மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் மாதக் கடைசியில் 24-ஆம் தேதி கடகத்தில் நீசமடைவார். அதுவரை உங்களுக்கு தொழில், பொருளாதாரம், வாழ்க்கை, வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் எந்த பாதிப்புக்கும் இடமில்லை. 16-ஆம் தேதிவரை 2-ல் யோகாதிபதி சூரியன் பலம்பெறுவதால் வாக்கு நாணயம் காப்பாற்றப் படும். வரவு- செலவு, கொடுக்கல்- வாங்கல் நாணயமாக செயல்படும். குடும்பத்தில் உங்கள் சொல்வாக்கு செல்வாக்கு பெறும். கணவன்- மனைவிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் நீங்கி இணக்கம் உண்டாகும். தொழில்துறையில் புதிய உத்திகளைக் கையாண்டு, கொள்முதலி−ல் பேரம் பேசி சரக்குகளை மலி−வான விலைக்கு வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம். உங்கள் யோகத்துக்கு, வாங் கிவைத்த சரக்கு விலை ஏற்றமாகி- டிமாண்ட் உண்டாகி, நல்ல லாபத்தோடு விற்று சேமிக் கலாம். உத்தியோகத்தில் விரைந்து பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டுக்கு ஆளாகலாம். என்றாலும் உடன் வேலை செய்கிறவர்களின் பொறாமையும் திருஷ்டியும் சிலசமயம் மூட்டைப்பூச்சிக்கடி, கொசுக்கடி போல நிம்ம தியைக் கெடுக்கலாம்.

பரிகாரம்: செவ்வாய்க் கிழமைதோறும் வீட்டில் சாம்பிராணி புகை போடவும். சரபேஸ்வரரை வழிபடலாம்

ரிஷபம்

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ஆம் தேதிமுதல் ரிஷபத்தில் ஆட்சிபலமாக இருக்கிறார். அவருக்கு 8, 11-க்குடைய குரு பார்வையும் கிடைக்கிறது. 8-ல் சனி- கேதுவும், செவ்வாய், ராகு பார்வையும் இருப்பதால், உற்றார்- உறவினர், அக்கம்பக்கத்தாரின் கண் திருஷ்டியும் பொறாமையும் உங்கள் வேகத்தைத் தடுக்கும். பொதுவாக கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பமுடியாது. யாரை நம்புவது என்ற மனக்குழப்பத்துக்கு ஆளாகித் தடுமாறுவீர்கள். சொந்த வியாபாரம் செய்கிறவர்களுக்கு போட்டியும் பொறாமை யும் அதிகமாகவே காணப் படலாம். அதற்காக உங்கள் லாபத்தை விட்டுக் கொடுத்து வியாபாரம் செய்ய நினைக்க வேண்டாம். ஆறு நிறைய வெள்ளம் ஓடினாலும், நாழி முகவாது நா- நாழி! அதாவது கால்படி உழக்கு கால்படி அளவுதான் கொள்ளுமேதவிர, அரைப் படி நீர் கொள்ளாது. உங்களுக்கென்று இருப் பதை யாரும் தடுக்க முடியாது. யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமென்று இருக்கிறதோ அது எப்படியும் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக் கிழமைதோறும் அவரவர் வயதுடன் ஒரு எண்ணிக்கை சேர்த்து, அத்தனை மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி காலபைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து தீபமேற்றவும்.

மிதுனம்

Advertisment

மிதுன ராசிநாதன் புதன் தன் ராசியில் ஆட்சிபலம் பெறுகிறார். அவருக்கு சனி- கேது பார்வை; ராகு, செவ்வாய் சம்பந்தம். குரு மறைவு; பார்வை இல்லை. சந்தையில்- சண்டையில் விட்டெறிந்த செருப்பு சனி பிடித்தவன் தலையில் என்று சொல்வார்கள். கலவரப் பகுதியில் போலீஸ் கலவரத்தை அடக்க தடியடி நடத்தும்போது கலவரக்காரர்கள் ஓடி ஒளிந்துகொள்வார்கள். அப்பாவி போக்கு வரத்துக்காரர்கள்மீதுதான் அடிவிழும். அது போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் உங்கள்மேல் வீண்பழியும் பாவமும் வந்து சேரும் நேரம்! ஆகவே மிகவும் கவனமாக, ஜாக்கிரதையாக, முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டும். பரீட்சித்து மகாராஜா பாம்பு கடித்து மரணம் அடையவேண்டும் என்ற சாபத்துக்கு பயந்து, கடல் நடுவே படகு வீட்டில் ஒளிந்திருந்தானாம். அப்போது பொன்னிறத்தில், ஒரு எலுமிச்சம்பழம் கட−ல் மிதந்துவர, அதை வேலையாட்களிடம் சொல்லி− எடுத்துவரச்செய்து முகர்ந்து பார்த்தானாம். உடனே அதற்குள் இருந்த பாம்பு அவனைத் தீண்டியதாம். ஆக, நிழலுக்கு மரத்தடியில் ஒதுங்கினாலும் கொப்பு ஒடிந்து தலையில் விழும்- காயம்படும்! அதுதான் நேரம்- காலம் அல்லது விதி!

பரிகாரம்: திருவாரூரில் மடப்புரம் பகுதியில் குரு தட்சிணாமூர்த்தி அவ தூதர் ஜீவசமாதி சென்று வழிபடலாம்.

கடகம்

கடக ராசிக்கு செவ்வாய்- புதன், ராகு 12-லும், சனி, கேது 6-லும் மறைகிறார்கள். எதைச்செய்தாலும் எதிர்மறைப்பலனும் விரயமுமாக நடக்கும் காலம்! மாவு விற்கப் போனால் காற்றடிக்கும். உப்பு விற்கப்போனால் மழை பொழியும்! என்றாலும் குரு 5-ல் நின்று ராசியையும், 9-ஆம் இடம் பூர்வபுண்ணியத்தை யும் பார்ப்பதால், நம்பிக்கை, தைரியம், வைராக்கியம், விடாமுயற்சி ஆகியவற்றை உங்கள் இலட்சியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால், எதிர்ப்புகளையும் விரயங்களையும் எதிர்கொண்டு சமாளிக்கலாம். போஜ மகாராஜனுக்கு ஒருசமயம் கஷ்டகாலம் ஆரம்பித்தது. அவன் அஷ்டலட்சுமி பூஜை செய்கிறவன். ஆதிலட்சுமி அவனிடம், ""உனக்கு நேரம் சரியில்லாததால் உன்னைவிட்டு ஒதுங்கிப்போகும் சூழ்நிலை வந்துவிட்டது. என்றாலும் உன் பக்திக்காக எங்களில் யார் ஒருவர் வேண்டும் என்கிறாயோ, அவரை மட்டும் உன்னிடத்தில் விட்டுவிட்டு, மற்ற ஏழுபேரும் விலகிக்கொள்கிறோம்'' என்றதும், ""தைரியலட்சுமி மட்டும் என்னுடன் இருந்தால் போதும்'' என்றான். மறுநாள் பூஜையில் அஷ்ட லட்சுமிகளும் அங்கிருக்க, ""தைரியலட்சுமி எங்கிருக்கிறாளோ அங்கே மற்ற ஏழுபேரும் இருப்பதாக எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம்'' என பதில் வருகிறது. ஆகவே தைரியம் புருஷலட்சணம். அது உங்களிடம் உண்டு.

பரிகாரம்: சுதர்சன சக்கரத்தாழ்வாரை வழிபடுவது உத்தமம்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் 10-ல் பலம்பெறுகிறார். 16-ஆம் தேதி (மாத மத்தியில்) 11-ஆம் இடம் மாறுவார். 11-ல் செவ்வாய், புதன், ராகு சம்பந்தம். குரு 2-ஆம் இடத்தையும், மாத முற்பகுதிவரை ராசிநாதன் சூரியனையும் பார்க்கிறார். எனவே மலையே விழுந் தாலும் மனம் குலையாத நிலையில் உங்களுக்கு தைரியமும் துணிச்சலும் நிலவும்! விடாமுயற்சியும் தளராத நம்பிக்கையும் உங்களுக்கு தன்னம்பிக்கையூட்டும்! கிரேக்க மாமன்னன் அலெக்ஸாண்டர் ஒருசமயம், புருஷோத்தமன் (புருஷ்) என்ற ராஜபுத்திர மன்னனை போரில் வென்று கைவிலங்கிட்டு, ""உன்னை எப்படி நடத்த வேண்டும்'' என்றா னாம். அதற்கு அவன், ""கைவிலங்கை நீக்கி ஒரு மன்னனுக்குரிய மரியாதையோடு என்னை நடத்தவேண்டும்'' என்றானாம். அதன்படியே அவனை விடுதலைசெய்து, நண்பனாக ஏற்றுக்கொண்டானாம். அது மாதிரி சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு இக்காலம் வெற்றியைத் தேடித்தரும் காலம்! மறைந்த முதல்வர் ஜெயலலி−தா மக நட்சத்திரம், சிம்ம ராசி. அவர் வாழ்ந்த காலம், அவர் சாதித்த செயல்கள் அல்லது சாதனைகள் நாடறிந்த சமாச்சாரம்தானே!

பரிகாரம்: திருபுவனம் சரபேஸ்வரரை ராகு காலத்தில் வழிபடலாம்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் பலம்பெறுகிறார். அவருடன் 6, 11-க்குடைய செவ்வாயும் ராகுவும் சேர்ந்திருக்க, சனியும் கேதுவும் பார்க்கிறார்கள். 4, 7-க்குடைய குரு 3-ல் மறைவு. எனவே சிலருக்கு தேக ஆரோக்கியத்திலும், சௌக்கியத்திலும் பிரச்சினை. சிலருக்கு குடியிருக்கும் மனையில் பிரச்சினை. சிலருக்கு வாகனத்தால் நஷ்டம்- விரயச்செலவு! சிலருக்கு வாங்கிப்போட்ட காலிலி−மனையில் வில்லங்கம், விவகாரம்! இவை எதுவும் இல்லையென்றால் 4-ஆம் இடம் தாய் ஸ்தானம்- அங்கு சனி, கேது இருப்பதால், தாயாருக்கு வைத்தியச்செலவு அல்லது தாய்- பிள்ளை உறவில் வருத்தம் போன்ற பலன்கள் உருவாகலாம். ஒருசிலரின் அனுபவத்தில் மகன் வீட்டில் எல்லா சௌகர்யங்களையும் அனுபவித்துக்கொண்டு, மகனுக்குப் பிடிக்காத மகளோடு ரகசியத் தொடர்புகொண்டு உளவு சொல்வதால் பிரச்சினை வெடிக்கும்! ஆக இப்படி ஏதாவது சில சங்கடங்கள் அல்லது பாதிப்புகள், தாயார் அல்லது தாயாதிவர்க்கம் அல்லது பூமி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் ஏற்படலாம்.

ras

பரிகாரம்: செவலூர் (பொன்னமராவதி அருகில்) சென்று பூமிநாத சுவாமியை வழிபடலாம். அல்லது திருச்சி மார்க்கெட் அருகில் பூலோகநாத சுவாமியை வழிபடலாம்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ஆம் தேதிமுதல் ரிஷபத்தில் ஆட்சிபெறுகிறார். அது துலா ராசிக்கு எட்டாமிடம். அவருடன் சூரியன் லாபாதிபதி- பாதகாதிபதி சம்பந்தம். 16-ஆம் தேதிக்குமேல் சூரியன் 9-ல் மாறுவார். உங்கள் திட்டங்கள், எண்ணங்களில் இருக்கும் வேகமும் ஆர்வமும், செயல்களில் எதிர்பார்க்க முடியாது. "ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றி அதுவரினும் வந்தெய்தும்; ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும்; எனையாளும் ஈசன் செயல்'' என்று ஒரு புலவர் பாடினார். அதுபோல சிலசமயம் "நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று; அதனால் முழிக்குது அம்மாக்கண்ணு' என்று திரைப் படத்தில் பாடியமாதிரி நடக்கும். இருந்தாலும் மாதப்பிற்பகுதியில் 16-ஆம் தேதி 11-க்குடைய சூரியன் 9-ல் மாறிய பிறகு, இந்த பாதிப்புகள் எல்லாம் விலகியோடிவிடும். புலிலி− பதுங்குவது பாய்வதற்குத்தான் என்று சொல்லுமளவு, வேகத்தோடும் விறுவிறுப்போடும் வீறு கொண்டு எழுந்து போராடுவீரர்கள். சோதனை களைச் சூறையாடி சாதனைகளைப் படைப்பீர்கள். வேதனைகளை விலக்கி விடுவீர்கள்.

பரிகாரம்: வாராஹி அம்மனை வழிபடுவது நல்லது. அல்லது பிரத்தியங்கரா தேவியை வழிபடலாம். மானாமதுரை அருகில் வேதியரேந்தல் விலக்கு என்ற இடத்தில் பிரத்தியங்கரா தேவி ஆலயம் உண்டு. அதே போல தேவகோட்டையிலும் (பட்டுநகரில்) பிரத்தியங்கரா தேவி சந்நிதி உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவு. மாதக்கடைசியில் 24-ஆம் தேதி கடகத்தில் நீசமாக மாறுவார். என்றாலும் அவருக்கு ஜென்ம குரு பார்வை கிடைப்பதால், நீசபங்க ராஜயோகம் அடைவார். உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளை குரு உருவாக்குவார். சகோதர வகையிலும் எதிர்பாராத நன்மைகளை எதிர்பார்க்கலாம். 10-க்குடைய சூரியன் 16-ஆம் தேதிமுதல் 8-ல் மறைவதால் தொழில்துறையிலும், வேலை அல்லது உத்தியோகத்திலும் பிரச்சினைகளை சந்திக்கும் நிலை. "நல்லா பொதி சுமக்கும் மாட்டின் முதுகில் அதிகம் இரண்டு மூட்டையை ஏற்று' என்று சொல்லுமளவு சுமைகூடும். அனுதாபத்தாலோ பொறாமை யாலோ அவற்றையெல்லாம் நீங்கள் சுமந்து, வாய் பேசாமல் மௌனமாக இருந்து நிறைவேற்ற வேண்டும். இது குருவால் ஏற்படும் பெருமையா? அல்லது உங்களுடைய திறமைக்கேற்ற பரீட்சையா? எப்படி வேண்டுமானா லும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இது ஏழரைச்சனி உங்களுக்கு ஏற்படுத்தும் சோதனை!

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் மிளகு தீபமேற்றி வழிபடவும். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றக்கூடாது. நல்லெண்ணெய் திரிதீபம் ஏற்றலாம்.

தனுசு

தனுசு ராசிக்கு இப்போது ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. ராசிநான் குரு 12-ல் மறைவு என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் சனியைப் பார்ப்பது ஒருவகையில் நல்லது; இன்னொரு வகையில் கெடுதல். செவ்வாய்- சனி சமசப்தமப் பார்வையாக இருந்தால் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் என்பது பொதுவிதி. ஆனால் செவ்வாய்க்கு வீடுகொடுத்த புதன் அங்கு ஆட்சி என்பதால், விதிவிலக்கும் உண்டு. செவ்வாய் சகோதரகாரகன். சனி ஜீவனகாரகன், தொழில் காரகன். எனவே தொழில், வேலை, உத்தி யோகத்தில் டென்ஷன், வேலைப்பளு, சுமை அதிகமாக இருக்கும். சிலருக்கு சரீர உபாதைகளோ அல்லது மனத்தளவில் வெளியில் சொல்லமுடியாதபடி வேதனைகளோ உண்டாகலாம். அதேசமயம் பொருளா தாரம், வரவு- செலவு, காசுபணம் ஆகியவற்றில் எந்தக் குறையும் இருக்காது. ஒருசிலிலரின் சொந்த அனுபவம்- வீட்டு வேலைக்கு விசுவாசமான வேலையாட்கள் அமையாது. அல்லது அலுவலக நிர்வாகத்திற்கு உண்மை யான ஊழியர்கள் அமையாது. இதெல்லாம் ஜென்மச்சனியின் விளையாட்டு.

பரிகாரம்: சேங்கா−புரம் தத்தாத்ரேயர் கோவி−ல் கார்த்தவீர்யார்ஜுன எந்திர வழிபாடு செய்யலாம். அல்லது அந்த மந்திரத்தை வீட்டில் 108 முறை பாராயணம் செய்யலாம்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 12-ல். அவருக்கு வீடுகொடுத்த குரு அதற்கு 12-ல். குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் அதற்கு 8-ல் மறைவு (24-ஆம் தேதி); கடகத்தில் நீசம்! சிலசமயம் மன அமைதியற்ற நிலையும், வருத்தங்களும் உண்டாகும். தவிர்க்கமுடியாத செலவுகளும் விரயங்களும் உண்டாகும். சிலசமயம் ஒருபொருளை வாங்க முன்கூட்டியே பணத்தைக் கொடுத்துவிட்டு, பொருளையெல்லாம் வாங்கி முடித்தபிறகு கடைக்காரர் பணம் தரவில்லை என்று சாதிப்பதால் இரண்டாவது முறையும் பணம் கொடுக்கும் சூழ்நிலை ஏற்படும். அதேபோல பஸ்ஸில் வாங்கிய டிக்கெட் காற்றில் பறந்துபோக- செக்கிங் வரும் நேரம் மறுபடியும் டிக்கெட் எடுக்கவேண்டிய கட்டாயம் உண்டாகும். இதெல்லாம் விரயச்சனியின் வேலை! அதனால் பணவரவு, கொடுக்கல்- வாங்கல் கணக்கில் கையோடு எழுதி, ரிக்கார்டு செய்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் "டபுள் பேமென்டு' ஆகிவிடும். சிலர் பயணத்தில் பர்சைத் தொலைக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். கவனம்!

பரிகாரம்: விரயச்சனியைத் தவிர்க்க சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபமேற்றலாம் அல்லது ஆஞ்சனேயருக்கு வெண்ணெய்க்காப்பு சாற்றலாம்; நெய் தீபமேற்றலாம்.

கும்பம்

கும்ப ராசிநாதன் 11-ல் இருந்து ராசியைப் பார்ப்பது சிறப்பு. அவருக்கு வீடுகொடுத்த குரு 10-ல் பலம்பெற்று 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். பொருளாதாரத்தில், வரவு- செலவு, கொடுக்கல்- வாங்கலி−ல் எந்தக் குறைகளும் இல்லை; குறிப்பிட்டபடி செயல்படும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். 4-ல் சுக்கிரன், சூரியன் சேர்க்கை. ஆரோக்கியத்திலும் கவலையில்லை. குடும்பத்தில் நிலவும் வைத்தியச்செலவுகளை வழியனுப்பிவிடலாம். எல்லாருக்கும் நல்லபடியாக ஆரோக்கியமும், தேக சுகமும் உண்டாகும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படலாம். அது முன்னேற் றத்தைக் குறிப்பதாகவோ அல்லது லாபம் உடையதாகவோ அமையலாம். வேறுசிலர் பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் மாற்றியமைக்கலாம். வாகனம் இல்லாதோர் புதிய வாகனம் வாங்கலாம். அதற்குக் கடன் வசதியும் அமையும். எளிய தவணைமுறைக் கடனாக அமையம். அல்லது இடம், பூமி, மனை சம்பந்தமான சுபச் செலவு ஏற்படலாம்.

பரிகாரம்: வெள்ளிக் கிழமைதோறும் சுக்கிரனுக்கு நெய் தீபமேற்றலாம். அல்லது சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடலாம். அவரது மந்திரத்தைப் பாராயணம், ஜபம் செய்யலாம்.

மீனம்

ராசிநாதன் குரு 9-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்க்கிறார். அதுமட்டுமல்ல; 10-க்குடைய குரு 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 9-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந் தாலும், மாதக் கடைசியில் 26-ஆம் தேதி கடகத்தில் நீசபங்க ராஜயோகம் பெற்று குரு பார்வையைப் பெறுவார். அப்போது 9-க்குடையவருக்கு 10-க்குடையவர் பார்வை என்பதால், தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகும். ஆகவே குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். அதனால் "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடும் பரவச நிலை உண்டாகும். சிலர் இருப்பிடத்தைவிட்டு வெளியூர் போகலாம். அங்கு அவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பும் ஆதரவும் பெருகும். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதுபோல, யோகக்காரருக்கு ஆண்டவன் காவல்காரனாக இருந்து அருள்புரியலாம். அதிர்ஷ்டசாலி− மட்டுமல்ல; யோகசாலியும் ஆவீர்கள்.

பரிகாரம்: அன்னை ராஜராஜேஸ் வரியின் அம்சமாகத் திகழும் புவனேஷ் வரியை வழிபடலாம். அல்லது ஸ்ரீசக்கர வழிபாடு செய்யலாம்.