Advertisment

அரசாள்வர் ஆணை நமதே! - முனைவர் இரா.இராஜேஸ்வரன்

/idhalgal/om/kings-order-ours-dr-irarajeswaran

நீதி தவறாமல் நடுநிலையுடன் இருந்து தன் குடிமக்களைக் காக்கும் மன்னன், இறைவனுக்கு நிகராக மதிக்கப்படுவான் என்கிற கருத்தில் திருவள்ளுவர்-

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்' (388)

Advertisment

என்று ஒரு குறளை எழுதினார். "தர்மம் சர' என்கிற உபநிஷத்தின் வாக்கியம் நமக்கு தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்துகிறது. பகவத் கீதையின் முதல் வார்த்தையே "தர்ம க்ஷேத்ரே' என்றுதான் தொடங்குகிறது.

99

அதேபோல் பகவான் கிருஷ்ணன் எப்போதெல்லாம், எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து நிற்கிறதோ, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன் என்கிற பொருளில்-

"யதா யதா ஹிதர்மஸ்ய

க்லானிர்பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய

ததாத்மானம் ஸ்ருஜாம் யஹம்' (4.7)

Advertisment

என கீதையில் சொல்லி இருப்பதால், "தர்மம்' என்கிற வார்த்தையின் முக்கியத்தை நாம் உணரலாம். "தர்மம்' என்கிற சொல்லுக்கு தமிழில் "அறம்' என்பர்.

"அறம் நனி சிறக்க' என ஐங்குறு

நூறும், "அறனும் அன்றே ஆக்க

மும் தேய்ம்' என நற்றிணையும், "அறப்பயன் வினைதலும் மறப் பயன் விளைதலும்' என சிலப்பதி காரமும் என இப்படி பல பழந் தமிழ் இலக்கியங்கள் அறத்தைப் பற்றி எடுத்துக் காட்டுகின்றன.

சங்கத் தமிழ் இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு என்கிற தொகை நூலின் 35-ஆம் பாடலில், சோழமன்னன் கிள்ளி வளவனைப் பற்றி பாடும், "அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து' -அரசன் அறம் புரிந்து தனது செங்கோலை நாட்டியதாகப் பாடியுள்ளார். அக நானூறு என்கிற அகத்திணை நூலின் 338-ஆம் பாடலில் மதுரைக் கணக்காயனார் எனும் புலவர் எழுதிய பாடலில், "அறம் கடைப் பிடித்த செங்கோலுடன்' எனப் பாடியுள்ளார். மணி மேகலையில், மன்னனின் செங்கோலை "அறக்கோல் வேந்தன்' எனப் பாடப்பட்டுள் ளது. இப்படியாக நம் பண்டைய தம

நீதி தவறாமல் நடுநிலையுடன் இருந்து தன் குடிமக்களைக் காக்கும் மன்னன், இறைவனுக்கு நிகராக மதிக்கப்படுவான் என்கிற கருத்தில் திருவள்ளுவர்-

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்' (388)

Advertisment

என்று ஒரு குறளை எழுதினார். "தர்மம் சர' என்கிற உபநிஷத்தின் வாக்கியம் நமக்கு தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்துகிறது. பகவத் கீதையின் முதல் வார்த்தையே "தர்ம க்ஷேத்ரே' என்றுதான் தொடங்குகிறது.

99

அதேபோல் பகவான் கிருஷ்ணன் எப்போதெல்லாம், எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து நிற்கிறதோ, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன் என்கிற பொருளில்-

"யதா யதா ஹிதர்மஸ்ய

க்லானிர்பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய

ததாத்மானம் ஸ்ருஜாம் யஹம்' (4.7)

Advertisment

என கீதையில் சொல்லி இருப்பதால், "தர்மம்' என்கிற வார்த்தையின் முக்கியத்தை நாம் உணரலாம். "தர்மம்' என்கிற சொல்லுக்கு தமிழில் "அறம்' என்பர்.

"அறம் நனி சிறக்க' என ஐங்குறு

நூறும், "அறனும் அன்றே ஆக்க

மும் தேய்ம்' என நற்றிணையும், "அறப்பயன் வினைதலும் மறப் பயன் விளைதலும்' என சிலப்பதி காரமும் என இப்படி பல பழந் தமிழ் இலக்கியங்கள் அறத்தைப் பற்றி எடுத்துக் காட்டுகின்றன.

சங்கத் தமிழ் இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு என்கிற தொகை நூலின் 35-ஆம் பாடலில், சோழமன்னன் கிள்ளி வளவனைப் பற்றி பாடும், "அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து' -அரசன் அறம் புரிந்து தனது செங்கோலை நாட்டியதாகப் பாடியுள்ளார். அக நானூறு என்கிற அகத்திணை நூலின் 338-ஆம் பாடலில் மதுரைக் கணக்காயனார் எனும் புலவர் எழுதிய பாடலில், "அறம் கடைப் பிடித்த செங்கோலுடன்' எனப் பாடியுள்ளார். மணி மேகலையில், மன்னனின் செங்கோலை "அறக்கோல் வேந்தன்' எனப் பாடப்பட்டுள் ளது. இப்படியாக நம் பண்டைய தமிழ்ப் புலவர்கள் பலர் அறத் தையும், அதைக் காக்கும் மன்ன னின் செங்கோலைப் பற்றியும் உயர்வாகப் போற்றிப் பாடி யுள்ளார்.

