குலசேகர ஆழ்வார் தினம்- 17-2-2019

திருமாலைப் பாடி ஆழ்ந்த வர்கள் ஆழ்வார்கள் எனப்படுவர். ஆழ்வார் கள் பன்னிருவர். அவர் களுள் ஆண்டாள் மட்டும் பெண். ஆண்டவ னில் லயித்துவிட்டதால் அவள் ஆண்டாள் ஆனாள். அவளது திருப்பாவைப் பாடல்கள் மகாவிஷ்ணு வின் லீலைகளைக் கூறும். கோபியர்கள் கண்ணனை அடைய காத்யாயினி விரதமிருந்ததுபோல, கன்னியர்கள் அதிகாலையில் திருப்பாவையைத் துதிசெய்து கோதை நோன்பிருந்தால் உயர்ந்த கணவனை அடையலாம்.

ஆழ்வார்களில் இருவர் அரச பதவி வாய்த்தவர்கள். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் உதித்தவர் திருமங்கை மன்னன். சாரங்க வில் அவதாரம் என்பர். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வாருக்கு அடுத்து (1,306) அதிகம் பாடியவர் திருமங்கை மன்னன். (1,137).

மாசி மாதம் ராமரது நட்சத்திரமான புனர்பூசத்தில் உதித்தவர் சேர நாட்டு அரசர் குலசேகரர். அவர் பாக்கள் 105. ராமரது நட்சத்திரத்தில் உதித்ததால் போலும், ஆழ்ந்த ராமபக்தர். மகாவிஷ்ணுவின் கௌஸ்துப மாலை அம்சமாக உதித்தவர். கேரளத்தில் (சேர நாட்டில்) பிறந்து திருமாலைப்பாடிய ஆழ்வார் இவர் ஒருவரே.

Advertisment

கேரளத்தில் பிறந்திருந்தாலும் அங்குள்ள எல்லா திவ்யதேசங்களையும் அவர் பாடவில்லை. திருநாவாய், திருவித்துவக்கோடு, திருக்காட்கரை, திருமுழிக்களம், திருவல்லா, திருக்கடித்தானம், திருச்செங்குன்றூர், திருப்புலியூர், திருவாறன்விளை, திருவண்வண்டூர், திருவனந்தபுரம், திருவட்டாறு, திருவண்பரிசாரம் ஆகியவை அங்குள்ள பதின்மூன்று திவ்யதேசங்கள். அவற்றுள் திருவித்துவக் கோடு உய்யவந்த பெருமாளை மட்டும் பத்து பாசுரங்களால் பாடியுள்ளார். இவருக்கு குலசேகரப்பெருமாள் என்றும் பெயர். எனவே இவர் பாடலுக்கு "பெருமாள் திருமொழி' என்று பெயர். வினோதம்!

"திருமொழி' என அடைமொழி கொண்ட மற்ற ஆழ்வார் பாடல்கள்- பெரியாழ்வார் திருமொழி (461), நாச்சியார் (ஆண்டாள்) திருமொழி (143), திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி (1084) ஆகியவை.

குலசேகராழ்வார் ராமா வதாரத்தை தாலாட்டாகவும், தசரதன் புலம்பலாகவும் பாடியுள்ளார். கிருஷ்ணனைப் பற்றி ஆய்ச்சியர்கள் கூடுவது, பிரிவது, ஊடுவதாக நாயகி பாவத்துடன் பாடியுள்ளார். தேவகியின் புலம்பலாகவும் பாடியுள்ளார்.

Advertisment

இவரது ராமர், கிருஷ்ணன் பற்றிய பாடல்களை நாம் படித் தால், பாடினால் ராமாயணம், ஸ்ரீமத்பாகவதம் நினைத்த அனுபவம் ஏற்படும்.

அவரது சரிதம் பற்றி சிறிது சிந்திப்போமா...

முற்காலத்தில் தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய நாடு என்று மூன்றாக இருந்தது. மலைவளம் மிக்கது சேர நாடு. இதனில் திருவஞ்சைக்களம் எனும் நகரம் சிறந்து விளங்கியது. இதனை திடவிரதன் என்ற அரசன் ஆண்டு வந்தான். நாடு செல்வத்துடன் செழிப்புற்று விளங்கியது. அரசன், மக்கள் யாவரும் எல்லா செல்வங்களும் பெற்று ஆனந்தமாய் வாழ்ந்த னர். ஆயினும் அரசனுக்கு பிள்ளைப்பேறு இல்லை. (தசரதன் நிலையும் அவ்வாறு தானே இருந்தது.) எனவே பெருமாளை ஆழ்ந்து வணங்கி னர். அதன்பயனாக மாசி மாத புனர்பூச நட்சத்திரத்தில், அரசி ஓர் அழகிய ஆண் குழந்தை யைப் பெற்றாள். குழந்தையின் தேஜஸைக் கண்ட மன்னர், தன் குலத்தை மேன்மையுறச் செய்ய வந்தவன் என்றுணர்ந்து "குலசேகரன்' என்று பெயரிட் டார். குழந்தை சீரும் சிறப்புடன் வளர்ந்தது.

அரச குலமானதால் வில் வித்தை, வாள்வித்தை ஆகிய வற்றையும், ஆன்மிக உயர்வுக்கு வேத, சாஸ்திர, புராண, ஆகமம் முதலியவற்றையும் கற்றுத்தர மன்னர் ஏற்பாடு செய்தார். "ஏக சந்த க்ராஹி' என்பதுபோல கேட்ட மாத்திரத்தில் ஏற்று ணர்ந்து சிறந்து விளங்கி னான். உரிய பருவம்வர, நல்லாள் என்னும் குணவதியை மணம் புரிவித்தார் அரசர். ஒரு ஆண்- பெண் பிறக்க, ஆண்குழந்தைக்கு தாத்தாவின் "திடவிரதன்' என்னும் பெயரை வைத்தனர்.

பெண்ணுக்கு "இளை' எனப் பெயர்.

அரசர் திடவிரதன் தன் மகன் குலசேகரனுக்கு முடிசூட்டி விட்டு கானகம் சென்று தவம் மேற்கொண்டார். குல சேகரனோ, சோழ, பாண்டிய நாடுகளை தன் படைபலத்தால் தன் வசமாக்கினார். ஆக அவர் பெயர் கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன் என மிளிர்ந்தது.

அரச வாழ்வு இனிமையாய் இருந்தாலும், ஆன்மிக நாட்ட மும் மனதில் ஓங்க, சாதுக்கள் உபதேசத்தால் "திருமாலே முழுமுதற்கடவுள்' என உணர்ந்து, மண்ணை ஆண்ட மன்னன் மனதை ஆளும் குலசேகரனாக வும் மாறினார்.

ஆழ்ந்த ஆன்மிக வித்வான் களை அழைத்து, புராணப் பிரவசனம் செய்யச் சொல்லி ஆழ்ந்து கேட்பது வழக்கம். ஒருசமயம் உபன்யாசகர் "சீதையை மாயா ராவணன் கவர்ந்து சென்றுவிட்டான்' என்று உருக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதைக்கேட்ட குலசேகரன் தன்வசமிழந்து, தன் படைகளைத் திரட்டி இராவணனைக் கொல்ல கடற்கரை சென்றுவிட்டா ராம். அங்கு ராமபிரான்- சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சனேயருடன் தரிசனம் தந்து, "இராவணனை அழித்து சீதையை மீட்டுவந்தேன்' என்றாராம்.

தரிசனத்தில் பரவச மடைந்தவர், ராமர் வணங்கிய ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க வேண்டுமென்று தீவிரமாக இருந்தார். அமைச்சர் கள், அவரை அரண்மனை யிலேயே தங்கவைக்க நல்ல பாகவதர்களை வரவழைத்தார்களாம்.

perumal

"சாதுக்கள் மகிமையைச் சொல்வதென்றால் சாத்தியமாகாது' என்ற பாட்டே உண்டு. கண்ணன் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறுவார்-

"ஸாதவோ ஹ்ருதயம் மஹ்யம்

ஸாதூனாம் ஹ்ருதயந்து

அஹம்.'

சாதுக்கள் இதயத்தில் நான் உள்ளேன்; என் இதயத்தில் சாதுக்கள் வாசம் செய்கின்றனர் என்று பொருள். மன்னர் சாதுக்கள் சங்கத்தில் உழலலானார். பல சாதுக்கள் வந்தவண்ணமிருந்தனர்.

அரசர் அரண்மனையிலேயே கோவிலையும் கட்டினாராம். "இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவார்கள்' என்ற வாக்குண்டு. சாதுக்கள் அரண்மனையின் எல்லா இடங்களுக்கும் சென்றனர்.

அதை விரும்பாத அமைச்சர் கள் ஒரு முடிவு காண முயன்ற னர். ராமநவமி உற்சவம் மிக உன்னதமாக பல சாதுக்கள், பாகவதர்கள், வித்வான்களுடன் நடந்தது.

மறுநாள், ராமருக்கு அணிவித்த முத்துமாலை யைக் காணவில்லை. வந்த சாதுக்களில் எவரோ திருடி யிருக்க வேண்டுமென்று அரசரிடம் கூறினர்.

