கடந்த இதழில் மெய்ப் பொருள் உபதேசம் மற்றும் சமாதி நிலைகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் அனுபூதியில் சூட்சுமமாக உள்ள சக்தியின் வழிபாட்டைப் பார்ப்போம்.
செய்யுள்- 22
"காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக்குழல் வள்ளிபதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே.'
பொருள்: கமுகின் பாளை போன்ற கூந்தலையுடைய வள்ளியின் பதம்பணியும் மேருமலையைப் போன்ற பெருமை வாய்ந்த, ஸ்வர்க்க லோகத்தின் அதிபதியே! உன்னை என்றும் நிலைத்திருக் கும் சச்சிதானந்த பொருளாக உணர்ந்து, உன் பாதங்களைப் பணியும் பாக்கியத்தை- அந்த சீரிய தவத்தை நான் அடைந் தேன். இதுவே ஒரு ஆச்சரியம் தான்!
இந்தப் பாடலில் "காளை குமரேசன்' என்னும் பதமே மிகவும் முக்கியமானது. இந்தப் பதத்திற்கு "சிவனின் குமார னாக வந்தவன்' என்னும் பொருளே பெரும்பாலும் கையாளப் படுகிறது. ஆனால் நாம் இங்கு சற்று மாறு பட்டு சிந்திக்கவேண்டும். முருகனை சிவனின் குமாரன் என்று கருதி தவம்செய்ய முற்படும் ஒருவர், என்ன காரணத்தினால் சிவனை தியானம் செய்யாமல் அவரின் குமாரனை தியானம் செய்யவேண்டும்? இங்கு முருகனோ சிவனளிக்காத எந்தவொரு பொருளையும் தான் தனியாக அளிக்கப்போவதில்லை. சிவனும் அவ்வாறே. இந்த உருவ வேறுபாடு களைக் களைந்த நிலையில்தான் சாதகன் இவ்வளவு நாட்கள் தவமியற்றி இருந்தி ருக்க வேண்டும். ஆகையால் காளை குமரேசன் என்னும் பதம் வேறேதோ ஒரு மறைபொருளைத்தான் இங்கு பேசவேண்டு மென்று புலனாகிறது.
காளை என்னும் பதம் ஒரு யுவனையோ அல்லது இளைஞனனையோ குறிக்கும். இங்கு காளை குமரேசன் என்னும் பதம் "முருகன் நித்திய யௌவனன்' என்னும் வெளிப்படையான பொருள் கொண்டும், சூட்சுமமாக முருகன் "சச்சிதானந்த பெரும் பொருள்' என்றும் கொள்ளும் வகையில் அருளாளர் இந்தப் பாடலை அமைத்திருக்கி றார். எப்போது ஒருவன் சச்சிதானந்தம் என்னும் நிலையை அடைகிறானோ அப்போது மட்டுமே அவன் எந்தவொரு மாற்றங்களும் இல்லாமல் இருக்கிறான் என்று பொருள். எந்தப் பொருள் எப்போதும் எந்த மாற்றங்களையும் அடையாதோ, அந்தப் பொருளுக்கு கால தேச வர்த்தமானங்கள் ஆகிய நிபந்தனைகள் இல்லாமல் போகிறது. முதுமை என்ற ஒன்றே உடலுக்கு காலத்தினால் ஏற்படும் மாற்றமேதான். இதேபோல்தான் ஒருவன் வாழ்வில் சந்திக்கும் அத்துணை மாற்றங் களும் காலத்திற்க்கோ இடத்திற்கோ தகுந்தாற்போல் ஏற்படும் செயல்கள்தான். ஆனால் இறைவன் என்னும் பொருள் மட்டுமே எந்த மாற்றத்திற்கும் கட்டுப்படாத ஒரு விஷயமாக இருக்கும்.
