மருதநில மக்களின் வாழ்க்கை சிறப் புடன் மேம்பட, வாலைகுருநாதரின் வழித்தோன்றலான மருதநாயகர்களின் வீரமிகு புதல்வர்கள், அம்மக்களால் மன்னர்களாக்கப்பட்டனர். கோட்டைக் கொத்தளங்கள் சூழ்ந்த மருதநிலப் பெருநகரங்கள் தலைநகரங்களாகத் திகழ்ந்தன. அதனால், அவற்றைச் சூழ்ந்திருந்த வளமிக்க பகுதிகள் அம்மன்னர் களின் ஆளுமைக்கு உட்பட்ட நாடுகளாக மாறின.

இருந்த இடத்திலேயே அறிவுத் தேடல்!

ஒரு தலைநகரத்தின் கோட்டைக்குள் இருந்துகொண்டு அரசா ளும் மன்னன், இவ்வுலக வாழ்வியல் சார்ந்த அனைத்துத் துறைகள் குறித்தும் பேரறிவு பெற்றிட, அனைத்து திசைகளிலிருந்தும் அந்நகரத்திற்கு வருகின்ற அறிஞர்களை வரவேற்று ஒன்றுகூட்டி, அவர்களிடமிருந்து அனுபவ அறிவுரைகளைச் சேகரித்தான். இவ்வாறு மன்னர்களால் அழைக்கப்பட்டு, அறிஞர்கள் கூடுகின்ற நகருக்கு கூடல்நகர்’ என்று பெயர் வைத்தனர். அத்தனைப் பேரறிஞர்களின் அனுபவ அறிவையும் தனக் குள் உள்வாங்கிய மன்னன், அதற்கு ஈடாக பொன்னையும், பொருள்களையும் வழங்கி மகிழ்ந்தான். இவ்விதம் வாழ்வியல் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் நன்கு தேர்ந்த பாண்டித்தியம் பெற்ற மருதநில மன்னர் களை பாண்டியன்’ என்று அழைத்தனர்.

peoples

Advertisment

தங்களின் தேடலால் அறிவு, பண்பாடு, வீரம், அறம், மனிதநேயம் என, அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற பாண்டிய மன்னர்கள், தங்களின் அடையாளமாக இலச்சினை ஒன்றை உருவாக்கினார்கள். எப்படியென்றால் (படத்தில் காண்க) வலம், இடமாக ஒரு மீனின் இரு பக்கமும் மேல்நோக்கி இருக்கும். அவற்றின் மேல் சூரியனும், வளர்பிறைச் சந்திரனும் இருக்கும். இரண்டுக்கும் நடுவில் குலக்கொடி நீண்டு சுருண்டு பொறிக்கப்பட்டிருக்கும். இந்த முத்திரையை மிகப்பெரிய வடிவில், பாண்டியன் அரசவையில் மன்னர் அமரும் தர்மாசனத்திற்கு மேலே பதித்தனர். இதுவே, பாண்டியர்களின் உலோகத்தாலான நாணயங்களிலும் பொறிக்கப்பட்டது.

மறைக்கப்படாத மறுபக்கம்!

Advertisment

முத்திரையின் பொருள் என்னவென்றால், இவ்வுலகில் வாழும் உயிரினங்களில், மீன் இனம் மட்டுமே தன் குஞ்சுகளை, தன் பார்வையிலேயே வைத்திருந்து கண்ணிமைக்காமல் பாதுகாக்கும். அதுபோல், மனிதநேயம் மிக்க பாண்டிய மன்னர்கள், இரவு பகல் பாராமல் மக்களைத் தங்கள் கருணைக்கண் பார்வையில் வைத்திருந்து, அவர்களின் உயர்வுக்கான பாதுகாவலனாக இருந்து, மக்களின் குலக்கொடியினர் வாழ்வு செழித்திட அரும்பாடுபடுவார்கள் என்பதாக உள்ளது. பாண்டிய மன்னன், தன் வாழ்வின் ஒரு பக்கத்தை வெளிப் படையாகவும், மறுபக்கத்தை மறைத்தும் வைக்கமாட்டான். இருபக்கமும் தம் மக்களிடம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்வான்.

துன்பம் ஏற்படும்போதெல்லாம், நேரம் காலம் பார்க்காமல் மன்னனை உடனடியாக மக்கள் காணலாம் என்பதை உணர்த்தவே, மீனின் இருபக்கத்தை முத்திரையில் இடம்பெறச் செய்தனர். மேல்நோக்கிய மீனின் உருவமானது, தம் மக்களின் உயர்வு நோக்கியே எப்போதும் பாடுபடக்கூடியவன் மன்னன் என்பதைக் குறிக்கிறது. அதனால், தம் குடிமக்களால் ஒரு தெய்வமாகவே போற்றப்பட்டான் பாண்டிய மன்னன். இந்நிலையில், தம் மக்கள் வாழும் மருதநில வளர்ச்சிக்குக் கருவூலமாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலைகள்தான் என்பதை ஆழமாக அவன் உணர்ந்திருந்தான்.

peoples

அது என்ன பழமுதிர்ச்சோலை?

பழங்காலத் தமிழர்கள், குறிஞ்சிமலர் பூக்கும் உயர்ந்த மலைத்தொடர் களை, அதன் உச்சியிலிருந்து கீழ்நோக்கி, ஆறு அடுக்குகளாகப் பிரித்தனர். மலைத் தொடரின் உச்சிப்பரப்பு முழுவதும் அடர்ந்த புல்வெளியாகக் காட்சியளிக் கும். இப்புல்வெளி, பருவகாலங்களில் பெய்யும் மழைத்துளிகளை முழுமையாகத் தனக்குள் வாங்கிக்கொள்ளும். மழையில்லாத காலத்தில், புல்வெளிகள் நீரை உமிழும். இந்நீரானது, புல்வெளிக்குக் கீழுள்ள இரண்டாவது அடுக்கிற்கு வழியும். இந்த அடுக்கானது, இலையுதிர் மரங்களால் உதிர்க்கப்பட்ட இலைச்சருகுகள் அடர்ந்து கிடக்கும் காட்டுப்பகுதியாகும். இலை உதிர்ந்த மலைச்சரிவில் உள்ள காட்டுப் பகுதியை ‘சோலை’ என்றனர். இங்கு வழியும் நீர், சூரிய வெப்பத்தால் உறிஞ்சப்படாமல் பாதுகாக்கப்பட்டு, சுத்தமான நீராக வடிகட்டப்பட்டு, சிறிய சுனைநீராக மூன்றா வது அடுக்கிற்கு வடியும். இப்பகுதியிலிருந்து வடிந்த நீர் சிறு ஓடைகளாகி, சின்னஞ் சிறு துணை சிற்றாறுகளாக மாறும். இவை தான் ஒன்றிணைந்து மருதநிலங்களை வளப்படுத்தும் வற்றாத ஜீவநதிகளாக மாறின.

படைவீடுகள் அமைத்த குறமக்கள்!

மருதநில மக்கள், தங்களது செழிப்பிற்கு வாழ்வாதாரமாகத் திகழ்ந்து வருவது, இப்பழமையான முதிர்சோலைப்பகுதிதான் என்பதை உணர்ந்திருந்தனர். அதனால், இதனை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பொருட்டு மருதநில முத்துக்குமரன், குறிஞ்சி மலைவாழ் குறப் பெருங்குடி மகளான வள்ளியைத் திருமணம் செய்தார். அவ்வேட்டுவக் குறமக்களைக் கொண்டே மருதநில மக்களுக்காக இந்தப் பழமுதிர்ச் சோலைகளைக் காப்பாற்றினார். அக்குறமக்களின் வேற்படையை, தன் படையாக ஏற்றுக்கொண்டார். குறிஞ்சிக்கும் மருத நிலங்களுக்கும் இடையில் காணப்பட்ட உயர்ந்த குன்றங்களில், வேற்படைகளைக் கொண்டு படைவீடுகள் அமைத்து, குறிஞ்சி நிலத்திற்கும் மருதநிலங்களுக்கும் எவ்விதக் கேடுகளும் வராமல் பாதுகாப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

muruganதிருச்செந்தூர் குமரனின் தியாகப்படை!

அவ்வாறிருந்த வீரப்படையினரில், குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய மூன்று வகை நிலங்களை முற்றிலும் அறிந்தவர்கள், முத்தரையர் என்று அழைக்கப்பட்டனர்.

அவர்கள் மூலம், தன்னுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய சேனைத்தலைவர்களை நியமித்துக்கொண்டார் முத்துக்குமரன். சூரபதுமனுக்கு எதிரான போரில், இம்முத்துக்குமரனின் வெற்றிக்கு முதற் காரணகர்த்தாவாகத் திகழ்ந்தது இந்தச் சேனைத்தலைவர்கள் கூட்டமேயாகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை சுனாமிப் பேரலைகள் தாக்கியபோது, திருச்செந்தூர் கடற்பகுதி மட்டும் கடல்நீரை உள்வாங்கி யது. அப்போது, குமரன் கோவிலுக்குத் தெற்கே, கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், கடலில் 2000-க்கும் மேற்பட்ட கல்லாலான வேல்கள் நடுகற்களாக நடப்பட்டிருந்தது தெரியவந்தது. இவை, குமரனுக்குத் துணை நின்ற சேனைத் தலைவர்களின் வீரமரணத்தை நினைவு கூரும் நடுகற்களாகும்.

இந்த தியாகத்தால், திருச்செந்தூர் குமரக்கடவுளை வழிபாடு செய்பவர்களில் முதன்மையானவர்கள் என, சேனைத்தலைவர் கூட்டம் கருதப்படுகிறது. இவர்களைத் தலைமை தாங்கி நடத்தியவர்தான் குமரப்பெருமானின் படைத் தலைவர் வீரபாகு.

(தொடரும்)

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்