கண்ணன் திருவமுது 15 உத்தவ கீதை!

/idhalgal/om/kannan-thiruvamudu-15-uttava-gita

மிதிலை மன்னருக்கு, ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர்.

துருமிளர் என்ற ஏழாவது யோகி, "ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதேபாகவத தர்மம்' என்றுரைத்தார். திருமால் எடுத்த இராமாவதாரத்தை விளக்கிய பின், கிருஷ்ணாவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார்.

கீதாச்சாரியன் (கிருஷ்ணாவதாரம்)

சுபதஸ் என்ற பிரஜாபதியும், ப்ருகனியும் தவம்செய்து மகா விஷ்ணுவிடம் வரம்பெற்றபோது, அவர் தங்களுக்கு மகனாகப் பிறக்கவேண்டுமென மூன்றுமுறை கேட்டனர்.

kannan

எனவே அவர்களது மகவாக மூன்று அவதாரங் களை நிகழ்த்தினார் மகாவிஷ்ணு. முதல்முறை அவ்விருவருக்குமே மகாவிஷ்ணு மகனாகப் பிறந்தார். அவர்கள் தங்களின் பிள்ளை மகாவிஷ்ணு என்பதை அறிந்துகொள்ள வில்லை. அடுத்து கஸ்யபர், அதிதி தம்பதியரா கப் பிறந்த அவர்களுக்கு வாமனனாக மகா விஷ்ணு பிறந்தார். அப்போதும் மகாவிஷ்ணுவே தங்களுக்கு மகனாகப் பிறந்துள்ளான் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. மூன்றாவது பிறவியில் அவுர்கள் வசுதேவர், தேவகியாகப் பிறந்தனர். அவர்களுக்கு மகா விஷ்ணு கண்ணனாகப் பிறந்து, மகாவிஷ்ணு வாகக் காட்சிகொடுத்து, தான் யார் என்பதை உணர்த்தினார்.

ஒருமுறை பூமாதேவி நாராயணனிடம், "பகவானே! பூமியில் நடக்கும் அக்கிரமங்களை என்னால் தாங்கமுடியவில்லை. விரைவில் இதற்கொரு முடிவுகட்டுங்கள்'' என வேண்டி னாள். அதற்கு நாராயணரும் சற்று பொறுமை யாக இருக்கும்படி கூறினார். பலகாலம் கழித்து பூமாதேவி, "நாராயணா! தாங்கள் சொன்னது போல இன்றுவரை பொறுமைகாத்து வருகிறேன். ஆனால், முனிவர்கள் செய்யும் யாகத்தைக் கெடுப்பவர்கள், நாத்திகர்கள், காமுகர்கள், கொலைசெய்பவர்கள், கொள்ளை யடிப்பவர்கள், உழைப்பைத் திருடுபவர்கள் ஆகியோரையும் சேர்த்து சுமக்கிறேனே! இவர்களின் பாவத்தின் சுமையைத் தாங்கும் சக்தி எனக்கில்லை. இவர்களை அழிக்கும் அளவுக்கு வலிமையும் என்னிடமில்லை. என்னையும், நான் தாங்கும் நல்லவர்களையும் இவர்களிடமிருந்து காப்பாற்று'' என்ற பூமாதேவியின் புலம்பல் சத்தம் அந்த பரந்தாமனுக் குக் கேட்டது.

புருஷோத்தமன் திரு

புருஷோத்தமன் திருவாக்கு மலர்ந்தார். "பூமாதேவியே, கவலை கொள்ளாதே. உலகத்தி லுள்ள பாவிகளை அழிக்க நானே பூலோகத்தில் பிறக்கப் போகிறேன். அதற்கு முன்னதாக தேவர்கள் அனைவரும் பூலோகத்திலுள்ள யதுவம்ச குடும்பங்களில் பிறந்து, எனக்குத் துனைநிற்க வேண்டும்'' என்றார். பகவானின் ஆணைப்படி, எல்லா தேவர்களும் யதுகுலத்தில் அவதரித் தனர்.

யதுகுலத்தின் அரசனாக இருந்தவர் சூரசேனன். இவரது புத்திரன் வசுதேவர். இவர் தேவகர் என்பவரின் மகளாகிய தேவகியை மணமுடித்தார். திருமணம் முடிந்த வுடன், மணமகளின் சகோதரனாகிய கம்சன், தன் தங்கையையும் அவளது கணவன் வசுதேவரையும் தேரில் அழைத்துச் சென்றான்.

மின்னல் வேகத்தில் குதிரைகள் பறந்துகொண்டி ருந்தன. அப்போது, வானம் அதிர்ந்தது. அங்கிருந்து அசரீரியாக ஒரு குரல் எழுந்தது. "போஜகுலத்தின் இளவரசனாகிய கம்சனே! நீ எமனுக்குத் தேரோட்டுகிறாய். உனது சகோதரியின் வயிற்றில் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தை உன் உயிருக்கு உலை வைக்கும்'' என்று எச்சரிக்கை செய்தது.

கம்சன் ஆவேசமானான். வாளை உருவி னான். புது மணப்பெண்ணைக் கொல்வதற்கு கம்சன் வாளுடன் பாய்ந்ததைக் கண்ட வசு தேவர் கம்சனைத் தடுத்தார். "மைத்துனரே!

அவளுக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை யால்தானே உமக்கு ஆபத்து? நான் அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உம்மிடம் ஒப்படைத்து விடுகிறேன்'' என்றுரைத்தார். கம்சனின் கோபம் தணிந்தது. ஆனாலும் அச்சமுற்ற கம்சன் தேவகியையும், வாசுதேவரையும் சிறையிலடைத்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக்கொண்டான். வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக மதுராவின் சிறையில் கிருஷ்ணர் பிறந்தார். குகைக்குள்ளிருந்து உறக்கம் நீங்கி நிமிர்ந்து முழங்கி வரும் சிம்மம்போல், பரமாத்மா தன் தாயின் கருவிலிருந்து இவ்வுலகில் அவதரித்தார். எம்பெருமானின் அவதார காலம் நெருங்கியபோது, வான்வெளியானது பகவானின் கரிய திருமேனியி-லிருந்து கிளம்பிய ஒளிக்கூட்டத்தை ஒத்த கரிய மேகங்களால் மறைக்கப்பட்டு, இருண்டு விளங்கியது. மழைநீரால் எல்லா திக்குகளும் நன்கு குளிர்ந்தன.

தேவிக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தை யையும் கம்சன் ஈவிரக்கமின்றி கொன்று வந்தான். தேவகி எட்டாவது முறையாக கர்ப்பமுற்றாள். அதேசமயம் வசுதேவரின் நண்பரும் ராஜாவுமான நந்தாவின் மனைவி யசோதாவும் கர்ப்பமுற்றாள். இந்நிலையில் ஆவணித் திங்கள் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று இரவு நேரத்தில் கிருஷ்ணர் அவதரித்தார். அதேசமயம் யசோதாவும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அப்போது சிறைக்குள் விஷ்ணு தோன்றி, "இக்குழந்தையை கோகுலத்திலுள்ள யசோதாவின் வீட்டில் கொண்டுசென்று சேர்த்துவிடு. அங்கு அவளுக் குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடு'' என்று வசுதேவருக்கு ஆணையிட்டார்.

வசுதேவரும் கிருஷ்ணரைக் கூடையில் சுமந்தபடி கொட்டும் மழையில் கோகுலத்தை நோக்கிச் சென்றார்.

வசுதேவர் குழந்தையை எடுத்துக்கொண்டு சிறையிலி-ருந்து வெளியேறவேண்டும். தாழிடப்பட்டிருந்த தடை களான கதவுகள் தானாய்த் திறந் தன. அதுவரை விழித்திருந்த காவலர்கள் சோர்ந்து மயங்கினர். v குழந்தைக் கண்ணனைக் கூடையில் வைத்து வசு தேவர் யமுனையைக் கடக்கும் போது, பெருமழை பிடித்துக் கொண்டது. அப்போது ஐந்துதலை நாகம் தன் படங்களைக் குடைபோல் விரித்து மழையினின்றும் குழந்தைக் கண்ணனைப் பாதுகாத்தது. கண்ணனின் திருவடி தன்மீத பட்டு சாபவிமோசனம் பெறவேண்டும் என்பதற்காக, காளிங்கனே அப்படிக் குடைபிடித்து வந்தான். வசுதேவர் கோகுலம் அடைந்து, அங்கு குழந்தை கண்ணனை வைத்துவிட்டு, பிறந் திருந்த பெண்குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து கண்ணனுக்கு பதிலாய் வைத்தார்.

அந்த பெண் குழந்தை வந்ததும், எட்டாவது குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்கு எட்டியது. உடனடியாக விரைந்து வந்த கம்சன், அந்த பெண் குழந்தையைக் கொல்ல முயன்றபோது, அது அவனது பிடியிலி-ருந்து விலகிச் சென்று காளித்தோற்றம் கொண்டு, "கம்சனே, உன்னை வதம்செய்வதற்கான எட்டாவது குழந்தை கிருஷ்ணன் பிறந்துவிட்டான்.

அவன் வேறொரு இடத்தில் வளர்ந்து உன்னைக் கொல்ல வருவான்" என்று கூறி மறைந்தது. இதையடுத்து தேவகியையும், வசுதேவரையும் கம்சன் விடுதலை செய்தான்.

அதே நேரத்தில் நந்தகோபருக்கும், யசோதாவுக்கும் ஆண் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு கிருஷ்ணர் என்று பெயரிட்டனர். அந்த தினத்தை கோகுலமே கொண்டாடியது. கோகுலம்வாழ் யாதவர்களின் தலைவர் நந்தகோபர்- அவரது மனைவி யசோதாவால் வளர்க்கப்பட்டார் கிருஷ்ணர். பின்னர் கோகுலம்வாழ் யாதவர்கள் பிருந்தாவனத் திற்கு இடம்பெயர்ந்தனர்.

குழலூதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய்த் திருடி குறும்புத் தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணர் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரைத் தாக்க கம்சனால் ஏவப்பட்ட கொடிய அசுரர்களையும் வதம்செய்தார்.

மேலும் இந்திரன் யாதவர்கள் வசித்த பகுதியை அழிக்கப் பெருமழையை உண்டாக்கிய போது, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து அவர்களைக் காப்பாற்றினார். யமுனை நதிக்கரையி-லிருந்த காளிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார். அக்ரூரரின் வேண்டுகோளின்படி, பலராமன் மற்றும் கிருஷ்ணர் மதுரா சென்று, தன் தாய்மாமன் கம்சனை அழித்து, மதுராபுரியைத் தனது தாய்வழித் தாத்தா உக்கிரசேனரிடம் ஒப்படைத்துவிட்டு, யதுகுல மக்களுடன், சௌராஷ்டிர தீபகற்பத்திலுள்ள கடற்கரை அருகே துவாரகை என்னும் புதிய நகரை உருவாக்கி வாழ்ந்தார் கிருஷ்ணர்.

இளவயதில் பிருந்தாவனத்தி-லிருந்த கோபிகைகளின் மனதில் இடம்பிடித்தார். அவர்களுள் ஒருத்தியான ராதையுடன் காதல்புரிந்து மணந்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ச்சுனனுடன் நட்புகொண்டார்.

பாண்டவர்களின் தாயான குந்தி, கிருஷ்ணரின் சொந்த அத்தையாவாள். அர்ச்சுன னின் சிறந்த நண்பர் கிருஷ்ணர். திரௌபதி கிருஷ்ணரின் பக்தையாவாள். வீமன் மற்றும் அர்ச்சுனன் ஆகியவர்களைக் கொண்டு ஜரா சந்தனைக் கொன்றார் கிருஷ்ணர்.

இந்திரப் பிரஸ்தத்தில், தருமன் நடத்திய ராஜசூய வேள்வி மண்டபத்தில், தன்னை அவமதித்த சிசுபாலனை தனது சக்கராயுதத்தால் வென்றார்.

துரியோதனின் சூதாட்ட மண்டபத்தில், தருமன் சூதாட்டத்தில் தன் தம்பியர்களையும் தன்னையும் திரௌபதியையும் இழந்து நிற்கையில், திரௌபதியின் துயிலை துச்சாதனன் நீக்கும்போது, கிருஷ்ணரை சரணாகதி அடைந்த திரௌபதியின் மானத்தைக் காத்தவர் கிருஷ்ணர்.

பதின்மூன்று ஆண்டுகால வனவாசம் முடித்த பாண்டவர்களுக்கு, சூதாட்டத்தில் இழந்த இந்திரப்பிரஸ்தம் நாட்டை மீண்டும் பாண்டவர்களுக்கே திரும்பத்தரவேண்டி கௌரவர்களிடம் கிருஷ்ணர் தூதுவனாக அத்தினாபுரம் சென்றார். குருக்ஷேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு பார்த்தசாரதியாக அமைந்தார். கர்ணனின் நாகாஸ்திரக் கணையிடமிருந்து அர்ச்சுனனைக் காத்தார். இறுதிப்போரில், சைகை காட்டி துரியோதனைக் கொல்வதற்கு வீமனுக்குத் துணைநின்றார்.

அஸ்வத்தாமன் ஏவிய பிரம்மாஸ்திரத்தி னால் கொல்லப்பட்ட உத்தரையின் கர்ப்பப் பையிலிருந்த குழந்தை பரீட்சித்துக்கு, கிருஷ்ணர் உயிர் கொடுத்தன்மூலம், பாண்டவர்களின் ஒரே வாரிசையும் காத்தருளினார்.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கு மிடையே நடந்த குருக்ஷேத்திரப் போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்துவிட்டு, தான் ஆயுதமேந்தாமல் அர்ச்சுனனின் தேரோட்டியாகப் பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும்முன் இவர் அர்ச் சுனுக்கு செய்த உபதேசமே பகவத் கீதை. கர்ம யோகம், ராஜ யோகம், ஞான யோகம் போன்ற யோக முறைகளையும் விளக்கி உலகோருக்கு உண்மையின் தெளிவு காட்டினார்.

மகாபாரத யுத்தத்திற்குப்பிறகு கிருஷ்ணர் துவாரகையில் மனைவியான ருக்மணி முதலியவர்களுடன் வாழ்ந்து யது குலத்தினரின் தலைவனாக விளங்கினார். கிருஷ்ண அவதார நோக்கம் முடிவடைந்த காரணத்தால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வைகுண்டத்திற்கு எழுந்தருளவேண்டும் என்ற தேவர்களின் வேண்டுதலுக்கேற்ப, கிருஷ்ணர் வைகுண்டம் புறப்படும்போது, அவரது பக்தரான உத்தவரின் வேண்டுதலுக்காக அவருக்கு ஆத்ம உபதேசம் செய்தார். அதுவே உத்தவகீதையானது.

தான் முழுமுதற்பொருளின் அவதார மென்று வெளிப்படையாக அறிவித்த அவதாரம் கிருஷ்ணாவதாரம் ஒன்றுதான். நல்லவரின் சேர்க்கையால் வரும் சத்சங்கமும், பக்தியால் வரும் சரணாகதியுமே வாழ்க்கை யில் வெற்றியைத்தரும் என்பதே கிருஷ்ணா வதாரத்தின் தத்துவம்.

(முற்றும்)

om010721
இதையும் படியுங்கள்
Subscribe