Advertisment

காக்கும் கணவாய் கருப்பண்ணர்கள்1 -அடிகளார் மு.அருளானந்தம் (52)

/idhalgal/om/kakum-ganavai-karupannalar-1-atikalar-m-arulanandam-52

ழுத்தில் இருமருங்கும் அசைந்தாடும் நிலை மாலைகள், ஔவையின் கம்பீர நடைக்கு அழகுசேர்க்கும் விதமாக அமைந்தன. பண்டைய காலத்தவரின் நடைபயணம் என்பது அதிகாலையில் தொடங்கி, தொடர்ச்சியாக ஒரு சாம நேரம் வரை நடைபெறும். ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகையைக் கொண்டது. இரண்டரை நாழிகை என்பது தற்போதுள்ள ஒரு மணி நேரமாகும்.

Advertisment

அப்படியென்றால் ஏழரை நாழிகையென்பது மூன்று மணி நேரமாகும். எனவே, சான்றோர் களின் நடைபயணமானது மூன்று மணிநேரம் தொடர்ந்து நடந்து, பின் ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் களைப்பாறியபின், மீண்டும் மூன்று மணி நேரம் தொடரும். கொம்புகள் முழங்க பயணியர் பட்டாளங்களோடு ஔவை செல்லும் அழகைப் பார்த்து, குருமட வடக்கு வாசலில் தோரணப் பந்தலின்கீழ் குருமார்கள் பெருமிதத்தோடு ரசித்த வண்ணம் இருந்தனர்.

Advertisment

கண்ணிமை, புருவம், நெற்றியில் இடப்படும் மூவகை மை!

ஒரு காத தூரம் ஔவை சென்றபின், தன் பயணத்தை நிறுத்தி குருமடத்தை நோக்கித் திரும்பினாள். பயணக்குழு அனைத்தும் நின்றன. ஔவை தனது இரு கரங்களையும் தலைக்குமேல் தூக்கி குருமடத்தை நோக்கி வணங்கி நின்றாள்.

தான் சிறுவயதுமுதல் வளர்ந்துவந்த குருமடத்தைப் பார்த்தவுடன் அவளது ஆற்றாமை, உள்ளத்தில் ஊற்றெடுத்து கண்ணீராக இமைகளில் நிரம்பியது. அதைக் கண்ட மக்களின் குலகை ஒலியோடு, கொம்பிசையும் உயர்ந்து ஒலித்தது. ஒலியின் உயர்வுக்கேற்ப கண்ணீர் பெருக் கெடுத்தது. அப்போது அவளது விழிகளில் குருமடத்தாரால் தீட்டப்பட்டிருந்த அழகு மையும் அமரமையும் கரைந்து வழிந்தன. இதில் அமரமை, அழகுமை என்பது ஆதித்தமிழர்கள் கண்விழிகளிலும் புருவங்களிலும் நெற்றியிலும் இடக்கூடிய மைகளாகும்.

அழகுமை என்பது கரப்பான் தலை எனப்படும் ஒரு பச்சிலை மூலிகையை எடுத்துவந்து, அதிலிருந்து சாறுபிழிந்து ஒரு மண் சட்டியில் வைத்துக்கொண்டு, தானியங்கள் அளக்கப் பயன்படும் இரும்பு நாழிப் படியின் அடித்தூரினை, அந்தச் சாறுக்குள்விட்டு எடுத்துக்கொள்வார்கள். ஒரு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பெரிய சுடராக எரியவிடுவார்கள். அந்தச் சுடரில், கரப்பான் சாற்றில் முக்கியெடுத்த நாழிப்படியின் அடித்தூரைக் காட்டுவார்கள். அதில் திப்பித் திப்பியாக கரி படியும். அதை ஒரு குழி அம்மியில் உதிர்த்து, சிறிது நல்லெண்ணெய் விட்டு மைய அரைப்பார்கள்.

அந்தக் கருமையான மைதனை புருவத்தில் அழகுற தீட்டுவார் கள். அதனால் புருவங்கள் அழகு றுவதோடு, புழுவெட்டுதலால் புருவமுடி விழாமல் இருக்கும். புழு வெட்டு நோய்க்கு இது சிறந்த மருந்தாக அமையும். இம்மைக்கு அழகுமை என்று பெயர்.

மேற்கண்ட கரி திப்பிகளை பசு வெண்ணெய் சேர்த்தரைத்து அதனைக் கண்விழி இமைகளில் தடவினால் கண்கள் அழகாகவும், கண்களுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய தாகவும் இருக்கும். இதற்கு அமரமை என்று பெயர். இதே போல் பச்சரிசியை மண்சட்டியி லிட்டு நன்றாகக் கருக வறுத்துக் கொள்வார்கள். அவற்றைக் குழி அம்மியில் போட்டு சில துளிகள் நீர் சேர்த்து, அவற்றுடன் புனுகு, கஸ்தூரி சேர்த்து நன்றாக அரைத்தால், நல்ல மண முள்ள கரிய மை கிடை

ழுத்தில் இருமருங்கும் அசைந்தாடும் நிலை மாலைகள், ஔவையின் கம்பீர நடைக்கு அழகுசேர்க்கும் விதமாக அமைந்தன. பண்டைய காலத்தவரின் நடைபயணம் என்பது அதிகாலையில் தொடங்கி, தொடர்ச்சியாக ஒரு சாம நேரம் வரை நடைபெறும். ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகையைக் கொண்டது. இரண்டரை நாழிகை என்பது தற்போதுள்ள ஒரு மணி நேரமாகும்.

Advertisment

அப்படியென்றால் ஏழரை நாழிகையென்பது மூன்று மணி நேரமாகும். எனவே, சான்றோர் களின் நடைபயணமானது மூன்று மணிநேரம் தொடர்ந்து நடந்து, பின் ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் களைப்பாறியபின், மீண்டும் மூன்று மணி நேரம் தொடரும். கொம்புகள் முழங்க பயணியர் பட்டாளங்களோடு ஔவை செல்லும் அழகைப் பார்த்து, குருமட வடக்கு வாசலில் தோரணப் பந்தலின்கீழ் குருமார்கள் பெருமிதத்தோடு ரசித்த வண்ணம் இருந்தனர்.

Advertisment

கண்ணிமை, புருவம், நெற்றியில் இடப்படும் மூவகை மை!

ஒரு காத தூரம் ஔவை சென்றபின், தன் பயணத்தை நிறுத்தி குருமடத்தை நோக்கித் திரும்பினாள். பயணக்குழு அனைத்தும் நின்றன. ஔவை தனது இரு கரங்களையும் தலைக்குமேல் தூக்கி குருமடத்தை நோக்கி வணங்கி நின்றாள்.

தான் சிறுவயதுமுதல் வளர்ந்துவந்த குருமடத்தைப் பார்த்தவுடன் அவளது ஆற்றாமை, உள்ளத்தில் ஊற்றெடுத்து கண்ணீராக இமைகளில் நிரம்பியது. அதைக் கண்ட மக்களின் குலகை ஒலியோடு, கொம்பிசையும் உயர்ந்து ஒலித்தது. ஒலியின் உயர்வுக்கேற்ப கண்ணீர் பெருக் கெடுத்தது. அப்போது அவளது விழிகளில் குருமடத்தாரால் தீட்டப்பட்டிருந்த அழகு மையும் அமரமையும் கரைந்து வழிந்தன. இதில் அமரமை, அழகுமை என்பது ஆதித்தமிழர்கள் கண்விழிகளிலும் புருவங்களிலும் நெற்றியிலும் இடக்கூடிய மைகளாகும்.

அழகுமை என்பது கரப்பான் தலை எனப்படும் ஒரு பச்சிலை மூலிகையை எடுத்துவந்து, அதிலிருந்து சாறுபிழிந்து ஒரு மண் சட்டியில் வைத்துக்கொண்டு, தானியங்கள் அளக்கப் பயன்படும் இரும்பு நாழிப் படியின் அடித்தூரினை, அந்தச் சாறுக்குள்விட்டு எடுத்துக்கொள்வார்கள். ஒரு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பெரிய சுடராக எரியவிடுவார்கள். அந்தச் சுடரில், கரப்பான் சாற்றில் முக்கியெடுத்த நாழிப்படியின் அடித்தூரைக் காட்டுவார்கள். அதில் திப்பித் திப்பியாக கரி படியும். அதை ஒரு குழி அம்மியில் உதிர்த்து, சிறிது நல்லெண்ணெய் விட்டு மைய அரைப்பார்கள்.

அந்தக் கருமையான மைதனை புருவத்தில் அழகுற தீட்டுவார் கள். அதனால் புருவங்கள் அழகு றுவதோடு, புழுவெட்டுதலால் புருவமுடி விழாமல் இருக்கும். புழு வெட்டு நோய்க்கு இது சிறந்த மருந்தாக அமையும். இம்மைக்கு அழகுமை என்று பெயர்.

மேற்கண்ட கரி திப்பிகளை பசு வெண்ணெய் சேர்த்தரைத்து அதனைக் கண்விழி இமைகளில் தடவினால் கண்கள் அழகாகவும், கண்களுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய தாகவும் இருக்கும். இதற்கு அமரமை என்று பெயர். இதே போல் பச்சரிசியை மண்சட்டியி லிட்டு நன்றாகக் கருக வறுத்துக் கொள்வார்கள். அவற்றைக் குழி அம்மியில் போட்டு சில துளிகள் நீர் சேர்த்து, அவற்றுடன் புனுகு, கஸ்தூரி சேர்த்து நன்றாக அரைத்தால், நல்ல மண முள்ள கரிய மை கிடைக் கும். இதனை ஔவை யின் நெற்றி யிலிட்டு, மக்களின் கண்பார்வை பாதிக்காமலிருப்பதற்கு, திருஷ்டி சுற்றிப் போட்டு அனுப்புவார்கள்.

இந்த மூவகை மைகளும் கரையும்வண்ணம் ஔவையின் நெற்றியில் உதித்த வியர்வையும், கண்களில் உதிர்ந்த கண்ணீரும் அதிகமாகச் சொரிந்தன. ஔவை தன் பக்கத்தில் இருந்த இரண்டு யானைகளுக்கு நடுவே நெட்டாக பூமியில் படுத்து குருமடத்தை நோக்கி வணங்கி னாள். அவளுடைய கண்களுக்கு குருமடம் தெரியும் விதத்தில் இருமருங்கும் மக்கள் விலகிக் கொண்டனர். குருமடத்திற்கு தன்னுடைய முழுமையான வணக்கத்தை அர்ப்பணித் தாள். அவளுக்குத் துணையாகச் சென்றிருந்த மடவைப் பெண் தரையில் படர்ந்திருந்த ஔவையின் இருகரங்களைப் பற்றி மெல்ல தூக்கினாள். ஔவை எழுந்துநின்று தன் இருவிழிகளால் குருமடத்தின் முழுத் தோற்றத்தையும் தரிசித்தாள். தான் வாழ்ந்த கோவிலை தன் மனதில் உள்வாங்கி னாள். அதனை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தலைமை குருநாதர், நீண்ட மூங்கில் களையில் கட்டியிருந்த பெரிய வெள்ளைநிறக் கொடியைத் தூக்கி, இரு மருங்கிலும் அசைத்து விடைபகர்ந்தார்.

காவல் கிணற்றில் தூய தண்ணீர்!

வெள்ளைக்கொடி அசைந்ததைக் கண்ணுற்ற ஔவையும் மக்களும், குலகை ஓசையோடு பயணம் மேற்கொள்ளும் திசைநோக்கித் திரும்பினார்கள். தன் தோள்மீதிருந்த மாலைகளை, வழியனுப்ப உடன்வந்த இரு யானைகளின் துதிக்கைகளில் எடுத்துக்கொடுத்த ஔவை, அவற்றை குருமடத்திற்கு வழியனுப்பினாள். வெள்ளைக்கொடி அசைந்ததை வெள்ளை மனதோடு ஏற்றுக்கொண்டு, வெண்தாமரைச் செல்வியாய் தான் கடமையாற்ற வேண்டுமென்ற ஆன்றாண்மை உணர்வால், அவளது ஆற்றா மையை வென்றெடுத்து, வீரமான கம்பீர நடையை ஔவை தொடர்ந்தாள்.

ஒரு சாம நேரம் தொடர்ந்த பயணம் குருமடத்தாரால் பெருவழிப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த காவல்கிணறோடு சேர்ந்திருந்த சேவடிச்சாலையை அடைந்தது.

ஆதிகாலத்தில் ஒரு சாம நேர நடைபயண தூரத்திற்கொன்றாக சேவடிச் சாலைகளை அமைத்திருப்பார்கள். பயணியர் தூய தண்ணீர் அருந்துவதற்காக காவலோடு சேர்ந்த கிணறு இருக்கும். அங்கு பயணியர் கள் ஓய்வெடுப்பதற்கும், தாங்கள் கொண்டு வந்த கட்டுச் சோறுகளை உண்பதற்கும், பெரிய பரப்பளவில் குளிர்ந்த மணற்பரப்பி, அதன்மீது பனைக் கீற்றுகளால் வேயப்பட்ட பந்தலிடப்பட்டிருக்கும். குளிர்ச்சிமிகுந்த அந்த நிழற்பந்தலில் 200 பேர்களுக்குமேல் தங்கும் அளவுக்கு வேயப்பட்டிருக்கும்.

dd

அப்பகுதிகளில் வாழும் ஆயர்குல மக்கள் நீர்த்த மோர் பானைகளை வைத்து நடைபயணியர்களுக்கு மோர்தானம் செய்வார்கள். சிலர் நீர்த்த மோர் கலந்த சுவையான சிறுதானியக் கூழ்களையும் தானமாக வழங்குவார்கள். இப்படிப்பட்ட சாலைகளுக்கு இடையர் தர்மசாலைகள் என்று பெயர். இந்த சேவடிச் சாலைகளில் உணவுச் சத்திரமும் இருக்கும். இங்கே இரண்டரை நாழிகை ஓய்வுக்குப்பின் பயணம் தொடங்கும்.

கொம்புகளை ஊதும் கங்காணிகள்!

ஓரிடத்தில் தங்கி பயணத்தைத் தொடங் கும்போது, பெருவழிப்பாதை கங்காணிகள் என்று அழைக்கப்படும் வீரர்கள் பயணக் குழுவின் முன்னாலும் பின்னாலும் வருவார் கள். அவர்கள் இப்பயணக் குழுவிவிலுள்ள பெண்கள், ஆண்கள், குழந்தைகள், மாட்டுவண்டி கள், சுமைதூக்கும் கோவேறு கழுதைகள் போன்றவற்றின் எண்ணிக்கையைத் தங்களிடம் வைத்தி ருப்பர். இவர்கள் ஒவ்வொன்றாக அவற்றை எண்ணி சரிபார்த்து பயணக்குழுவினரை அனுப்புவார்கள். இவற்றில் ஏதேனும் தப்பிவிட்டால் உடனுக்குடனே தேடி அழைத்து வந்துவிடுவார்கள். இவர்கள் சரியாக அனைவரையும் கண்காணித்த பின்னரே தங்கள் கையிலிருக்கும் கொம்பினை ஊதுவார்கள். கொம்புகள் முழங்கியபின்புதான் பயணம் தொடரும். பயணியர்கள் ஏதேனும் பொருட் களைத் தங்கிய இடத்தில் விட்டுவிட்டிருந் தாலும், அதை பத்திரமாக எடுத்து உரியவரிடம் சேர்ப்பார்கள்.

இவ்வாறு பயணம் தொடரும்போது குறுக்கே மலைக் கணவாய்கள் வந்தால், ஒரு காத தூரத்தில் கணவாய் இருக்கும்போதே, கங்காணிகள் தங்களது கொம்புகளை ஊதி முழக்குவார்கள். கணவாய் என்றால், பெரு வழிப்பாதையின் குறுக்கே மலைத்தொடர் இருந்தால், அதனைக் கடந்துசெல்ல மலையின் உயரமற்ற பகுதியை இரு வண்டிகள் செல்லும் அளவிற்கு உடைத்துவிட்டு பாதை அமைத் திருப்பர். இருப்பினும் அதனைக் கடந்து செல்லும்போது பாதை மலை நோக்கி ஏற்றமாகவும், மலையைக் கடந்து செல்லும்போது கீழ்நோக்கி மிகுந்த இறக்கமாகவும் இருக்கும். சுமை ஏற்றப்பட்ட வயதானவர்கள், சிறுவர்கள் ஏறி அமர்ந்துள்ள வண்டிகளை எருதுகள் இழுப்பதற்கு கடினமாக இருக்கும். அதேபோல் கணவாயிலிருந்து வண்டிகள் இறங்கும்போது, வண்டியின் பாரம் மாடுகளை முன்நோக்கித் தள்ளி, மாடுகளை விழவைத்துவிடும். மாடுகள் வீழ்ந்தால் மாடுகள் காயமடைவதோடு வண்டிகள் புரண்டு விபத்துக்குள்ளாகிவிடும்.

இவ்வாறான கடினமான சூழல் உள்ள இடங்களில் பெருவழிப் பயணியர்களுக்கு உதவும் பொருட்டு, அப்பகுதி முல்லை நிலத்தில் வாழும் மக்கள் கணவாய்களில் குடில் அமைத்துத் தங்கியிருப்பர். மேற்கண்டவாறு ஒரு பயணக் குழுவின் கண்காணி கள் கொம்புகளை முழங்கிய வுடன், அக்குடிலில் இருக்கும் முல்லைநில மக்கள் பத்துப் பதினைந்து பேர் அங்கு செல்வார்கள். அவர்கள் பாரம் ஏற்றியிருக்கும் மாட்டு வண்டிகளின் இருபுறமும் நின்று, வண்டியின் சக்கரங்களைப் பிடித்து மேலேறுமாறு உந்திச் சுழற்றுவார்கள். பின்னோக்கி கீழே வண்டி சரிந்துவிடாமலிருக்க, முட்டுக் கட்டைகளை சக்கரங்களுக்குப் பின்னே வைத்து கணவாய்மேல் வண்டியை ஏற்றிவிடுவார்கள். கணவாயிலிருந்து வண்டிகள் இறங்கும்போது, வண்டிக்குமுன் மாடுகளின் கழுத்தில் பூட்டப்பட்டிருக்கும் மேக்கால் எனப்படும் கட்டையை நான்கு பேர் பிடித்துத் தாங்கிக்கொண்டும், இரு சக்கரங்களின் பக்கம் நான்கு நான்கு பேர் நின்று சக்கரங்கள் விரைவாக ஓடாமல் பிடித்துப்பிடித்து மெல்லமெல்ல இறக்கி விடுவார்கள். இவர்களை கணவாய் கருப் பண்ணர்கள் என்று அழைப்பார்கள்.

எத்தனை வண்டிகள், எவ்வளவு பாரம் என்பதைப் பொருத்து கண்காணிகளிடம் பணம்பேசி வாங்கிக்கொள்வார்கள். மேலும் இப்படிப்பட்ட கணவாய்ப் பகுதிகளில் கொள்ளையர்களும் கள்வர்களும் வராதவாறு பார்த்துக்கொள்வார்கள். உயிரையும் துச்ச மாக நினைத்து பயணியர்களைப் பாதுகாப்பாக அனுப்புவதே தங்களின் கடமை என நினைப்பார்கள். இவர்கள் இவ்வாறு செய்வதால், பயணியர்கள் இவர் களை மிகவும் நேசிப்பார்கள். இவர்களுக்கு உணவுப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை மனமுவந்து வழங்குவார் கள்.

சந்தையூரில் பண்டமாற்று வியாபாரம்!

தற்போது இவர்கள் தங்கியிருந்த குடில்கள்தான், கணவாய் கருப்பண்ணசாமி கோவில் களாக மாற்றப்பட்டு, வழிபடும் தெய்வமாக வணங்கப்படுகிறது. பெரும் பாலும் கணவாய்ப் பகுதி களைக் கடந்தபின் பல பெருவழிப் பாதைகள் சந்திக்கும் இடம் வரும். அவ்விடத்திற்கு முதலில் சந்தியூர் எனப் பெயரிட்டனர்.

அந்த இடத்தில் பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் வியாபாரப் பொருட்கள் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டதால், பின்னாளில் அது சந்தையூர் என்றழைக்கப்பட்டு, தற்போது பெருநகரங்களாக விரிவடைந்துவிட்டன.

சங்ககாலத்தில் பெருவழிப் பயணியர்கள் பெரும்பாலும் இப்படிப்பட்ட சந்தை யூர்களில்தான் இரவுத் தங்களை வைத்துக் கொள்வார்கள். இவ்வூரில்தான் பல பகுதிகளிலிருந்து வரும் ஒற்றர்கள் தங்களிடமுள்ள செய்திகளை மற்ற ஒற்றர் களிடம் பகிர்ந்து, தங்களது மன்னர்களுக்கு செய்தி அனுப்புவார்கள். இது தொலைதூரப் பெருவணிகர்கள் சந்திக்கும் இடமாக இருப்பதால் சந்தைப் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடையும் இடமாக இருக்கும். வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த பல்வேறுபட்ட பொருட்கள் யாவும் ஒரு பொதுமைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுச் சந்தை பெரிய அளவில் நடைபெறும். பயணியர் தங்கள் குழந்தைகளுக்கும், தாங்கள் செல்லும் விருந்தினர் வீடுகளிலுள்ள உறவினர் களுக்கும் தேவையான பொருட்களை, இரவு நேரங்களில் ஓய்வுநேரத்தில் வாங்கிக்கொள்ள வசதியாக இரவு அங்காடிகளை இங்கு அமைத்திருப்பார்கள். இவற்றை அல் அங்காடிகள் என்றும் பகல் நேரங்களில் விற்பனை செய்யும் அங்காடிகளை நாள் அங்காடிகள் என்றும் அழைத்தனர்.

எண்ணும் எழுத்தும் கற்றுத்தரும் கணக்காயர்கள்!

இவ்வூரில் வாழும் மனிதநேயமிக்க செல்வந்தர்கள் பல தர்மசாலைகளை நடத்துவார்கள். அவை ஆதுலர் சாலை, ஆறு சமயத்தார்க்கு உணவிடும் சாலை, மாடுகளுக்கு வாயுறை வழங்கும் சாலை, சிறார் களுக்கு திண்பண்டங்கள் நல்கும் சாலை, அறவைச் சோறு ஈதல், கைப்பெறுவித்தல், மகப்பால்வார்த்தல், பிள்ளைச்சோறு ஈதல், தண்ணீர் பந்தல், நோய் மருந்தீதல், வண்ணான் சேவை, நாவிதன் சேவை, கண்ணாடி, காதோலை, கண்மருந்து, கண்மை, தலைக்கெண்ணெய் போன்றவை ஈதல், பிறர் துயர்காத்தல், மடம், தடம், செப்பனிடல், சோலை காத்தல் போன்றவையாகும்.

பெரும்பாலும் சந்தையூர்களில்தான் ‘கணக்காயர்’ எனும் எண்ணும் எழுத்தும் ஒருசேர கற்றுத்தரும் ஆசிரியர்கள் உருவானார் கள். இவர்கள் இத்தகைய ஊர்களில் பெரு மதிப்புப் பெற்று விளங்கினர்.

"கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்

தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்

நன்மை பயத்தல் இல'

என்பது ஆதித்தமிழர் கூற்று.

இந்தக் கணக்காயர்களும் மூத்தோர்களும் ஔவையின் வருகையை அறிந்து சந்தையூரில் காத்திருப்பர். எதற்காகவெனில், குருமடத்திலிருந்து ஔவை புறப்படும்போது ஒரு கூட்டுவண்டியில் எழுதிய ஏடுகளும் எழுதா ஏடுகளும் நிறைய அடுக்கி அனுப்புவார் கள். அதில் கணக்கதிகார நூல்களும், சான்றாண்மை நூல்களும், பண்டுத நூல்களும் அதிகம் இருக்கும். அவற்றை ஔவையிடமிருந்து பெறுவதற்காகவும், அதிலுள்ள சந்தேகங்களைப் போக்கிக் கொள்வதற்காகவும் ஆவலாயிருப்பர்.

பழங்காலத் தமிழகத்தில் இருந்த கணித நூல்கள் முறையே கணக்கதிகாரம், ஏரம்பம், கிளராலயம், அதிசாகரம், கலம்பகம், சிறுகணக்கு, குழிவருக்கம், பெருங்குழிமாறல், அளவாசல் துகை, படியடித் தொகை, படியடி இலக்கம், சரிவரக் குழிமாறல், வர்க்கக்குழி மாறல், மட்டு, துரவை. முகிச்சார்கள், இறை, ஏதானடி, தொண்டம், வயணம், கடை, கட்டு போன்ற கணித முறை நூல்கள் இருந்தன.

ஔவையாரும், அவருடன் வந்த பயணியர்கள் வசதியாகத் தங்கி ஓய்வெடுக்க, நீர்நிலை வசதியோடு சேர்ந்த பெரிய இடமாக அமைத்து வைத்திருப்பர். கணக்காயர்கள், மூதறிஞர், பெண்டிர் தங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள ஔவை இருக்கையைச்சுற்றி பிறை வடிவில் அனைவரும் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டு, பிரகாச மான ஒளிபடர தீப்பந்தங்கள் ஏற்றப் பட்டிருக்கும்.

மதுரையில் சங்ககாலத்தில் வாழ்ந்த பெரும்புலவர் நக்கீரரை மதுரைக் கணக்காயர் மகனார் என்றழைப்பர். மதுரை கணக்காயனார் அகநானூறு தொகுப்பில் மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். நற்றிணை இயற்றிய புலவரும் கணக்காயர் என அழைக்கப்பட்டார். குறுந்தொகைப் பாடல் ஒன்றை இயற்றிய கணக்காயர் தத்தனார் மதுரையில் ஒரு ஏரியை அமைத்துள்ளார். அது இன்றுவரையிலும் தத்தனேரி என்றே அழைக்கப்பட்டு வருகிறது. அவர் வேளாண்குடிப் பிறந் தோன் எனக் கூறுவர். இப்படிப்பட்ட கணக்காயர் கள் எண்ணையும் எழுத்தையும் ஒருசேர கற்ற றிந்து சிறந்த புலவர்களாகவும் கணக்காயர் களாகவும் ஆசிரியர்களாகவும் திகழ்ந்துள் ளனர்.

எண்ணியலில் வகைப்படுத்தப்பட்ட தண்ணீரின் தரம்!

ஆசிரியர்களை கணக்காயர் என்ற சொல்லால் நாலடியாரும், பதினெண் கீழ்க்கணக்கு நூலும் குறிப்பிடுகின்றன. தமிழ் கணக்கியலில் முழு எண், பின்ன எண், தொகை எண், முகத்தல் அளவை, நீட்டலளவை, சிறுதுகள் முதல் பேரண்ட அளவு, பூமிக்கும் கோள்களுக்கும் உள்ள அளவு, மாலுமிகளுக்குக் கடலளவை, வானவியல், புவியியல், விலங்கியல், பயிரியல், நிலவள அளவு, சோதிடக் கணிதம், தண்ணீர் தரவிலக்கம் போன்றவை இடம்பெற்றிருந்தன.

உதாரணமாக, ஒரு நாழி தண்ணீரின் எடை பன்னிரண்டு பலம் இருந்தால், அது உத்தம தண்ணீர் என்றும், அதுவே அருந்துவதற்கு உகந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு நாழி தண்ணீர் பதின்மூன்று பலம் எடையுடனிருந் தால் அது சமைப்பதற்குப் பயன் படும் மத்திம தண்ணீராகும். ஒரு நாழி தண்ணீரின் எடை பதினான்கு பலம் இருந்தால், அது குளிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று ஆதித்தமிழர்கள் தண்ணீரின் தரத்தை எண்ணியலில் வகைப்படுத்தினர்.

இப்பேர்ப்பட்ட கணக்காயருக்கும் ஔவைக்கும் இடையேயான ஆன்றோர் அவயத்து உரையாடல் வரும் இதழில்!

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

om010623
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe