்றும், இறைநாமத்திற்கும் புகழுக்கும் மட்டுமே உள்ள தனி மகிமை இந்த அருள் என்பதும் இதிலிருந்து புரிகிறது. இதை உணர்த்தும் வகையிலேதான் "என் சொல்லே புனையும் சுடர் வேலவனே' என்ற வரி இந்தப் பாடலில் வருகிறது. மேலும் இறைவனின் ஒரு குணமான வீரத்தை- அதுவும் மல்யுத்தம் புரிபவனென்று இங்கு அருணகிரிநாதர் கூறுகிறார். எத்தனையோ வித்தைகள் இருக்க இறைவனை மல்யுத்தம் புரிபவனென்று ஏன் கூறவேண்டும்?

சற்றே நாம் மற்ற புராணங்களை நோக்கினால், இறைவன் மல்யுத்தம் ஏனைய இடங்களிலும் புரிந்திருக்கிறான். கிருஷ்ணனாக அவதரித்து கம்சனை வதம் செய்தபோது, சிவபெருமான் வேடனாக வந்து அர்ஜுனனின் அகங்காரத்தை அழிக்க மல்யுத்தம் புரிந்தது, மது கைடபர்களுடன் விஷ்ணுவாக இருந்து மல்யுத்தம் புரிந்தது, தேவி மகாத்மியத்தில் தேவி சும்பனுடன் மல்யுத்தம் புரிந்தது என்று நாம் காணலாம். இந்த அத்தனை இடங்களிலும் இறைவன் அகங்காரத்தை அழிக்க மட்டுமே மல்யுத்தம் புரிந்திருக்கிறான். இந்த அகங்காரமானது இறைவனின் கையால் மட்டுமே அழியும். இதற்குக் காரணம், அகங்காரமானது கோடானுகோடி ஜென்மங்களாக, மிகுந்த ஆழமாக "தான்' என்ற ஒரு மாயமான ஒரு அடையாளத்தை உண்டாக்கி, ஜீவாத்மாவை நித்திய சிறைக்கைதியாக வைத்திருந்தது.

புராணங்களில் கூறப்படும் அத்தனை அசுரர்களும் அகங்காரத்தின் அடையாளமே. இந்த அகங்காரமானது எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்றுதான் கடைசிவரை முயற்சிக்கிறது. ஆனால் இறைவனின் கை பட்டதும், சூரியனைக் கண்ட பனிபோல உருகி விலகிவிடுகிறது. அதனாலேதான் இறைவன் மல்யுத்தப் பிரியனாக நிறைய இடங்களில் உருவகப்படுத்தப்படுகிறான். இங்கோ முருகப் பெருமான் அடியவரின் துயர்தீர்க்க தம்முடைய பன்னிரு தோள்களாலும் மல்யுத்தம் புரிந்து காக்கிறார் என்றும்; இறைவன் தம் அறியாமையை மன்னிக்கவில்லை என்றும் முதல் வரியில் வருந்திய சாதகன், அகங்காரத்தை அழிக்கவே இறைவன் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றும் முடிவில் அறிந்து கொள்கிறான்.

லலிதையின் நாமங்களில் "வீரமாதா,' "வீரா,' "வீர கோஷ்டி ப்ரியா' போன்ற நாமங்கள் சக்தியின் வீரத்தைப் பறைசாற்றி வரும். அதேபோல் "மகா மாயா,' "மாயா,' "விஷ்வ ப்ரஹ்மண காரிணி'- உலகத்தை மாயையின் சுழற்சியில் நடத்துபவள் போன்ற நாமங்கள், இந்தப் பாடலில் கண்ட முதல் வாரியான "இல்லை எனும் மாயை'யின் பொருள்கொண்டு வரும். "நாம பாராயண ப்ரீத்தா' என்ற நாமம், நாமங்களைக் கூறுவதால் மகிழ்பவள் என்றும், "அநித்ய திருப்தா' என்ற நாமம், சிறிய விஷயங்களை செய்வதன்மூலமே திருப்திகொண்டு அருள்பவள் என்றும், "கலாமாலா' என்ற நாமத்தில் கலைகளை மாலையாக விரும்பி அணிபவள் என்றும் பொருள்கொண்டு, "சொல்லே புனையும்' என்ற பதத்திற்குச் சான்றாக வரும்.

இவ்வாறாக லலிதையின் நாமங்களும் கந்தர் அனுபூதியும் ஒரே இறைவனை இருவேறுவிதமாக வழிபட்டு சாதகனை அடுத்த நிலைக்குப் படிப்படியாக அழைத்துச் செல்கின்றன.

(அனுபூதி தொடரும்)

om011221
இதையும் படியுங்கள்
Subscribe