Advertisment

உழைக்கும் மக்களை உயர்த்தும் கனகலிங்கேஸ்வரர்! - எஸ்.பி.சேகர்

/idhalgal/om/kanakalingeswarar-who-uplifts-working-people

ழைபெய்து வெள்ளம் பெருகி, நதிகள் நிரம்பியோடி நிலங்களில் பாய்ந்து மக்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்கிறது. அதேபோல் கோடையில் ஏரி, குளங்கள் வற்றி வறண்டு, பிறகு மீண்டும் மழைபெய்து பசுமையடைகின்றன. இலையுதிர் காலத்தில் மரங்களிலுள்ள இலைகள் உதிர்ந்து மீண்டும் தளிர்விடுகின்றன. இது இயற்கையின் நியதி மட்டுமல்ல; இறைவனின் நியதி. இறைவனின் படைப்பில் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருப் பவை. மலை மட்டும் நிரந்தரமானதென்று கூறுவார்கள். ஆனால் அதுவும் வளர்வதாகவும் அழிவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Advertisment

இப்படிதான் மனிதர்களைப் படைத்த இறைவன், அவர்களுக்கு நிரந்தரமாக இன்பத்தைக் கொடுப்பதுமில்லை; துன்பத்தையும் கொடுப்பதில்லை. முதலில் வரவென்றால் அடுத்து செலவு. முதலில் வறுமையென்றால் பிறகு செல்வம். முதலில் இன்பமென்றால் பிறகு துன்பம். இப்படி இறைவனின் தராசின் இரண்டு தட்டுகளும் ஏறி இறங்கியபடியே உள்ளன. எல்லா செல்வங்களையும் மனிதர்களுக்கு இறைவன் முழுமையாக வழங்குவதில்லை. பசியெடுக்கும் போது பல மனிதர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. பிறகு உணவிருந்தும் பசிக்கும்போது ருசித்து சாப்பிடமுடியாத அளவுக்கு நோய் அவர்களைத் தடுக்கிறது. கட்டுக்கட்டாகப் பணம் சேர்த்து, பல்லாயிரம் வேலிக்கு சொந்தக்காரரான மிட்டாமிராசுதாரர்கள் சர்க்கரை நோயினால் அரிசி சோறு சாப்பிடமுடியாத நிலை ஏற்படுகிறது.

dd

இறைவனை மறந்து, "எல்லாம் என் செயல், என் திறமை' என்ற "நான்' என்னும் அகம்பாவம் மனித எண்ணங்களில் ஊறி ஆட்டிப்படைக்கிறது. அதனால் மனிதர்கள் போடும் ஆட்டம் ஏராளம். அப்படிப்பட்டவர்களின் ஆட்டத்தை நீடிக்க விடமாட்டான் இறைவன்.

Advertisment

இந்த காலத்தில் தவறு செய்வதற்கு பலரும் பயப்படுவதில்லை. குற்றங்கள் குறையவேண்டு மானால் மனித இனத்திற்கு கடவுளும் கல்வியும் அவசியம் தேவை. கல்வியைக் கற்கவேண்டும்; கடவுளை வணங்கவேண்டும்.

கூட்டில் அடைந்திருக்கும் குருவிபோன்ற பறவை யினங்கள், காலையில் வெறும் வயிற்றுடன்தான் இரைதேடிச் செல்கின்றன. மாலையில் வயிறு நிரம்பி கூட்டுக்குத் திரும்புகின்றன. கூட்டுக்குள்ளேயே இருந்திருந்தால் அதற்கு உணவு கிடைக்குமா? இதைப்போலவேதான் மனிதனும் முயற்சி செய்யவேண்டும். அதற்கான வழிகளைத்தேடி ஓடவேண்டும். அதற்குரிய பலனை இறைவன் நிச்சயம் வழங்குவார். இறை நம்பிக்கையுள்ள மனிதன் கெடுவதில்லை; நினைத்தது நிறைவேறும் என்பதற்கு இதோ ஒரு சம்பவம்... ஒரு ஆசிரமத்தில் துறவி ஒருவர் இருந்தார்.

அவருக்கு உறுதுணையாக சில சீடர்களும் இருந்தனர்.

அந்தத் துறவி தன் மடத்தின் வழியாகச் செல்லும் ஏழை எளிய மக்களுக்கு தினசரி உணவளித்து வந்தார். அதற்காக அவர் யா

அந்தத் துறவி தன் மடத்தின் வழியாகச் செல்லும் ஏழை எளிய மக்களுக்கு தினசரி உணவளித்து வந்தார். அதற்காக அவர் யாரிடமும் கையேந்தி உதவி கேட்பதில்லை. விரும்பிக் கொடுப்பவர்களின் உதவியை மறுப்பதுமில்லை. அதுபோல் ஒருநாள் ஏழை மக்களுக்கு விருந்து தருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு சீடர்களிடம் கூறினார். மக்கள் நல்ல விருந்து சாப்பிடப் போகிறோம் என்னும் எண்ணத்தோடு அந்த ஆசிரமத்தில் குவிந்தனர்.

சீடர்கள் துறவியிடம் ஓடினார்கள். "குருவே, உணவு தயாரிக்க எந்தப் பொருளுமே மடத்தில் இல்லை. இந்த நிலையில் இவர்களுக்கு விருந்து தருவதாகக் கூறிவிட்டீர்கள். எப்படி உணவு கொடுக்கமுடியும்?'' என்று கேட்டனர். அப்போது அந்த ஞானி, "சீடர்களே, கவலைவேண்டாம். இவர்களுக்கு உணவளிப்பது இறைவனின் பொறுப்பு. அவர்கள் எல்லாரையும் அமரச் சொல்லுங்கள்'' என்று கூறிவிட்டு, அமைதியாக இறைவனை வேண்டிப் பிரார்த்தனை செய்தார். அவரது சீடர்கள் என்ன நடக்கப்போகிறதென்ற திகைப்புடன், விருந்துக்கு வந்த மக்கள் அனைவரையும் வரிசையாக அமர வைத்து இலைபோட்டு குவளைகளில் தண்ணீர் வைத்தனர்.

அப்போது அந்த மடத்திற்கு முன்பாக ஒரு வாகனம் வந்துநின்றது. அந்த வாகனத்தை ஓட்டிவந்த மனிதர் ஞானியிடம் சென்று, "ஐயா, எங்கள் முதலாளி இங்குள்ள வர்கள் சாப்பிடுமளவுக்கு உணவுகளைக் கொடுத்தனுப்பியுள்ளார். இதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்'' என்று பணிவோடு கேட்டார்.

dd

அப்போது ஞானி, "நான் உங்கள் முதலாளியிடம் உணவு தயாரித்து அனுப்பும்படி கேட்கவில்லையே. இது எப்படி நிகழ்ந்தது?'' என்று கேட்க, "எங்கள் முதலாளி தனது நண்பர்கள், உறவினர்களுக்கு பெரிய அளவில் சிறப் பாக விருந்து வைப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். என்ன காரணத்தினாலோ தெரியவில்லை- அந்த விருந்து வைபவம் தடைப்பட்டு நின்றுபோனது. அப்போது எங்கள் முதலாளிக்கு தாங்கள் மடத்தில் ஏழை மக்களுக்கு விருந்தளிக்கும் தகவல் தெரிந்து, உடனே அந்த உணவுகள் அனைத் தையும் வாகனத்தில் ஏற்றி உங்களிடம் கொண்டு சேர்க்குமாறு அனுப்பிவைத்தார்'' என்று கூற, அதைக்கேட்ட சீடர்கள் இறைவனின் கருணையையும், தங்கள் குருவின் இறைநம்பிக்கையும் எண்ணி வியந்தனர்.

அப்போது ஞானி, "எல்லாருக்கும் பெரிய முதலாளியான கடவுளின் உத்தரவால் இந்த உணவு இங்குவந்து சேர்ந்துள்ளது. எனவே அனைவரும் பசியாற உணவளித்த இறைவனுக்கு நன்றி சொல்லி விருந்தைப் பரிமாறுங்கள்'' என்று கூறினார். அதன்படி விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

இப்படி எந்த செயலையும் இறைவனை முழுமையாக நம்பி ஒப்படைப்பவர்களுக்கு நல்ல காரியங்கள் எந்த ரூபத்திலாவது நிச்சயம் நடந்தே தீரும். அதற்கு உதாரணமாக, ஒரு குக்கிராமத்தில் தடைப்பட்டுக் கிடந்த ஆலயப் பணியை இறைவனிடம் ஒப்படைத்ததால், பணிகள் நிறைவடைந்து இறைவன் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் கிராமத்து மக்கள் ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். அந்த எளிமையான ஊரையும், பக்திநெறியோடு உருவாக்கிய ஆலயத்தையும் சென்று தரிசிப்பதோடு, அவர்களின் இறையனுபவங்களையும் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன்பு இப்பகுதியில் பல கிராம மக்கள் வாழ்ந்துவந்துள்ளனர். தற்போது அப்பகுதி நீர்ப்பிடிப்பு ஏரியாக உள்ளது. அங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இருந்தும் பூர்வீக குடிமக்கள் ஏரிக்கரையின் மேற்குப்பகுதியில், கனகம் பாடி என்னும் ஊரில் வசித்துவருகிறார் கள். மிகப்பெரிய அந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ளது. ஆங்கிலேயே அதிகாரியாக விளங்கிய வெலிங் டன் பிரபு என்பவர் 1918-ஆம் ஆண்டு வாக்கில், பல ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பைக்கொண்டு இந்த ஏரியை உருவாக்கி னார்.

dd

நூறு ஆண்டுகள் பழமையான இந்த ஏரியில் தற்போது மழைபெய்து நீர் நிரம்பி, பலவிதமான மீன்கள் துள்ளி விளையாடும் காட்சி பார்ப்பவர் மனதை சந்தோஷப்படுத்துகிறது. அதேபோல் வண்ண வண்ணப் பறவையினங்கள் ஏராளமாக உள்ளன. அதிலும் வெளிநாட்டுப் பறவைகளும் இங்கு வந்துசெல்கின்றன. கோடைகாலங்களில் ஏரிநீர் வற்றும்போது ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறிவிடும். இப்பகுதியில் வாழும் மக்கள் வேர்க்கடலை, சோளம், கம்பு, கேழ்வரகு, கொத்தமல்லி, பருத்தி, நெல், கரும்பு, மரவள்ளி போன்றவற்றைப் பயிர்செய்து வாழ்ந்துவருகிறார்கள். இப்படி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில்தான் கற்பகாம்பாள் சமேத கனகலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

ஊர்மக்களின் உதவியோடு ஆலயத்தைப் பெருமுயற்சியெடுத்து உருவாக்கியவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் வீரபாண்டியன், ஆலயம் அமைந்தவிதம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"எங்கள் ஊரில் ஏற்கெனவே சிவாலயம் ஒன்று இருந்துள்ளது. அது காலப்போக்கில் சிதைந்து, சிலைகள் மண்ணில் மறைந்தும் மறையாமலும் கிடந்துள்ளன. சில ஆண்டுகளுக்குமுன்பு எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் சம்பாதிப்பதற்காக துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்றனர்.

அப்படி சிங்கப்பூருக்கு சென்ற ஒருவர், அவருடன் அங்கு தங்கியிருந்த ரகுபதி அம்சப் பிரியா என்ற சிவனடியாரை எங்கள் ஊருக்கு அழைத்துவந்திருந்தார். இரவு ரகுபதி அவர்கள் அயர்ந்து தூங்கும்போது திடுக்கிட்டு எழுந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல்கேட்டு என்ன ஏது என்று அவரிடம் கேட்டபோது, "நான் ஒரு கனவுகண்டேன். ஒரு காளை மாடு என்னைத் துரத்துகிறது. இந்த ஊரில் சிவன் ஆலயம் இருந்ததா?'' என்று கேட்டுள்ளார். "ஆம்; இருந்து சிதைந்து போயுள்ளது'' என்று கூறியுள்ளனர். "நீங்கள் அதே இடத்தில் மீண்டும் ஒரு சிவாலயம் எழுப்பவேண்டும். இதனால் ஊர்மக்கள் இன்னும் செழிப்போடு வாழ்வார்கள்'' என்று கூறியதோடு, ஆலயம் எழுப்ப சிறிய அளவில் நிதியுதவியும் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்திற்குப்பிறகு பூமியில் கிடந்த சிலைகளை வைத்து நிச்சயம் ஆலயம் எழுப்பியே தீரவேண்டுமென்று பெருமுயற்சிசெய்து, 2011-ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் ஆலயப்பணி காலதாமதமாகிக் கொண்டே போனது. பல தடை கள் ஏற்பட்டன. ஒருமுறை புதுக் கோட்டை பகுதியைச் சேர்ந்த, எங்களுக்கு அறிமுகமான பேனா சித்தர் என்ற சிவனடியாரை ஊருக்கு அழைத்துவந்தோம். அவர் கூறிய ஆலோசனைப்படிப் மீண்டும் திருப்பணி வேலைகள் துவக்கப்பட்டன. துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலைசெய்துவரும் எங்கள் ஊரைச் சேர்ந்த நண்பர்கள் பலர் பண உதவி செய்ய முன்வந்தனர். அதேபோல் எங்களுக்குத் தெரிந்த முக்கிய பிரமுகர் கள் பலரும் உதவிசெய்தனர்.

திருப்பணி வேலைகள் முழுமை டையும் நிலையில், உற்சவர் சிலைகள் வாங்குவதற்காக கும்பகோணத்திற்குச் சென்று அம்பாள், சிவன் சிலை களை மூன்று லட்சம் செலவில் வாங்கிவிட்டோம். "சாமி ஊர்வலம் செல்லும்போது முன்பாக செல்ல சண்டிகேஸ்வரர் சிலை வேண்டும்; இது ஐதீகம்' என்றனர். நாங்கள் சிலை வாங்கிய அதே வியாபாரியிடம் கேட்டபோது அவர் விலை அதிகமாகக் கூறினார். எங்களிடம் அவ்வளவு பணமில்லை. "சரி; பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று, கும்பகோணத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் திரும்பி வந்துகொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கு கார் ஓட்டிவந்த டிரைவர், "எனக்குத் தெரிந்த ஒரு சிலை வியாபாரியிடம் கேட்டுப் பார்க்க லாம்' என்று கூறி, அவருக்குத் தனது செல்போன்மூலம் தொடர்பு கொண்டார்.

அவர் தன்னிடம் சண்டிகேஸ்வரர் சிலை உள்ளது என்று கூறினார். உடனே மீண்டும் கும்பகோணம் திரும்பிச்சென்று அந்த வியாபாரியை சந்தித்தோம். அவர் அந்த சிலையின் விலை 25,000 என்று கூறினார். எங்களிடம் இருந்ததோ 20,000 ரூபாய்தான். "நாங்கள் கிராம மக்களின் உதவியோடு கடும் சிரமத்திற்கிடையே சிவாலயம் எழுப்புகிறோம். 20,000 ரூபாய் மட்டுமே எங்களிடம் உள்ளது. இறைவன் கருணை உங்களுக்குக் கிடைக்கும். அந்த விலைக்கு சண்டிகேசர் சிலையைக் கொடுங்கள்' என்று கேட்டோம். சிறிது யோசித்த அந்த வியாபாரி, "சந்தோஷமாக எடுத்துச் செல்லுங்கள்' என்று சிலையைக் கொடுத்தார்.

இப்படி சிறுகசிறுக பணத்தைச் சேர்த்து இந்த ஆலய திருப்பணிகளை முழுமையாக முடித்து கடந்த 24-6-2022 அன்று வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தினோம்.

அப்போது "எங்கள் மருமகளுக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ளது. எங்கள் குடும்பத் திற்கு ஒரு பெண் குழந்தை வேண்டும்' என்று மனமுருக வேண்டினோம். இவ்வாலய இறைவன் அருளால் தற்போது எங்கள் இளைய மருமகள் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அப்பழுக்கற்ற மனத்தூய்மையோடு இறைவனுக்குப் பணிசெய்தால் நமது வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றுவார் என்பதற்கு இதுவே சாட்சி' என்றார்.

இதே ஊரைச் சேர்ந்த முக்கியஸ்தர் பரமசிவம், "நான் சில ஆண்டுகளுக்குமுன்பு நோய்வாய்ப்பட்டிருந்த எனது உறவின ரைப் பார்ப்பதற்காக புதுச்சேரியிலுள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அவரைப் பார்த்துவிட்டு ஊருக்குப் புறப் பட மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது எனக்கு பெரும் விபத்து ஏற்பட்டது. அங்கேயே மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன். உயிர் பிழைப்பேனா என்று குடும்பத்தினர் பெரும் கவலைப்பட்டனர். இறைவன் அருளால் உயிர் பிழைத்தேன். அதன்பிறகு விபத்து ஏற்படுத்திய வாகனத்தின்மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பல ஆண்டுகாலம் நீண்டது அப்போது இந்த சிவாலயம் எழுப்பும் பணி நடைபெற்றுவந்த நேரம். இந்த ஆலயத்தில் போய் அமர்ந்து இறைவனையும் அம்பாளையும் மனமுருக வேண்டினேன். என்னே அதிசயம்! சில நாட்களிலேயே உரிய இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த இழப்பீட்டுத் தொகை என் கையில் கிடைத்ததும், ஒரு பகுதியை உடனடியாக இந்த கோவில் திருப்பணிக்கு வழங்கினேன். இப்போது உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதற்கு எனக்கு ஏற்பட்ட அனுபவமே சாட்சி'' என்றார்.

"தன்னை நாடிவரும் பக்தர்களை இறைவன் எப்போதும் கைவிடுவதில்லை'' என்கிறார்கள் கனகம்பாடி கிராம மக்கள். "கடுகு சிறிதனாலும் அதன் காரம் குறையாது என்பதற்கு எடுத்துக் காட்டாக, சிறிய கிராமமான கனகம்பாடியில் கனக லிங்கேஸ்வரர், கற்பகாம்பாள் ஆலயம் மட்டு மல்ல; செல்லியம்மன், புத்துமாரியம்மன், விநாயகர், பாளையத்து மாரியம்மன், அய்யனார் ஆகிய கிராம எல்லை தெய்வங்களும் அருளாட்சி செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் உரிய பூஜைகளையும் திருவிழாக்களையும் முறையாக நடத்திவருகிறோம்'' என்கிறார்கள் கிருஷ்ணன், தங்கராசு, பூசாரி சுப்பிரமணியம், இளைய பூசாரி மணிகண்டன் ஆகியோர்.

இயற்கை சூழ்ந்த வெலிங்டன் ஏரியின் மேற்குக் கரைப்பகுதியில் அழகுற அமைந் துள்ள கனகம்பாடி ஊரைப் பார்க்கவும், அங்குள்ள தெய்வங்களை தறிசிக்கவும் செல்ல வேண்டுமா? சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஆவட்டி, ராமநத்தம் பஸ் நிறுத்தங்களிலிருந்து கனகம்பாடிக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன. திட்டக்குடியிலிருந்து மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. தொடர்புக்கு: 94435 38971.

om010223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe