கார்த்திகை மாத எண்ணியல் பலன்கள்18-11-2023 முதல் 16-12-2023 வரை ஆர். மகாலட்சுமி

/idhalgal/om/karthikai-month-numerical-results-18-11-2023-16-12-2023-r-mahalakshmi

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியனின் ஆதிக்கம் பெற்ற, நீங்கள் எப்போதும் சற்று கெத்தாகவே வலம் வருவீர்கள். இந்த மாதம் இந்த ஈகோ குணத்துடன், கோபமும் சேர்ந்துகொள்ளும். சும்மாவே திங்கு திங்குகென்று ஆடிகிறவன் கா-ல், சலங்கை கட்டின கதையாகிவிடும். இதற்கு முக்கிய காரணம், உங்கள் தொழி-ல் பற்றிய, வீண் வதந்திகள் வருவதால் இருக்கும். இந்த வதந்திகளால், பணவரவு சுணக்கம் காணும். அந்த மனிதருக்கும், காசு குறைந்தால், தன்னிச்சையாக கோபம் வரும்தான். இந்த அழகில் உங்கள் இளைய சகோதரி அவள் பங்குக்கு ஒரு இம்சையைக் கூட்டுவாள். தொலை தொடர்பு, டி.வி., ரேடியோ, தரகர்கள், ஒப்பந்தம் பெற்றோர், குத்தகைதாரர்கள் என இவர்களுக்கு வர வேண்டிய தொகை, ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்தி வைக்கப்படும். உங்களிடம் பணிபுரிபவர்கள், சம்பளம் பத்தாது, அதிகமாக கொடு என அடம் செய்வர். இந்த மாதம் உங்கள் பெற்றோரை, கவனித்து பேணவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அரசியல் வாதிகள், தங்களுக்குரிய உயரிய, பெரிய பதவியை பிடிக்க, முழு முனைப்புடன் முயற்சி செய்வர். அந்நிலையில், சிலருக்கு நிறைய பணம் செலவாகலாம். அல்லது சில பெண்கள்மூலம் பின்னடைவு ஏற்படலாம். இதனால் நீங்கள் ரொம்ப டென்ஷன் ஆவீர்கள். உங்களின் சில வாரிசு கள், திருமணம் அல்லது அவர்களின் பதவி உயர்வின் பொருட்டு, சில சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டிவரும். உங்கள் வாரிசுகளின் மேல், மிகுந்த எரிச்சல் பட வேண்டியவரும். ரத்த அழுத்தம், சர்க்கரை எல்லாம் அவ்வப்போது சோதித்து, உரிய மருந்து எடுத்துக்கொள்ளவும்.

கார்த்திகை 9, 10, 11-ஆம் தேதிகள் நன்மை தரலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

கவன தேதிகள்: 23, 24, 25.

பரிகாரம்: அருகிலுள்ள முருகர் கோவிலுக்கு, விளக்கேற்றி வணங்கவும், பிற மத பெண்களுக்கு, பணமாக கொடுத்து உதவுங்கள்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சந்திரன் ஆதிக்கம்பெற்ற ஜாதகர்கள் நீங்கள். இந்த மாதம் உங்கள் பூர்வீக சொத்து அல்லது அரசுமூலம் வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்கும். பங்கு வர்த்தகம் பணம் கொண்டுவரும். உங்கள் தொழி-ல் வரவேண்டிய பாக்கிதொகை, இப்போது கிடைக்கும். உங்களில் சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். உங்கள் உடன்பிறந்த சகோதரிகளுடன், கருத்து வேறுபாடு வரும். உங்களிடம் பணிபுரியும் பெண் பணியாள், இம்சை கொடுப்பார். உங்கள் கைபேசி பழுதாகும் அல்லது திருட்டு போகக்கூடும். இந்த மாதம் மனை, வாகன, வயல் விற்பனை செய்யும் முயற்சியைத் தள்ளிபோடவும். தாயார் உடல்நலனில் கவனம் தேவை. உங்களுக்கு மருமகன், மருமகள் பற்றிய விஷயம் சற்று குழப்பமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு, இந்த மாதம் கண்டிப்பாக வேலை கிடைக்கும். அது வேறு இடத்தில் அமையும். தம்பதிகளுக்குள் சற்று மனஸ்தாபம் ஏற்பட்டு, பின் சரியாகும். பெருமைக் காக, நாலு பேர் பார்க்கும் விதமாக, தர்ம காரியங்கள் செய்வீர்கள். உங்களில் சிலருக்கு, வெளிநாட்டு வேலை விஷயமாக, தகவல் கிடைக்கும். பெண் அரசியல்வாதிகள், சற்று சறுக்கலை சந்திக்கும் மாதமிது. உங்கள்மீது, ஒரு அவதூறு விஷயம் பரவும். கலைஞர்கள், உடல்

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியனின் ஆதிக்கம் பெற்ற, நீங்கள் எப்போதும் சற்று கெத்தாகவே வலம் வருவீர்கள். இந்த மாதம் இந்த ஈகோ குணத்துடன், கோபமும் சேர்ந்துகொள்ளும். சும்மாவே திங்கு திங்குகென்று ஆடிகிறவன் கா-ல், சலங்கை கட்டின கதையாகிவிடும். இதற்கு முக்கிய காரணம், உங்கள் தொழி-ல் பற்றிய, வீண் வதந்திகள் வருவதால் இருக்கும். இந்த வதந்திகளால், பணவரவு சுணக்கம் காணும். அந்த மனிதருக்கும், காசு குறைந்தால், தன்னிச்சையாக கோபம் வரும்தான். இந்த அழகில் உங்கள் இளைய சகோதரி அவள் பங்குக்கு ஒரு இம்சையைக் கூட்டுவாள். தொலை தொடர்பு, டி.வி., ரேடியோ, தரகர்கள், ஒப்பந்தம் பெற்றோர், குத்தகைதாரர்கள் என இவர்களுக்கு வர வேண்டிய தொகை, ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்தி வைக்கப்படும். உங்களிடம் பணிபுரிபவர்கள், சம்பளம் பத்தாது, அதிகமாக கொடு என அடம் செய்வர். இந்த மாதம் உங்கள் பெற்றோரை, கவனித்து பேணவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அரசியல் வாதிகள், தங்களுக்குரிய உயரிய, பெரிய பதவியை பிடிக்க, முழு முனைப்புடன் முயற்சி செய்வர். அந்நிலையில், சிலருக்கு நிறைய பணம் செலவாகலாம். அல்லது சில பெண்கள்மூலம் பின்னடைவு ஏற்படலாம். இதனால் நீங்கள் ரொம்ப டென்ஷன் ஆவீர்கள். உங்களின் சில வாரிசு கள், திருமணம் அல்லது அவர்களின் பதவி உயர்வின் பொருட்டு, சில சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டிவரும். உங்கள் வாரிசுகளின் மேல், மிகுந்த எரிச்சல் பட வேண்டியவரும். ரத்த அழுத்தம், சர்க்கரை எல்லாம் அவ்வப்போது சோதித்து, உரிய மருந்து எடுத்துக்கொள்ளவும்.

கார்த்திகை 9, 10, 11-ஆம் தேதிகள் நன்மை தரலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

கவன தேதிகள்: 23, 24, 25.