ஆதலால் காளை குமரேசன் என்னும் பதம், இறைவனின் மாற்றங்களுக்கு உட்படாத சச்சிதானந்த நிலையை மட்டுமே குறிக்கும். அந்த சச்சிதானந்த அனுபவத்தை தமக்களித்த முருகப் பெருமானின் அபார கருணையை இந்தப் பாடலில் ஆச்சரியத்துடன் குறிப்பிடு கிறார்.
குருவின் தீக்ஷையும், அதன்பின்னர் அவரின் அருளோடு சேர்ந்த "சக்தி பாத்' எனப் படும் சக்தியின் பாய்ச்சலுமே சாதகனை இறைவனின் மிக அருகில் இட்டுச்செ
கடந்த இதழில் மெய்ப் பொருள் உபதேசம் மற்றும் சமாதி நிலைகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் அனுபூதியில் சூட்சுமமாக உள்ள சக்தியின் வழிபாட்டைப் பார்ப்போம்.
செய்யுள்- 22
"காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக்குழல் வள்ளிபதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே.'
பொருள்: கமுகின் பாளை போன்ற கூந்தலையுடைய வள்ளியின் பதம்பணியும் மேருமலையைப் போன்ற பெருமை வாய்ந்த, ஸ்வர்க்க லோகத்தின் அதிபதியே! உன்னை என்றும் நிலைத்திருக் கும் சச்சிதானந்த பொருளாக உணர்ந்து, உன் பாதங்களைப் பணியும் பாக்கியத்தை- அந்த சீரிய தவத்தை நான் அடைந் தேன். இதுவே ஒரு ஆச்சரியம் தான்!
இந்தப் பாடலில் "காளை குமரேசன்' என்னும் பதமே மிகவும் முக்கியமானது. இந்தப் பதத்திற்கு "சிவனின் குமார னாக வந்தவன்' என்னும் பொருளே பெரும்பாலும் கையாளப் படுகிறது. ஆனால் நாம் இங்கு சற்று மாறு பட்டு சிந்திக்கவேண்டும். முருகனை சிவனின் குமாரன் என்று கருதி தவம்செய்ய முற்படும் ஒருவர், என்ன காரணத்தினால் சிவனை தியானம் செய்யாமல் அவரின் குமாரனை தியானம் செய்யவேண்டும்? இங்கு முருகனோ சிவனளிக்காத எந்தவொரு பொருளையும் தான் தனியாக அளிக்கப்போவதில்லை. சிவனும் அவ்வாறே. இந்த உருவ வேறுபாடு களைக் களைந்த நிலையில்தான் சாதகன் இவ்வளவு நாட்கள் தவமியற்றி இருந்தி ருக்க வேண்டும். ஆகையால் காளை குமரேசன் என்னும் பதம் வேறேதோ ஒரு மறைபொருளைத்தான் இங்கு பேசவேண்டு மென்று புலனாகிறது.
காளை என்னும் பதம் ஒரு யுவனையோ அல்லது இளைஞனனையோ குறிக்கும். இங்கு காளை குமரேசன் என்னும் பதம் "முருகன் நித்திய யௌவனன்' என்னும் வெளிப்படையான பொருள் கொண்டும், சூட்சுமமாக முருகன் "சச்சிதானந்த பெரும் பொருள்' என்றும் கொள்ளும் வகையில் அருளாளர் இந்தப் பாடலை அமைத்திருக்கி றார். எப்போது ஒருவன் சச்சிதானந்தம் என்னும் நிலையை அடைகிறானோ அப்போது மட்டுமே அவன் எந்தவொரு மாற்றங்களும் இல்லாமல் இருக்கிறான் என்று பொருள். எந்தப் பொருள் எப்போதும் எந்த மாற்றங்களையும் அடையாதோ, அந்தப் பொருளுக்கு கால தேச வர்த்தமானங்கள் ஆகிய நிபந்தனைகள் இல்லாமல் போகிறது. முதுமை என்ற ஒன்றே உடலுக்கு காலத்தினால் ஏற்படும் மாற்றமேதான். இதேபோல்தான் ஒருவன் வாழ்வில் சந்திக்கும் அத்துணை மாற்றங் களும் காலத்திற்க்கோ இடத்திற்கோ தகுந்தாற்போல் ஏற்படும் செயல்கள்தான். ஆனால் இறைவன் என்னும் பொருள் மட்டுமே எந்த மாற்றத்திற்கும் கட்டுப்படாத ஒரு விஷயமாக இருக்கும்.
ஆதலால் காளை குமரேசன் என்னும் பதம், இறைவனின் மாற்றங்களுக்கு உட்படாத சச்சிதானந்த நிலையை மட்டுமே குறிக்கும். அந்த சச்சிதானந்த அனுபவத்தை தமக்களித்த முருகப் பெருமானின் அபார கருணையை இந்தப் பாடலில் ஆச்சரியத்துடன் குறிப்பிடு கிறார்.
குருவின் தீக்ஷையும், அதன்பின்னர் அவரின் அருளோடு சேர்ந்த "சக்தி பாத்' எனப் படும் சக்தியின் பாய்ச்சலுமே சாதகனை இறைவனின் மிக அருகில் இட்டுச்செல்கிறது. அவ்வாறு அவன் செல்லும்போதுதான் இறைவனின் பெருங்கருணையை சற்று உணர்கிறான், அந்த உணர்ச்சியும் இறைவனின் கருணை தன்மீதும் பாய்ந்த செயலை எண்ணியே வியாபிக்கிறது. சாதகனும் தன் பங்கிற்கு நெடுங்காலம் தவம்செய்த பின்னேதான் இறைவனின் கருணையே எப்போதும் தம்மை வழிநடத்திய விஷயம் தெரிகிறது, அதுவே இந்தப் பாடலில் ஆச்சரியத்திற்கான காரணம்.
இந்தப் பாடலில் சரணாகதியின் பயனும் வெளிப்படுகிறது. குருவிடம் சரணடைந்து, குரு வாக்கியப்படி நடந்த சாதகன் இறைவனை நெருங்குகிறான். சரணாகதியின் பயனே இறைவனை அடைவதுதான்.
அதுவும் எவ்வாறு? இறைவனே இந்த ஜீவாத்மாவைத் தேடிவந்து, வேண்டிய தைக் கொடுத்து வேண்டாததைக் களைகிறான். இந்த தத்துவமே வள்ளியிடம் காதல் நாடகம் நடத்தியதில் அரங்கேறுகிறது, வள்ளிக்குத் தன்னைத் தந்து, பந்த பாசங் களைக் களைந்து, பயத்தைப்போக்கி தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான் இறைவன். அதுவும் வள்ளியின் பாதம் பணிந்து செய்கிறான். இந்த இடத்தில் இறைவன் ஜீவாத்மாவைத் தேடிவந்து அருள்புரியும் தத்துவமும் விளக்கப்படுகிறது.
அபிராமி அந்தாதியில் பட்டர் "கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு "வம்பே பழுத்த படியே மறையின் பரிமளமே' என்று கூறுகிறார். இங்கு 'வம்பே பழுத்த' என்னும் பதம், சக்தியானவள் தாமாகவே வந்து பட்டரை ஆண்டுகொண்டதைக் குறிக்கும். வம்பே என்று சொல்வதற்குக் காரணம், தகுதியே இல்லையென்றாலும் தம்மைத் தேடிவந்து ஆண்டுகொண்ட விதத்தையும், கர்மவினைகளைத் தாமே களைந்து ஜீவனை ஆண்டுகொண்டதையும் கூறுகிறார். இதேயேதான் முருகனும் "பதம் பணிந்து' என்னும் சொற்றொடர்மூலம் செய்கிறான் என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.
பொதுவாகவே புறச்சமயம், அகச்சமயம் என்று சைவ சித்தாந்தத்தில் கூறப்படுவதுண்டு. இங்கு புறச்சமயம் என்பது ஒரு தெய்வத்தின் உருவ வழிபாடு, அதைச் சார்ந்த கிரியைகள், சடங்குகள் ஆகியவற்றைக்கொண்டு, அந்த தெய்வத்தை வழிபட்டு ஆன்மிக வாழ்வில் முன்னேறும் முறையாகும். இந்த புறச் சமயங்களில் வழிபடும் உருவங்களும், வழிபடு முறைகளும் பல்வேறு மாறுதல்கள் கொண்டிருக்கும். புறச்சமயத்திலிருந்து ஒரு சாதகன் முதிர்ந்தபிறகு அகச்சமயத்திற்கு முன்னேறுகிறான். இங்கு அச்சாதகன், "கடவுள் ஒருவரே. அவரின் வடிவங்கள் பல. வடிவமும் இல்லாதவர். சோதிப் பிழம்பானவர். அவரைத்தவிர இரண்டாவது இங்கு ஒன்றுமில்லை' என்பதை உணர்கிறான்.
அகச்சமயம் வந்த ஒருவன், புறத்தில் செய்த பூசைகளும், சடங்குகளும், பல்வேறு சமயங்களும் ஒரே இறைவனைக் குறித்துதான் என்பதை உணர்கிறான். சைவத்தில் இதுவே புறப்பூசை, அகப்பூசை என்று இரண்டு வகையாக இருக்கிறது. இந்த புறப்பூசையே ஸ்ரீ வித்தையில் பல்வேறு மார்க்கங்களாக- அதாவது தக்ஷிண மார்க்கம், வாம மார்க்கம், கௌல மார்க்கம், மிஸ்ரம் என்று பிரிகிறது. அகச்சமயமோ ஸ்ரீவித்தையில் சமய மார்க்கம் என்ற பெயருடன் தியான மார்க்கத்தை மட்டுமே கொண்டு நிற்கும். மற்றைய அத்துணை மார்கங்களும் இறுதியில் சாதகனை அகத்தில் வழிபடுவதிலேயே கொண்டு நிறுத்தும்.
இந்தப் பாடலிலும் நாம் இந்த அகத்தில் வழிபடும் விதத்தைக் காணலாம். இங்கு, "காளை குமரேசன் எனக் கருதி' என்னுமிடத்தில், "கருதி' என்னும் வார்த்தையும், மனதால் நிறுத்தி, மனதால் வழிபடுவதாக சமய மார்க்கத்தையேதான் காட்டுகிறது. இவ்வாறு மனதால் வழிபட்டால்தான் இறைவன் தாமே வந்து அந்த ஜீவனை ஆட்கொள்கிறார்.
இந்த செயல்தான் "வள்ளியின் பதம் பணிந்து' என்னுமிடத்தில் தெளிவாகிறது.
இங்கு முருகனும் சக்தியும் வெவ்வேறல்ல என்பதற்கு சான்று- முருகனை மேருமலை யோடு ஒப்பீடு செய்கிறார் அருணகிரிநாதர். இங்கு அவர் மேரு என்றுதான் சொன்னாரே தவிர, "மலை' என்று சொல்லவில்லை. இது நாமாக வழக்கத்தில் இருக்கும் பொருள் கொண்டு இந்த அர்த்தம் இருக்கலாமென்று கொள்கிறோம். ஆனால் மேரு என்ற சொல்லே இங்கு சக்தியின் வெளிப்பாடு. இல்லையென்றால் அது வள்ளியைப் புகழ்ந்தபின் வரத் தேவையில்லை. மேரு என்பதை ஒரு எந்திரமாகத்தான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீவித்தையின் ஒட்டுமொத்த வழிபாட்டையும் "பாவனோ பநிஷத்' என்னும் கிரந்தத்தின்படி, மனதால் மானுட உடலையே மேருவாக பாவித்து அம்பாளை வழிபடும் வழக்கமுண்டு. இந்த மாதிரியான வழிபடு முறையிலேயே முருகனை எப்போதும் மனதிலிருத்தி வந்ததால், வள்ளியைத் தேடி முருகனை வரச்செய்தது.
லலிதா சஹஸ்ரநாமத்தில், "சமயாச்சார தத்பரா' என்னும் நாமம் தியான மார்க்கத்தை வலியுறுத்தும். அதேபோல் "மகா யாக க்ரமா ராத்யா' என்னும் நாமம் பாவனோபநிஷத் கூறுவதுபோல் பாவனையால் வழிபடுவதை உணர்த்தும். மேலும் அம்பாள் பக்தனிடம் அவனது பக்தியால்தான் வருகிறாள் என்று, "பக்தி கம்யா' மற்றும் "பக்தி வஷ்யா' என்னும் நாமங்கள் உணர்த்தும். தேவி மகாத்மியத்திலும் சுரதன் மற்றும் வைஷ்யன் பராசக்தியை மனதால் வழிபட்டதை உணர்த் தும் ஸ்லோகங்கள் பதின்மூன்றாம் அத்தி யாயத்தில் சூட்சுமமாக உள்ளன. இங்கும் சமயங்கள் கௌமாரம், சாக்தம் என்று பிரிந்தா லும், இங்குள்ள இரு தெய்வமும் ஒன்றே என்று கிரந்தங்களே விளக்கி நிற்கின்றன.
செய்யுள்- 23
"அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குணபூதரனே.'
பொருள்: அழகிய வேலை உடையவனே, மின்னல்கொடி போன்ற குறமகளைச் சேர்பவனே, முருகா! அறியாமையினால் நான் உன் பாதங்களைத் தியானம் செய்யாமல் இவ்வாறே முடிந்துவிடுவேனோ? இது நியாயமோ? நீதியோ?
இந்தப் பாடலில் சாதகன் அறியாமைவசம் பிடிபட்டு, ஆன்மிக வாழ்வில் முன்னேற முடியவில்லையே என்று அரற்றுவதுபோல் அருணகிரிநாதர் பாடலைச் செய்திருக்கிறார். பாடல் 22-ல் ஆன்மிக வாழ்வில் முன்னேறிய ஒருவன் எவ்வாறு அடுத்த கட்டத்தில், "முன்னேற்றம் இல்லை' என்றும், "இறைவனை நினைக்கக்கூட முடியவில்லை' என்றும் அழ முடியும்? அப்படியென்றால் பாடல்கள் முரண்படுகிறதே. ஒருவேளை பாடல்களின் பதிவுகள் தவறாக இருக்கக்கூடுமோ என்னும் சிந்தனைகள் வரக்கூடும்.
ஆனால் அருணகிரிநாதர் பாடலின் பதிவை அவ்வாறு அமைக்கவில்லை. மேலும் இங்கு முரண்பாடும் இல்லை. அதற்கான காரணத்தை கீழ்க்கண்ட சித்தாந்தத்தைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்.
மனிதனுக்கு ஐந்து சரீரங்கள் உண்டு. அவை முறையே அன்னமய கோசம் என்று கூறப் படும் பௌதீக உடல், பிராணமய கோசம் என்று கூறப்படும் உயிர் மூச்சினாலான உடல், மனோமய கோசம் என்னும் மனதினா லும் அதன் எண்ணங்களாலும் ஆன உடல், விஞ்ஞானமய கோசம் எனப்படும் புத்தியினா லான உடல், ஆனந்தமய கோசம் எனப்படும் ஆன்மாவின் சக்தியால் உணரப்படும் உடல். இவ்வாறு பஞ்ச சரீரங்கள் எடுக்கும் ஒரு மனிதனுக்கு இவையனைத்தையுமே இயக்க கர்மவினை வேண்டும். பொதுவாக ஒரு மனிதன் வாழ்ந்து இறக்கும்போது அன்னமய கோசமான உடலும், பிராணமய கோசமான பிராணவாயு அல்லது உயிர் மூச்சும்தான் செயலற்றுப் போகின்றன. மற்றைய மூன்று கோசங்களும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அவையே அடுத்த பிறவி எடுக்கும்வரை காத்திருந்து கர்மவினைகளைத் தொடர்கதையாக அனுபவிக்கிறது. பௌதீக உடலுக்கு இவ்வளவு ஆண்டுகள் என்ற வாழ்க்கைக் கணக்கு இருப்பதுபோல் மற்றைய உடல்களுக்கும் உண்டு. பொதுவாக மனோமய கோசமானது பல்லாயிரம் வருடங் கள் வாழும். அதுவே கர்மவினைகளின் பதிவுகளை உள்ளடக்கி, அது தீரும்வரை பிறவிகளில் மனதிற்கும் உடலிற்கும் இன்ப- துன்பங்களைக் கொண்டு சேர்க்கும்.
இந்தப் பதிவுகளை மூன்றுவிதமாக மேற்கொண்டும் பிரிக்கமுடியும். அவை பௌதீகப் பதிவு அல்லது உடல் அனுபவிக் கும் கர்மங்கள், சூட்சுமப் பதிவு அல்லது மனம் அனுபவிக்கும் கர்மங்கள், இறுதியாக காரணப் பதிவு அல்லது எல்லா வினைகளுக்குமான மூலகாரணம். இதையே பஞ்ச கோசங்கள்போல், மூவகை சரீரமாகப் பிரிக்கும் சித்தாந்தம் உண்டு. அவை முறையே ஸ்தூல உடல், சூக்கும உடல், காரண உடல் என்று வழங்கப்படும்.
ஒரு வினையின் பௌதீக வெளிப்பாடு ஸ்தூல மற்றும் பிராண உடல் அனுபவிக்கும் இன்ப- துன்பங்கள், சூக்கும வெளிப்பாடு, மனம் மற்றும் புத்தி அனுபவிக்கும் இன்ப- துன்பங்கள். இவையனைத்திற்கும் காரணமான வினையே ஆன்மாவை மறைத்து காரண சரீரத்தில் அமர்ந்து, ஆனந்தமய கோசத்தை எட்ட விடா மல் செய்யும். இந்த காரண சரீரத்தில் இருக்கும் கர்மவினையே மாயை என்றும் வழங்கப் பெறுகி றது. இந்த மாயையே கடவுளின் மாயா சக்தியாக இருந்து முதிர்ந்த ஆன்மாக்களை கடவுளிடம் கொண்டுசென்று, மற்றைய ஜீவன்களை மீண்டும் சம்சாரத்திலிட்டு முதிர வைக்கிறது.
இந்த மாயையே சக்தி. இந்த சக்தி நினைத் தால் ஒழிய பரப்பிரம்மமான சிவப் பரம் பொருளை அணுகமுடியாது. சக்தியின் ஒப்புதல் இல்லாமல் முக்தியெனும் பிரம்மத்துடன் இணைவது இயலாது. ஏனென்றால் ஜீவனைத் தன்மயமாக்கி, தானே பிரம்மத்துடன் இனைந்து ஜீவனை இணைக்கிறாள் சக்தி.
இந்தப் பாடலில் சாதகன் இறைவனை நினைக்க முடியவில்லை என்று கூறுவதற்கும், மேற்கூறிய சித்தாந்தங்களுக்கும் நிறைய தொடர்புண்டு. இத்துணை நாட்கள் சாதகன் ஸ்தூல மற்றும் சூக்கும சரீரங்களின்மீதுள்ள வினையின் வெளிப்பாட்டைக் கடந்துவந்து விட்டான். ஸ்தூல வினையைவிட மனதிலுள்ள சூக்கும வினையை அறிவதும் கடினம்; கடப்ப தும் கடினம். அதேபோல் சூக்கும வினையை விடவும் அதற்கான காரண வினையை அறிவது மிகக் கடினம். ஏனென்றால் அந்த வினை எந்தப் பிறவியில் எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது- அது ஏன் இவ்வாறாக வெளிபடுகிறது என்றெல் லாம் அறிவதும், அதற்கான காரணத்தைக் கடந்து இறைவனை தியானிப்பதும், சூக்கும நிலை தாண்டி காரண சரீரத்திலுள்ள வினை அவனை தியானம் செய்யவொட்டாமல் தடுக்கின்றது. இந்த காரணத்தினால்தான் செய்யுள் 22-ல் இறையனுபவம் பெற்ற ஒருவன், செய்யுள் 23-ல் புலம்புவதற்குக் காரணம்.
இந்த காரண வினையானது, சற்றே இறையனுபவம் கைவரப் பெற்றபின், தூண்டிய நாகம்போல் விழித்தெழுந்து சாதகனை இறையனுபவம் பெறவிடாமல் செய்யும். இதற்குக் காரணம் காரண சாரீரத்திலுள்ள பதிவுகளே. இந்தப் பதிவுகளே அறியாமை என்றும் கூறப் படும். இந்த அறியாமை போகவேண்டும் என்றால் சக்தியானவள் மாயையை நீக்கி சாதகனுக்கு ஞானமளித்து பரம்பொருளோடு இணைக்கவேண்டும்.
இந்தப் பாடலில் அருணகிரிநாதர், தம்மால் இறைவனின் பாதத்தை தியானம் செய்ய இயலவில்லை என்று சொல்லும்போது, இரன்டு பேர்களைத் துணைக்கு அழைக்கிறார். 1. வேல்; 2. வள்ளி. (வடிவிக்ரம வேல், குறமின்கொடி).
இங்கு வேல் குருவையும், குறமகள் வள்ளி சக்தியையும் குறிக்கும். காரண சரீரத்தைக் கடக்க குருவின் ஆழமாக அகன்ற அறிவும், பாசங்களைக் களைய கூர்மையான ஞானோப தேசமும் உதவும். இறுதியாக இங்கு வள்ளியை "மின்கொடி' என்று உருவகப்படுத்துவதிலிருந்து சக்தியின் வெளிப்பாடே வள்ளி என்று தெளிவாகத் தெரியும்படி பாடலைச் செய்திருக் கிறார் அருளாளர். குண்டலினிரூபமாக சக்தி இருக்கும்போது அவள் ஒரு மின்னல்போல் இருப்பாள் என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும்.
அபிராமி பட்டரும் "துதிக்கின்ற மின்கொடி' என்று கூறுவார். இங்கு இறுதியாக வள்ளி, சாதகனுக்கு ஞானத்தை அளித்து முருகனிடம் சேர்க்கிறாள்.
இந்த பாடல் வள்ளியிடம் இறுதிஞானத் தைக் கேட்கும் ஒரு பாடலாகவே அமையப் பெறுகிறது. லலிதா சஹஸ்ரநாமமும் இந்தப் பாடலை போன்றே சில பொருள்களோடு நாமங் களைக் கொண்டிருக்கிறது. "மஹா மாயா' என்ற நாமம், சக்தியே மாயையாக இருப்பவள் என்றும்; "மஹா புத்தி'- அவளே எல்லா ஜீவனுக்கும் அறிவாக இருக்கிறாள் என்றும்; "பஞ்ச கோசந்தர ஸ்திதா'- ஐந்து வகை சரீரமாக வும்; "திரிபுரா த்ரிபுரேசி' என்னும் நாமங்களில் மூன்று சரீரங்களிலுள்ள வினைகளைக் களை பவளும் அவளே; கொடுப்பவளும் அவளே என்றும்; "தடில்லதாஸமருசி' என்னும் நாமத்தில்
அவள் மின்னல் போன்றவள் என்ற பொருளி லும் வந்து, ஒவ்வொரு பாடலிலும் முருகனும் பராசக்தியும் ஒருவரே என்று மீண்டும் மீண்டும் நிரூபனமாகிறது. இவ்வாறாக கந்தரனுபூதி ஆறுமுக சிவமான முருகனை மட்டுமல்ல; சூட்சுமமாக சக்தியையும் இணைத்தே போற்றி வருகிறது.
(அனுபூதி தொடரும்)