Advertisment

ஆன்மிகச் சொற்பொழிவு அரசனுக்கு வயது 80! - நூருல்லா. ஆர்

/idhalgal/om/king-spiritual-discourse-80-years-old-nurullah-r

சினிமாதான் நடிகர் சிவகுமாரின் தளம். ஆனாலும் இலக்கியம், ஓவியம், யோகா என அவரின் ஆர்வம் நீளும் தளங்கள் பலப்பல.

Advertisment

நல்ல நண்பர்களின் நட்பே தலை வெளுக்காதிருக்க காரணம் என்றார் புலவர் பிசிராந்தையார். அது போல சங்க இலக்கியம் தொட்டு கலைகளுடனான பரீட்சயமே மார்க்கண்டேயன் சிவகுமாரின் என்றும் மாறா இளமைத் தோற்றத்துக் காரணம்!

சினிமா உலகின் சிரஞ்சீவி நடிகர் சிவகுமார் தனது 80 வயதை கடந்த மாதம் நிறைவு செய்தார். இதனையொட்டி அவரின் இல்லத்துக்குச் சென்று பல்வேறு பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்தைத் தெரிவித்தனர்.

வாழ்த்துச் சொல்ல வந்த பத்திரிகையாளர்கüடம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் சிவகுமார்.

Advertisment

sivakumar

சிவகுமாரின் சுவையான அனுபவங் கள்...

நான் 50-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடவில்லை.

சினிமாதான் நடிகர் சிவகுமாரின் தளம். ஆனாலும் இலக்கியம், ஓவியம், யோகா என அவரின் ஆர்வம் நீளும் தளங்கள் பலப்பல.

Advertisment

நல்ல நண்பர்களின் நட்பே தலை வெளுக்காதிருக்க காரணம் என்றார் புலவர் பிசிராந்தையார். அது போல சங்க இலக்கியம் தொட்டு கலைகளுடனான பரீட்சயமே மார்க்கண்டேயன் சிவகுமாரின் என்றும் மாறா இளமைத் தோற்றத்துக் காரணம்!

சினிமா உலகின் சிரஞ்சீவி நடிகர் சிவகுமார் தனது 80 வயதை கடந்த மாதம் நிறைவு செய்தார். இதனையொட்டி அவரின் இல்லத்துக்குச் சென்று பல்வேறு பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்தைத் தெரிவித்தனர்.

வாழ்த்துச் சொல்ல வந்த பத்திரிகையாளர்கüடம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் சிவகுமார்.

Advertisment

sivakumar

சிவகுமாரின் சுவையான அனுபவங் கள்...

நான் 50-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. 60-ஆம் ஆண்டு பிறந்த நாளையும் விழா எடுத்து நினைவு கொள்ள வில்லை. 70-ஆம் ஆண்டு பிறந்த நாளும் வந்தது. ஆனால் அப்போதும் நான் விழாவின் நாயகனாகத் திகழ்ந்ததில்லை. 75-ஆம் ஆண்டு பிறந்த நாளும் வந்தது. அப்போதும் கூட நான் எந்தவித சிறப்பு நிகழ்ச்சி யையும் ஏற்பாடு செய்துகொண்ட தில்லை.

இதோ இப்போது எண்பதாம் ஆண்டை நிறைவு செய்கிறேன். இப்போதும் கூட இந்த நாளை யொட்டி எந்தவித தடபுடல் திருவிழா வையும் நான் நடத்தவில்லை. எல்லா பிறந்த நாட்களும் எனக்கு அமைதி யாகவும் எüமையாகவுமே நடந்தன. இப்போதும் அப்படித்தான்.

மனித இனத்தின் வாழ்க்கையை இரு கூறுகளாகப் பிரித்து அலசிப் பார்க்கலாம். முதல் கூறு என்பது நாம் சம்பாதித்து பிள்ளை, குட்டிகளை வாழ வைப்பதாகும். அந்த பணியை நான் என் குடும்பத்தில் நிறைவாகச் செய்து முடித்துவிட்ட திருப்தி எனக் குண்டு.

இரண்டாம் கூறு என்பது நம் பிள்ளை, குட்டிகள் சம்பாதித்து நம்மை வாழ வைப்பதாகும். அந்த நிலையில்தான் இப்போது நான் இருக்கிறேன். இதோ நான் தற்போது அணிந்திருக்கும் சட்டை, பட்டு வேட்டி என இவற்றை எல்லாம் என் பிள்ளைகள் வாங்கிக் கொடுத்தது தான். இவற்றை நான் மகிழ்வுடன் கட்டிக்கொண்டு குடும்பத்தாரின் சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

சிலர் எண்ணலாம். "அவர்கள் கொடுத் ததை நாம் உடுத்திக் கொள்வதா? நாம் உழைத்துச் சம்பாதித்த தொகையில் இருந்தே உடை பெற்று உடுத்திக் கொள்ள லாமே!'' என்று கருதுவதுண்டு. அப்படி நினைப்பது சரியல்ல. நமக்குத் துணிமணிகள் வாங்கிக் கொடுத்து உடுத்திக் கொள்ளுமாறு கூறுவது யாரோ அல்ல. அவர்கள் நம் ரத்தம். நம் வாரிசு. நான் வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள். அவர்கüன் உழைப்பில், திரட்டிய ஊதியத்தில் இருந்து நமக்கு உடைகள் வாங்கித் தருவதும் அவற்றை நான் அணிந்து கொள்வதும் பரஸ்பரம் பாசம் பேசிக்கொள்ளும் அன்யோன்யமான அன்புணர்ச்சி.

ss

நான் முதன்முத-ல் சினிமாவில் நடித்த போது ஒரு காதல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சி ஷூட்டிங் முடிந்து நான் தளத்தில் அமர்ந்து இருந்தேன். ஒரு நிருபர் என் அருகில் வந்து சில கேள்விகளைக் கேட்டார்.

"முதன்முதலாகக் காதல் காட்சிகüல் நடித்து இருக்கிறீர்கள். முதலாவதாக ஒரு இளம் நடிகையைத் தொட்டுத் தொட்டு நடிக்க வேண்டிய சூழலைத் தாண்டி வந்திருக் கிறீர்கள். உங்களுக்கு இந்த அனுபவம் எப்படி இருந்தது?'' என்று அந்த நிருபர் கேட்டார்.

"எனக்கு இதில் எந்த மாறுதலும் தெரியவில்லை. சாதாரணமாக நாம் நண்பர் களைத் தொட்டுப் பேசுவது போலத் தான் உணர்ந்தேன்'' என்று நான் பதில் அüத்தேன்.

மீண்டும் விடாப்பிடியாகப் பேசிய அந்த நிருபர், "உங்களுக்கு அந்த காதல் காட்சி யின் போது எந்த உணர்ச்சியும் ஏற்பட வில்லையா?'' என்று கேட்டார்.

ss

நானோ "எதுவும் இல்லை. எல்லாமே நாம் மனதில் என்ன நினைத்துக் கொண்டு செயல்படுகிறோம் என்பதை வைத்துத்தான் உணர்ச்சிகள்'' என்று விளக்கம் அüத்தேன்.

"அப்படியானால் உணர்ச்சியே இல்லாத இளம் நடிகர் என்று எழுதலாமா?'' என்று அந்த நிருபர் விவகாரமான வினாவை வீசினார்.

இப்படித்தான் சில செய்தியாளர்கள் தமக்குத் தேவையான பரபரப்பான செய்தி களைத் திரட்ட விபரீதமாக கேள்விகளையும் கேட்டு விடுகிறார்கள். எனினும் நான் எல்லா செய்தியாளர்களோடும் நேசத்துடன் தான் பழகி வந்தேன். பாசப் பரிவர்த்தனைகளால் நான் செய்தியாளர்கüன் செல்வனாகத் தொழி-ல் கவனம் செலுத்த முடிந்தது.

om011223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe