கண்ணன் திருவமுது உத்தவ கீதை 6 -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/om/kannan-thiruvamudu-uttava-gita-6-lalgudi-gopalakrishnan

சுதேவர் இல்லத்திற்கு வருகை புரிந்த நாரதரிடமும், ஒன்பது யோகிகளிடமும், ""எதையறிந்தால் எல்லா வித பாவங்களிருந் தும் பயங்களிலிருந்தும் மனிதன் விடுபடு வானோ, அத்தகைய தர்மத்தை அருள வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். "பாகவத தர்மத்தைக் கேட்டாலும், படித்தாலும், கடைப்பிடித்தா லும் அந்த இமைப்பொழுதிலேயே மனிதன் புனிதமாகி விடுகிறான்' என்று நாதமுனியாகிய நாரதர் கூறுகிறார்.

பின்பு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர்.

துருமிளர் என்ற ஏழாவது யோகி நரநாராயணர்களின் தவத்தையும், பேராற்றல்களையும் விவரித்தபின், திருமால் எடுத்த மச்சாவதாரத்தின் (மீன்) மூலம் அசுரர்களை அழித்து, வேதங்களைக் காத்தருளிய பகவானின் அவதாரத் தத்துவத்தை விவரிக்கிறார்.

mm

மச்சாவதாரம் (மீன்)

ஆதியில் எங்கும் இருளே படர்ந்திருந்தது. ஒருநாள் அந்த இருளைக் கிழித்துக்கொண்டு பரப்பிரம்மம் வெளியே வந்தது. வெளியே வந்த அது தன்னைத்தானே மூன்று பங்காகப் பிரித்துக்கொண்டது. பிரம்மா, விஷ்ணு, சிவன் உண்டாயினர். முதலில் தோற்றுவிக்கப்பட்டது நீரேயாகும். ஹரி (விஷ்ணு) அந்த பாற்கடலில் அறிதுயில் கொண்டார். நீண்டகாலத்திற்குப் பிறகு நீரில் ஒரு பொன்முட்டை மிதக்கலாயிற்று. அது கோடி சூரியப்பிரகாசமாய் இருந்தது. அதனுள்ளே பிரம்மன் சுயம்புவாகத் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டார். அதன்பின் தன் படைப்புத் தொழிலைத் துவங்கினார்.

ஒரு சதுர்யுகத்தின் முடிவான பிரளய காலத்தில், பிரம்மன் தவத்திலாழ்ந்திருந்தார். அப்போது அவரிடமிருந்த படைப்புத் தொழிலுக்கும்,

சுதேவர் இல்லத்திற்கு வருகை புரிந்த நாரதரிடமும், ஒன்பது யோகிகளிடமும், ""எதையறிந்தால் எல்லா வித பாவங்களிருந் தும் பயங்களிலிருந்தும் மனிதன் விடுபடு வானோ, அத்தகைய தர்மத்தை அருள வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். "பாகவத தர்மத்தைக் கேட்டாலும், படித்தாலும், கடைப்பிடித்தா லும் அந்த இமைப்பொழுதிலேயே மனிதன் புனிதமாகி விடுகிறான்' என்று நாதமுனியாகிய நாரதர் கூறுகிறார்.

பின்பு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர்.

துருமிளர் என்ற ஏழாவது யோகி நரநாராயணர்களின் தவத்தையும், பேராற்றல்களையும் விவரித்தபின், திருமால் எடுத்த மச்சாவதாரத்தின் (மீன்) மூலம் அசுரர்களை அழித்து, வேதங்களைக் காத்தருளிய பகவானின் அவதாரத் தத்துவத்தை விவரிக்கிறார்.

mm

மச்சாவதாரம் (மீன்)

ஆதியில் எங்கும் இருளே படர்ந்திருந்தது. ஒருநாள் அந்த இருளைக் கிழித்துக்கொண்டு பரப்பிரம்மம் வெளியே வந்தது. வெளியே வந்த அது தன்னைத்தானே மூன்று பங்காகப் பிரித்துக்கொண்டது. பிரம்மா, விஷ்ணு, சிவன் உண்டாயினர். முதலில் தோற்றுவிக்கப்பட்டது நீரேயாகும். ஹரி (விஷ்ணு) அந்த பாற்கடலில் அறிதுயில் கொண்டார். நீண்டகாலத்திற்குப் பிறகு நீரில் ஒரு பொன்முட்டை மிதக்கலாயிற்று. அது கோடி சூரியப்பிரகாசமாய் இருந்தது. அதனுள்ளே பிரம்மன் சுயம்புவாகத் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டார். அதன்பின் தன் படைப்புத் தொழிலைத் துவங்கினார்.

ஒரு சதுர்யுகத்தின் முடிவான பிரளய காலத்தில், பிரம்மன் தவத்திலாழ்ந்திருந்தார். அப்போது அவரிடமிருந்த படைப்புத் தொழிலுக்கும், உயிர்களின் உன்னத வாழ்விற்கும் அடிப்படையான நான்கு வேதங்களையும் ஹயக்ரீவன் என்ற அசுரன் திருடிச்சென்றான். உலகத்தை தன்வசம் அடக்கும் பேராசையுடன் வேதங்களைத் திருடியவன், அதைக் கடலில் ஒளித்து வைத்தான். வேதங்கள் இருந்தாலன்றிப் பிரும்ம சிருஷ்டி இயங்காது. உலகத்தில் அறம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை அவசியமென்பதை நான்முகன் உணர்ந்து கலங்கினார்.

சத்திய யுகத்தில் (கிருத யுகம்) சத்யவிரதன் என்ற ராஜரிஷி இருந்தார். அவர் ஆயிரம் வருடங்கள் தவம் செய்தபிறகு, பிரம்மா அவர் எதிரே தோன்றி னார். "என்ன வரம் வேண்டும்?' என்று பிரம்மா கேட்க, சத்ய விரதன், ""பிரம்மனே! என் விருப்பத்தையெல்லாம் ஒரே வரத்தில் கேட்டுவிடுகின்றேன். அண்மைக் காலத்திலோ, பலகாலம் கழித்தோ பிரளயம் வந்து இவ்வுலகத்தை அழிக்கப் போகிறது. அந்த அழிவுக்காலத் தில் நான் மட்டும் இருந்து இந்த உலகத்தையும், எல்லா உயிர் களையும் காக்கும் பணியைச் செய்யவேண்டுகிறேன்'' என்றார்.

அதுகேட்ட பிரம்மா, ""ஆதி சேஷனில் பள்ளிகொண்டுள்ள பெருமாளை வேண்டி நோன் பிருந்தால், அவர் கருணையால் உன் பிரார்த்தனை நிறைவேறும்'' என்றுகூறி மறைந்தார்.

சத்யவிரதன் உணவுண்ணாமல் தண்ணீரை மட்டும் அருந்தி, ஸ்ரீமத் நாராயணரை பூஜித்து, நோன்பு நோற்று வந்தார். ஒருநாள் கிருதமாலா என்ற ஆற்றங்கரையில் அமர்ந்து, தன் மூதாதையர்களுக்குத் தண்ணீர் இறைத்து அர்க்கியம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அர்க்கியம் செய்யும்பொழுது இரு கைகளிலும் தண்ணீரை எடுத்தார். அவர் கைக்குள் தேங்கிய நீரில் ஒரு சிறிய மீன் நீந்திக் கிடப் பதைப் பார்த்தார். பேரழகுமிக்க அந்த மீன், ""ஹே ராஜனே! என்னை மீண்டும் தண்ணீரில் தள்ளிவிடாதீர்கள். குட்டி மீனான என்னைப் பெரிய மீன்கள் விழுங்கிவிடும். அதனால், தாங்களே என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன்'' என்றது. இதைக்கேட்டு அகம்மகிழ்ந்த சத்யவிரதன், அந்த மீனின் வேண்டுகோளை நிறைவேற்ற எண்ணி, ஆற்றுக்கு தன்னுடன் கொண்டுவந்த கமண்டலத்திற்குள் மீனைப் பாதுகாத்தார். அன்றிரவே அந்த மீன் கிடுகிடுவென்று வளர்ந்து கமண்டலம் முழுவதும் பரவியது. அந்த மாயமீன், ""அரசே! இந்த இடமும் எனக்கு வசிக்கப் போதாது'' என்றது. அங்கிருந்து எடுத்து ஒரு குளத்தில் விட்டார். அது வெகுசீக்கிரமாக வளர்ந்து, அந்தக் குளத்தை நீக்கமற நிறைத்துநின்றது.

அடுத்து, அந்த மீனை ஆழமானதும் விரிந்து பரந்ததுமான சமுத்திரத்தில் கொண்டு போடும்போது, சத்யவிரதன் வியப்புற்று சிந்திக்கலானார்.

அந்த மீனாக இருப்பது நிச்சயம் ஸ்ரீ ஹரியேதான் என்பதை உணர்ந்துகொண்டார். ""விண்ணையும் மண்ணையும் அளக்கும் விஸ்வரூபனாகிய பெருமாளே! தாங்கள் இந்த உருவத்தோடு இங்கு வந்ததன் காரணத்தைத் தங்கள் அடியே னாகிய எனக்குத் தெரிவிக்கும்படி பிரார்த்திக்கிறேன்'' என மச்சாவ தார மூர்த்தியை வீழ்ந்து வணங்கிக் கேட்டார்.

மச்சாவதார மூர்த்தி

அருளுரைத்தது- ""ராஜரிஷியே! இன்றுமுதல் ஏழாம் நாளன்று இந்த பூமியும் விண்ணும், அதற்கிடைப்பட்ட வெளியும் பொங்கியெழும் கடலுக்கு இரையாகப்போகின்றன. உலகங்கள் அழியும் நாள் வந்துவிட்டது. அஞ்சாதே! நான் உனக்கொரு பெரிய தோணியை அனுப்பி வைக்கிறேன். நீ அந்தத் தோணியில் சமஸ்த ஔஷதிகளையும், பற்பல வித்துகளையும் ஏற்றிக்கொண்டு, சப்தரிஷிகளுடன் சர்வபலம் கொண்டவனாக, அந்தகாரமான சமுத்திரத்தில் மகா தீரனாக சஞ்சரிக்கப் போகிறாய். வாயுவால் அலைக்கழிக்கப்பட இருக்கும் அந்தத் தோணி கவிழ்ந்து விடாமல் இருக்க, வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கி, எனது கொம்பில் சேர்த்துக் கட்டிவிடு. அப்படிக் கட்டினால் நான் பிரம்மதேவனுடைய இராப்பொழுது தீரும்வரை அந்த ஓடத்தோடு சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். அப்போது சப்தரிஷிகளும் ஒளிமயமாக இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள்.

அதற்குப்பிறகே, நீ எனது அவதாரத்தின் பெருமையைத் தெரிந்துகொள்வாய். உனக்கு சர்வமங்களமும் உண்டாகட்டும்'' என்றார்.

தர்ப்பாசனத்தில் இருந்தபடி சத்தியவிரதன், உலகை அழிக்கப்போகும் பிரளயத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். ஏழாம் நாள் ஆகாயம் அந்தகாரத்தில் மூழ்கியது. சம்வர்தா, சண்டா முதலிய சப்தமேகங்களும் ஒன்றாகக்கூடி, விடாமல் பெருமழைப் பொழிந்தன. கடல் கரைபுரண்டு வந்தது. அதனால், பூமி முழுவதும் நீரில் மறைந்தது. விஷ்ணு சொன்னபடியே படகும் வந்தது. அந்தப் பொங்கும் நீர்ச்சுழிகளின் ஊடே பரந்தாமன் கொம்புடைய தங்கத் திமிங்கலத் தோற்றத்துடன் காணப்பட்டார். சத்யவிரதன் அப்போது சப்தரிஷிகளுடனும், தான் சேகரித்த மூலிகை விதைகளுடனும் ஓடத்தில் ஏறி பகவானை தியானம் செய்தபடியே, தங்கத் திமிங்கிலத்தின் கொம்பில் படகைக் கட்டினார். அந்த அபூர்வ மச்சம் இவர்கள் ஏறிய படகைப் பற்றி இழுத்துக்கொண்டு வெள்ளத்தின் மத்தியில் அச்சமின்றி அலைந்துகொண்டிருந்தது. அவ்வமயம் பரந்தாமன் ராஜரிஷியாகிய சத்தியவிரதனுக்கு மச்சாவதாரத்தின் தத்துவத்தை உபதேசம் செய்தார்.

பிரம்மதேவனின் நித்திரைக் காலம் முடிந்தது. உலகைக் கவ்வியிருந்த அந்தகாரம் விலகி, ஊடே ஒளிக்கீற்றுகள் முளைத்தன. ஓயாதுபெய்த மழையும் ஓய்ந்தது. உலகில் பொங்கிப்பெருகிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது. மச்சமூர்த்தி ஓடத்தைக் கரைசேர்த்தார். சத்தியவிரதன் தன்னை ஹரிபக்தனாக்கி, தன் விருப்பம் பூர்த்தியடைய வழிகாட்டிய பிரம்மனைக் குறித்து பிரார்த்தனை செய்தார். யோக நித்திரையிலிருந்து மீண்ட பிரம்மதேவன் அவன் முன்பு தோன்றி ஆசிர்வதித்தார். மீண்டும் நான்முகன் தம் சிருஷ்டியைத் தொடங்க நினைத்தபோது, தன்னிடமிருந்த சதுர்வேதங்களையும் இழந்ததை எண்ணி வருந்தினார். பிரம்மதேவர் ஸ்ரீஹரியை நோக்கி தியானம் செய்தார். அவ்வமயம் மச்சமூர்த்தியாக இருந்த பகவான், வேதங்களை அசுரர்கள் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து வெள்ளத்திற்குள் புகுந்தார். குதிரைமுகனை வெள்ளத்தில் கண்டு அவனுடன் போர் புரிந்தார். வேதங்களை மீட்டு, அவற்றை மீண்டும் பிரம்மதேவரிடமே கொடுத்து, மறுபடியும் சிருஷ்டியைத் துவங்கும்படி சொன்னார். இப்படியாக, சத்தியவிரதன் வைவஸ்தமனு என்ற பெயருடன் ராஜ்ய பரிபாலனம் செய்து வரலானார். பெரும் பிரளயத்தின்போது விஷ்ணு மீன் அவதாரமெடுத்து, வைவஸ்த மனுவின் குடும்பத்தினரையும், சதுர்வேதங்களையும் மீட்டு, சப்தரிஷிகளையும் காத்து, மீண்டும் பூவுலகில் அனைத்து உயிரினங்களையும் செழிக்கவைத்த சரிதமே மச்சாவதாரத்தின் மகிமை.

(அமுதம் பெருகும்)

om011020
இதையும் படியுங்கள்
Subscribe