Advertisment

கஜாரூடராக காட்சி தந்த கந்தவேலன்! - பழங்காமூர் மோ.கணேஷ்

/idhalgal/om/kandavelan-who-appeared-kajarudar-palangamur-mo-ganesh

குன்றுகள் என்றாலே குதூகலம்தான் குகனுக்கு. அந்த குன்றுகளில் குமரன் புரிந்த விளையாடல்களோ ஏராளம். அதிலும் கந்தன் வள்ளியை மணம் முடித்த தணிகாசலமும், அதையொட்டி வள்ளி கல்யாணத்திற்கு தொடர்புடைய திருத்தலங்களும் எண்ணற்றவை.

Advertisment

அதுபோல திருத்தணியைச் சுற்றிலும் ஆறுமுகனின் பாதம் பதிந்த மலைகளும் சற்று கூடுதல்தான். அப்படி மால்மருகனின் பாதம் பதிந்த அற்புத மறைத்தலம்தான் நெடியம்.

நெடிதுயர்ந்து காணப்படுவதால் இம்மலை நெடியம் என்றானது. யானை படுத்திருப்பது போன்ற தோற்றத்திலுள்ள இந்த மலை யானைமலை என்றும், கஜகிரி என்றும் போற்றப்படுகிறது.

"நிலைபெறுந் திருத்தணியில் விளங்கு சித்திர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே'' என அருணகிரிநாதர் தனது திருத்தணிகைத் திருப்புகழில் இந்நெடிய மலையையும் இணைத்துப் பாடியுள்ளது சிறப்பு.

Advertisment

ss

குறவர் கூட்டத்தாரிடமிருந்து சமர்புரிந்து (போர்புரிந்து) வள்ளியைக் கவர்ந்து

குன்றுகள் என்றாலே குதூகலம்தான் குகனுக்கு. அந்த குன்றுகளில் குமரன் புரிந்த விளையாடல்களோ ஏராளம். அதிலும் கந்தன் வள்ளியை மணம் முடித்த தணிகாசலமும், அதையொட்டி வள்ளி கல்யாணத்திற்கு தொடர்புடைய திருத்தலங்களும் எண்ணற்றவை.

Advertisment

அதுபோல திருத்தணியைச் சுற்றிலும் ஆறுமுகனின் பாதம் பதிந்த மலைகளும் சற்று கூடுதல்தான். அப்படி மால்மருகனின் பாதம் பதிந்த அற்புத மறைத்தலம்தான் நெடியம்.

நெடிதுயர்ந்து காணப்படுவதால் இம்மலை நெடியம் என்றானது. யானை படுத்திருப்பது போன்ற தோற்றத்திலுள்ள இந்த மலை யானைமலை என்றும், கஜகிரி என்றும் போற்றப்படுகிறது.

"நிலைபெறுந் திருத்தணியில் விளங்கு சித்திர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே'' என அருணகிரிநாதர் தனது திருத்தணிகைத் திருப்புகழில் இந்நெடிய மலையையும் இணைத்துப் பாடியுள்ளது சிறப்பு.

Advertisment

ss

குறவர் கூட்டத்தாரிடமிருந்து சமர்புரிந்து (போர்புரிந்து) வள்ளியைக் கவர்ந்து வந்த கந்தன், போர்புரிந்த சினமடங்காமல் இந்த நெடிய மலையின்மீது கால் ஊன்றுகின்றார். வேலவனது சினம் தாங்காத நெடியமலை பிளவுற்று சற்று கீழிறங்கியது. பின், தணிகை மலையில் கால்பதித்த குமரன், சினம் தணிந்து, வள்ளி கரம்பிடிக்கிறார்.

குமரனின் பாதம் பதிந்த மகிமையினையறிந்த இந்திரன்... இம்மலைக்கு வந்து, கந்தனை பிரதிஷ்டை செய்து, கல்ஹார புஷ்பத்தினால் பூஜிக்கிறார். மகிழ்ந்த கார்த்திகேயன் காட்சி தந்தருள்கிறார். முருகனின் திவ்விய திருக்காட்சி கண்ட தேவர்கோன் தனது ஐராவத யானையை கந்தனுக்கு பரிசளிக்கிறார். இதை ஏற்ற கந்தன் மீண்டும் யானைமீது அமர்ந்தபடி மேற்கு முகமாக திருக்காட்சி அளிக்கிறார்.

இதனால் கந்தனுக்கு "கஜாரூடர்' என்கிற பெயர் உண்டானது. கந்தனது அற்புதத் திருக்கோலங்களில் இதுவும் ஒன்றாகும்.

யானையைப் பரிசு தந்த தேவேந்திரன் தனது ஐராவதமின்றி கலையிழந்த நிலையில் தேவலோகம் செல்ல... ஐராவதம் இல்லாத தேவர் உலகமும் கலையிழந்து காணப்பட்டது. இதனால் ஏனைய தேவர்களின் ஏச்சுக்கும் ஆளாகின்றான் இந்திரன்.

இந்நிலையை தேவேந்திரன் தேவ சேனாபதிக்கு எடுத்துரைக்க......வள்ளிமணாளன் மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசையான இந்திர திசைக்கு ஐராவதத்தை திருப்புகிறார். கந்தனின் கருணையாலும், தெய்வீக ஒளியாலும் இந்திரனும், இந்திர உலகமும் ஒளி பெற்றதாக இத்தலத்தில் நடந்த சம்பவங்களை தணிகாசல புராணம் விரிவாக விவரிக்கின்றது.

திருத்தணி, இளையனார் வேலூர், செய்யூர் மற்றும் திருமாகறல் போன்ற தலங்களில் ஐராவத கஜாரூட கோலத்தில் தரிசிக்கலாம். பல திருத்தலங்களில் முருகனுக்கு யானை வாகனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 600 படிகள்கொண்ட மலைமீது தனிக் கோவில் கொண்டுள்ளார் கந்தன். கார்வேட்டு மகாராஜாவால் கட்டப்பெற்ற ஆலயம் அழகுற அமைந்துள்ளது. இந்திரன் இத்தல முருகனை செங்கலுவ (தெலுங்கில்) என்னும் நீலோற்பல மலரால் பூஜித்ததால் "செங்கல்வராயர்' என்கிற திருப்பெயருடன் திகழ்கின்றார். இங்கு மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் முருகன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டுள்ளார். இடது கரத்தை இடுப்பில் மடித்தபடி கடியஸ்தராக திருக்காட்சி தருகின்றார். வள்ளி மற்றும் தெய்வானையுடன் உள்ளனர்.

வள்ளி, தெய்வானையுடனான ஷண்முகர், ஸ்ரீ பாலசுப்பிரமணியர், கணபதி, காலபைரவர், திருபுரசுந்தரி உடனுறை திருக்குமாரேஸ்வரர், ஸுமித்ரேஸ்வரர், சண்டிகேஸ்வரர், சூரியன், திருமால், மகாலட்சுமி, கருடாழ்வார் ஆகிய தெய்வங்களும் ஆலயத்தின் பரிவாரங்களாக அமைந்துள்ளன.

dd

கிருத்திகையில் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்விக்கப்படுகின்றன. ஆடிக் கிருத்திகையில் காவடி எடுத்துக்கொண்டு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆங்கில வருடப் பிறப்பன்று கந்தன் சந்தனக் காப்பில் கண்கொள்ளாத காட்சியளிப்பார்.

ஆலயத்தில் விஜய நகர மன்னர் களின் கல்வெட்டுகள் பெருமளவில் காணப் படுகின்றன. இந்திரன் கண்ட சுனை நீலோற்பல தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது. இதுவே இத்தலத்தின் தீர்த்தமாகத் திகழ்கிறது. மேலும் இரண்டு சுனைகளும் இங்குள்ளன.

தினமும் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை மட்டுமே ஆலயம் திறந் திருக்கும். கிருத்திகையில் சற்று கூடுதலாக திறந்திருக்கும். தினமும் ஒருகால பூஜை நடைபெறும் இவ்வாலயம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

திருத்தணியை தரிசிக்கும் முன்னர் இந்த நெடியமலையிலுள்ள செங்கல்வராயரை தரிசிப்பது சிறப்பிலும் சிறப்பாகும்.

கல்வித்துறை சார்ந்தவர்களும், வாகனத் துறையில் இருப்பவர்களும் வழிபட வேண்டிய சிறந்த தலமாக இந்த நெடிய மலை திகழ்கின்றது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப் பட்டிலிருந்து 7 கிலோமீட்டர் தொலை வில் நகரி செல்லும் பேருந்து மார்க்கத்தில் கரீம்பேட்டிற்கு அடுத்ததாக அமைந் துள்ளது நெடியம்.

ஆலயத் தொடர்புக்கு: சிவஸ்ரீ ஷண்முக குருக்கள், 97513 98456

om010623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe