குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதி-சக்தி வழிபாடு! (5) -அருண் ராதாகிருஷ்ணன்

/idhalgal/om/kumara-wisdom-kandaranubhuti-shakti-worship-5-arun-radhakrishnan

டந்த இதழில் நாம் மூன்று பாடல்களில் ஜெபம், தானம், திருவடி தியானம், சக்திநி பாதம், சரணாகதி தத்துவத்தின் முதல்நிலை ஆகியவற்றை சாதகனுக்கு அருணகிரிநாதர் விளக்கியதைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த இதழில் சில வேதாந்த விளக்கங்களை, வேதத்தின் உட்பொருளை அருட்ச்செல்வர் அருணகிரிநாதர் எளிமையாக விளக்குவதைப் பார்க்கலாம்.

செய்யுள்-8

"அமரும்பதி கேள் அகமாம் எனுமிப்

பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா

குமரன் கிரிராச குமாரி மகன்

சமரபொரு தானவ நாசகனே.'

விளக்கம்: இமவான் என்ற இமயத்தின் அரசனின் மகளான பார்வதியின் குமரனே, அசுரர்களிடம் போரிட்டு அவர்களை நாசம் செய்தவனே, "நான்', "எனது' என்ற மாயத்தின் மயக்கம் தீர என்னிடம் உண்மைப் பொருளைப் பேசியவா, உனது இந்த பெருங்கருணை மிக்க செயலை நான் என்னவென்று சொல்லுவேன்!

சக்தியானவள் உலகைக்காக்க பல்வேறு நேரங்களில் பல உருவத்தில் தோன்றி, தீமைக்கு எதிராகப் போராடியிருக்கிறாள்.

அவ்வாறு அவள் தோன்றி அழித்த அசுரர் கள் ஏராளம். தேவி மாகாத்மியம், அவள் அழித்த சில அசுரர் களின் வரலாறைக்கூறி, அவள் எவ்வாறு அந்த அசுரர்களை அழித்து உலகைக் காத்தாள் என்று சொல்லும். இங்கே அருணகிரிநாதர் முருகனை ஏன் பார்வதியோடு இணைத்து, அதன்பின் "அசுரர் குலத்தை அழித்தவனே' என்று கூறவேண்டும்? அதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு.

ஒன்று, உலகைப் படைத்த சக்தியின் புதல்வன், அவளைப்போலவே தானும் உலகைக்காக்கக் கிளம்பிவிட்டான். அது மட்டுமல்ல; சக்தி சில அசுரர்களை அழிக்கக் கிளம்பும்போது, அந்த போருக்கு ஏற்றவாறு உருவம், செயல்திறன், ஆயுதம், படைக்கலன்கள் கொண்டு கிளம்புவாள். உதாரணமாக, சண்ட முண்டர்களை வதைக்க காளியாகவும், மகிஷாசுரனை அழிக்க மஹாலட்சுமி ஸ்வரூபமான துர்க்கையாகவும், சும்ப நிசும்பர்களை அழிக்க சரஸ்வதியின் அம்சமாகவும் அவள் வெளிப்பட்டு அந்த காரியங்களைச் செவ்வனே செய்தாள். காலத்திற்கு ஏற்றவாறு அந்த பராசக்தி வேண்டிய உருவமெடுத்து காரியத்தை முடித்து, திரும்பவும் உருவமில்லா பெருநிலையில் தன்னை நிறுத்திக்கொள்கிறது.

இவ்வாறாக பல்வேறு வடிவாக வந்த பராசக்தியின் குமாரன் என்று சொல்லும்போதே, முருகனும் பராசக்தியின் காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றவாறு வந்த ஒருவடிவம் என்று புரியவைக்கவே இந்தப் பாடலில் அருணகிரிநாதர் "பார்வதியின் குமாரன்' என்று கூறுகிறார். மேலும் சக்தி வழிபாட்டில் பாலாம்பிகை அல்லது வாலை என்று சித்தர்கள் போற்றும் சிறிய பெண்குழந்தை வடிவிலிருக்கும் தெய்வம் பராசக்தியே என்று, பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்யானம் என்ற அத்தியாயத்தில் கூறப்படுகிறது. பராசக்தியே குழந்தை வடிவம் தாங்கி பண்டாசுரனின் முப்பது புதல்வர்களை அழித்தாள் என்று இந்த புராணம் கூறுகிறது, அதேபோல நம் அனைவருக்கும் ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயம், பரமேஸ்வரனின் சக்தியால் மட்டுமே இந்த அசுரர்கள் அழியவேண்டுமென்ற வரம் வாங்கி வைத்திருந்தார்கள். இவ்வாறு இருக்கும்போது முருகனை ஏன் பார்வதியின் குமாரன் என்று அழைக்கவேண்டும்? அதுவும் அழிக்கும் தொழில்செய்யும் சிவன் இருக்க, சிவனின் குமாரனே என்று தானே அழைத்திருக்க வேண்டும்?

இந்தப் பாடலை சற்றே ஆழ சிந்தனை செய்தால், அருண கிரிநாதர் இங்கே வைத்துள்ள மறைபொருள் விளங்கும். அ

இந்தப் பாடலை சற்றே ஆழ சிந்தனை செய்தால், அருண கிரிநாதர் இங்கே வைத்துள்ள மறைபொருள் விளங்கும். அருண கிரிநாதர் தன் பல்வேறு திருப்புகழ் பாடல்களில் எந்த மதத்தையும் இழிவுபடுத்தியது கிடையாது. மேலும் சைவம், வைணவம், சாக்தம் என்று எல்லா தெய்வங்களையும் ஒன்றுசேர்த்துதான் பாடியிருப் பார். அதுமட்டுமல்ல; அவர் வாழ்ந்த காலத்தில் முகலாயர் ஆட்சியும் இருந்தது. அதையும் விட்டுவைக்காமல் "அவா மருவி' என்ற திருப்புகழில் "சுர அதிபதி அயனும் மாலொடு "சலாம்' இடு சுவாமிமலை வாழும் பெருமாளே' என்று பாடியிருப்பார். அதாவது இந்திரன், திருமால், பிரம்மன் ஆகியோர் சுவாமிமலை வாழும் முருகனுக்கு "சலாம்' செய்வதாகப் பாடுவார். சலாம் என்பது இஸ்லாத் தைச் சேர்ந்தவர்கள் செய்யும் வணக்கம். இதை அருணகிரிநாதர் பாட இங்கே என்ன காரணம்? அதே காரணம்தான் இந்தப் பாடலில் முருகனை சக்தியின் புதல்வனாக அழைப்பது.

இந்தப் பாடலில் கடைசி வரிக்கும் முதல்வரிக்கும் மிக முக்கியமான தொடர்புண்டு. எல்லாம் வல்ல ஒருசக்தியே காலத்திற்கு ஏற்றவாறு மக்களிடம் வெவ்வேறு உருவம்தாங்கி வருகிறது என்ற ஒருவிளக்கத்தை சாதகனுக்குக் கூறவே இந்த வரியை இங்கு வைக்க முதற்காரணம். இரண்டாவது காரணம், திருப்புகழில் அவர் எவ்வாறு எல்லா மதங்களும் ஒருகடவுளை நோக்கிப்போகின்றன என்று காட்டினாரோ, அதையே இந்தப் பாடலிலும் அவர் வெளிப்படுத்துகிறார். சக்தியின் குமாரனும், சக்தியும் வெவ்வேறல்ல; ஒருவரே என்ற விஷயத்தை நிலைப்படுத்தவே, சக்தி எவ்வாறு அசுரர்களை அழித் தாளோ அதேபோல் நீயும் அசுரர்களை அழித்தாய் என்று கூறுகிறார். இங்கு ஈசாவாஸ்ய உபநிஷத்தில் வரும் "பூர்ணம் அதஹ் பூர்ணம் இதம் பூர்ணத் பூர்ண முதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஷிஷ்யதே' என்னும் மந்திரத்தை மறைபொருளாக வைத்துள்ளார், இந்த மந்திரத்தின் அர்த்தத்தைப் பின்வருமாறு புரிந்துகொள்ளலாம்.

ஒருவரிடம் அளவிட முடியாத செல்வம் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அச்செல்வதிலிருந்து எவ்வளவு செல்வம் எடுத்தாலும், எடுத்ததைவிடவும் அவரிடம் செல்வம் பன்மடங்கு பெருகினால், அங்கே ஒருகுறைவும் ஏற்பாடாது. அதேபோல் எடுக்கும் செல்வமும் அளவிடமுடியாமல் எடுக்கமுடியும். அதனால் மூலமும் அளவிடமுடியாதது; மூலத்தின் ஒருபகுதியும் அளவிடமுடியாதது. இதேபோல்தான் கடவுளின் ஒவ்வொரு அவதாரமும், வடிவமும் எல்லாம் ஒரே மூலம்தான். பெயரும் வடிவமும் மட்டுமே வெவ்வேறு.

இதையே கணிதத்தில் சொன்னால், "முடிவிலியில் முடிவிலி குறைந்தால் எஞ்சுவது முடிவிலிதான்.' அவ்வாறே கடவுளும் முடிவிலிதான். இந்த வேதாந்த விளக்கம் தெளிவுபெறவே இந்த இரண்டு வரிகள்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் "நிருபாதி' என்னும் நாமம், எந்த வரையறை மற்றும் அளவீட்டுக்குள்ளும் வராதவள் என்ற பொருள் பொதிந்துவரும். இந்த நாமமும் இந்த இரண்டு வரிகளையே ஒத்துவரும்.

இனி முதலிரண்டு வரிகளைப் பார்ப்போம். இங்கேயும் இரண்டு மகாவாக்கியங்களை ஒளித்துவைத்துள்ளார். நான்கு வேதங்களும் ஒவ்வொரு முக்கியமான கருத்தைச் சொல்லும். அதில் யஜுர் வேதம் "அஹம் ப்ரஹ்மாஸ்மி' என்ற வாக்கியத்தையும், சாம வேதம் "தத்வமசி' என்ற வாக்கியத்தையும் சொல்லும். முதலில் இந்த வாக்கியங்கள் எவ்வாறு ஒரு சீடனுக்குப் போய்ச்சேருகிறது என்று பார்ப்போம்.

ஆன்மிக வாழ்வில் முன்னேற முயலும் ஒருவன் ஒரு குருவைப் பணிந்து, தன் நிலை கூறி, தன்னை அவரிடத்தில் ஒப்புவித்துப் பிறவியில்லா பெருநிலை நோக்கித் தம்மை அழைத்துச் செல்லுமாறு விண்ணப்பிக்கி றான். குருவும் அவனது தற்போதைய நிலையை ஆராய்ந்து அவனுக்கு ஏற்றவாறு மந்திர, யோக, இயம, நியமங்களை உபதேசிக்கிறார். சீடனின் முயற்சி, அவனின் முன்னேற்ற நிலை, வேகம் போன்றவற்றை ஆராய்ந்து, அதன்பின் அவனுக்கு அவ்வப்போது பயிற்சிகளில், மந்திரங்களில் வேண்டிய மாற்றம் செய்கிறார்.

இவ்வாறான குருவே சத்குரு என்று அழைக்கப்படுகிறார். சத்குரு என்பது ஒரு நிலை; அது ஒரு பட்டம் அல்ல. மேலும் ஒரு சத்குருவானவர் சீடனின் கடைசி நிலைவரை உடனிருப்பார். அவன் செல்வத்தின்மீதோ, தமக்குக் கீழ்ப்படிந்து அவன் நடக்கிறானா என்றோ அவரின் எண்ணம் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் இங்கே பணப்பரிவர்த்தனை என்ற செயல், ஒரு ரூபாய் என்னும் அளவிலும் நடக்காது. இந்த மாதிரியான ஒரு உறவுமுறை இன்றும் இருக்கிறது. இப்படிப்பட்ட குருக்களும் இருக்கிறார்கள். எனினும் சீடனின் தகுதிக்கேற்பவே குரு கிடைப்பார். ஒருவன் மந்திரத்தால் விபூதி வரவழைக்க வேண்டுமென்று நினைத்தால், அவன் குருவும் அதேபோல் அற்பபுத்தி கொண்ட ஒரு மனிதனாகவே அமைவார். ஆனால் சீடன் உண்மையாகவே முன்னேற வேண்டு மென்று நினைத்தால், தவறான குரு விதிவசத்தால் அமைந்தாலும், நல்லகுரு தாமே வலியவந்து அவனைக் காப்பார்.

இங்கே குரு, சீடனைப் பற்றி இவ்வளவு பேசுவதற்குக் காரணம், உண்மையான குரு ஒருவராலேயே இந்தப் பாடலில் வரும் முதலிரண்டு வரியை நடைமுறைக்குக் கொண்டு வரமுடியும். இந்தப் பாடலில் "அகமாம் எனுமிப் பிமரம்' என்ற பதம் "அகம் ப்ரஹ்மாஸ்மி'- நானே ப்ரம்மம் என்ற பதத்தைக் குறிக்கும். முதலில் ஒரு சாதகன் இந்த பதத்தை அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்கிறான். ஆனால் இது உணர்வுப்பூர்வமாகப் புரிந்தால் மட்டுமே அது உண்மையாகும். ஒரு உண்மையான கடவுளை உணர்ந்த சத்குரு இந்த உபதேசம் செய்யும்போது மட்டுமே அது உணர்வுப்பூர்வமான புரிதலாக மாறும். அதுவரை அது வெறும் தத்துவக் குப்பையாகவோ அல்லது மிக்க படித்த மேதாவித்தனமாக வாதங்களில் வெல்லவோ மட்டுமே பயன்பெறும்.

இந்த உண்மையான குருவுபதேசமே மெய்ப்பொருள் உபதேசமென்று சைவத்தில் நம்பப்படுகிறது. இந்த மெய்ப்பொருள் உபதேசமானது குரு சொல்லும்போது "அகம் ப்ரஹ்மாஸ்மி' என்று சொல்ல மாட்டார். அவர் "தத்வமஸி' என்றுதான் சொல்லுவார். ஏனென்றால் கடவுளை உணர்ந்த ஒருவர் எல்லாருள்ளும் இருக்கும் கடவுளை மட்டுமே பார்க்கிறார். ஆதலால் சீடனிடம், அவர் ஏற்கெனவே கடவுளைக் கண்டுவிட்டதால், "தத்வமஸி- நீயே அதுவாகத் தான் இருக்கிறாய்' என்று சொல்லுவார். எப்பொழுது ஒரு சீடன் இதை உணர்கி றானோ அப்போதுதான் அவன் குருவிடம் சென்று "அகம் ப்ரஹ்மாஸ்மி- நானே ப்ரஹ்மம் அல்லது நானே கடவுள்' என்று உணர்வுப் பூர்வமாகச் சொல்கிறான். இந்த இடம்தான் அத்வைத அல்லது இரண்டறக் கலந்தநிலை என்றாகிறது.

murugan

இந்தப் பாடலில் இந்த மிகப்பெரிய இரண்டு தத்துவங்களைத்தான் அருணகிரி நாதர் விளக்குகிறார். இவையிரண்டும் இன்னும் உணர்வுப் பூர்வ வடிவமல்ல. இங்கே குருவின் லட்சணமும், சீடனின் தகுதியும், வேதாந்தத்தின் அறிவுப்பூர்வ விளக்கமும், அத்வைத சித்தாந்தமும்தான் கூறப்படுகிறது.

லலிதா சஹஸ்ரநாமத்தில் "தத்வமயி' என்ற நாமம் மூன்றாகப் பிரிந்து "தத்- அது, த்வம்- ஒவ்வொரு உயிரிடத்தும்தான் என்ற உணர்வாக இருப்பது மற்றும் அவளே அந்த உயிரினுள் சித்தமாக உறைவது, அயி- அந்த உயிர்களின் அன்னையாக இருப்பது மற்றும் அந்த உயிராகவே இருப்பது'. இங்கு லலிதை குருவாகவே அமர்ந்து தன் பக்தனுக்கு "தத்வமஸி' என்ற உபதேசம் செய்கிறாள் என்று நம்பப்படுகிறது, அதுவே உண்மையும்கூட. எப்பொழுது இந்த மெய் உபதேசம் நடந்து உண்மைப் புரிந்து உணரப்படுகிறதோ, அப்போது நான் நீ என்ற பேதம் போய், அகந்தை அழிந்து இறைவனையும் அறியமுடியும். அதை விளக்கவே இந்தப் பாடல்.

செய்யுள்-9

"மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப்

பட்டூசல்படும் பரிசென்று ஒழிவேன்

தட்டூறவேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.'

விளக்கம்: க்ரௌஞ்ச மலையைத் தகர்த்த கடுமையானவரும், பயமற்றவரும், துன்பம் இல்லாதவருமான வேலவனே! தேன்கொண்ட மலர்களை அணியும் பெண்களின் மோகவலையில் சிக்கி ஊசலாடும் இந்த தடுமாற்ற நிலையிலிருந்து எப்போது மீள்வேன்.

இந்தப் பாடலில் "ஊசல்' என்ற வார்த்தை முக்கியம். ஏனென்றால் இதற்கு முந்தைய பாடல்களில் சாதகன் ஜெபம், தவம், வேதாந்தம், மகாவாக்கிய உபதேசம் பெற்றா லும், இன்னும் எதுவும் உணர்வுப்பூர்வமாக கடவுளிடம் நெருங்கவில்லை. அவன் அறிந்ததெல்லாம் அறிவைக் கொண்டே.

அதுவும் அவனுக்கு வாய்த்த ஒரு நல்ல குருவின் தயவால்.

இந்த நிலையில் சாதகன் தான் வாழ்ந்து வரும் வாழ்க்கையில் மாயை எது- உண்மை எதுவென்று அறியும் அறிவைப் பெறுகி றான். ஆனாலும் அவன் மனம் மாயை என்று அறிந்தும் அதன்பால் சென்று விழுகிறது. விழுந்த பிற்பாடு அறிவு அவனை ஏளனம் செய்கிறது. இது ஒவ்வொரு சாதகனுக்கும் நடக்கும் வெளியே சொல்லமுடியாத ஒரு உள்மனப் போராகும். இது மனதிற்கும் அறிவிற்கும் நடக்கும் யுத்தம். சிலநேரம் அறிவு வென்று அவன் கடவுள்பின் செல்கிறான்.

சிலநேரம் மனம் வென்று மாயைபின் செல்கிறான். அதனாலேயே இந்த இடத்தில் அருணகிரிநாதர் "ஊசல் படும்' என்ற பதத்தை உபயோகிக்கிறார். மேலும் இந்த ஊசலாடும் நிலை ஓய அவரே வழியும் சொல்கிறார்.

இந்தப் பாடலில் "மட்டூர் குழல் மங்கை' என்ற பதம் வெளிப்படையாக, மனம் பெண்கள் பின் சுற்றுகிறது என்ற பொருளைக் கொண்டிருந்தாலும், இங்கேயும் ஆழ்ந்த கருத்தை வைத்தே அருணகிரிநாதர் இந்தப் பாடலைச் செய்திருக்கிறார். சித்தாந்தத்தில் "புருஷன்- ப்ரக்ருதி' என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. படைக்கப்பட்ட பொருள் அனைத் துமே ப்ரக்ருதி படைத்ததுதான். ப்ரக்ருதி என்பது பெண்மை என்ற வட்டத்திற்குள் வரும். ஏனென்றால் பெண்மை மட்டுமே படைக்கமுடியும். இந்த பிரபஞ்சமே அதனால் பெண்மைதான். அதுமட்டுமல்ல; இந்தப் படைப்பிலுள்ள ஒவ்வொரு ஆன்மாவும் பெண் என்ற கருத்தே உண்டு. இங்கு பௌதீக உடலிலுள்ள ஆண்- பெண் பேதம் பேசப்படவில்லை. மாறாக ஆன்மாவின் குணநலனே பேசப்படுகிறது, இங்கே உடல் சார்ந்த பேதத்தைக் கொண்டு குழப்பமடைய வேண்டாம்.

பிரம்மமானது "புருஷன்' எனவும், பிரம்மத்தின் சக்தி "ப்ரக்ருதி' ஆகவும் இருந்து இந்தப் படைப்பிலுள்ள உயிர்கள், ஜடப் பொருட்கள் ஆகியவற்றைத் தோற்று விக்கிறது. அதுமட்டுமல்லாமல் ப்ரக்ருதியை யான சக்தியே மாயையாக, இந்த உயிர்கள் அனைத்தையும் உண்மைநிலை அறியவிடாமல் கர்மவினைக்கேற்ப மாயையில் மூழ்கடிக்கிறது. இந்த மாயையின் தோற்றத்தையே தேன் வடியும் மலர்கொண்ட பெண்ணாக அருணகிரிநாதர் வர்ணிக்கிறார். எவ்வாறு ஒருவன் மோகவலையில் வீழ்ந்து பின்னால் நாசமடைகிறானோ, அவ்வாறே அவன் மாயையின் தூண்டுதல்களுக்கு ஆளாகி, அது மனதிற்கும் புலன்களுக்கும் தேன்போல் இருக்கும் என்று நம்பி ஏமாந்து, அந்த வலையிலே பல பிறவிகள் சுழல்கிறான். அபிராமி அந்தாதியில் பட்டர் "தாதியுறு மத்தில் சுழலும் என் ஆவி' என்று இந்த நிலையையே கூறுகிறார்.

இவ்வாறு மாயையில் சிக்கித்தவிக்கும் ஒருவன் எவ்வாறு அதிலிருந்து வெளியில் வரமுடியும்? அதற்கு வழியை முருகனின் செயல்களில் இருந்தே கூறுகிறார். சூரபத்மனை அழிக்கச் செல்லும் வழியில் கிரௌஞ்ச மலை குறுக்கிடுகிறது.

அந்த மலையைக் கடக்க எண்ணிய தேவர் படைகள் அந்த மலையிலிருந்த குகைகளில் மாட்டி வழிதெரியாமல், அசுரர் மாயையில் சிக்கிவிடுகின்றனர். முருகன் வேலைவிட்டு அந்த மாயையை நீக்கி, மலையை அழித்து தேவர்களைக் காக்கிறார். காக்கும் முருகன் எப்படியிருக்கிறார் என்றால் "கடுமையாக' வேலைசெய்கிறார். "பயமில்லாமல்' போராடுகிறார். மேலும் "துன்பமில்லாமல்' இந்த வேலையில் ஈடுபடுகிறார்.

இங்கே தேவர்கள் என்று சொல்லப்படுவது நம்முடைய நல்ல எண்ணங்களை! கிரௌஞ்ச மலை நம் கர்மவினைகளைக் குறிக்கும்.

அதன் குகைகள் ஆழ்மனதில் புதைந்துள்ள ஆசைகளைக் குறிக்கும். இந்த ஆசைகளினால்தான் நல்ல எண்ணங்கள் இருந்தாலும், கர்மவினைகளால் அதன் மாயைகளில் சிக்கிதவிக்கும் ஆன்மா கடவுளை அடையமுடியாமல் தவிக்கிறது. இந்த இன்னல் தீர, முருகனின் வேலே உதவுகிறது. முருகனின் வேல் அறிவைக் குறிக்கும் அதேசமயம், பராசக்தியையும் குறிக்கும். பரா சக்தியே ப்ரக்ருதியாக இருந்து மாயையை செய்வித்தாலும், அவளே முருகன் கை வேலாக இருந்தும், அறிவாக இருந்தும் சாதகனை முருகனிடம் அழைத்துச் செல்கி றாள். அந்த சக்தியே சாதகனின் துன்பம் தீர கர்மவினைகளை அழிக்கிறது. சாதகன் கடவுளிடம் அன்பு மேலிட, கடவுள் தன் சக்தியின் வழியாக ஏற்படுத்திய மாயையை சக்தியாலேயே களைந்து, அந்த ஆன்மாவைத் தன்னுள் சேர்த்துக்கொள்கி றார். அதனை உணர்த்தவே இந்தப் பாடலில் அருணகிரிநாதர் க்ரௌஞ்ச மலை வதத்தை வைத்துள்ளார்.

மேலும் ஒரு சாதகன் எவ்வாறு ஆன்மிக வாழ்வில் இருக்கவேண்டும் என்றும் இந்த உதாரணத்தின்மூலம் அறிவுறுத்துகிறார்.

முருகனைப்போல் தன்னுடைய பயிற்சிகளில் கடுமையாக ஈடுபடவேண்டும். மாயையின் வலையில் ஊசலாடினாலும் பயமில்லாமலும், துவண்டு போகாமலும், தன்னுடைய அறிவென்னும் வேல்கொண்டு ஆழ்மன ஆசைகளைக் களைந்து கர்மவினைகளை அழிக்கவேண்டும். மனம் ஊசலாடினாலும், அறிவின் துணைகொண்டு ஆன்மிக வாழ்வில் முன்னேறவேண்டும் என்பதை சாதகனுக்கு உணர்த்தவே இந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகள்.

கடவுளின் குணங்களாக "நிட்டூர', "நிராகுல', "நிர்பய' ஆகிய வார்த்தைகள் இங்கு பயன்படுத்தபடுன்றன. லலிதா சஹஸ்ரநாமத்தில் "நிராகுலா'- துன்பம் இல்லாதவள் என்று வருகிறது. ஆகுலம் என்றால் குழப்பம் என்றுபொருள். குழப்பமிருக்குமிடம் இறுதியில் துன்பத்திலேயே முடியும். அவ்வாறான குழப்பமில்லாததால் லலிதை துன்பமில் லாதவளாக இருக்கிறாள். அதுபோலவே ஒருசாதகன் குழப்பமில்லாமல் ஆன்மிக வாழ்வில் சென்றால்தான் துன்பமில்லாமல் முன்னேறமுடியும்.

(அனுபூதி தொடரும்)

om010121
இதையும் படியுங்கள்
Subscribe