பஞ்சபூதத் தலங்களின் நேர்மறை ஆற்றலையும், அதனால் மனித குலத்திற்கு விளையும் நன்மைகள் பற்றியும் கடந்த இதழ்களில் கண்டோம். இப்போது மிக முக்கிய தலமான- அதாவது அக்னி (நெருப்பு) தலமான திருவண்ணாமலையைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
"திருவாரூரில் பிறந்தால் முத்தி; காசியில் இறந்தால் முக்தி' என்பது ஆன்றோர் கூற்று. ஆனால் திருவண்ணாமலையை மனதில் நினைத்தாலே முக்திப்பேறு கிட்டிவிடும். அதற்குமுன் மனித மனங்களின் எண்ண ஓட்டங்களைப் பற்றி சிறிது அலசுவோம்.
ஒவ்வொரு வருடமும் உலகெங்கும் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது. மக்களும் தத்தம் அத்தியாவசியத் தேவைகளை விட்டுவிட்டு, அநாவசியமான செயல்களில் சிந்தனையைச் செலுத்தி, உடலை நோய்க்கு இரையாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரிகளும், பள்ளிகளும் வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதற்கிணை யாக ஒரு மருத்துவக் கல்லூரியிலிலிருந்து படிப்பை நிறைவு செய்தவர்கள் லட்சம்பேர் வெளியேறுகின்றனர். அதைப்போன்று பொறியியல் கல்லூரிகளிலிருந்தும், கலைக் கல்லூரிகளிலிலிருந்தும், விவசாயக் கல்லூரி களிலிலிருந்தும் பல லட்சம் மாணவர்கள் வருடாவருடம் தங்கள் படிப்பை முடித்து வெளியேறிய வண்ணம் இருக்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் தங்களின் தேர்வு சமயத்தில் மட்டுமே இறைஞாபகம் வருகிறது. தங்களுக்குத் தேவை ஏற்படும் போது மட்டும் இறைவனை நினைப்பதில் எந்தப் பயனுமில்லை.
ஏனென்றால் ஆறறிவுக்குக் குறைவான எந்த உயிரினமும் இறைவனிடம் எதுவும் கேட்பதில்லை. இங்கே ஒன்றைக் கூற விரும்புகிறேன். மனித இனமே- நீங்களும் எதையும் இறைவனிடம் கேட்காதீர்கள். ஏனென்றால் பூமிப்பந்தில் உங்களை இறக்கிவிடும்போதே, எந்த ஜீவனுக்கும் வழங்காத ஒரு முக்கியமான பொருளை கடவுள் பரிசாக வழங்கியிருக்கிறார். அது தான் 1,360 கிராம் எடையுள்ள மூளை!
அறிவு எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் ஞானம் இருக்கிறதா? அது வெளிப் படுத்துகிறதா? அது எப்படி வெளிப்படும்? ஆம்; ஞானமாகவும், விவேகமாகவும் செயல்படவே மனித இனத்திற்கு மட்டுமே அளப்பரிய ஆற்றலோடு கூடிய மூளையை வழங்கியிருக்கிறார். இந்த மனிதமூளை எவ்வாறு செயல்பட வேண்டும்? அதன் நோக்கம் எப்படி இருக்கவேண்டும் என்பது போன்ற பல கேள்விகளுக்குத் தீர்வாக இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட் கொடைதான் பஞ்சபூத சக்திகள், நவகிரக சக்திகள், 27 நட்சத்திர சக்திகள், 12 ராசி சக்திகள் இதுபோன்று அனைத்து பிரபஞ்ச சக்திகளுமாகும்.
இயற்கை சக்தியோடு இறைசக்தி இணையும்போது அதன் பலன்கள் அபரி மிதமாக இருக்கும். இத்தனைவிதமான சக்திகளையும் பயன்படுத்தி அதனை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதை நமது முன்னோர் களின் வழிகாட்டுதலிலின்படி நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பெரியோர்களின் அவசி யம் பற்றி தெய்வப் புலவர் திருவள்ளுவர்- உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் என்கிறார். அதாவது, ஒருவருக்கு வந்துள்ள துன்பங்களை நீக்கி, இனி எப்போதும் துன்பம் வராதபடி முன்னதாகவே அறிந்து அவனைக் காப்பாற்றும் தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்வதே சிறந்ததாகும் என்கிறார்.
பெரியவர்களின் வாழ்வியல் முறையும், அனுபவமும் நமக்குப் பெரும் துணையாக இருக்கும். நம் முன்னோர்கள் காலை எழுந்து குளித்துமுடித்தவுடன் சூரியனை வணங்குதலை ஒரு முக்கிய கடமையாகச் செய்து வந்தனர். சூரியன் உஷ்ண கிரகமா கும். பஞ்சபூத சக்திகளில் பிரதான சக்தியாக விளங்குவது வெப்ப சக்தியாகும். இந்த உஷ்ணசக்தி மனித உடலிலில் சமன்பாட்டில் இருக்கவேண்டும். அதில் மாறுபாடு ஏற்படும்போது உட லானது நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிறது.
பஞ்சபூத சக்திகளின் கட்டு மானமே மனித உடலாகும். பஞ்சபூத சக்திகள் நமது இரண்டு கைகளிலுள்ள பத்து விரல்களோடு தொடர்பு கொண்டுள்ளன. சுண்டுவிரல் நீரையும், மோதிரவிரல் நிலத்தை யும், நடுவிரல் ஆகாயத்தையும், சுட்டுவிரல் காற்றையும், கட்டை விரல் நெருப்பு சக்தியையும் குறிக்கின்றன. காற்று சக்தி யைக் குறிக்கும் சுட்டுவிரல் ஜீவாத்மா என்றும், நெருப்பு சக்தியைக் குறிக்கும் கட்டை விரல் பரமாத்மா என்றும் குறிக்கப்படுகிறது. சுட்டுவிரல், கட்டைவிரல் ஆகியவற்றின் முனைப்பகுதியை இணைக்கும் போது (சின்முத்திரை) மனித உடலானது ஒரு நேர்மறை ஆற்றலை கிரகிக்கும் கோபுரமாக (பர்ஜ்ங்ழ்) மாறுகிறது. பிரபஞ்சத்திலுள்ள அபரிமித மான நேர்மறை ஆற்றலை உடலானது உள்வாங்க ஆரம்பிக்கும். சின்முத்திரையில் அமர்ந்து தியானம் செய்தோ மென்றால் உடலும் மனமும் மிகுந்த உறுதியும், அமைதியும் பெறுகிறது. இதற்குகந்த தலமே பஞ்சபூதத் தலங்களில் மிக முக்கியத்துவம் பெற்ற அருணாச்சலேஸ்வரம் எனும் திருவண்ணாமலை திருத்தலமாகும்.
ஆறு பிராகாரங்களுடனும், ஒன்பது கோபுரங்களுட னும் மிக கம்பீரமாக 24 ஏக்கர் பரப்பளவில் அண்ணா மலையார் மிக அழகாக அமர்ந்துள்ள தலமே திருவண்ணா மலை. நான்முகனுக்கும், திருமாலுக்கும் இங்கே சிவபெருமான் லிங்கோத்பவராகக் காட்சியளித்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இணையான தோற்றத்தை இங்கே காணலாம்.
ஆலயத்தின் தலவிருட்சமான மகிழமரத்தின் கீழே நின்று பார்த்தால் ஒன்பது கோபுரங்களையும் ஒன்றாகக் காணும் பாக்கியம் பெறமுடியும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கிளிக்கோபுர வாசலிலின் மேற்குப்புறம் நின்று பார்த்தால் மலையே சிவலிலிங்க வடிவில் தோன்றுவது தெரியும். கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் மகாதீபம் இந்த மலைமுகட்டில் ஆனந்தஜோதியாக- அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணையாகக் காட்சிதருவார்.
217அடி உயர ராஜகோபுரம் ராஜகம்பீரமாகத் தெரியும். மேற்கிலுள்ள கோபுரம் பேய்க் கோபுரமாகும். தெற்கிலுள்ள கோபுரம் திருமஞ்சனக் கோபுரம் என்றும், வடதிசையில் உள்ளது அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ள பாதாள லிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் உள்ளேதான் ரமணமகரிஷி தவம் செய்தார். பெரிய நந்திகேசுவரரை தரிசித்து வெளியே வந்தால் இரண்டாவது கோபுரமான வல்லாள மகாராஜா கோபுரம் தெரியும். இதுவே அருணகிரிநாதர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற கோபுரமாகும். இங்குதான் ஆறுமுகப்பெருமான் அருணகிரி நாதரைக் காப்பாற்றினார். ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதி கோபுரத்தின் தென் புறம் அமைந்துள்ளது. கோவிலிலின் அருகில் பிரம்ம தீர்த்தம், சிவகங்கைத் தீர்த்தங்கள் அமைந்துள்ளன. பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பைரவ மூர்த்தியின் கோபாவேசக் கோலத்துடன் அவர் சந்நிதி அமைந்துள்ளது. கிளிக்கோபுர வாசலைக் கடந்து சென்றால் 16 கால் மண்டபம் இருக்கிறது. திருக் கார்த்திகை தினத்தில் பஞ்சமூர்த்திகள் இங்கு வந்து தீபதரிசனம் செய்து, தரிசனம் அருள் வதாக ஐதீகம். இந்த மண்டபம் காட்சி மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மண்டபத்தில் இருந்து கார்த்திகை தினம் அன்று தீபத்தையும் சுவாமியையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும்.
பதினாறுகால் மண்டபத்தின் எதிரில் கொடிமரமும், பரணி தீபம் ஏற்றிவைக்கும் தீபஸ்தம்பமும் அமைந்துள்ளன. மண்டபத் தின் வலப்புறம் ஸ்ரீஜம்புகேஸ்வரர், ஏகாம்ப ரேஸ்வரர், சிதம்பர லிங்கேஸ்வரர், ஸ்ரீகாளத்தி நாதர், அருணாச்சலேஸ்வரர் என்று பஞ்சபூத சக்திகளும் ஒருங்கே காணப்படுவது ஒரு அதிசயமாகும். மூன்றாம் பிராகாரத்தில் சம்பந்த விநாயகர் காட்சி தருகிறார். இரண் டாம் பிராகாரத்தில் சிவாலயத்தில் இருக்க வேண்டிய அனைத்து பரிவார சந்நிதிகளும் உள்ளன.
வடதிசையில் அமைந்துள்ளது உண்ணா முலை அம்பாளின் திருச்சந்நிதி. கர்ப்பக் கிரகத்தைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் பராசக்தியம்மன், பரிவார மூர்த்திகள், சண்ட சக்தி ஆகியோர் காட்சி தருகின்றனர். அம்பாள் சந்நிதியின் முன்பாக நவகிரகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மன்மத தகனம் நடைபெறும் ஒரே சிவன் கோவில் திருவண்ணாமலை மட்டுமே. மாணிக்கவாசகருக்கு தனிச்சந்நிதி உண்டு.
கிரிவலத்தில் அஷ்ட லிலிங்கங்களும் அமைந் துள்ளன. கிரிவலத்தால் என்ன பயன்? திருவண்ணாமலையில் பல்வேறு மூலிகை கள் நிறைந்துள்ளன. இது உஷ்ணமான பூமியாகும். பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வருவதே மிகச்சிறப்பாகும். ஏனென்றால், பௌர்ணமி நிலவு அதீத குளிர்ச்சியான கதிர் வீச்சை திருவண்ணாமலையில் பாய்ச்சுகிறது. இந்தக் கதிர்வீச்சிலுள்ள சக்தியை, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அத்தனை செடி, கொடி, மரங்களும் உறிஞ்சுகின்றன. பௌர்ணமி கதிர்வீச்சோடு சேர்ந்து பிரபஞ்சத்தில் அனைத்து நல்ல சக்திகளையும் (நேர்மறை ஆற்றல்) தாவரங்களும் மூலிகை களும் உறிஞ்சுகின்றன. இந்த மூலிலிகைத் தாவரங்களிலிலிருந்து வெளிப்படும் பிராண வாயு அபரிமிதமான மருத்துவ குணம் கொண்டது. கிரிவலம் வரும் ஒவ்வொருவரும் இதை சுவாசிக்கும்போது உடற்கழிவுகள் மற்றும் மனக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்றுத் தூய்மையடைகிறது.
கிரிவலப் பாதையில் பயணிக்கும்போது பக்தர்கள் கால்களில் செருப்பு அணியக் கூடாது. ஏனெனில் நமது பாதங்களில் மட்டும் மிக முக்கியமான 1,000 நரம்புகளின் (நாடிகள்) முனைப்பகுதிகள் அமைந்துள்ளன. நமது கால்களில் மட்டும் 8,000 நரம்புகள் மிகமுக்கியமான சக்தி ஓட்டப் பாதைகள் உள்ளன. நாம் நடக்க ஆரம்பித்தவுடன் பூமி யிலுள்ள ஆகர்ஷண சக்திகள் பாதத்திலுள்ள நரம்பு முடிச்சுகள்மூலம் உறிஞ்சப்பட்டு உடல் முழுவதும் பரவுகிறது. சுவாச மண்டல மும், நரம்பு மண்டலமும் அருமையாக இயங்குகின்றன. ஆறு ஆதாரச் சக்கரங்களும்- அதாவது நாளமில்லா சுரப்பி மண்டலம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஆரோக்கியம் மேம்படுகிறது. மனம் தெளிவு பெறுகிறது. ஞானவெளிச்சம் தெரியத் துவங்குகிறது. கயிலைநாதனின் கருணைப் பார்வை நமக்கு வரமாகக் கிடைக்கிறது. ஒற்றுமை உணர்வு மேம்பட, தர்மசிந்தனை உருவாக கிரிவலம் வந்து, நரிக்குணம் நீங்கி, கரி (யானை) பலம்பெற்று நற்குணங்களோடு விளங்க அய்யன் அண்ணாமலையானை தரிசிப்போம்.
அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ் ஜோதி... தனிப்பெருங்கருணை... அருட் பெருஞ்ஜோதி...