செங்கோலுக்கு ஒப்ப அடையாளச் சின்னமாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் மற்றும் பிஷப்புகள் கத்தோலிக்க பாரம்பரியத்தின்படி, மத்தேயூ 16:19 பைபிள் வசனப்படி புனித பீட்டரின் வாரிசாக ஃபெருலா (எங்ழ்ன்ப்ஹ) என்கிற செங்கோலை ஆன்மிக அதிகாரமாக பயன் படுத்துவது உண்டு.

pm

மாதவர் (வேதம் படித்த அந்தணர்) செய்யும் வேள்விச் சடங்கினாலும், மன்னனின் செங்கோல் ஆட்சியாலும், பெண்களுள் கற்புடைய பெண்ணின் நற்பண்பாலும் மாதம் மூன்றுமுறை மழை பொழியும் என்பதை பழமையான தமிழ் நூலான விவேக சிந்தாமணியில்,

"வேதம் ஓதிய வேதியர்க் கோர்மழை

நீதிமன்னர் நெறியினுக் கோர்மழை

மாதர்கற்புடைய மங்கையர்க் கோர்மழை

மாதமூன்று மழையெனப் பெய்யுமே'' (32)

என கூறப்பட்டுள்ளது. மாதம் மூன்றுமுறை நன்மழை பொழிந்தால் நாடு செழுமையாக இருக்கும். ஆட்சியும் நன்றாக நடக்கும்.

ஒரு மன்னனின் செங்கோல் எப்பொழுதும் வளையக் கூடாது. அப்படி வளைந்தால் அது எதனால் என்பதை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மதுரைக் காண்டத்தில்,

"வளையாத செங்கோல் வளைந்தே பண்டை

விளைவாகி வந்த வினை'

எனப்பாடி, கோவலனைத் தீர விசாரிக்காமல், நீதி தவறி கொன்றதன் பழி பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு வந்தது. அது முற்பிறவியின் பலனாக வந்ததால் பாண்டியனின் செங்கோல் வளைய நேரிட்டது எனச் சுட்டிக்காட்டுகிறார். நீதியும், தர்மமும் தவறுதல் மன்னனுக்கு அழகல்ல என்பதே முன்னோர்களின் கருத்து- அப்படி ஏதேனும் சந்தர்ப்ப சூழ்நிலையில் ஏற்பட்டால்

"செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியரென்...' தன் உயிரினும் மேலாக அரச சின்னமான செங்கோலை அன்றைய மன்னர்கள் மதித்து வாழ்ந்தனர் என்பதையும் சிலப்பதி காரம் நமக்கு உயர்வாகக் காட்டுகிறது.

pm

பாரம்பரியமான மரபுகொண்ட அரச செங்கோலை ஜனநாயக ஆட்சியில் நினைவு படுத்தும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நம் பாரத நாடு முழு சுதந்திரம் பெற்ற அந்த அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், திருவாவடுதுறை ஆதீனத்தால், 1947-ஆம் ஆண்டு அன்றைய பாரத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு விடம், தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோல் ஆட்சிமாற்றத்திற்கு அறிகுநியாக வழங்கி ஆசீர்வாதம் செய்யப்பட்டது.

அந்த வரலாற்றுச் செய்தியை மீண்டும் நினைவுபடுத்தும் வகையிலும், மறுபுனரமைக்கும் விதமாகவும், புதுடெல்லியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவின் சபையின் மைய மண்டபத்தில் வைத்து கௌரவிக்க அரசால் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான விழா கடந்த மாதம் 28-ஆம் தேதி விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு ஆசிவழங்க தமிழ்நாட்டிலிருந்து திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், பேரூர் ஆதீனம் உட்பட சுமார் 20 ஆதீன மடாதிபதிகள், தம்பிரான் சுவாமிகள், ஓதுவார் மூர்த்திகள் புதுடெல்லிக்குச் சென்றனர்.

அன்றைக்கு காலையில் ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் வேத பண்டிதர்கள் நடத்திய ஹோமம், பூஜை போன்றவற்றில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பின்னர், 1947-இல் வழங்கப்பட்ட செங்கோலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சாஷ்டாங்கமாக வணங்கினார். பீடத்தில் இருந்த செங்கோலை திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய ஸ்வாமிகள் எடுத்து பிரதமர் நரேந்திரமோடி யிடம் வழங்கினார். ஆறு ஆதீன மடத்தின் தலைமை குருமகா சந்நிதானங்களை வணங்கி விட்டு, அச்செங்கோலுடன் நாடாளுமன்றத் திற்குச் சென்று சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைத்து, செங்கோலுக்கு மேலும் பெருமையைச் சேர்த்தார். அந்த சமயத்தில் திருஞானசம்பந்தர் அருளிய "கோளறு பதிகமும்', திருமுறை பதிகமும் ஓதுவார் மூர்த்திகளால் பாடப்பெற்றது.

புதுடெல்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்புவிழாவுக்குச் சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பிய திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய ஸ்வாமி கள் "நம்' இதழுக்கு சிறப்புப் பேட்டியை சென்னை ஆதீன மடத்தில் அளித்தார்.

பேட்டியைத் தொடங்குவதற்கு முன்பாக, "திருக்கயிலாயப் பரம்பரையின் தேசியக் கடமை' எனும் தலைப்பில் ஆன்மிக மாத இதழில் முதலில் 2018-ஆம் ஆண்டே இச்செய்தியைத் தொடுத்து விவரமாகக் கட்டுரையாக வெளியிட்டதற்கு "ஓம் சரவணபவ' இதழுக்கு தனது பாராட்டைத் தெரிவித்து ஆசீர்வாதம் செய்தார். பேட்டியின் போது ஆதீனகர்த்தா கூறியதாவது:

"மத்திய அரசின் சிறப்பு அழைப்பின் பேரில் புதிய பொலிவுடன் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவுக்குச் சென்று வந்தோம். தமிழகத்திலிருந்து சென்ற 20-க்கும் மேற்பட்ட சைவ ஆதீன மடாதிபதிகள், ஓதுவார் மூர்த்திகள் முன்னிலையில் 28-ஆம் தேதி காலையில் அன்றைய பாரதப்பிரதமர் நேருவிடம் 1947-ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத் தின் 20-ஆவது குருமகாசந்திதானம் ஆசீர்வதித்து அனுப்பிய தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை, நடாளுமன்ற மைய மண்டப வளாகத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே இன்றைய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி வைத்தார். அந்த சமயத்தில் சைவ திருமுறை பதிகப் பாடல்கள் பாடப்பெற்றன. இந்த நிகழ்வை ஒரு சாதாரண நிகழ்வாகப் பார்க்கக்கூடாது. காரணம் இது சைவத்திற்கும், தமிழுக்கும் உலகளவில் கிடைத்த பெருமையான நிகழ்வாகவும், புனித நிகழ்வாகவும் பார்க்கவேண்டும்.

திறப்பு விழாவுக்கு முன்தினம் மாலையில் பிரதமர் இல்லத்தில் சந்திப்பின்போது, புதியதாக ஐந்தரை அடி உயரத்தில் வெள்ளி செங்கோலை நினைவுப்பரிசாக வழங்கி ஆசீர்வாதம் செய்தோம். "செங்கோலும் இந்திய சுதந்திரமும்' எனும் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகத்தை யும் வழங்கினோம். அதன்பிறகு நாடாளு மன்ற சபைக்கு எம்மை அரசு அதிகாரிகள் அழைத்துச்சென்று சுற்றிக் காண்பித் தார்கள்.

மத்திய அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் அமைச்சர் கிஷன் ரெட்டியின் அழைப்பின் பேரில் சாஸ்திரி பவனின் இருக்கும் அவரது அலுவலகத்திற்குச் சென்று அவரை ஆசீர்வாதம் செய்தோம். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் புராதன திருக்கோவில்களில் இருக்கும் அரியவகை சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவற்றை மத்திய அரசின்மூலம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கோவிலின் சிறப்பை பக்தர்களுக்கு விளக்கும் வண்ணம் கோவில் வளாகத்தில் அருங்காட்சியகம் (மியூசியம்) ஒன்றை மத்திய அரசின் நிதியுதவியுடன் நிறுவினால், பிற்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிற யோசனையையும் நாங்கள் வலியுறுத்த, அதை மத்திய அமைச்சரும் ஏற்றுக்கொண்டு அதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளோடு நாடும், நாட்டு மக்களும் இன்புற்று நலமுடன் வாழவேண்டுமென வேண்டிக்கொண்டு, ஆசீர்வதிக்கிறோம்'' என கூறினர்.

பேட்டியின்போது திருவாவடுதுறை ஆதீன கல்வி நிறுவனங்களில் தாளாளர் சி. முத்துகிருஷ்ணன், ஆதீன வழக்கறிஞர் ஜி.ஜெயந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆறாம் திருமுறையில் (திருவருட்பா) இராமங்க வள்ளலார்-

"தங்கோல் அளவெனக் கோதிச் சுத்த

சமரச சத்திய சன்மார்க்க நீதிச்

செங்கோல் அளித்தது பாரீர்- திருச்

சிற்றப் பலத்தே திருநட ஜோதி, ஜோதி' (5)

எனப்பாடி இருப்பதால், சைவ சித்தாந்தத் தில் செங்கோலுக்கு அளிக்கப்பட்ட சிறப் பையும், பெருமையும் நாம் உணரலாம்.

om010723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe