கண்ணனின் இதயக் கோவில் - மகேஷ் சர்மா

/idhalgal/om/kannans-heart-temple-mahesh-sharma

நீல மாதவார் ஆலயம் ஒடிஸ்ஸா மாநிலத்தில் இருக்கிறது. நயாகர் மாவட்டத்திலுள்ள காந்திலோ என்னும் ஊரிலிருக்கும் இக்கோவிலில் கிருஷ்ணர் குடிகொண்டிருக்கிறார்.

மகாபாரதப் போரில் கௌரவர்கள் முழுமையாக அழிந்துவிட்டனர். துரியோதனனும் இறந்து விட்டான். முழு குடும்பத்தையும் இழந்துவிட்ட காந்தாரி, தன் குடும்பம் அழிந்ததற்குக் காரணம் கிருஷ்ணாதான் என்று கருதி கிருஷ்ணரைப் பார்த்து, 'என் குடும்பம் எப்படி அழிந்ததோ, அதேபோல உன் குடும்பமும் மொத்தமாக அழிந்து, அதைப் பார்த்து என்னைப்போல் வேதனைப்பட்டு நீயும் இறக்க வேண்டும்' என்று சாபமிட்டாள்.

dd

வருடங்கள் கடந்தோடின. கண்ணனின் குடும்பம் முழுக்க தங்களுக்குள் போரிட்டு மாண்டனர். இறுதியில் ஒரு நாள் கிருஷ்ணர் வனத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வேட்டையாடுவதற்காக வந்த விஸ்வபாசு என்ற வேடன், மான்தான் படுத்திருக்கிறது என்று நினைத்து, கிருஷ்ணரின்

நீல மாதவார் ஆலயம் ஒடிஸ்ஸா மாநிலத்தில் இருக்கிறது. நயாகர் மாவட்டத்திலுள்ள காந்திலோ என்னும் ஊரிலிருக்கும் இக்கோவிலில் கிருஷ்ணர் குடிகொண்டிருக்கிறார்.

மகாபாரதப் போரில் கௌரவர்கள் முழுமையாக அழிந்துவிட்டனர். துரியோதனனும் இறந்து விட்டான். முழு குடும்பத்தையும் இழந்துவிட்ட காந்தாரி, தன் குடும்பம் அழிந்ததற்குக் காரணம் கிருஷ்ணாதான் என்று கருதி கிருஷ்ணரைப் பார்த்து, 'என் குடும்பம் எப்படி அழிந்ததோ, அதேபோல உன் குடும்பமும் மொத்தமாக அழிந்து, அதைப் பார்த்து என்னைப்போல் வேதனைப்பட்டு நீயும் இறக்க வேண்டும்' என்று சாபமிட்டாள்.

dd

வருடங்கள் கடந்தோடின. கண்ணனின் குடும்பம் முழுக்க தங்களுக்குள் போரிட்டு மாண்டனர். இறுதியில் ஒரு நாள் கிருஷ்ணர் வனத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வேட்டையாடுவதற்காக வந்த விஸ்வபாசு என்ற வேடன், மான்தான் படுத்திருக்கிறது என்று நினைத்து, கிருஷ்ணரின் காலில் அம்பை எய்தான். கிருஷ்ணரின் உயிர் பிரிந்தது. பின்னர் அவரது உடல் எரியூட்டப்பட்டது. முழு உடலும் எரிந்தது... இதயத்தைத் தவிர. அந்த இதயம் நீரில் மிதந்து சென்று ஒரு கல்போல மாறியது.

அந்த கல்லைக்கண்ட விஸ்வபாசு (கிருஷ்ணர்மீது அம்பெய்த வேடன்) அதை 'தெய்வீகக் கல்' என்றெண்ணி, அதை எடுத்து,அதற்கு 'நீல மாதவா்' என்று பெயர் சூட்டி அதை ஒரு குகைக்குள் வைத்து தினமும் பூஜை செய்து வந்தான். அவன் மட்டுமல்ல... அந்த காட்டில் வாழும் அனைத்து பழங்குடி மக்களும் அந்த தெய்வீக சக்தி படைத்த நீலநிறக் கல்லை பக்திப் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்தார்கள். அந்த காட்டுவாழ் மக்களின் அனைத்து துன்பங்களும் நீங்கின.

அவரை குலதெய்வமாகவே நினைத்து வழிபட்டனர்.

அந்த பழங்குடி மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்வதைப் பார்த்து, அந்த பகுதியை ஆண்டு கொண்டிருந்த இந்திரத்வஜன் என்ற மன்னன் ஆச்சரியப்பட்டான். அவர்களின் மகிழ்ச்சிக்கு யார் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டு வரும்படி வித்யாபதி என்ற பண்டிதரை அனுப்பி வைத்தான்.

வித்யாபதி மாறுவேடத்தில் சென்று பல முயற்சிகள் செய்தும் அவரால் உண்மையைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. தான் வந்த விஷயத்தை எப்படியும் வெற்றிகரமாக முடித்தே ஆவது என்று தீர்மானித்த அவர் விஸ்வபாசுவின் மகளைத் திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்தபிறகு தன் மனைவியிடம் உண்மையைக் கூறும்படி கேட்க, அவள் தன் தந்தையிடம் விஷயத்தைச் சொன்னாள்.

மகளின் கோரிக்கையை ஏற்ற விஸ்வபாசு பண்டிதரின் கண்களைத் துணியால் கட்டி,தெய்வீகக் கல் இருக்கும் குகைக்கு அழைத்துச் சென்றான்.

dd

அப்போது பண்டிதர் புத்திசாலித்தனமாக தான் ஏற்கெனவே கையில் வைத்திருந்த கடுகை செல்லும் பாதையில் போட்டுக்கொண்டே சென்றார். பின்னர் அதன்மூலம் தெய்வீகக் கல் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டார்.

தான் பார்த்த விஷயத்தை அவர் மன்னனிடம் கூற, மன்னன் அங்கு வந்தான். ஆனால், நீல மாதவர் மன்னனின் கண்களில் படாமல் மறைந்து கொண்டார். அதனால் மன்னன் கவலையில் மூழ்கி, அதே இடத்தில் அமர்ந்து நீலமாதவரை நினைத்து தவம் மேற்கொண்டான். அவன் கனவில் வந்த நீல மாதவார் 'கடலின் ஓரத்தில் ஒரு மரம் இருக்கும். அது அருமையான வாசனை கொண்டதாக இருக்கும். அந்த மரத்தின் ஒரு பகுதியைக் கொண்டுபோய் ஒரு சிற்பியிடம் கொடு. அவர் செய்யும் சிலையை வைத்து நீ வழிபடு. உனக்கு என் அருள் கிடைக்கும்' என்று கூறினார்.

மறுநாளே அதற்கான ஏற்பாடுகளை செய்தான் மன்னன். மரத்தைப் பார்த்த சிற்பி, 'சிலையைச் செய்து முடிக்க 21 நாட்கள் ஆகும். அப்போதுதான் நீங்கள் வர வேண்டும்' என்று நிபந்தனை விதித்தான்.

சிலை செய்யும் வேலை ஆரம்பமானது.

கதவை இறுக மூடிக்கொண்டு சிற்பி வேலையில் ஈடுபட்டான்.

14 -ஆவது நாளன்று மன்னன் அந்த இடத்திற்குச் சென்றான். உள்ளே எந்தச் சத்தமும் கேட்கவில்லை. சிற்பியும் அப்போது இல்லை. அங்கு மூன்று சிலைகள் பாதி முடிந்த நிலையில் இருந்தன. அந்த அரைகுறை நிலையிலிருந்த மூன்று சிலைகளை யும் மன்னன் வழிபட்டான். பலராமர், ஜெகந்நாதார், சுபத்திரை- இவர்கள்தான் சிலை வடிவிலிருந்த மூவர். இந்த மூன்று சிலைகளும் இப்போது பூரி ஜெகந்நாதர்ஆலயத்தில் இருக்கின்றன. இந்த மூன்று சிலைகளுக்கும் கைகளும் கால்களும் இல்லை. நீல மாதவர்தான் ஜெகந்நாதர்.

கந்த புராணத்திலும்,பிரம்ம புராணத்திலும் இந்த கதை கூறப்பட்டிருக்கிறது.

இந்த கட்டுரையில் வரும் நீல மாதவர் ஆலயம் பிரம்மாத்ரி மலைப் பகுதியிலிருக்கும் மகாநதியின் கரையில் இருக்கிறது. இந்த ஆலயம் தோற்றத்தில் பூரி ஜெகந் நாதர் ஆலயத்தைப் போலவே இருக்கும்.

இந்த ஆலயம் நயாகராவிலிருந்து 33 கிலோமீட்டர் தூரத்திலும், புவனேஸ்வர் நகரிலிருந்து 73 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கிறது.

om010920
இதையும் படியுங்கள்
Subscribe