பரிகாரம்: அருகிலுள்ள முருகர் கோவிலுக்கு, விளக்கேற்றி வணங்கவும், பிற மத பெண்களுக்கு, பணமாக கொடுத்து உதவுங்கள்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சந்திரன் ஆதிக்கம்பெற்ற ஜாதகர்கள் நீங்கள். இந்த மாதம் உங்கள் பூர்வீக சொத்து அல்லது அரசுமூலம் வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்கும். பங்கு வர்த்தகம் பணம் கொண்டுவரும். உங்கள் தொழி-ல் வரவேண்டிய பாக்கிதொகை, இப்போது கிடைக்கும். உங்களில் சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். உங்கள் உடன்பிறந்த சகோதரிகளுடன், கருத்து வேறுபாடு வரும். உங்களிடம் பணிபுரியும் பெண் பணியாள், இம்சை கொடுப்பார். உங்கள் கைபேசி பழுதாகும் அல்லது திருட்டு போகக்கூடும். இந்த மாதம் மனை, வாகன, வயல் விற்பனை செய்யும் முயற்சியைத் தள்ளிபோடவும். தாயார் உடல்நலனில் கவனம் தேவை. உங்களுக்கு மருமகன், மருமகள் பற்றிய விஷயம் சற்று குழப்பமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு, இந்த மாதம் கண்டிப்பாக வேலை கிடைக்கும். அது வேறு இடத்தில் அமையும். தம்பதிகளுக்குள் சற்று மனஸ்தாபம் ஏற்பட்டு, பின் சரியாகும். பெருமைக் காக, நாலு பேர் பார்க்கும் விதமாக, தர்ம காரியங்கள் செய்வீர்கள். உங்களில் சிலருக்கு, வெளிநாட்டு வேலை விஷயமாக, தகவல் கிடைக்கும். பெண் அரசியல்வாதிகள், சற்று சறுக்கலை சந்திக்கும் மாதமிது. உங்கள்மீது, ஒரு அவதூறு விஷயம் பரவும். கலைஞர்கள், உடல் நலன் விஷயமாக, வதந்தியான செய்தி வரநேரிடும். இந்த எண்ணில் பிறந்த மாணவர்கள் படித்த பாடத்தை மறந்து விடுவர். கர்ப்பம் தரித்த பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். உஷ்ண சம்பந்த, உடல் கோளாறு ஏற்படக்கூடும்.

கார்த்திகை 11, 12, 13-ஆம் தேதிகளில் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

கவன தேதிகள்: 25, 26, 27.

பரிகாரம்: அருகிலுள்ள சுப்பிரமணியர் கோவில் அபிஷேகத்திற்கு, பால், தயிர், இளநீர் கொடுத்து வணங்கவும், பிற மத பெண்களின் கைபேசி, பழுது நீக்க உதவுங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் குரு ஆவார். இதுவரையில் உடல் நலக்குறைவு இருப்பின், அது இப்போது சரியாகிவிடும். உங்கள் வாரிசுகளுடன் இருந்துவந்த மனப்பேதம் நீங்கும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் வலுக்கும். பணவரவு வந்துகொண்டே இருந் தாலும், செலவும் அதற்கு ஈடாக இருக்கும். உங்களின் சில சொற்களின் வீரியம், உங்கள் தந்தையின் மனதைக் காயப்படுத்தும். உங்கள் தொழில் விஷயமாக, புதுவிதமான வாகனம் வாங்குவீர்கள். உங்கள் வாரிசுகளில் சிலர், உயர் கல்வியின் பொருட்டு, வெளிநாடு செல்வர். விளையாட்டு துறையைச் சார்ந்தோர், வெளியூர், வெளிநாடு செல்வர். உங்களில் சிலர் பேரன், பேத்தியை பார்க்கு பொருட்டு, வெளியிடம் செல்வர். இந்த மாதம் வேலை, தொழில் இவை சற்று சொய்ங் என்ற நிலையில் தான் இருக்கும். எனினும் தொழில் முன்னேற்றுத் துக்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசியல் வாதிகள், பதவி மாற்றம் பெறுவர். சில அரசு அதிகாரிகளும், பழைய வேலை பார்த்த இடத்திற்கு மாறிச் செல்வர். கலைஞர்கள் தங்களின் முன்னேற்றம் தடைபடுவதாக உணர் வர். மாணவர்கள் கல்வி கற்க, புது யுக்தியை கடைபிடிப்பர். விவசாயிகள், அரசின் அறிவிப்பால், நஷ்டஈடு பெறுவர். அரசு பங்கு பத்திரத்தில் முதலீடு செய்வீர்கள். திருமண பேச்சு களைகட்டும். அதில் சில காதல் திருமணமாக அமையும். சிலர் அரசு சார்ந்த ஒப்பந்தம் பெறுவர். உங்கள் மூத்த சகோதரி, உங்கள் மாமியார் காரண மாக, மனத்தாங்கல் கொள்வார். கார்த்திகை 15, 16, 17-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

கவன தேதிகள்: 2, 3, 4.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகருக்கு, மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் பூ மாலை கொண்டு சேவிக்கவும், பிறமத பெண்களுக்கு வேலை கிடைக்கும் வழியைக் காட்டுங்கள்.

bb

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் ராகு ஆவார். இந்த மாதம் பணவரவு என்பது வரும் ஆனா வராது என்கிற கதைதான். அதுவும் நீங்கள் சொந்த தொழில், வியாபாரம் செய்கிறவர் எனில், இந்த மாதம் ரொம்ப ûட்டு அடுத்து மாதம் சேர்த்து தந்துவிடுகிறேன் என்று தவணை கேட்பார்கள். இதே ரீதியில், நீங்களும், கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக் கேட்டால், இதே பதிலை ரீப்பீட்டு அடிப்பீர்கள். நீங்கள் எக்குத்தப்பாக பேசி, மனைவியுடன் சண்டை இழுப்பீர்கள். உங்களிடம் பணிபுரிபவர்கள், ஊருக்கு கிளம்புகிறோம் என கிளம்பிவிடுவர். வீடு வாங்கும் முயற்சி ப-தமாகும். உங்களில் ஒரு சிலருக்கு, காவல் துறை சம்பந்தமான சீருடை பணி போன்ற வேலைகள் கிடைக்கும். உங்களில் சிலர் தந்தையாகும் பாக்கியம் பெறுவீர்கள். சிலர் அரசியல்வாதிகள், சீருடைப் பணி, வனத் துறை, மின்சாரம் போன்ற இலாக்கள் கிடைக்கப்பெறுவர். கலைஞர்கள், குறுக்குவழியில் தொழில் முன்னேற்றம் பெறுவர். உங்கள் மாமியார், உங்கள் வீட்டில் ஒரு சண்டையை இழுத்துவிடுவார். மாமனாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். சில மாணவர்களுக்கு, படிக்கும்போது வேலை வாய்ப்பு கிடைக்கும். திருமண பேச்சின்போது பெண் வீட்டார், நிறைய சந்தேக கேள்விகேட்டு, உங்களை நோகடிப்பர். கார்த்திகை 14-ஆம் தேதி நல்லவை நடக்கக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

கவன தேதிகள்: 24.

பரிகாரம்: அருகிலுள்ள கோவி-ல் துர்க்கையை எலுமிச்சம் பழம் கொண்டு வணங்கவும். பிறமத பெண்களின் திருமணத் திற்கு முடிந்த உதவி செய்யவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் புதன் ஆவார். இந்த மாதம் வேலை தேடிக்கொண்டி ருப்போர் அல்லது வேறு நல்ல வேலைக்கு மாறலாமா என முயற்சித்துக் கொண்டிருப் போருக்கு நல்ல செய்தி கிடைக்கும். இதுபோல் சொந்தத் தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள், அதற்கான கடையை தேர்வு செய்வீர்கள். இந்த வேலை முயற்சி களினால், சற்று பணத்தட்டுப்பாடு ஏற்படுவது இயற்கைதான். இதன் பொருட்டு, அரசு வங்கிகளில் கடன் வாங்க, விண்ணப்பம் கொடுப்பீர்கள். இந்த அலைச்சல், குடும்பத்தில் சற்று மனச்சுணக்கம் கொண்டுவரும். ஒரு அரசு சார்ந்த குறுஞ்செய்தி, செலவு இழுத்து விடும். உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களிடம் கவனமாக இருக்கவும். வீடு, வாகனம் சம்பந்தமாக பழுது பார்க்க வேண்டியிருக்கும். காது அல்லது தோள் பட்டையில் வ- வரக்கூடும். உங்களின் சிலரின் வாரிசுகள் வேலை சம்பந்த இண்டர் வியூவில் கலந்துகொள்வர். பங்கு வர்த்தக விஷயத்தில் தகவல்களை உன்னிப்பாக கவனிக்கவும். கல்யாண பேச்சு ஆரம்பிக்கும் போதே, கலாட்டா வந்துவிடும். சாமி கும்பிட கோவிலுக்கு போனால், அங்கு ஐயருடன் சண்டை வர வாய்ப்புண்டு. அரசியல் வாதிகள் தெரியாத்தனமாக ஒரு ஏடாகூடம் பண்ணிவிட்டு, பின் அதனை அறிக்கைமூலம் சரி செய்வர். கலைஞர்கள், டங்க் ஸ்-ப்பாக வார்த்தையைக் கொட்டிவிட்டு பின் முழிப்பர். அரசு ஒப்பந்தம் செலவைத் தரும். உங்கள் மைத்துனியால் ஒரு சங்கடம் வரும்.

கார்த்திகை 21, 22, 23-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

கவன தேதிகள்: 6, 7, 8.

பரிகாரம்: அருகிலுள்ள கோவில் நரசிம்மரை வணங்கவும். பிற மத பெண்கள், சொந்தத் தொழில் தொடங்க, முடிந்த உதவி செய்யவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன் ஆவார். இந்த மாதம், சில எதிர் பாராத செயல்கள் நடந்து வியப்பில் ஆழ்த்தும். நீங்கள் நடக்கும் என ரொம்ப எதிர்பாராத செயல்கள் நடக்காமல் போவதுடன், உங்களுக்கு இம்சையும் தந்துவிடும். பணவரவு இருந்துகொண்டே இருக்கும். சிலர் அரசுமூலம் பணம் பெறும் வாய்ப்புண்டு. திருமணம் உங்களை செழிப்பாக்கும். நல்ல பணவசதி, ஆன்மிக பயணம் சம்பந்த தகவல் பெறுவீர்கள். உங்களிடம் வேலை செய்துவிட்டு, பணியைவிட்டு நீங்கியவர்கள், மறுபடியும் வேலையில் சேர்வர். வீடு, மனை விஷயமாக அரசு சார்ந்த நன்மை பெறுவீர்கள். வெளிநாட்டு வேலை சம்பந்தமாக, தகவல் வந்துசேரும். யாருடன் பேசினாலும் ஏதோ ஒரு மனக்கசப்பு வந்துவிடும். இதற்கு உங்கள் வாக்கின் கடுமை காரணமாக இருக்கலாம். அரசியல்வாதிகள் பணம் செழிக்கும் துறைக்கு மாற்றப்படுவர். சீருடை பணியாளர்கள் அரசியல்வாதிகளின் அனுகூலமும், பணப் பயனும் பெறுவர். சில ஒப்பந்தங்கள், கிடைப்பதற்காக, நீங்கள் கொடுத்த பணம், விரயமாகிவிடும். உங்களில் சிலர், அரசு உணவு சார்ந்த இடங்களில், பங்குபெற வாய்ப்பு வரும். இளைய சகோதரரின் திருமண விஷயமான அலைச்சல் உண்டு. மாணவர்கள் கல்வி மேன்மை அடைவர். சில மாணவர்கள், அரசு மூலம் லாபம் அடைவர். காதல் விஷயம் முழு வீச்சில் நடக்கும். வியாபாரிகள், அரசு சார்ந்த விஷயங்களை இந்த மாதம் முடித்துக்கொள்ளுங்கள். நிலம் சம்பந்தமான பங்குகளை வாங்குவீர்கள். கடன், கொஞ்சம் அலைச்சலுக்குபின் கிடைக்கும். கார்த்திகை 6, 7, 8-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

கவன தேதிகள்: 21, 22, 23.

பரிகாரம்: வள்ளி- தெய்வானையுடன்கூடிய முருகரை வணங்கவும். பிற மத பெண்கள், விபத்தில் சிக்கிக்கொண்டால், அதற்கான மருத்துவச் செலவுக்கு உதவுங்கள். அருகிலுள்ள கோவில் நரசிம்மரை வணங்கவும். பிற மத பெண்கள், சொந்த தொழில் தொடங்க, முடிந்த உதவி செய்யவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் கேது. இந்த மாதம் யோசனைகளும், திட்டங்களும் மிகப் பலமானதாக இருக்கும். ஆனால் நடைமுறைக்கு கொண்டுவரும்போது புஸ்வாணமாகிவிடும். அஜிர்ணக் கோளாறுகள் ஏற்படும். சிலரின் தந்தை எங்காவது அடிபட்டுக்கொள்வார். சிலரின் சகோதரருக்கும், தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிலசமயம் கை கலப்பில் முடியும். வியாபாரிகள், இந்த மாதம் வெகு கவனமாக இருக்கவேண்டும். தொழில்புரிவோருக்கு வருமானம் கூடவே சில மிரட்டல்களும் வரும். சில அரசியல்வாதிகள் ஆளவைத்து மிரட்டுவர். திருமணத்தில் புதுமை நிறைந்திருக்கும். மிக படித்த வரன் அமைவார். கர்ப்பஸ்திரிகள் கவனமாக இருப்பது அவசியம். மாணவர்கள் முயற்சி மேற்கொள்வர். காதல் மலரத் தொடங்கும். அரசியல் வாதிகள் ஏனோ ரொம்ப கோபம் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். உங்களில் சிலருக்கு, அரசு வகையில் கடன் கிடைக்க அனுமதி கிடைக்கும். பெண் பணியாளர் களிடம் கவனம் தேவை. வெளிநாட்டு, விஷயங்களை கையாளும்போது, சில பெண்கள் வதந்திகள் கூறி, உங்களை திசை திருப்புவர். கல்வி சம்பந்தமாக வெளியூர், வெளிநாடு பயணம் உண்டு. பேசும்போது எச்சரிக்கையாக, வார்த்தைகளை கையாளவும். கார்த்திகை 9-ஆம் தேதி நல்லது நடக்கக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

கவன தேதி: 18.

பரிகாரம்: அங்காரக சதுர்த்தி அல்லது வெள்ளிக்கிழமை சதுர்த்தி வந்தால், விநாயகரை இனிப்புகளுடன் வணங்கவும். உடன்பணிபுரியும் பிற மத பெண்களுக்கு இனிப்புகளும், செடி விதைகளும் வாங்கிக் கொடுங்கள்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சனி ஆவார். இந்த மாதம் பண வரவை எந்தெந்த வழிகளில், எம்முறையில் கைக்கு கொண்டுவந்து சேர்க்கலாம் எனும் எண்ணம் மட்டுமே இருக்கும். அதுவும் நீங்கள் அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தால், பண வசூலுக்கு என்றே, மறைமுகமாக ஒரு ஆளை நியமித்துவிடுவீர்கள். வீடு விற்க யோசனை உள்ளவர்கள் சற்று நிதானிக்கவும். அதேபோல் வீடு, மனை, வாகனம் வாங்கும்போதும், நிறைய மறைமுக பணப்பரிமாற்றம் செய்யவேண்டிவரும். உங்கள் தாயாருக்கும் உங்களின் மூத்த சகோதரருக்கும் இடையே மனக்கசடு உண்டாகும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தை கண்டிப்பாக, மிக கவனமாக கையாளவேண்டும். சரியான நேரத்தில் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் பெண் குழந்தைகள்மீது வெகு கவனம் இருக்கட்டும். காதல் கண்டிப்பாக வேண்டாம். வேலை தேடுவோர், வேறு இடத்தில் பணி கிடைக்கப் பெறுவர். உங்கள் தந்தை சிறு அவமானத்தால் இடம் மாறுவார். சொந்தத் தொழில் நடத்து கிறவர்கள், மிக கவனமாக இருங்கள். இந்த மாதம் தொழி-ல் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகள் ஒரு அவமானத்தையும், குற்றச்சாட்டை யும் எதிர்கொள்வர். கலைஞர்களுக்கு ரொம்ப பின்னடைவு ஏற்படும். பங்கு வர்த்தகம் பக்கம் தலைவைத்து படுக்கக் கூடாது. கார்த்திகை 23, 24, 25-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

கவன தேதிகள்: 9, 10, 11.

பரிகாரம்: அருகிலுள்ள சிவன் கோவி-ல் பைரவருக்கு தீபமேற்றி வழிபடவும். தேவாலயத்தில் வேலை பார்க்கும் பிறமத பெண்களுக்கு அவர்களின் குழந்தைகளின் தேவையறிந்து உதவுங்கள்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய். இந்த மாதம் பணம், வெள்ளி போன்றவைகளின்மீது கவனம் தேவை. இவை திருட்டுப் போக வாய்ப்புண்டு. தகவல் தொடர்பு சார்ந்த வேலை கிடைக்கும். உஷ்ணம் சம்பந்தமான உடல்நலக்குறைவு உண்டாகும். சில தம்பதிகளுக்குள் பயங்கரமான சண்டை வரும். இதற்கு மட்டமான பேச்சுக்களே காரணமாகும். திருமண ஏற்பட்டின்போது, சில சொற்கள், திருமணத்தை தள்ளிப்போட வைத்துவிடும். வயிற்றில் ஏதேனும் வ- மாதிரி தெரிந்தால் உடனே மருந்து மாத்திரையை ஒழுங்காக எடுத்துக்கொள்ளவும். பரிகாரம் செய்கிறேன் பேர்வழி என்று நிறைய கோவில்களுக்குச் செல்வீர்கள். கூடவே நிறைய பணத்தை ஏமாந்தும் விடுவீர்கள். சொந்தத் தொழில் நல்ல லாபம் கொடுத்தாலும், அரசு வகையிலான பதட்டமும் கூடவே தொடர்ந்து வரும். அரசியல்வாதிகள் வெளியே சிரித்து, உள்ளே அழுவர். கலைஞர்கள் அடிபடும் நேரமிது. பங்கு வர்த்தகம், செமத்தியாக அடிவாங்கி கொடுக்கும். காதல் விஷயம் காவல்துறை முன் நிற்கச் செய்யும். வாரிசுகள் உங்களை அழ அழ செய்வர். மொத்தத்தில் இந்த மாதம் கையது கொண்டு மெய்யது பொத்தி இருந்தால் பிழைத்தீர்கள். ஒண்ணும் ஆவதற்கில்லை. கார்த்திகை 2, 3, 4-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

கவன தேதிகள்: 15, 16, 17.

பரிகாரம்: பைரவரை வணங்கவும். சிவனுக்கும் அங்காரகனுக்கும் விளக் கேற்றி வணங்கவும்.. அரளி பூ சாற்றவும். வேலை செய்யும் பிற மத பெண்களின் திருமணத்திற்கு, முடிந்தளவு பண உதவி செய்யவும்.

செல்: 94449 61845

om011123
இதையும் படியுங்கள்
Subscribe