அரசரோ, ""சாதுக்கள் சத்தியவான்கள்; அவ்வாறு செய்யமாட்டார்கள். இதை சோதித்துப் பார்க்க வேண்டுமா? ஒரு குடத்தின் விஷமுள்ள பாம்பைப் போட்டுக்கொண்டு வாருங் கள். சாதுக்கள் முத்து மாலையைத் திருடியிருந் தால், அந்த விஷப்பாம்பு எனைக்கடிக்க நான் சாகிறேன்'' என்றார். அமைச் சர்கள் அவ்வாறேசெய்ய, பாம்பு அரசரைக் கடிக்க வில்லை. அமைச்சர்கள் தங்கள் தவறைச் சொல்லி மன்னிப்பு வேண்டினர்.

அரசர், ""இதற்கு உங்களுக்கு ஒரு தண்டனை தருகிறேன். இனி சாதுக்களுக்கு தொண்டு செய்யுங்கள்'' என்றார். அரசரின் இதயம் எத்தகையது!

நாளடைவில் அரச வாழ்வில் நலிவுற்று, தன் மகனுக்கு முடிசூட்டினார்.

ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்து, ரங்கனை மனதார சேவித்துப் பாடினார். தன் மகளை அரங்கனுக்கே மணம் செய்வித்தார். "குலசேகரன் வீதி' எனும் மூன்றாம் பிராகாரம் கட்டி மற்றும் பல கைங்கர்யங்கள் செய்தார். திருவித்துவக்கோடு, திருவேங்கடம், திருக் கண்ணபுரம், தில்லை திருச்சித்ரக்கூடம், திருமாலிருஞ்சோலை, அயோத்தி முதலிய தலங்களும் தரிசித்து "பெருமாள் திருமொழி' பாடி நெகிழ்ந்தார்.

கடைசியில் நம்மாழ்வார் அவதாரத்தலமான திருக் குருகூர் வந்து தரிசித்து, அருகேயுள்ள மன்னார் கோவிலிலுள்ள ராஜ கோபாலனுக்கு திருத் தொண்டுகள் செய்து, தனது 67-ஆம் வயதில் பரமபதம் அடைந்தார்.

மணக்கால் நம்பி அருளிய

தளியன் (துதி) சிந்தித்து குலசேகரர் அடி பணிவோமா!

"ஆரம் கெடப்பரன் அன்பர்

கொள்ளாரென்று அவர்களுக்கே

வாரம்கொடு குடப்பாம்பிற்

கை இட்டவன் மாற்றவரை

வீரம் கெடுத்த செங்கோவில்

கொல்லிக்காவலன் வில்லவர்கோன்

சேரன் குலசேகரன்

முடிவேந்தர் சிகாமணியே.'

பெருமாளின் ஆபரணம் சாதுக்களால் திருடப்படவில்லை என்பதை நிரூபிக்க பாம்பிருந்த குடத்தில் கைவிட்ட நிகழ்வை வர்ணிக்கிறார்.

குலசேகரர் செய்த 105 துதிகளில் இரு துதிகளை சிந்திப்போம். எந்த கடின மனமும் அவர் துதிகளில் இளகும்!

திருவித்துவக்கோடு பெருமாள்மீது...

"நின்னையே தான் வேண்டி

நீள் செல்வம் வேண்டாதான்

தன்னையே தான் வேண்டும்

செல்வம் போல் மாயத்தால்

மின்னையே சேர் திகிரி

விற்றுவக் கோட்டம்மானே

நின்னையே வேண்டி நிற்பன் அடியேனே!'

பொருள்: ஒளி மிகுந்த சக்ராயுதம் ஏந்தும் வித்துவக்கோட்டுத் தலைவனே! உன்னையே விரும்பி, செல்வத்தை விரும்பாதவனிடம் தானே சேருகிற செல்வம்போல் மாயை யினால் என்மீது பரிவு காட்டாவிட்டாலும் உன்னையே அடைய நான் விரும்பி நிற்பேன்.

திருஅரங்கன்மீது...

"ஏறடர்த்தும் ஏனமாய்

நிலம் கீண்டதும் முன்ராமராய்

மாறடர்த்ததும் மண்ணளந்ததும்

சொல்லிப்பாடி வண்பொன்னிப்பேர்

ஆறுபோல் வரும் கண்ணநீர்கொண்டு

அரங்கன் கோவில் முற்றம்

சேறு செய் தொண்டர் சேவடிச்

செழுஞ்சேறு என்சென்னிக்கு அணிவனே!'

பொருள்: நப்பின்னை பொருட்டு ஏழு எருதுகளை அடக்கியதும், வராக அவ தாரத்தில் பூமியைக் குத்தி எடுத்ததும், ராமராய் பகைவர்களை அழித்ததும், திருவிக்ரம அவதாரத்தில் உலகளந்ததும் ஆகிய லீலைகளைப் பாடி கண்களில் நீர் பெருக்கி, அரங்கன் கோவிலில் சேறாக்கும் தொண்டர் களின் திருவடிகள் சேற்றை என் திலகமாக அணிவேன்!

என்னே அடியார்களின் வணக்கப் பெருமை!