கண்ணன் திருவமுது 13 உத்தவ கீதை!

/idhalgal/om/kannan-thiruvamudu-13-uttava-gita

மிதிலை மன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி, "ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதே பாகவத தர்மம்' என்றுரைத்தார். திருமால் எடுத்த, ராமாவதாரத்தை விளக்கியபின் பலராமர் அவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார்.

உற்ற துணையால் பெற்ற பேறு

(பலராமர் அவதாரம்)

திருமாலின் அவதார வரிசை பற்றிய சந்தேகம் நாரதருக்கு ஏற்பட்டது.

அப்போது திருமால் கிருஷ்ணா வதாரத்தில் இருந்தார். நேராக அவரிடம் சென்ற நாரதர், "இறைவா! இந்த கிருஷ்ணாவதாரம் உங்களுடைய எத்தனையாவது அவதாரம்?'' என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர், "இது என்னுடைய ஒன்பதாவது அவதாரம்'' என்று பதிலளித்தார்.

"அப்படியானால்

எட்டாவது அவதாரம் எது?'' என்ற நாரதரின் கேள்விக்கு, "இப்பிறவியில் எனக்கு அண்ணனாகப் பிறந்துள்ள பலராமன் தான் என்னுடைய எட்டாவது அவதாரம்'' என்றார்.

குழப்பமடைந்த நாரதர், "எப்படி பெருமாளே! தங்களின் படுக்கையாக இருக்கிற ஆதிஷேசன் என்ற நாகம்தானே பலராமனா கப் பிறந்துள்ளது?

அப்படியிருக்க, பலராமன் எப்படி தங்களது அவதாரமாக வரமுடியும்?'' என்று கேட்டார்.

"நாரதரே, எனது ராமாவதாரத்தில் எனக்கு இளைய சகோதரனாகப் பிறந்து சதாசர்வகாலமும் எனக்குப் பணிவிடை செய்த லட்சுமணனுக்கு நான் நன்றிக்கடன் ஆற்றவில்லை. ஒரேமுறை என் காலில் விழுந்து என் பாதுகையை வாங்கிய பரதனுக்குக் கிடைத்தது பதினான்கு வருட அரசயோகம். ஒரேமுறை என் காலில் பட்டதன் விளைவு, கல்லாய் இருந்த அகலிகையின் சாபம் நீங்கியது. சபரி கா-ல் விழுந்ததால் மோட்சம் தந்தேன் படகோட்டி குகன் பாதபூஜை செய்தான்; எனது சகோதரன் ஆனான்.

ஆனால் எனக்கு சேவை செய்த லட்சுமணன் எந்த பலனையும் அடையவில்லை.

அதனால் எனக்கொரு யோசனை தோன்றியது.

அதனால் எனக்கொரு யோசனை தோன்றியது. ஆதிசேஷன்மூலமாக எனது அண்ணனாக அவனைப் படைத்து, அவனுக்கு இளைய சகோதரனாக அவதரித்து எனது நன்றிக் கடனைத் தீர்த்துக்கொள்வதோடு, எனது அவதாரத்தில் ஒரு பங்கையும் அவனுக்குத் தந்துள்ளேன்'' என்றார் பரந்தாமன்.

k

பனைக்கொடியையும், கலப்பையை ஆயதமாகவும்கொண்ட பலராமர் கிருஷ்ணரின் சகோதரர். கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றில் உதித்தவர். அவருக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து ராமன் என்று பெயரிட்டார். ராமன் என்றால் ஷமிக்கச்செய்பவன். தவிர இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் பலராமன் எனப் பெயரிட்டு அழைத்தனர். ஆயர்பாடியில் கிருஷ்ணரும் பலராமரும் நடத்திய திருவிளையாடல்கள் சொல்-ல் அடங்காதவை. ஆயர்பாடி மாளிகையில் கண்ணன் தனது அண்ணன் பலராமருடன் ஆடிப்பாடி வளர்ந்தார். பசுக்களை மேய்த்துக்கொண்டு கோபியர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

கோவர்த்தனகிரியில் இவர்கள் மாடு மேய்க்கும் காலத்தில், மனித மாமிசத்தை உண்ணும் வழக்கம்கொண்ட கழுதை வடிவிலான தேனுகன் என்பவனையும், வில்வ மரத்தடியின்கீழ் வில்வப்பழத்தால் பந்தாடிய காலத்தில் பிரலம்பன் என்பவனையும் சகோதரர்கள் இருவரும் சேர்ந்தே அழித்தனர்.

நரகாசுரனின் தம்பியான மயிந்தன் தன் அண்ணனின் மரணத்திற்குப் பழிவாங்க கண்ணனைத்தேடி கோவர்த்தனகிரி வந்தான். பலராமரை கண்ணன் என்றெண்ணி, அவரது உடைகளைக் கிழித்தெறிந்து வம்புக்கிழுத்தான் மயிந்தன். மரங்களை வேரோடு பிடுங்கி அங்கிருந்த கோபியர்கள்மீது வீசினான். இதைக்கண்ட பலராமர் கோபங்கொண்டு மயிந்தனோடு சண்டைக்குச் சென்றார். தன் கைமுட்டியால் மயிந்தன் தலையில் ஓங்கி அடிக்க, ரத்தம் சிந்தி மயிந்தன் விழுந்து இறந்தான். முதல் அசுரவதம் நிகழ்ந்தது.

துரியோதனனுக்கு லட்சுமளை என்ற பெண் இருந்தாள். அவளுக்குத் திருமணம் செய்ய சுயம்வரம் ஏற்பாடு செய்தான் துரியோதனன்.

சுயம்வரத்திற்கு வந்த சாம்பன் லட்சுமளையைத் தூக்கிச்சென்றான். கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த மகன்தான் சாம்பன். தன் மகளை சாம்பன் தூக்கிச் சென்றதும் துரியோதனன் தன் படையோடு வந்து சாம்பனுடன் பேரிட்டான். அவர்களை எதிர்த்து நின்றான் சாம்பன். இருப்பினும் அந்தப் படையில் பலம் வாய்ந்த பீஷ்மரும், துரோணரும் இருந்ததால் சாம்பன் சிறைப்படுத்தப்பட்டான். இதுபற்றி அறிந்ததும் பலராமர் அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தார்.

"துரியோதனா! நீ செய்ததில் நியாயமில்லை. தனி ஒருவனாக போராடிய சாம்பனை, படையோடு சென்று சிறைப்படுத்தியிருக்கிறாய். ஏன் எப்பொழுதும் எங்களோடு பகைமை பாராட்டிக்கொண்டே இருக்கிறாய்? சாம்பனை விடுவித்து, உன்னுடைய மகளை அவனுக்குத் திருமணம் செய்து கொடு'' என்றார். ஆனால் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாத துரியோதனன், பலராமரையும் அவர் குலத்தையும் இழிவாகப் பேசினான்.

அதனால் பலராமருக்குக் கோபம் பீறிட்டது.

"உங்களோடு சண்டைபோட்டு ஜெயிக்க வேண்டுமென்ற அவசியமே எனக்கில்லை. கணப்பொழுதில் உங்களைக் கூண்டோடு அழித்துவிடுவேன்'' என்று கூறி, தன் ஆயுதமான கலப்பையை எடுத்து தரையில் அடித்தார். அதனால் அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் கண்டது. கங்கை நதியில் அந்த நகரமே மூழ்கிப்போகுமோ என்ற பயம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. உடனே துரியோதனன், பலராமரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அத்துடன் லட்சுமளையை சாம்பனுக்கு மணம் முடித்துக்கொடுக்கவும் சம்மதித்தான். அதன்பிறகு தன் கலப்பையை மீண்டும் தரையில் மோதி, ஆட்டம் கண்டு நிலைகுலைந்த அஸ்தினாபுரத்தை முன்னிருந்தவாறு பலராமர் கொண்டுவந்து நிலைப்படுத்தினார்.

வைவஸ்வத மன்வந்தரத்தின் முதல்யுகமான கிருதயுகத்தில், மனுவின் வழிவந்த அரசர் ககுத்மி தன் மகள் ரேவதிக்கு மணம் முடிப்பதில் ஒரு விசித்திரமான முறையைக் கையாண்டார். பூவுலகத்தில் உள்ள எவர் சொல்லையும் கேட்பதில்லை என்று தீர்மானித்தார். எல்லாரையும் படைக்கும் எல்லாமறிந்த பிரம்மனையே கேட்டுத் தெளிவடைவதென்று பிரம்மலோகத்திற்கே சென்றார். போகும்போது தன் பெண் ரேவதியையும் அழைத்துச்சென்றார்.

பிரம்மலோகத்துக்குச் சென்றவர்

அங்கு ஓரு நாழிகை காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அது முடிந்தவுடன் ககுத்மி பிரம்மாவை சந்தித்து, "என் மகளுக்கு சரியான மணவாளன் யார்?'' என்ற தன் கேள்வியைக் கேட்ட தும் பிரம்மா, "நீங்கள் இங்கு வந்து காத்திருந்த ஒரு நாழிகையில், பூவுலகில் உமக்குத் தெரிந்த யாவரும், அவர்களுடைய சந்ததிகளும் காலமாகிவிட்டனர். உங்கள் மனதிலுள்ள யாரும் இப்பொழுது அங்கில்லை. நீர் இங்கு வந்தபிறகு அங்கு இருபத்தியேழு மகாயுகங்கள் முடிந்துவிட்டன. இப்பொழுதுள்ள மகாயுகத்தில் இறைவன் கண்ணன், பலராமன் என்ற இரு சகோதரர்களாக அவதரித்து லீலைகள் புரிந்துகொண்டிருக்கின்றான். நீர் திரும்பிப்போய் உங்கள் பெண்ணை கண்ணனின் மூத்த சகோதரனாகிய பலராமனுக்கு மணமுடியுங்கள்'' என்றார். ககுத்மியும் அப்படியே செய்தார்.

யாதவ குலத்தின் அழிவுக்குக் காரண மான போரில் பலராமர் பங்கேற்ற பிறகு, அவர் ஒரு தியான நிலையில் அமர்ந்து விட்டார். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வுக்கு உற்றதுணையாக இருந்தவர்களை உன்னத மாக நினைக்கவேண்டும்; மதிக்கவேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரமே பலராமர் அவதாரமாகும்.

= பலராமர் ஆதிசேடனின் அம்சம். பாற்கட-ல் இறைவன் மகாவிஷ்ணுவை சுமந்துகொண்டிருக்கும் அந்த ஆதிசேஷனே கிருஷ்ணாவதாரத்தின்போது கண்ணனின் அண்ணனாகிய பலராமராக அவதரித்தார். பலராம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இவர் திருவோண பூர்ணிமாவில், திருவோண நட்சத்திரத்தில் பிறந்தார்.

= பலராமர் வேளாண்மை மற்றும் வ-மையின் கடவுள் என்று குறிக்கப்படுகி றார். வேளாண் கருவிகள் மற்றும் செழிப்பு பற்றிய அறிவின் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.

= தென்னிந்தியாவில் சித்திரை மாதம், வளர்பிறை திரிதியை திதி (அட்சய திரிதியை) அன்றும், வட இந்தியாவில் ஆவணி மாதம், பௌர்ணமி, சிராவண நட்சத்திரத்தி லும் பலராம ஜெயந்தி கொண்டாடப் படுகிறது.

பலராமரை வழிபடும் கோவில்கள்

= ஆலுவ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோயில்- கேரளா.

= நென்மினி பலராமர் கோயில்- கேரளா.

= மஜூர் பலராமர் கோயில்- கேரளா.

= பூரி ஜெகன்னாத் கோயில்- ஒடிசா.

= ரெவ்டி பாலதேவிஜி ஆலயம், ஜெடல்பூர், குஜராத்.

= ஸ்ரீ தௌஜி ஆலயம், வில்- பஞ்சாரி, ஹரியானா.

= ஸ்ரீ தௌஜி ஆலயம், மைனிபுரி. (உ.பி.).

= ஸ்ரீ ஸ்ரீ பாலாதேவ் ஜியு கோபால் ஜியு கோவில், பெ-கட்டா, கொல்கத்தா.

ஒருசமயம் அஷ்டமி, நவமி திதிகளின் தேவதைகள் கவலையில் ஆழ்ந்திருந்தன. பதினாறு திதிகளில் தங்களை மட்டுமே விலக்கிவைத்து, எந்தக் காரியத்துக்கும் தங்களை எவரும் தேர்ந்தெடுக்காமலிருந்த ஏக்கம் அவற்றைப் பீடித்திருந்தது. எனவே அவை பெருமாளிடமே சென்று முறையிட்டன. திதிகளின் ஏக்கம் தீர்க்க எண்ணிய தீனதயாளன், "இனி வரும் எனது இரு அவதாரங்களும் நவமியிலும் அஷ்டமியிலுமே நிகழும். அதனால் உங்கள் இருவரையும் மக்கள் போற்றித் துதித்து மகிழ்வார்கள்'' என்று வரமளித்தார். அதனால் தான் ராமாவதாரம் நவமியிலும், கிருஷ்ணாவதாரம் அஷ்டமியிலும் நிகழ்ந்தன.

(அமுதம் பெருகும்)

om010521
இதையும் படியுங்கள்
Subscribe