ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குலதெய்வ வழிபாடென்பது மறுக்கமுடியாத ஒன்று. வடமாவட்ட கிராமங்களில் பெரும்பாலான மக்கள் அய்யனார், கருப்பையா, பச்சையம்மன், முனியப்பர், மதுரை வீரன், பூமலையப்பர், முத்தையா, அக்னிவீரன், ஆகாசக் கருப்பு, குள்ளக்கருப்பு, நொண்டிக்கருப்பு, அங்காளம்மன், திரௌபதையம்மன், பாஞ்சாலியம்மன் போன்ற தெய்வங்களைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டுவருகிறார்கள். அதேபோல், தென்மாவட்டங்களில் சுடலை மாடசாமி, பதினெட் டாம்படிக் கருப்பு போன்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள். போரில் வீரமரணமடைந்த தங்கள் குடும்பத்தினருக்கு நடுகல் நட்டு, அவர்களையும் குலதெய்வங்களாக வழிபடுகிறார்கள்.
இப்படி கிராமங்களில் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தவர்கள் காலப்போக்கில் பிழைப்புக்காகப் புலம்பெயர்ந்து பல்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்றார்கள். அப்படி சென்றவர்கள்கூட தங்கள் குலதெய்வத்தை மறக்காமல், ஆண்டுக்கொருமுறையாவது தங்கள் குடும்பத்தினரோடு வந்து குலதெய்வத்தை வழிபட்டுச் செல்கிறார் கள். குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பத்தினருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், பெருந்தெய்வங்களான விநாயகர், சிவன், பெருமாள், பராசக்தி, துர்க்கை, லட்சுமி, முருகன், சரஸ்வதி போன்றோரை வழிபட்டாலுங் கூட, முதலில் குலதெய்வத்தை வழிபட்டபிறகுதான் மற்ற தெய்வங்களை வழிபடவேண்டும் என்கிறார்கள் முன்னோர்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் பிறப்புமுதல் இறுதிவரை குலதெய்வத்தை முதலில் கும்பிட்டபிறகே எந்த செயலையும் தொடங்குவார்கள்; தொடங்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு வீட்டில் குலதெய்வப் படையல் போட்டபிறகுதான் பெண்ணையும் மாப்பிள்ளையையும் திருமணத்திற்கு அனுப்பி வைப்பார்கள். பிள்ளை களுக்கு முடியெடுத்தல், காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை குலதெய்வத்தைத் தேடிச்சென்று செய்கிறோம். தற்போது பலரும் தங்கள் குலதெய்வம் எங்குள்ளதெனத் தெரியாமல், அதைக் கண்டுபிடிக்க பிரசன்னம், ஜோதிடம் பார்த்துத் தேடிவருகிறார்கள். முன்னோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளாததுதான் இதற்குக் காரணம்.
ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் குலதெய்வத்தைப் பற்றித் தெரிந்துகொள்வ தோடு, அதன் கதைகள், அது தோன்றிய விதம் பற்றி எழுத்துமூலம் பதிவுசெய்து வைத்து, தங்கள் வருங்கால சந்ததியினருக்கு தெரியப் படுத்தி வழிகாட்டவேண்டும். அப்படிப்பட்ட குல தெய்வங்களாக இருந்து, தங்களை நம்பி வரும் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாழவைத்து வருகிறார்கள் கூத்தூர் அய்யனார், சின்னையா, செல்லியம்மன், கருப்பையா மற்றும் பரிவார தெய்வங்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தின் கடைக்கோடி எல்லையிலும், அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்திலு முள்ளது

பெரம்பலூர் மாவட்டத்தின் கடைக்கோடி எல்லையிலும், அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்திலு முள்ளது கூத்தூர். இங்குள்ள செம்பையனாரை செம்புலிங்கம், சுயம்புலிங்கம், ஜம்புலிங்கம் என் பல பெயர்களில் அழைக்கிறார்கள். செம்பைய னார், சின்னையா என்னும் கருப்பையா, பெரிய கருப்பையா, பச்சையம்மன், பூங்காவனம், சப்தகன்னிகள், செல்லியம்மன், வாள்முனி, செம்முனி, வளர்ந்த சடாமுனி, அடைக்கலம் காத்த அய்யனார், முத்தையா, ஆகாசக் கருப்பு, மருதையன், பாப்பாத்தி, விசாலாட்சி ஆகிய தெய்வங்கள் கூட்டமாக இருந்து மக்களின் அனைத்துப் பிரச்சினைகளை யும் தீர்த்து அருளாசி வழங்குகிறார்கள்.
முதலில் செம்பையனார் பிறகு சின்னையா என்ற கருப்பையா, பின்னர் மற்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள்.
இதில் நேர்த்திக்கடனாக உயிர்ப்பலி கொடுப்பது சின்னையா கோவிலில். முன்பெல்லாம் இக்கோவிலுக்கு வழிபடவருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து உற்றார்- உறவினர்களோடு மாட்டுவண்டிகளில் புறப்படுவார்கள். அப்படிப் புறப் படும்போது தெய்வங்களுக்குப் படைப்பதற்காக ஒரு வண்டி நிறைய தேங்காய்களை ஏற்றிக் கொண்டு வருவார்கள். காரணம், அத்தனை தெய்வங்கள் உள்ளன. காலைமுதல் மாலைவரை பொங்கல் வைத்துப் படையல்போடுவது, பிள்ளைகளுக்கு மொட்டையடித்துக் காது குத்துவது, கிடாவெட்டி படைய லிட்டு வழிபாடு முடிந்து விருந்து என அவ்வப் போது அமர்க்களப்படுத்திவருகிறார்கள். இந்த தெய்வங்களை வழிபடும் மக்கள் "கூத்தூரன் வகையறா' என்றே பட்டப் பெயர்வைத்து அழைக்கப்படுகிறார்கள். எந்த ஊரில் வாழ்ந்தாலும் தங்கள் குலதெய்வம் வாழும் ஊரான கூத்தூர் பெயரை தங்கள் பெயருக்கு முன்பாக அடைமொழிபோல் சேர்த்துக்கொள்கின்றனர்.
இந்த மக்கள் பல நூறாண்டுகளுக்கு முன்பு தங்கள் குலதெய்வத்துடன் ஒகளூர் என்ற ஊரிலிருந்து அரியலூர் அருகேயுள்ள கூத்தூருக்குப் புலம்பெயர்ந்து வந்து வாழ்ந்துள்ளனர். காலப்போக்கில் இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கும் புலம்பெயர்ந்துள்ளனர்.
குறிப்பாக, தோட்டப்பாடி, முருகமங்கலம், ஆரியப்பாளையம், ஆக்கனூர்பாளையம், செங்கமேடு, அகரம்சீகூர், கருப்பட்டங்குறிச்சி, அரியலூர் ஆகிய ஊர்களுக்குப் புலம் பெயர்ந்தனர். இவ்வாறு பல ஊர்களுக்கும் புலம்பெயரக் காரணம் என்ன? செவிவழிக் கதையாகக் கூறப்படும் சம்பவங்கள் மனதை நெகிழச் செய்கின்றன.
ஒகளூரிலிருந்து கூத்தூருக்கு வந்த மக்கள் நிம்மதியாக வாழ்ந்துள்ளனர்.
அவர்களுள் சிலர் அருகிலுள்ள அரியலூர் ஜமீனில் வீரர்களாகப் பணிசெய்துள்ளனர்.
அவர்களுள் ஒரு குடும்பத்தில் பிறந்த பாப்பாத்தி, விசாலாட்சி ஆகிய சகோதரிகள் மிக அழகான சுட்டிப் பெண்கள். தங்கள் தோழிகளோடு காடுகரை என்று சுற்றி விளையாடிவந்தார்கள். இவர்களிருவருமே அங்கு வாழ்ந்த அத்தனை குடும்பத்தினருக்கும் செல்லப்பிள்ளைகள். இவர்கள் பருவவயதை அடைந்து பார்ப்போரை வியக்கவைக்கும் அழகு தேவதைகளாக விளங்கினர். அதனால் பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். ஒரு நாள், அந்த ஊர் மக்களுக்கு பெரும்சோதனையான நாளாகப் பொழுதுவிடிந்தது.
அன்று அந்தப் பகுதிக்கு வேட்டைக்கு வந்துள்ளார் அரியலூர் ஜமீன்தார். அவரது கண்களில் பாப்பாத்தியும் விசாலாட்சியும் பட்டுவிட்டனர். ""இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கவேண்டிய இடம் எனது அரண் மனையல்லவா? நாளை காலை முறைப்படி சீர்வரிசை, மேளதாளங்களோடு பெண்ணை அழைத்துச்செல்ல வருவார்கள். அனுப்பி வையுங்கள்'' என்று உத்தரவு போட்டுவிட்டுச் சென்றுவிட்டார் ஜமீன்தார்.
"பூப்போல வளர்ந்த எங்கள் பிள்ளைகளை ஜமீனின் அந்தப்புறத்துக்கு அனுப்பிவிட்டால், அங்கு பத்தோடு பதினொன்று என்றல்லவா இருப்பார்கள்? மேலும், நம் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு நாம் அரண்மனைக்குள் செல்லமுடியாது அத்தனைக் கெடுபிடிகள் இருக்கும். நம் இனத்தில் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து கொடுத்தால் பிள்ளைகளை அடிக்கடி சென்று பார்க்கலாம். அவர்களும் நம் வீட்டுக்கு வருவார்கள்.
அரண்மனைக்கு அனுப்பினால் சுதந்திரமாகப் பறக்கும் கிளிகளை கூண்டுச்சிறையில் அடைத்தது போலாகிவிடும்' என பங்காளிகள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். தற்போதைக்கு ஊரைவிட்டு எல்லாரும் கிளம்புவது- அப்படிப் போகும்போது பாப்பாத்தி, விசாலாட்சி இருவரையும் அழைத்துச்சென்றால் ஜமீன் ஆட் களுக்குத் தகவல்தெரிந்து வழியில்வந்து மடக்கிவிடுவார்கள். எனவே, இப்படிச் செய்வோம்' என்று ஒரு முடிவெடுத்தார்கள்.
அதன்படி, இரு பெண்களுக்கும் கொஞ்சம் சாப்பாடு, தண்ணீரைக் கொடுத்து தானியம் கொட்டிவைக்கும் ரகசிய அறையில் இறக்கிவிட்டனர்.
""இருவரும் உள்ளேயே இருக்க வேண்டும். ஜமீன் ஆட்கள் வந்து பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள். அதன்பிறகு, நாங்கள் வந்து குரல் கொடுப்போம். அப்போதுதான் நீங்கள் வெளியேவரவேண்டும். அதற்குப்பின், உங்கள் இருவரையும் எங்களுடன் அழைத்துப்போகிறோம்'' என்று கூறினர்.
பெற்றோர், உற்றார்- உறவினர் பேச்சைக்கேட்டு இரு பெண்களும் அப்பாவித்தனமாகத் தானிய அறைக் குள் அடைக்கலமானார்கள். உடனே மூட்டைமுடிச்சுகளுடன் ஊரை காலிசெய்துகொண்டு வடக்கு நோக்கி இரவோடு இரவாகப் புறப்பட்டனர். .அப்படிச் சென்றவர்கள் நீண்ட தூரம் சென்றுவிட்டனர். இதனால் சில நாட்கள் கடந்துவிட்டன. இதற்கிடையில், அரியலூர் ஜமீன் ஆட்கள் மேளதாள சீர்வரிசைகளோடு கூத்தூருக்குள் நுழைந்தனர்.
அங்கு மனித நடமாட்டமே இல்லாமல், கிராமமே வெறிச்சோடிக் கிடந் தது. பெண்ணை அனுப்பக் கூடாது என்பதற்காக ஜமீனுக்கு பயந்து ஊரை காலிசெய்து கொண்டு போய்விட்டார்கள் என்பதையறிந்த ஜமீன் ஆட்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.
அவர்கள் திரும்பிச் சென்ற செய்தி எட்டியது வடக்கு நோக்கிச் சென்ற கூத்தூர் மக்களுக்கு. உடனே சிலரை மட்டும் அனுப்பி பாப்பாத்தி, விசாலாட்சியை ரகசியமாக அழைத்துவருமாறு அனுப்பினார்கள். அழைத்துப்போக வந்த ஆட்கள் தனியறையின் கதவைத் தட்டி, இரு பெண்களையும் அழைத்தனர்.
எந்த சத்தமும் வரவில்லை. திகைத்துப்போனவர்கள் கதவை உடைத்து உள்ளே போனார்கள்.
அங்கே இருவரும் உயிரற்றுக் கிடந்தனர்.
ஜமீன் ஆட்கள் தேடிவந்து திரும்பிச் சென்ற தகவல் கிடைத்து, பிள்ளைகளைக் காப்பாற்ற வருவதற்குள் சில நாட்கள் கடந்துவிட்டதால், பசியிலும் பயத்தினா லும் இருளாலும் இறந்து போனார்கள். இந்தத் தகவல் வடக்கே காத்திருந்தவர் களுக்குச் சென்றது. முட்டிமோதி அழுத னர். அப்படியே சென்றவர்கள்தான் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாழ்கிறார்கள். பாப்பாத்தி, விசாலாட்சி இறப்பு அந்த சந்ததியினரை பெரிதும் பாதித்துவிட்டது.
அப்போதுமுதல் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் பெண்களை தனிகவனத் துடன், அதிக அன்பும் பாசமும் காட்டி பாப்பாத்தி, விசாலாட்சியாக எண்ணி வளர்த்து வருகிறார்கள்.
இந்தக் கதையை நம்மிடம் கண்கலங்கக் கூறிய அகரம் சீகூர் வெங்கடாசலம் என்கிற கெண்டியார் மனைவி நல்லம்மாள் மேலும் கூறும்போது, ""எனக்கு ஏழு பெண்கள், ஒரு ஆண். பாப்பாத்தி, விசாலாட்சி நினைவுகளுடனே பிள்ளைகளை வளர்த்துத் திருமணம் செய்துகொடுத்தோம். எல்லாரும் பேரன் பேத்தி எடுத்துவிட்டனர். அவ்வப்போது கூத்தூர் சென்று குலதெய்வங்களானபாப்பாத்தி, விசாலாட்சியை வழிபட்டால்தான் நிம்மதி'' என்கிறார் 90 வயதுள்ள நல்லம்மாள்.
அதேபோன்று சின்னையா என்கிற கருப்பையாவின் மகிமைகள் பல உள்ளன. வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றி வைப்பார். நாம் வேண்டிக்கொண்ட நேர்த்திக் கடனைக் கட்டாயம் செலுத்தவேண்டும். ஏமாற்றமுடியாது. அப்படி செலுத்தத் தவறினால், அவரே பல வழிகளில் கேட்டு வாங்கிக்கொள்வார். இந்தப் பகுதியில் விவசாயம் செய்வபவர்கள், விளையும் தானியங்களை இவருக்கு சிறிதளவு காணிக்கை செலுத்திய பிறகே வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். சின்னையாவை மதிக்காமல் தானியங்களை முழுவதும் எடுத்துச்செல்ல முடியாதாம். காரணம், தானியங் கள் ஏற்றிய வண்டிகள் அந்த இடத்தை விட்டு நகராதாம். தவறுக்கு சின்னையாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தானியத் தைக் காணிக்கை கொடுத்தபிறகே வண்டி புறப் படுமாம்.
ஒருமுறை, வீடுகட்டுவதற்கு வண்டிநிறைய செங்கல் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். இவரது கோவில் எல்லையில் வந்ததும் வண்டி நகரவில்லையாம். மாடுகள் படுத்துக் கொண்டனவாம். எவ்வளவு முயற்சி செய்தும் மாடுகள் எழவில்லை. அந்த மாடுகளை அப்புறப்படுத்திவிட்டு வேறு மாடுகளைக் கொண்டுவந்து வண்டியில் பூட்டி ஓட்ட முயல, அந்த மாடுகளும் படுத்துக்கொண்டன. இதையறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் சிலர், "இது எங்க சின்னையாவின் மகிமை. எனவே, சில செங்கல்களை அவருக்கு காணிக்கையாக எடுத்துவைத்துவிட்டு, வண்டியை ஓட்டுங்கள்' என்று சொல்ல, அந்த வண்டிக்காரரும் அதேபோல் செய்தார். என்னே அதிசயம்! காணிக்கை செலுத்தியவுடனேயே மாட்டு வண்டி புறப்பட்டதாம். இதைப் பார்த்து வியந்து அந்த நபர், "இவ்வளவு மகிமை பொருந்திய சின்னையாவுக்கு சில செங்கல் மட்டும் காணிக்கையா? இதோ, வண்டி முழுவதும் உள்ள செங்கற்களை அவருக்கே காணிக்கையாகத் தருகிறேன். சின்னையாவுக்கு கோவில் கட்டுங்கள்" என்று அவ்வளவு செங்கற்களையும் இறக்கிவிட்டுச் சென்றாராம்.
அதுமட்டுமல்ல; தன்னை வழிபடும் மக்கள் நீண்டகாலம் கோவிலுக்கு வராமல் காலம் தாழ்த்தினால் வீடுதேடிச் சென்று ஞாபகப்படுத்தத் தவறமாட்டாராம் சின்னையா. இதுகுறித்து கொடிக்களம் திருமதி கலாராணி, ""பல மாதங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் செல்லமுடியாமல் இருந்துவிட்டோம். எங்கள் வீட்டுக்கருகில் குடியிருந்த பெரியவர் கணபதி ஒருநாள் அதிகாலையிலேயே எங்கள் வீடுதேடி வந்தார். "உங்கள் வீட்டுக்கு முன்பு இரவு நேரத்தில் வெள்ளைக்குதிரையில் சாமிவந்து நிற்கிறது. இதை அடிக்கடி என் கனவில் பார்த்து வருகிறேன்' என்று கூறினார். எங்கள் குலதெய்வமான சின்னையாதான் வெள்ளைக்குதிரையுடன் வந்து சென்றுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டு, உடனடியாக குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவந்தோம். அதன்பிறகு, அந்தப் பெரியவர் கனவில் வெள்ளைக்குதிரை யில் சின்னையா தோன்றுவதில்லை. தன்னை நம்பியுள்ள குடும்பத்தினர் தன்னை மறக் கக்கூடாது என்று தேடிவந்து ஞாபகப்படுத்தும் சின்னையா, அவரிடம் வேண்டிநிற்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருகிறார்'' என்றார்.
இப்படிப்பட்ட கீர்த்திமிக்க குலதெய்வங் களை வணங்கும் பல்வேறு குடும்பத்தினர், ஊர்மக்கள் ஒத்துழைப்போடு கோவிலைப் புதுப்பித்து சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். ""நான் வள்ளலாரின் கொள்கை யில் பற்றுள்ள மனிதன். அதேநேரத்தில், எங்கள் குலதெய்வத்தை குடும்பத்தினருடன் அவ்வப்போது வந்து வழிபட்டு வருகிறேன். குலதெய்வ வழிபாட்டை ஒவ்வொரு மனிதனும் மறவாமல் கடைப்பிடிக்கவேண்டும்'' என்கிறார்- ஆ.பாளையம் ஊரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சிங்காரவேல்.
இக்கோவில் தெய்வங்களுக்கு பூஜைசெய்து வரும் பிச்சைப்பிள்ளை, ""இங்குள்ள தெய்வங்களைப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படிப் பட்ட குடும்பங்களை இந்த தெய்வங்கள் காவல்தெய்வமாக இருந்து பாதுகாப்பதோடு, அவர்களின் குறைகளை நிவர்த்திசெய்து, அவர் களின் வாழ்க்கை உயர்வுக்கு வழிகாட்டி வருகிறார்கள். குலதெய்வத்தை நம்பிவாருங்கள். எந்தக் குறைகளும் வராது'' என்கிறார்.
குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்; கோடிநன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.
தொடர்புக்கு: பிச்சைப் பிள்ளை, செல்: 99525 76984.