கடந்த இதழில் அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதியின் விநாயகர் துதிக்கான விளக்கம் கண்டோம். இனி, 51 அட்சரங்களைக் குறிக்கும் 51 பாடல்களைத் தொடர்ந்து காண்போம்.
செய்யுள்-3
"வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண்ட இடம்
தானோ பொருளாவது ஷண்முகனே.'
விளக்கம்: சண்முகப் பெருமானே! மெய் பொருளாவது எது? ஆகாயமா? நீரா? வாழும் பூமியா? காற்றா? இல்லை அறிவின் உண்மை, நிலையான ஞானமா? வேதம் கூறும் பொருளா? நானா?
என் மனமா? என் அகந்தையா? இல்லை என்னை ஆட்கொண்டு அகந்தை உருகுமிடமான "தான்'ஆ? இல்லை நீயேதான் இவையெல்லாவற்றுக்கும் பொருளா?
இரண்டாம் பாடலில் "எல்லாமற என்னை இழந்த நலம்' என்று வேண்டிய சாதகனுக்கு பக்தி நெறிகாட்டிய அருணகிரிநாதர், மூன்றாம் பாடலில் வேதாந்தம் வழியாக அதே பொருளை விளக்குகிறார். இந்தப் பாடலில் அருணகிரிநாதர் சொல்லாமல் சொல்வது, பக்தியும் வேதாந்தம் வழியாக ஞானத்தில் முடியும் என்பதே.
உபநிஷத் என சமஸ்கிருதத் தில் கூறப்படும் வேதாந்த மானது, எந்தவொரு பொருளின் மெய்ப்பொருளைக் காண, அதன் உண்மைநிலையை ஆராய "நேத்தி நேத்தி' என்ற
அதாவது "இல்லை இல்லை'
என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக் கிறது. எந்தவொரு பொருள் எப்பொழுதும் மாறாத தன்மை கொண்டிருக்கிறதோ அப்பொருளே மெய்ப்பொருளாகும். மற்றவையெல்லாம் அந்த மெய்ப் பொருளின் மாறுபட்ட தோற்றங்களே.
எந்தவொரு சித்தாந்தையும் மெய்ப் பொருள் காணவேண்டுமானால், அதை அறிவின் ஆராய்ச்சிக்குட் படுத்தி, அதன் ஸ்தூலத்தன்மையை மறுத்து, அதன் உண்மையான சூட்சுமத் தன்மையைக் காணவேண்டும். உதாரணமாக, ஒரு நாற்காலி இருக்கிறதெனில், அதன் பௌதீக வடிவம்தான் நாற்காலி. அதுவும் மனிதர்கள் தங்கள் மொழியில் வைத்த குறியீடு அல்லது பெயர்தான் "நாற்காலி.' ஆனால், உண்மையில் அதற்கு பெயர் என்ற ஒன்றில்லை. அதேபோல், இந்தப் பெயரைத் தாண்டி யோசித்தால், அங்கே வெறும் மரத்தாலா ன ஒரு பொருள்தான் உண்டு. அதுவும் வெறும் மரம் மட்டும்தானா? இல்லை.
மரத்தினுள் சில நார்கள் பின்னிப் பிணைந்து ஒரு வடிவம் தருகிறது. அந்த மரத்தினுள்ளும் ஈரம் உண்டு; காற்று சென்றுவர நுண்ணிய இடை வெளி உண்டு. மேலும், மெல்லிய உஷ்ணமும
கடந்த இதழில் அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதியின் விநாயகர் துதிக்கான விளக்கம் கண்டோம். இனி, 51 அட்சரங்களைக் குறிக்கும் 51 பாடல்களைத் தொடர்ந்து காண்போம்.
செய்யுள்-3
"வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண்ட இடம்
தானோ பொருளாவது ஷண்முகனே.'
விளக்கம்: சண்முகப் பெருமானே! மெய் பொருளாவது எது? ஆகாயமா? நீரா? வாழும் பூமியா? காற்றா? இல்லை அறிவின் உண்மை, நிலையான ஞானமா? வேதம் கூறும் பொருளா? நானா?
என் மனமா? என் அகந்தையா? இல்லை என்னை ஆட்கொண்டு அகந்தை உருகுமிடமான "தான்'ஆ? இல்லை நீயேதான் இவையெல்லாவற்றுக்கும் பொருளா?
இரண்டாம் பாடலில் "எல்லாமற என்னை இழந்த நலம்' என்று வேண்டிய சாதகனுக்கு பக்தி நெறிகாட்டிய அருணகிரிநாதர், மூன்றாம் பாடலில் வேதாந்தம் வழியாக அதே பொருளை விளக்குகிறார். இந்தப் பாடலில் அருணகிரிநாதர் சொல்லாமல் சொல்வது, பக்தியும் வேதாந்தம் வழியாக ஞானத்தில் முடியும் என்பதே.
உபநிஷத் என சமஸ்கிருதத் தில் கூறப்படும் வேதாந்த மானது, எந்தவொரு பொருளின் மெய்ப்பொருளைக் காண, அதன் உண்மைநிலையை ஆராய "நேத்தி நேத்தி' என்ற
அதாவது "இல்லை இல்லை'
என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக் கிறது. எந்தவொரு பொருள் எப்பொழுதும் மாறாத தன்மை கொண்டிருக்கிறதோ அப்பொருளே மெய்ப்பொருளாகும். மற்றவையெல்லாம் அந்த மெய்ப் பொருளின் மாறுபட்ட தோற்றங்களே.
எந்தவொரு சித்தாந்தையும் மெய்ப் பொருள் காணவேண்டுமானால், அதை அறிவின் ஆராய்ச்சிக்குட் படுத்தி, அதன் ஸ்தூலத்தன்மையை மறுத்து, அதன் உண்மையான சூட்சுமத் தன்மையைக் காணவேண்டும். உதாரணமாக, ஒரு நாற்காலி இருக்கிறதெனில், அதன் பௌதீக வடிவம்தான் நாற்காலி. அதுவும் மனிதர்கள் தங்கள் மொழியில் வைத்த குறியீடு அல்லது பெயர்தான் "நாற்காலி.' ஆனால், உண்மையில் அதற்கு பெயர் என்ற ஒன்றில்லை. அதேபோல், இந்தப் பெயரைத் தாண்டி யோசித்தால், அங்கே வெறும் மரத்தாலா ன ஒரு பொருள்தான் உண்டு. அதுவும் வெறும் மரம் மட்டும்தானா? இல்லை.
மரத்தினுள் சில நார்கள் பின்னிப் பிணைந்து ஒரு வடிவம் தருகிறது. அந்த மரத்தினுள்ளும் ஈரம் உண்டு; காற்று சென்றுவர நுண்ணிய இடை வெளி உண்டு. மேலும், மெல்லிய உஷ்ணமும் உண்டு. இந்த மரத்தின் வடிவமோ மண்ணிலிருந்து சத்துகளை உள்ளடக்கிய வடிவமே. இப்படியாகச் செல்கிறது "இல்லை' கோட்பாட்டின் முதிர்ச்சி.
கடைசியாக மரத்தினுள்ளே உள்ள அணுக்குவியலையும், அந்த அணுக் களை இயக்கும் சக்தியையும் சென்றடையும். இவ்வாறாக, பஞ்சபூதத்தின் வெவ்வேறு பரிமாணங்களின் கலவையே இந்த உலகத்தின் பொருட் கள் எல்லாம்.
எவ்வாறு சிவப்பு, நீலம், மஞ்சள் வண்ணங்கள் சேர்ந்து பல லட்ச வண்ணங்களாக உருவாகிறதோ, அவ் வாறே முக்குணங்கள் எனச் சொல்லப் படும் "சத்வம், ரஜஸ், தமஸ்' ஆகியவற் றோடு பஞ்சபூதக் கலவை சேர்ந்து பலநூறு கோடி வடிவங்களும், உயிர் களும் இந்த உலகில் உண்டாகின்றன.
மனிதனும் தன் மூலத்தை ஆராய முற்படும்பொழுது, தன் உடலின் பஞ்ச இந்திரியங்கள் அல்லது அவற்றால் ஏற்படும் உணர்வுகளான பார்த்தல், கேட்டல், ருசித்தல், உணர்தல் ஆகிய வற்றைக்கொண்டே ஆரம்பிக்கிறான். ஆனால், இவையெல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒரு பொருளில் கரையும் போதே இந்த ஐந்து உணர்ச்சிகளால் அந்தப் பொருளை விளக்க முடியாததை உணர்கிறான். அதேபோல், ஒரு மனிதன் ஐந்து உடல்களால் ஆனவன். அன்னமய கோசம் எனப்படும் ஸ்தூல உடல், பிராணமய கோசம் எனப்படும் காற்றினால் இயங்கும் உடலுறுப்புகள், மனோமய கோசம் எனப் படும் மனது, விஞ்ஞானமய கோசம் எனப் படும் அறிவு, கடைசியாக ஆனந்தமய கோசம் எனப்படும் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட நிலை. இந்நிலையை எய்துவதால் நிலையான பேரானந்தம் ஏற்படுவதாலேயே இது ஆனந்த மய கோசம் எனபெயர் பெற்றது.
இந்நிலைகளை விளக்கவே லலிதையின் நாமமான "பஞ்ச கோசாந்தரஸ்திதா' என்னும் நாமம் வாக்தேவிகளால் கூறப்படுகிறது. லலிதை எவ்வாறு எல்லா நிலைகளிலுமிருந்து இயக்குகிறாளோ, அவ்வாறே முருகப் பெருமா னும் பஞ்சகோசத்திலுமிருந்து இயக்குகிறார். இந்த ஐந்தாம் நிலையில் லலிதை, முருகன் என்ற நாமபேதங்களற்று எல்லாம் ஒன்றாகி றது. அதனாலேயே லலிதையின் ரகஸ்ய நாமம் "பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபிணி' என அடுத்த நாமத்திலேயே கூறுகிறது.
அதேபோல், லலிதையின் நாமத்தில் "வேத ஜனனி' என்னும் நாமம், லலிதை வேதத்திற்கு அப்பாற்பட்டவள் எனத் தெரிகிறது. ஒருவர் படைக்கும் பொருள் எக்காலத்திலும் படைப் பவரைவிட மேன்மையாக முடியாது. ஏனென் றால், படைப்பவர் எப்பொழுதும் தாம் முன்பு படைத்ததைவிட நவீனமாக அடுத்த படைப் பைக் கொடுப்பார்.
வேதம் எல்லாவற்றிலும் மேன்மையானதுதான். ஆனால், வேதம் மட்டுமே உயர்ந்த தல்ல. வேதத்தைத் தோற்றுவித்த அந்த சக்தியே உயர்ந்ததென சொல்வது தர்க்கரீதியாகப் பொருந்தும். எவ்வாறு வேதமானது பெருமாளி டம் ஒரு பக்தனை இட்டுச்செல்லுமோ, அவ்வாறே வேதமானது முருகனிடம் ஒருவ னைக் கொண்டுசேர்க்கும். "வேத வேத்யா' என்னும் லலிதையின் நாமமும் பராசக்தியை வேதத்தால் அறியமுடியுமெனச் சொல்கிறது.
இங்கே நாம் முக்கியமாக ஒரு விஷயத்தைப் பார்க்கவேண்டும். வேதத்தால் கடவுளை அறியமுடியும் என்றுதான் கூறியிருக்கிறதே தவிர, வேதமே கடவுள்; வேதத்தில் கடவுள் அடக்கமென்று கூறவில்லை. மேலும், வேதத் தால் மட்டும்தான் கடவுள் அறியப்படு வார் என்றும் கூறவில்லை.
இங்கே நாம் வேதம் எனச் சொல்வது ஒரு குறிப்பிட்ட மதநூல் அல்ல. பல்வேறு மதங் கள் இறைவனை அடைய நிறைய கிரந்தங்களை வைத்திருக்கின்றன. எந்த மதத்தின் வேதமானா லும் இறைவனை அடைய வழிகாட்டுகிறதே தவிர, தாம் கூறும் பாதையே சிறந்ததெனக் கூறவில்லை. இதிலிருந்து தெரிவது என்ன வெனில், கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்வதுபோல், வெவ்வேறு காலகட்டங் களில் இறைவன் தோன்றி, காலத்திற்கேற்றாற் போல் உபதேசங்களைக் கூறிச்சென்றிருக்கிறான்.
ஆனால், உபதேசமே இறைவனாக முடியாது.
அவன் அதற்கும் அப்பாற்பட்டவன். அதனா லேயே அருணகிரிநாதர் "நவில் நான்மறையோ' என்று நிறுத்தாமல், "நேத்தி நேத்தி' (இல்லை இல்லை) என்னும் கோட்பாட்டின்படி, கடைசியில் "தானோ பொருளாவது ஷண் முகனே' என, எல்லாவற்றுக்கும் பொருளாக முருகனே இருக்கிறான் எனக் கூறுகிறார். இதுவே வேதாந்தம் கூறும் பொருளுமாகும்.
பக்தர்கள் நாமஜபம் செய்து, பக்திவழி நின்று வேதாந்தமும் கற்கவேண்டுமென, முதல் மூன்றுநிலைகளை முதல் மூன்று பாடல் களிலேயே காட்டுகிறார் அருணகிரிநாதர். எல்லாமே முருகன்தான் எனச் சொல்லும் பொருளிலேயே, ஆத்ம சொரூபமாக முருகன் இருக்கிறான் எனவும் சொல்கிறார்.
செய்யுள்-4
"வளைப்பட்ட கைம்மாதொடு மக்களெனும்
தளைப்பட்டழியத் தகுமோ தகுமோ
கிளைப்பட்டெழு சூருரமும் கிரியும்
தொளைப்பட்டுருவத் தொடு வேலவனே'.
விளக்கம்: வேலவா! அன்று சூரனுக் கெதிரான போரில் அவன் மார்பையும், க்ரௌஞ்ச மலையையும், அசுரசேனைகளையும் அழிக்க வேலை வீசியெறிந்தவனே, இன்று நான் உன்னையடைய என் மனைவி, மக்களே தடையாக இருக்கிறார்களே- இந்தத் தடை அழியுமா? இவ்வாறு என்னை இந்தச் சூழலில் கைதியாக வைத்திருப்பது உனக்குத் தகுதியான செயல்தானா? இந்தச் செயல் தகுமா?
மூன்றாம் பாடலில் வேதாந்தப் பொருள் கற்றுணரத் தலைப்பட்ட பக்தன், இப்போது ஆன்மிகப் பாதையில் முன்னேற எத்தனிக்கும் போது பல தடைகளை சந்திக்கநேரிடும். முதலாவதாக, தன்னுடைய சொந்தக் குடும்பமே தடையாக அமையும். ஏனெனில், ஒரு பக்தன் முன்னேற தன்னுடைய ஆன்மிகத் தேடலில் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், ஏற்கெனவே தன்னுடைய நேரத்தின் பெரும்பான்மைப் பகுதியைத் தன் குடும்பத்தின் நலனுக்காகவும், அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் செலவழிக்கக் கடமைப்பட்டுள்ளான். இப்போது ஆன்மிகத் தேடல் ஆரம்பித்தவுடன் அதுவே அவனுக்குத் தடையாகத் தெரிகிறது.
இங்கு அருணகிரிநாதர் சொல்லாமல் ஒரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறார்.
அதாவது, "வளைப்பட்ட கைம்மாது' என்பது மனைவி என்னும் பொருளில் மட்டுமல்ல; அது தாயையும் குறிக்கும். ஒருவர் பல பிறவிகளில் தாய் வயிற்றில் பிறந்து, பின் தானும் மக்களைப் பெற்று, ஜென்ம ஜென் மங்களாகக் கடனை ஏற்படுத்திக்கொண்டு, அதன் வலையில் சிக்குவது என்றுதீரும் என்றுதான் அருணகிரிநாதர் கேட்கிறார். நம் வாழ்வின் ஒவ்வொரு சொந்தமுமே ஏதோவொருவகையில் நாம் அவருக்குக் கடன்பட்டிருப்பதாலேயே ஏற்படுகிறது. இந்த கடன் தீரும்போது, அந்த ஆத்மா இறைவனை அடைகிறது.
இங்கு பக்தர் என்னும் சொல் ஆண்- பெண் இருவருக்குமே பொருந்தும். ஆன்மிகத்தில் ஒரு தடை உடைந்தபின், அதைவிட வலிமையானதும், நுண்ணிய அடுத்த தடையும் புலப்படும். இது ஒருவர் நூறு ஆடைகள் அணிந்திருப்பது போன்றது. ஒரு ஆடை கழிந்தால்தான் அடுத்தது தெரியும். இவ்வாறு ஒருவர் இறைவனை அடைய முயலும்போது, இறைவனே அவரைத் தேடிவருகிறான்.
இந்தப் பாடலில் "வளைப்பட்ட கைம்மாது' என்பதை ஒருவர் பிறவிக் கடலில் தவிப்பதையும், உலகில் பிறந்து உழல்வதையும் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாறாக, அருணகிரிநாதர் "கிருஹஸ்தாஸ்ரமம்' எனச் சொல்லப்படும் இல்வாழ்க்கையைத் தவறாகப் பாடினார் என்று கொள்ளமுடியாது. இங்கே தாய், மனைவி, மக்கள் என்று கடன்பட்டுள்ளேனே - என்னை இவ்வாறு விழவைத்தது நீதானே? இது உனக்கு அழகா முருகா எனக் கேட்கும் தொனியில்தான் கொள்ளவேண்டும்.
லலிதையின் நாமங்களில் "சம்சார பங்க நிர்மக்ன சமுத்தரன பண்டிதா' என்னும் நாமம், லலிதை ஒருத்தியே தம் பக்தர்களை இந்தப் பிறவிக் கடலிலிருந்து காப்பவள் எனச் சொல்கிறது. மேலும், லலிதையின் பக்தர்கள் அவளி ன்றி மற்றவரை நினைக் காதவர்கள். ஆதலால், இந்த உலக வாழ்க்கையிலுள்ள இன்பதுன்பங்கள் அவர்களை எதுவும் செய்வதில்லை.
அதேபோல், அனுபூதி படிக்கும் அடியவர்கள் முருகனை மட்டுமே நினைப்பதால், அவர்களுடைய வினைகளை அடியவர்களிடம் நெருங்காமல் இறைவன் காக்கிறான். மேலும், பக்தர்கள் தங்கள் இல்லறக் கடமைகளையும் குறைவறச்செய்ய வழிவகுக்கிறான்.
கடவுளிடம் ஒரு எல்லை தாண்டிப் பழகுபவர்கள் இறைவனை வசைபாடுவதும் உண்டு. இதை "நிந்தா ஸ்துதி' எனச் சொல்வோம். அவ்வாறே அருணகிரிநாதர் பல இடங்களில் முருகனை நிந்தா ஸ்துதி செய்துள்ளார். அவரே "செந்தமிழால் வைதாரையும் வாழவைப்பான்' என முருகன் அலங்காரத்தில் குறிப்பிடுகிறார்.
இரண்டாவது வரியில் "கிளைப்பட்டெழு சூருரமும் கிரியும்' என்று சூரபத்மன் மரமாக நின்று, முருகனின் வேலால் துளைப்பட்டதைப் பாடினாலும், இங்கும் ஒரு மறைபொருளை உள்வைத்திருக்கிறார். இந்தப் பிறவியை கடல் எனச் சொல்வதுபோல, காடு அல்லது ஆரண்யம் எனவும் சொல்லும் வழக்கமுண்டு. எவ்வாறு ஒரு காட்டில் மரக்கிளைகள் ஒன்றோடொன்று பின்னி சூரிய ஒளிகூட கீழே விழாமல் மறைக்குமோ, அவ்வாறு நம் வினைகளானது மற்றவர்கள் வினைகளோடு பின்னி, நம்மைக் கடன்பட்டவராக்குவது மட்டுமல்லாமல், நம் ஆன்மிக வாழ்க்கைக்கும் பெரும் தடையாக உருவெடுக்கிறது. இதனால் நாம் மீண்டும் மீண்டும் பிறந்து வினைதீரும் முன்னே மேலும் வினைசேர்த்து இறக்கிறோம். இதையே "பவ ஆரண்யம்' என சமஸ்கிருதத்தில் கூறப்படுகிறது.
இந்த வினைக்காட்டை வேரோடு அழிக்கும் கோடரியாக இருப்பதால் "பவ ஆரண்ய குடாரிக்கா' என லலிதையை வாக்தேவிகள் புகழ்கிறார்கள்.
(அனுபூதி தொடரும்)