Advertisment

பக்தர்களின் கர்மவினையைத் தீர்த்துவைத்த கணக்கம்பட்டி சித்தர்! - இரா. இராஜேஸ்வரன்

/idhalgal/om/kanpampatti-siddha-who-solved-karma-devotees-ira-rajeswaran

"உப்பில்லா பண்டபம் குப்பையிலே' என்கிற பழமொழியை நாம் கேள்விப் பட்டதுண்டு. காரணம் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என்கிற ஆறுவகையான அவற்றில் உவர்ப்புத்தன்மை உப்பில்தான் உள்ளது. இந்த உப்பு வெறும் சமையலுக்கு மட்டும் பயன்படாமல் பொருளாதாரத்தை மேன்படுத்தும் வியாபாரம், மருத்துவம், ஆன்மிக விஷயங்கள் போன்றவற்றிலும் முக்கிய இடம்பிடித்துள்ளது.

Advertisment

அகநானூறு என்கிற சங்க இலக்கியத்தில் உப்பு விற்ற வணிகர் (உமணர்) அதற்கு ஈடாக நெல்மணிகளைப் பெற்றார் என்கிற பொருளில் ஒரு பாடல் வருகிறது. அதே போன்று பட்டினப்பாலை, சிறு பாணாற்றுப் படை போன்ற சங்க இலக்கியங்களில் உப்பைப் பற்றியும், அதன் வணிகத்தைப் பற்றியும் பாடல்கள் உண்டு. உப்பை "வெண்கல் அமிழ்தம்' என்று பண்டைய தமிழ்ப் புலவர்கள் கூறி யுள்ளனர்.

Advertisment

உணவில் சேர்க்கப் படும் உப்பின் வேதியியல் பெயர் "சோடியம் குளோரைடு'. இது கடல்நீரில் இருந்து பெறப் படும் திடப்பொருள். அயனி கலவையான உப்பில் கால்சியம் குளோரைட், பொட்டாசி யம் குளோரைட் என்கிற இரு வேதிப் பொருட்கள் உண்டு. இவை மனித உடலுக் கும், வளர்ச்சிக்கும் முக்கியமானவைகள். பொதுவாக உப்பிற்கு நீரை உறிஞ்சும் தன்மையுண்டு என்பதால் உடலில் அடிபட்ட இடத்தில் வீக்கம் குறைய உப்பு ஒத்தடம் தரும் பழக்கம் இன்றளவும் நம்மிடையே உண்டு. ஆன்மிக விஷயத்தில் இந்துக்கள் உப்பை

"உப்பில்லா பண்டபம் குப்பையிலே' என்கிற பழமொழியை நாம் கேள்விப் பட்டதுண்டு. காரணம் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என்கிற ஆறுவகையான அவற்றில் உவர்ப்புத்தன்மை உப்பில்தான் உள்ளது. இந்த உப்பு வெறும் சமையலுக்கு மட்டும் பயன்படாமல் பொருளாதாரத்தை மேன்படுத்தும் வியாபாரம், மருத்துவம், ஆன்மிக விஷயங்கள் போன்றவற்றிலும் முக்கிய இடம்பிடித்துள்ளது.

Advertisment

அகநானூறு என்கிற சங்க இலக்கியத்தில் உப்பு விற்ற வணிகர் (உமணர்) அதற்கு ஈடாக நெல்மணிகளைப் பெற்றார் என்கிற பொருளில் ஒரு பாடல் வருகிறது. அதே போன்று பட்டினப்பாலை, சிறு பாணாற்றுப் படை போன்ற சங்க இலக்கியங்களில் உப்பைப் பற்றியும், அதன் வணிகத்தைப் பற்றியும் பாடல்கள் உண்டு. உப்பை "வெண்கல் அமிழ்தம்' என்று பண்டைய தமிழ்ப் புலவர்கள் கூறி யுள்ளனர்.

Advertisment

உணவில் சேர்க்கப் படும் உப்பின் வேதியியல் பெயர் "சோடியம் குளோரைடு'. இது கடல்நீரில் இருந்து பெறப் படும் திடப்பொருள். அயனி கலவையான உப்பில் கால்சியம் குளோரைட், பொட்டாசி யம் குளோரைட் என்கிற இரு வேதிப் பொருட்கள் உண்டு. இவை மனித உடலுக் கும், வளர்ச்சிக்கும் முக்கியமானவைகள். பொதுவாக உப்பிற்கு நீரை உறிஞ்சும் தன்மையுண்டு என்பதால் உடலில் அடிபட்ட இடத்தில் வீக்கம் குறைய உப்பு ஒத்தடம் தரும் பழக்கம் இன்றளவும் நம்மிடையே உண்டு. ஆன்மிக விஷயத்தில் இந்துக்கள் உப்பை மகாலட்சுமி என்று மரியாதையுடன் சொல்வார்கள். முன்பு தெருக்களில் உப்பை வியாபாரம் செய்யும் வழக்கம் இருந்தது. இல்லத்தரசிகள் வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்குவதுண்டு. எல்லா விதமான சுப காரியங்களுக்கும் உப்பு, அரிசி போன்றவை முக்கிய இடம் பெறும். இன்றளவும் கிராமங்களில் மாரியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் உப்பையும், மிளகையும் வைத்து வழிபடுதல் நடக்கிறது. அதேபோன்று கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் புனித அந்தோனியார் தேவாலயம் சர்ச்சில் உப்பு, மிளகை வைத்து வழிபடுவார்கள். தேவாலயத்தில் மந்திரித்து தரப்படும் உப்பு, மிளகை பக்தியுடன் சாப்பிடுவார்கள். கிராமப்புற தேவாலயத்தில் சப்பரம் (தேர்) விடும் விழாவின்போது தீயசக்திகள் அண்டாமல் இருக்க உப்பு எறிதல் நிகழ்வு உண்டு. இப்படி ஆன்மிக விஷயங்களில் (சடங்கு) உப்பு பயன்படுவதுபோல், கண் திருஷ்டி கழிக்கவும், கர்ம வினைகளைப் போக்கவும் பயன்படுத்துவண்டு. சித்தர்கள் நம்முடைய முற்பிறவி கர்மவினையை உப்பினால் தீர்த்து வைப்பார்கள்.

புனித பழனிமலைக்கு அருகே கணக்கன் பட்டி எனும் கிராமத்தில் சமீப காலத்தில் வாழ்ந்த சித்த புருஷர் எப்பொழுதும் தன் தோளில் ஒரு அழுக்கு மூட்டையை சுமந்துகொண்டே இருந்ததால் அவரை "அழுக்குமூட்டை சாமி' என்று அழைப்பார் கள். தன்னை தரிசனம் செய்யவரும் பக்தர் களின் மனக்குறையை அமானுஷ்ய சித்தி களால் சொல்லாமல் அறிந்து, அக்குறைகளை அட்டமா சித்துகளின்மூலமாக நிவர்த்திசெய்வார். பக்தர்களிடம் பரி பாசையில்தான் பேசுவார். ஒரு சிலருக்கு மட்டுமே அதன் உள் அர்த்தம் தெரியும். ஒரு சிறிய குடிசையில் எளிய வாழ்க்கையை நடத்திய இவரைக் காண பலர் தினமும் வந்து அருள்பெற்றுச் செல்வதுண்டு. பழனிசாமி என்கிற இயற்பெயர் கொண்ட இவர் எப்பொழுதும் பச்சை நிற சட்டையும், தலையில் சில சமயங்களில் மூண்டாசும் கட்டிக்கொண்டு முதலில் ஒரு மூட்டையுடன் காட்சிதருவார். இந்த மூட்டையுடன் பழனிமலையை தனியாகச் சுற்றிவருவார். இவர் எங்கு எப்பொழுது பிறந்தார் என்கிற சரியான தகவல் தெரியவில்லை. கணக்கம்பட்டி கிராமத்தில் சிறிய குடிசையில் ஏழை விவசாயிபோல் வாழ்ந்துவந்தார்.

ss

கணக்கம்பட்டி சித்தர் தினமும் காலையில் பழைய சோற்றில் செய்த நீர் ஆகாரத்தைதான் விரும்பிக் குடிப்பார். பொதுவாக இவரது சகோதரிதான் இவருக்குப் பணிவிடை செய்வார். இவர் கூழ் குடிக்கும் சமயத்தில் தன்னை தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கும் கூழ் தரச் சொல்வார். அதை பக்தர்கள் தெய்வீகப் பிரசாதமாக விரும்பிக் குடிப்பார்கள்.

ஒருநாள் இதுபோன்று காலையில் கூழ் குடித்துக்கொண்டு இருக்கும்போது வெளியூரிலிருந்து வந்த ஒருபக்தர் தரிசனத் திற்காக பக்தியுடன் வந்தார். அன்று கொடுக்கப்பட்ட கூழில் உப்பு சற்று அதிகமாக இருந்தது. இதை வந்தவர்கள் யாரும் ஒன்றும் சொல்லாமல் பிரசாதமாக நினைத்துக் குடித்தனர். அந்த வெளியூர் பக்தரும் சிரமப்பட்டு உப்பான கூழைக் குடித்துக்கொண்டு இருக்கும்போது அவரைப் பார்த்து கூழில் உப்பு குறைவாக இருக்கிறது. சற்று உப்பைப் போட்டுக் குடிக்குமாறு சித்தர் கூறினார். ஏற்கெனவே உப்பான கூழில் இன்னும் உப்பு போட்டால் எப்படிக் குடிப்பது என யோசித்தார்.

இருந்தாலும் சித்தர் சொன்னதால் அதன்படியே செய்தார். வந்த பக்தர்களில் ஒருவர் கூழ் ஏற்கெனவே உப்பாக இருக்கிறது என தயங்கியவாறே கூற, அந்த பக்தரிடம் கடித்துகொண்டார். தன்னுடைய அனுக்கத் தொண்டரிடம் "நான் எதற்காக சொல்கிறேன் என உனக்குத் தெரியுமல்லவா?' எனக் கேட்க அவரும் தலையை ஆட்டினார். கூழ் குடித்த வெளியூர் பக்தரை கிளம்புமாறு சைகை செய்ய அவரும் பக்தியுடன் வணங்கிவிட்டு கிளம்பினார். தன் அருகில் இருந்த அணுக்கத் தொண்டரிடம் "எல்லாம் போச்சு' எனச் சொல்லவே பிறகுதான் அனைவருக்கும் என்னவென்று புரிந்தது. வந்த வெளியூர் பக்தருக்கு முற்பிறவி கர்மவினை இருந்தது.

மனிதனாக பிறந்தாலே ஒருநாள் இறப்பு என்பது நிச்சயம் உண்டு. முற்பிறவியில் செய்த பாவங்கள் கர்மவினையாக இப்பிறவியில் நம்மை வாட்டும். மனிதப் பிறவிக்குமுன்பு பல வகையான பிறப்புகள் நமக்கு ஏற்பட்டு இருக்கும். இதைத்தான் மாணிக்கவாசகர் சிவபுராணத்தில், "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்

எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுள் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்''

எனப் பாடியுள்ளார்.

பிறவா நிலையை அடைய, இறைவனின் திருவடியை சரணடையவேண்டும்.

அவன் திருவருளால் முக்தி நிலையை அடையமுடியும். அப்போதுதான் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சி வராது. பொதுவாகவே மனிதப் பிறவியின் நோக்கமே மோட்சம் என்கிற முக்திதான். நம்முடைய கர்மவினைகள் தீர, தீரதான் நம்மிடையே இறையம்சம் ஏற்படும்.

கணக்கம்பட்டி சித்தர் தன்னை தரிசிக்கவந்த வெளியூர் பக்தரின் கர்ம வினையை தன்னுடைய ஆத்ம பலத்தால் அறிந்து உப்பை பயன்படுத்தி தீர்த்துவைத்தார். உப்பிற்கு மிகப்பெரிய கர்மவினையை தீர்க்கும் சக்தி உண்டு. எனவேதான் முன்னோர் கள் அடிக்கடி உப்பு கலந்த நீரில் குளிக்கச் சொல்வார்கள்.

பக்தர்களின் கர்மவினைக்கு ஏற்ப சிறுசிறு வேலைகள், பரிகாரம்மூலம் தீர்த்து அவர்களின் வாழ்வில் நல்வழியைக் காட்டிய வினை தீர்க்கும் வித்தகர். இச்சித்தர் 2014-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி (மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரம்) இடும்பன் மலை அடிவாரத்தில் சித்தியடைந் தார். கணக்கன்பட்டியிலுள்ள மோகன் தோட்டத்தில் முறைப்படி அடக்கம் செய்யப் பட்டது. கடந்த பிப்ரிவரி மாதம் 10-ஆவது குரு பூஜை சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களின் ஆன்மிக குருவுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

om010424
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe