1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாத முற்பகுதி நல்ல பணவரவைக் கொடுக்கும். நீங்கள் எண்ணிய காரியங்கள் வேகமாக நடக்கும். மாதப் பிற்பகுதியில் நிறைய செலவும் அலைச்சலும் தடங்கலும் ஏற்படும். எனவே மாத முற்பகுதியில் முக்கிய மான விஷயங்களை நடத்திவிடுங்கள். தொழில் நல்ல லாபத்தை அள்ளித்தரும். தொழில் சம்பந்தமான நல்ல குறுஞ்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். ஊடகத்துறையினர், பத்திரிகைத் துறையினர் பாராட்டும் மேன்மையும் பெறுவர். அடுக்குமாடி கட்டடங்களை விற்கும் தரகர்கள் அதிக லாபம் பெறுவர். அரசுத் துறையின் ஒப்பந்தம், குத்தகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். உங்களில் சிலர் மனை வாங்குவீர்கள். சிலரது பெற்றோர் கற்பனை பயம் கொள்வார்கள். பங்கு வர்த்தகம் பயன் தராது. சிலருக்கு வேலையில் மாற்றமுண்டு. வியாபார பங்குதாரர்கள் மாறக்கூடும்.
அரசுப்பணியாளர்கள் பணப்புழக்கம் குறைவான இடத்துக்கு மாறுதல் பெறுவர். கோவில் மனை சார்ந்த விஷயங்கள் எதிர்பாராத நிகழ்வைக் கொடுக்கும். கலைத் தொழிலாளர்கள் நல்ல லாபமும் மேன்மையும் பெறுவர். கலையுலகில் நீங்கள் நீண்டநாள் எதிர்பார்த்த ஏற்றமான விஷயம் நடக்கும். தொழில் செய்பவர்கள், கடை வியாபாரிகள் இன்னும் பல கிளைகள் ஆரம் பித்து மேன்மை காண்பர். இதன்பொருட்டு அரசு அதிகாரிகளுக்கு அதிகம் செலவிட வேண்டி வரலாம். மனதில் நம்பிக்கையும் உறுதியும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: வயதான அந்தணருக்கு ஆடை கொடுங்கள். இந்த எண்களில் பிறந்த வர்கள் உங்கள் தொழில் நிறுவனத்தை 28, 37, 46, 63, 73, 100 என பெயர் வருமாறு அமைத்துக் கொண்டால் நல்ல மேன்மை பெறலாம்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாத முற்பகுதியில் அதிக செலவு களால் அல்லல்பட நேரிடும். மாதப் பிற்பகுதி யில் நிலைமை சீரடையும். இளைய சகோதரர்மூலம் ஏற்பட்டிருந்த அலைச்ச லும் செலவும் கட்டுக்குள் வரும். வேலை யாட்கள் பிரச்சினை தீரும். நழுவிப்போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும்.
அரசுமூலம் வரவேண்டிய ஒப்பந்த டெண்டர் தொகை கிடைக்கும். வீட்டை, வீட்டின் வசதியை மேம்படுத்த அல்லது அழகு படுத்த செலவுசெய்ய நேரும். உங்கள் தாயார், மூத்த சகோதரி வீட்டுக்கு இடம் பெயர்வார். வெளிநாட்டுப் பங்குகள் பரபரப்பாகும். சிலருக்கு பிறமத காதல் துளிர்விடும். உங்களில் சிலரது ஒரு கெட்ட வழக்கம் வெளியே தெரியவரும். அதனால் கௌரவம் சற்று கலவரமாகும். வேலையில் மேன்மையுண்டு. வேலையில்லாதவர்கள் உங்கள் தந்தை சார்ந்த அல்லது ஆன்மிகம் சார்ந்த வேலைக்குச் செல்வீர்கள். வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு சிலருடன் மனஸ்தாபம் ஏற்பட்டு விலகும். உங்களது இல்வாழ்க்கைத் துணையுடன் சற்று மன வேறுபாடு உண்டாகும். மேலும் மூன்றாம் நபர் தம்பதிகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தக்கூடும். உங்கள் தொழிலில் வெளிநாட்டு சம்பந்தம் ஏற்படும். சிலருக்கு முன்பிருந்த வெளிநாட்டுத் தொடர்புகள் தற்போது புதுப்பிக்கப்படும். உங்களது லாப முன்னேற்றம் செலவையும் சேர்த்துக் கொண்டுவரும். சிலரது வாரிசுகள் வெளிநாடு செல்வர். தாமதப்பட்டுக்கொண்டிருந்த திருமணங்கள் இப்போது நடக்கும். கலைத் துறையினரில் பலர் வெளியூர், வெளிநாடு செல்வீர்கள். அது தொழில் லாபம் பொருட்டு அமையும். உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆங்கில மருத்துவம் தவிர்த்த மருந்துகளைப் பின்பற்றுவீர்கள். குழந்தைப்பேறுக்கு செயற்கை முறைகளை சிலர் முயற்சிக்கத் தொடங்குவீர்கள். வீடு சார்ந்த முதலீடு உண்டு.
அதிர்ஷ்ட எண்

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: வயதானவர்களுக்கு அன்னதானம் செய்யவும். உங்கள் தொழில் நிறுவனத்திற்கு 11, 29, 38, 47, 101 என எண் வருமாறு பெயர் அமைத்தால் தொழில் நல்ல மேன்மை, லாபம் தரும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்களுக்கு இந்த மாதம் வீடு குத்தகைக்கு எடுக்கும் வகையில் செலவுண்டு. பணவரவு ஏற்ற- இறக்கமாக அமையும். உங்களது சொற்கள் உங்களுக்கு எதிராக- எதிரியாக அமையக்கூடும். இளைய சகோதரருடன் கருத்து வேறுபாடு வந்து விலகும். உங்களது வாரிசுகள் வகையில் வெளியூர், வெளிநாடு சார்ந்த செலவுண்டு. உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் உங்களது மூத்த சகோதரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். சிலருக்குத் திருமணம் நடக்கும். வரன் அரசு வேலை பார்ப்பவராக அமைவார். கலைத்துறையினர் உடன் பணிபுரிபவர்களுடன் சற்று மனஸ்தாபம் கொள்ளலாம். இந்த மாதம் அரசு அதிகாரிகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். அரசியல்வாதிகள் தங்கள் தொழிலில் பொருட்டு நிறைய நபர்களை சந்திப்பார்கள். அதனால் நல்ல லாபமும் பெறுவார்கள். தொழில் முனைவோர் தங்கள் தொழில் சார்ந்த பங்குதாரரைத் தேர்ந்தெடுப்பதென்றால் முதலிரண்டு வாரங்களில் மட்டும் பயன்படுத்தவும். அதன்பிறகு பங்குதாரர்களால் தொல்லைகள் மட்டுமே ஏற்படும். மாதப் பிற்பகுதியில் கடைசி இரண்டு வாரங்கள் அரசு அதிகாரி களால் இம்சை ஏற்படும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. தொழில் புரிவோர் இந்த மாதம் முக்கியமான முடிவு களைத் தள்ளிப்போடவும். உங்கள் மனைவி யின்மூலம் ஒரு வெகுமானம், சன்மானம் கிடைக்கப்போகிறது. சமையல் கலைஞர்கள் நிறைய ஒப்பந்தம் பெறுவர். உங்களது மாமியார்- மாமனாருக்கு சற்று உடல்நல பாதிப்பு ஏற்படும். சிலரது வீட்டுத் திருமணத் தில் நகை திருட்டுபோகும் வாய்ப்புண்டு; கவனம் தேவை. சிலர் திருமணத்துக்காக கடன் வாங்குவீர்கள். பங்கு வர்த்தக முதலீடு செய்வீர்கள். விவசாய விதைகள் லாபம் தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 7, 16, 25.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: உங்கள் தந்தை வயதுடைய ஒருவருக்கு ஆபத்து உதவி செய்யுங்கள். உங்கள் தொழில் நிறுவனத்தின் பெயரை 21, 30, 48, 57, 66, 93, 102 என வருமாறு வைத்துக்கொள்வது சிறப்பு.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்களுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை போன்ற வேலை சம்பந்தமான தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். அதீத ஆற்றல் பெருகும். உங்களில் சிலர் பிற மத- இன மனிதர்களிடம் மிகுந்த கோபம் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். அரசு சார்ந்த கல்வி வாய்ப்புகள் கூடிவரும். பத்திரிகை, ஊடகத்துறையினர் அதிக வேலையால் அல்லல்படுவர். அரசு சார்புடைய வீடுகள் கிடைக்கும். வீடு சம்பந்தமாக கடன் கிடைக்கும். பூர்வீகம் சார்ந்த ஒரு நல்நிகழ்வு நடக்கும். நீங்கள் அல்லது உங்களது சகோதரர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் ஆன்மிக யாத்திரை செல்வீர்கள். தொழிலில் லாபம், நீர்ப் பொருட்கள்மூலம் கிடைக்கும். சிலர் தாயார் பெயரிலுள்ள வீட்டின்மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். திருமண அமைப்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் பணவரவு அதிகம் புழங்குவர். உங்களில் சிலர் கலை சம்பந்தமான பயிற்சியில் சேர்வீர்கள். திரைப்படத் துறையினரில் வெளிச்சம், உணவு, கலை இயக்குனர் போன்றோர் வேலை மிகுந்து பரபரப்பு காண்பர். பழமையான தொழில்களில்- பழங்கால உணவு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். சிலர் பிறரைப் பழிவாங்கும் செயல்களில் வெற்றியடைவீர்கள். சொந்த ஊரிலிருந்து பணியாளர்களை அழைத்துவருவீர்கள். பங்கு வர்த்தகம் பற்றி பிறருக்கு விளக்கிக் கூறுவீர்கள். உங்களது நெடுநாளைய நோய்க்கு சரியான மருத்துவரையும், தகுந்த மருந்தையும் கண்டுபிடிப்பீர்கள். நிறைய கனவுகள் வரும். சிலர் யோகா, தியானம் கற்றுக்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: சந்நியாசிகளுக்கு ஏதேனும் உதவிசெய்யவும். உங்கள் வியாபார விருத்திக்கு 22, 31, 58, 67, 103 என பெயர் அமைத்துக்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நிறைய முதலீடு செய்வீர்கள். அது சொந்தத் தொழில், வீடு, ஆன்மிக சம்பந்தம், தந்தையின் பொருட்டு, வெளிநாட்டு விஷயம் என ஏதோ ஒன்றின் பொருட்டு முதலீடு செய்வீர்கள். உங்களில் சிலர் கல்வி, வியாபாரம் விஷயமாக வெளிநாடு செல்வீர்கள். சிலர் பேரன்- பேத்தியைப் பார்க்க வெளியூர், வெளிநாடு செல்லலாம். சிலருக்கு மறுமணம் இடமாற்றம் தரும். கலையுலகினர் தங்கள் துறைசார்ந்து பணம் போட்டு திரைப்படம் ஆரம்பிப்பர். கையில் பணம் செழிக்க இருப்பினும், அதனை ஏதோவொரு வகையில் செலவழித்துவிடுவீர்கள். அது சுபச் செலவாக அமையும். சிலர் ஆசிரியர், பேராசிரியர் வேலையில் சேர்வீர்கள். சிலருக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்கும். பத்திரிகை, ஊடகத்துறையினர் சில சிக்கல் களில் அகப்பட நேரும். வீடு மாற்றும் தரகர் களும் கவனமாக இருக்கவேண்டும். உங்களது இளைய சகோதரர் எங்காவது காயம்பட வாய்ப்புண்டு. சிலருக்கு சொந்தத்தில் திருமணம் நிச்சயமாகும். சிலரது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். இந்த மாதம் விவசாயப் பெருமக்கள், பயணம் செய்வோர், மின்சாரத் துறையில் பணிபுரிவோர், நெருப்பு சார்ந்த வேலை செய்வோர் என இவர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும்; எதிர்மறைச் செயல்கள் நடக்க வாய்ப்புண்டு. உங்களில் சிலர் பதவி உயர்வு பெறுவீர்கள். அரசு அதிகாரிகள் வேறிடம் செல்வர். அரசியல்வாதிகள் வேறு துறை அல்லது அமைச்சர் பதவி பெறுவர். அடுக்குமாடி வீடு கட்டுவோர் நிறைய வேலைவாய்ப்பு பெறுவர். உங்களின் மூத்த சகோதரர் புதிய வேலைவாய்ப்பு பெறுவார். குழந்தைப்பேறு வேண்டுவோர் புத்திர பாக்கியம் பெறுவர். உயர்கல்வி உயரும். இந்த மாதம் வேலைக்காரர்கள் தொல்லை தருவர். ஒப்பந்தம் சற்று குழப்பத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: இளைஞர்கள் காயம் பட்டுவிட்டால் அவர்களது மருத்துவச் செலவுக்கு உதவிசெய்யவும். மேலும் சைக்கிள் போன்றவற்றைப் பழுதுபார்க்கும் செலவை ஏற்றுக்கொள்ளவும். உங்களது தொழில், வியாபாரப் பெயரை 14, 23, 41, 50, 59, 77, 86, 95 என வைத்துக்கொண்டால் தொழில் சிறப்படையும்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் ஆன்மிகப் பயணம் நிச்சயமாக உண்டு. மிகவும் சங்கடம் தருமென எண்ணிய விஷயங்களும் அதிர்ஷ்டத்தை அழைத்துவரும். இந்த தேதிகளில் பிறந்த அரசியல்வாதிகள் நல்ல மேன்மையும் ஏற்றமும் பதவியும் பெறுவர். பலருக்கு பதவியேற்பு வைபவம் கிடைக்கும்; நடக்கும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வுண்டு. இந்த மாதம் சிலரது குடும்பத்தில் கலப்புத் திருமணம் நடக்கும். சிலருக்கு ஒப்பந்த வேலை அமையும். பழைய வீடு வாங்க இயலும். சிலர் வாடகை வீட்டை மாற்றுவீர்கள். உங்கள் வாரிசுகள் இடம் மாறுவர் அல்லது வேலை மாறுவர். பங்கு முதலீடு உண்டு. கொழுப்பு சார்ந்த நோய்த் தொந்தரவு சிலருக்கு வரும். பிற மத பங்குதாரர்களிடம் பிணக்கு ஏற்படக்கூடும். பழங்காலக் கலைஞர்கள் சிலர், நோயிலிருந்து மீண்டுவந்த கலையுலக சம்பந்தம் உடையவர்கள் புதிய வாய்ப்பு பெறுவர். முனைவர் பட்டம் போன்ற ஆய்வுக் கல்வியுடையவர்கள் அதிக தரவுகள் பெற்று, ஆராய்ச்சியைப் பூர்த்திசெய்யும் நிலைக்குச் செல்வர். கணக்கு போன்ற ஆடிட்டிங் கல்வி கொண்டோர் அரசுவேலை கிடைக்கப்பெறுவர். இந்த மாதம் அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். எனவே அது சார்ந்த முயற்சியில் ஈடுபடுவது நல்லது. கோவில் பயணமும் காணிக்கை செலுத்துவதும் நடக்கும். இந்தத் தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தை அரசுப்பணி கிடைக்கப் பெறுவார். சமையல் கலைஞர்கள் அலைச்சலும் வாய்ப்பும் பெறுவர். சிலருக்கு மறுமணம் நடக்கும். உங்களது தந்தை ஒரு அதிர்ஷ்ட நிகழ்வை அனுபவிப்பார். இந்த மாதம் உங்களுக்கு மறதி ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் பொருட்களைத் தொலைத்துவிட்டோமோ, மறதியால் எங்காவது வைத்து விட்டோமோ எனும் குழப்பத்தில் மாதம் ஓடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: கோவிலில் வேலைசெய்யும் பெண்களுக்கு உதவுங்கள். உங்கள் வியாபாரம், தொழில் பெயரை 15, 24, 60, 87, 96 என வருமாறு அமைத்துக் கொண்டால் நல்ல யோகம் பெறுவீர்கள்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களில் சிலருக்குத் திருமணம் நடக்கும். வரும் வரன் ஒன்று கோபக் காரராக அமைவார் அல்லது பிற இன, மத வரனாக அமைவார். உங்கள் குடும்பத்தில் சொத்து பாகப்பிரிவினை நடக்கும். ஏதோ வொரு வகையில் காவல் துறையினரின் சந்திப்புண்டு. கலைத்துறையில் கற்பனை சம்பந்தம் கொண்ட எழுத்தாளர்கள், கலை இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் போன்றோர் மிகுந்த மதிப்பு பெறுவர். அரசு சம்பந்தமாக வரி செலுத்துவது போன்றவகைகளில் அலைச்சல் ஏற்படும். என்றாலும் அரசுசார்ந்த கணக்கு வழக்குகளை சீர் செய்துகொள்வீர்கள். தாய்மாமன் வகையில் செலவுண்டு. கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வீர்கள். உங்களில் சிலரது தாயார் மூட்டுவலியால் சிரமப்படுவார். உங்களில் சிலரது தந்தை எங்கே ஊர் சுற்றப் போகலாம் என்று சுறுசுறுப்பாக அலைவார். கணக்கு, வரிவிதிப்பு சம்பந்தமான உயர்கல்வி யில் மாணவர்கள் மிளிர்வார்கள். கோவில், மடங்கள், குளக்கரை என இவற்றைத் தூய்மைப் படுத்தும் உழவாரப் பணியில் ஈடுபடுவீர்கள். ஆலயம் சம்பந்தமான டெண்டர் கிடைக்கும். உங்கள் இளைய சகோதரியின் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் சற்று செலவு கைமீறும். உங்கள் உடல்நல மேன்மைக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வீர் கள். உங்களில் சிலர் மடங்கள், மடாதிபதி களுடன் சற்று கருத்து வேறுபாடு கொள்வீர் கள். உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் ஏதோவொரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: இந்த மாதம் காவல்துறை மற்றும் பிற இனத்தவரிடம் கவனமாக இருக்கவேண்டும். தந்தை வயதுள்ளவர்களுக்கு ஏதேனும் புத்தகம் தேவைப்பட்டால் வாங்கித் தரவும். உங்கள் தொழில், வியாபாரம் செழிக்க பெயர் எண்ணை 43, 70, 79, 106 என வருமாறு அமைத்துக்கொள்வது நன்று.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் செய்த வேலையையே திரும்பவும் செய்யும்படி நேரும். வேண்டாத அலைச்சல்கள் நிறைய அமையும். பண வரவு வந்துகொண்டே இருக்க. செலவும் இருந்துகொண்டே இருக்கும். சிலரது வீட்டுப் பணியாளர்கள் வேலையைவிட்டு விலகிவிடுவர். உங்களின் இளைய சகோதரர் வெளிநாட்டு வேலைக்குச் செல்வார். வீடு குத்தகைக்கு எடுப்பீர்கள். ஊடகத்துறையினர் நிறைய அலைச்சல் பெறுவர். வீடு விஷயத்தில் எதிர்மறை லாபம் கிடைக்கும். மனை, வயல், தோட்டம் என பெருக்கமுண்டு. எதிர்மறைச் செயல்மூலம் வேளாண்மைப் பெருக்கம் ஏற்படும். உங்களில் சிலரது தாயார் ஏதாவது குயுக்தியாகச் செய்து ஏழரையைக் கூட்டுவார். சிலரது வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும். தொழில் அமையும். சிலரது வாரிசுகள் கலைத்துறையில் கால்பதிப்பர். சிலரது வாரிசுகள் இன்னல்களை சந்திக்க நேரும். கலைத்துறையினர் வேலைச்சுமையால் திணறுவர். சிலர் கலை சம்பந்தமாக சொந்தத் தொழில் தொடங்குவர். அரசுசார்ந்த வில்லங் கம் ஏற்பட்டு பின்னர் மறையும். உங்கள் தந்தையின், தாய்மாமனின் உடல்நிலையில் கவனம் தேவை. கொஞ்சம் செலவு ஏற்பட்டு கடன் வாங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதம் உண்டு. உங்களுக் கும் வாழ்க்கைத் துணைக்குமிடையே பணம் சம்பந்தமாக மனஸ்தாபம் ஏற்படும். சிலரது வாழ்க்கைத் துணை எங்காவது சிரமப்பட நேரிடும். திருமணப் பேச்சில் தாமதம் ஏற்படக்கூடும். இந்த மாதம் அதிர்ஷ்ட தேவதை அருகில் வந்துவிட்டு, பின்னர் வருகிறேன் என்று திரும்பப் போய்விடுவாள். தொழிலில் சற்று பிரச்சினைகள் ஏற்படும். அது ஏனென்றால் நீங்கள் வியாபாரக் கிளைகள் திறப்பதனால் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: இந்த மாதம் அரசுசார்ந்த கணக்கு வழக்குகளில் கவனமாக இருங்கள். நீங்கள் தொழில், வியாபாரம் ஆரம்பித்தால் 26, 35, 62, 71, 98, 107 என பெயர் வருமாறு அமைத்துக்கொள்வது நலம். கணக்கு ஆசிரியர்கள், கணக்கு சம்பந்தமான வேலை பார்ப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்யவும்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களுக்கு ஏதேனுமொரு வகையில் வெளிநாட்டு சம்பந்தம் ஏற்படும். குடும்பத்தில் சந்தேகக் கீறல்கள் உண்டு. கைப்பேசியானது பணவரவு தரும். இளைய சகோதரி அவசரத்துக்கு பண உதவிசெய்வார் அல்லது கடன் கொடுப்பார். பூர்வீக சொத்து பற்றிய தகவல் வரும். சிலருக்கு ஊடகத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். பழைய வேலையாட்கள் மீண்டும் வேலைக்கு வந்துசேர்வர். அரசு ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் அரசுவேலை பெறுவர். கலையுலகினர் அரசின் பாராட்டு கிடைக்கப்பெறுவர். திரைப்பட நடிகர்- நடிகைகள், லைட்டிங் சம்பந்தம் கொண்டோர், இயக்குனர் துறையைச் சார்ந்தவர்கள் மிகவும் பிரபலம் பெறுவர். உங்களை சந்திப்பவர்களை சற்று சந்தேகத்தோடு அணுகுவீர்கள். இந்த சந்தேகம் உங்களுக்கு சில இடங்களில் இடரை ஏற்படுத்தித் தரக்கூடும். இதனால் பரிகாரம் செய்ய கோவில் கோவிலாக சிலர் அடையக்கூடும். இந்த கோவில் தரிசன புண்ணியம், உங்கள் தொழிலில் மேன்மையையும் லாபத்தையும் தரும். தந்தையின் உடல்நிலையில் மனக்கலக்கம் ஏற்படும். உங்களில் சிலர் பூர்வீக சொத்தை விற்றுக் கடனை அடைப்பீர்கள். இந்தத் தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு அரசுவேலை சம்பந்தமான கைபேசித் தகவல் கிடைக்கும். உங்கள் மாமனார் அல்லது நீங்கள் வீடு மாறுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் வேகமான வாய்ப்பு பெறுவர். வீடு மற்றும் தரகுவேலை செய்வோர் நிறைய வேலைவாய்ப்பு பெறுவர். அரசியல்வாதிகள் கௌரவம் கிடைக்கப்பெறுவர். சில அரசியல்வாதிகள் அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பர்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: இந்த மாதம் வீண் வம்பு வழக்குகளுக்குச் செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். உங்கள் தொழில், வியாபார நிறுவனத்திற்கு 45, 72, 81, 108 ஆகிய எண்களில் பெயர் வருமாறு அமைத்துக்கொள்வது நன்று.
செல்: 94449 61845