மேஷம்
இந்த மாதம் கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதால், தொட்டதெல்லாம் துலங்கும். எடுத்ததெல்லாம் விளங்கும். கருதியதெல்லாம் கைகூடும். 4-ல் உள்ள ராகு சிலசமயம் ஆரோக்கியக்குறைவை உருவாக்கினாலும், 7-ல் உள்ள குரு ராசியைப் பார்ப்பதால், குரு பார்க்க கோடி நன்மை என்பது பொய்யாகாது. கோடி தோஷமும் விலகிவிடும். மாணவ- மாணவியர்கள் டி.வி. பார்ப்பது, மொபைலிலில் பேசுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை விலக்கிவிட்டு படிப்பில் ஆர்வமும் அக்கறையும் கொண்டு பாடுபட்டால் நல்ல பலன்கிட்டும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் தாயாருக்கோ அல்லது தனக்கோ சுகக்குறைவும் வைத்தியச் செலவுகளும் வந்து மாறும். பயப்படத்தேவையில்லை. சிலருக்கு வாகன மாற்றமோ புதுவாகனம் வாங்கும் யோகமோ அமையும். அல்லது பூமி, வீடு, மனைவி யோகம் அமையலாம். அதற்காக சுபக்கடன் வாங்கலாம். தனியார் கடனோ- வங்கிக் கடனோ (ஈ.எம்.ஐ) எதுவானாலும் எளிதாக அடைபட்டுவிடும்.
பரிகாரம்: கடன் நிவர்த்திக்கு கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று சிவ பெருமானை வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு தற்போது அட்டமச்சனி நடக்கிறது. பொதுவாக மற்ற எல்லா ராசிகளுக்கும் ஏழரைச்சனியும் அட்டமச்சனியும் கெடுதல் செய்தாலும், ரிஷப ராசிக்கும் ரிஷப லக்னத்துக்கும், துலா ராசிக்கும் துலா லக்னத்துக்கும் சனி ராஜயோகாதிபதி என்பதால் நூறு சதவிகிதம் கெடுதல் செய்யாது. சந்திர தசையோ சந்திர புக்தியோ அல்லது தீங்கான தசாபுக்திகள் நடந்தால் மட்டுமே சனி நல்லது செய்யமாட்டார். மற்றபடி சனி ரிஷபம்- துலாத்துக்கு நல்லதே செய்வார். அட்டமத்துச்சனியில் சிலருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், பதவி மாற்றம் ஏற்படலாம். அது உயர்வான மாற்றமாக- பலன் தரும் மாற்றமாக- பயன்தரும் மாற்றமாக அமையும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அடிமை வேலையிலிலிருந்து விடுபட்டு சுயதொழில், வாடகை வீட்டிலிலிருந்து சொந்த வீடு என்று இப்படிப்பட்ட மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஒரு உண்மை என்னவென்றால், எந்த ஒரு கிரகமும் நன்மையை மட்டுமே அல்லது கெடுதலை மட்டுமே செய்யாது. அதனால்தான் "ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல' என்று கோளறு பதிகத்தில் சம்பந்தப் பெருமான் பாடினார். தீக்குச்சி தீபம் ஏற்றவும் பயன்படும்- வீட்டைக் கொளுத்தவும் பயன்படும்.
பரிகாரம்: அட்டமத்துச்சனியின் கெட்டபலன் விலக அறந்தாங்கி அருகில் எட்டியத்தளி சென்று வழிபடலாம். காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 5-ல் குரு அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும். கோடி தோஷம் விலகும். எனவே கோட்சார ரீதியாக ஏற்படும் கெடுபலன்களும், ஜாதகரீதியாக (தசாபுக்திரீதியாக) ஏற்படும் கெடுபலன்களும் குருபார்வை இருப்பதால், அதன் வேகமும் கடுமையும் குறையும். எரியும் அடுப்பிலுள்ள பாத்திரத்தை துணியைக் கொண்டு பிடித்து இறக்கினால் சூடு தெரியாது. வெறுங்கையால் தொட்டு இறக்கினால் கை பொசுங்கும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும், 7-ல் சனியும் இருப்பதால் திருமணத்தடை, தாமதம் ஏற்படலாம். திருமணமானவர்களுக்குள் கருத்து வேறுபாடும் ஒற்றுமைக்குறைவும் காரணமில்லாத சச்சரவுகளும் தோன்றலாம். எதிர்வாதம் செய்யாமல்- விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை இருந்தால் எதிர்ப்பையும் வரவேற்றுக் கைகுலுக்கலாம். அப்படியிருக்கும்போது சொந்தக் குடும்பத்தில் உள்ளவர்களோடு ஏன் பகை பாராட்ட வேண்டும்? நீரடித்து நீர் விலகாது- குற்றம் பார்க்கின் சுற்றமில்லை.
பரிகாரம்: நாகதோஷ நிவர்த்திக்கும் குடும்ப ஒற்றுமைக்கும் கும்பகோணம், குத்தாலம் அருகில் கதிராமங்கலம் சென்று ராகு காலத்தில் துர்க்கையம்மனை வழிபடவும்.
கடகம்
கடக ராசியில் (ஜென்மத்தில்) ராகுவும், 7-ல் கேதுவும் இருக்க, 6-ல் சனி நிற்கிறார். சனிக்கு வீடு கொடுத்த குரு கடக ராசிக்கு 4-ல் (துலா ராசியில்) நின்று 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். பணிச்சுமை அதிகமாக இருக்கும். வெட்டி அலைச்சல், வீண் செலவு, நேரம் தவறிய உணவு (அகால போஜனம்) ஒருமுறையில் முடியும் வேலைகளை நாலைந்துமுறை முயற்சித்து முடிக்க வேண்டிய அவலம்! இவற்றையெல்லாம் இப்போது சந்திக்கும் காலகட்டம்! அடிப்படை வாழ்க்கை வசதிகள், சௌகர்யங்களுக்குக் குறைவில்லை. குரு 9-க்குடையவராகி 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அது உங்களுக்குப் பாதுகாப்புக் கவசம் அணிந்த மாதிரி! ஒருசிலரின் அனுபவம்- உங்களுக்கு மேலிலிடத்தாரும் உங்களைக் கலந்து ஆலோசனை கேட்கும் யோகம் உண்டாகும். உங்கள் ஆலோசனைப்படி நடந்தால் நலமும் வளமும் பலமும் பெறலாம். "இவரிடம் என்ன கேட்பது? நமக்குத் தெரியாததா?' என்று "ஈகோ' பார்த்தால் முட்டிக் குனிகிற நிலை ஏற்படும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் கற்கடகேஸ்வரர் கோவில் இருக்கிறது. அம்பாள் நண்டு ரூபத்தில் சுவாமியை வழிபட்டதலம். இந்திரன் நண்டை வெட்டிய தடம்லி லிங்க உருவில் காணப்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு 3-ல் குரு, 5-ல் சனி. அதாவது 6, 7-க்குடைய சனி 5-ல் இருப்பதால், சிலருக்கு புத்திர பாக்கியம் குறைவாக இருக்கும். புத்திர தோஷம் இல்லாமல் புத்திரர்கள் இருந்தால், புத்திரரால் சந்தோஷக்குறைவு அல்லது நிம்மதிக்குறைவு உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சொத்துப் பிரச்சினை முற்றி நீதிமன்ற வழக்காக மாறும். பங்கு பாகங்கள் கேட்டு பிள்ளைகள் தகப்பனாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாம். சிலர் அனுபவத்தில் கணவன்- மனைவி தகராறு விவாகரத்துவரை போகலாம். ஆக 6-க்குடையவர் 5-ல் இருப்பதால் மனதுக்கு வருத்தம், கவலை ஏற்படுத்தும் சம்பவங்களைச் சந்திக்க நேரும். 3-ஆம் இடத்து குரு 8-க்குடையவர் என்பதால் உடன்பிறந்தோர் வகையில் உதவிகள் செய்து சிலர் சங்கடங்களைச் சந்திக்க வேண்டும். அதாவது உடன்பிறந்தவர்களுக்கு வெளியில் ஜாமீன் பொறுப்பேற்றுக் கடன் வாங்கித் தந்திருப்பீர்கள். அவர்கள் அதை நாணயமாகத் திருப்பித் தராமல், உங்கள் நாணயத்தைக் காப்பாற்ற அந்தக் கடனை நீங்கள் சொந்தப் பொறுப்பில் அடைக்கவேண்டிய நிலை ஏற்படும்.
பரிகாரம்: குருவின் திருவருளைப்பெற திருவாரூரில் மடப்புரம் என்ற பகுதியில் குரு தட்சிணாமூர்த்தி மடம் உள்ளது. அவர் ஜீவசமாதி உள்ளது. அங்குசென்று வியாழக்கிழமை வழிபட லாம்.
கன்னி
கன்னி ராசிக்கு 2-ல் குருவும், 4-ல் சனியும், 11-ல் ராகுவும், 5-ல் கேதுவும் அமர்கிறார்கள். குரு கன்னி ராசிக்கு 8-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். தொழில் சம்பந்தமாகவோ வேலை சம்பந்தமாகவோ எடுக்கும் புதுமுயற்சிகள் எல்லாம் நீங்கள் விரும்புவதுபோல நிறைவேறுமா அல்லது எதிர்மறையாக (ஏமாற்றமாக) மாறுமா என்றெல்லாம் சந்தேகம் உண்டாகும். நடக்குமா- நடக்காதா என்றும் ஐயப்பாடு ஏற்படும். ஒரு திரைப்படத்தில் பாடிய மாதிரி "நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும்!' இருந்தாலும் மலையைக் குடைந்து எலியைப் பிடித்த மாதிரி, சிலசமயம் கடினமுயற்சிக்குப் பிறகு சில காரியங்களைச் சாதிக்கலாம். இது அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்ற கணக்கில்தான்! தானாகக் கனிவது ஒருவகை. தடிகொண்டு கனியவைப்பது ஒருவகை. அதாவது கெமிக்கல்போட்டு பழுக்கவைப்பது. இயற்கைப் பழத்துக்கும் செயற்கைப் பழத்துக்கும் சுவை மாறுபடும் அல்லவா! அதுபோல முறையாகப் படித்து டெஸ்ட் எழுதி வேலைக்குப் போவது ஒரு சிறப்பு. பணம் கொடுத்து பாஸ்மார்க் போடவைத்து, சிபாரிசு மூலம் வேலையில் சேர்வது இன்னொரு வகை. முன்னவனுக்கு திறமை இருக்கும். பின்னவனுக்கு அது இருக்காது.
பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டியில் ஜோதி நிர்வாண மௌன குரு சுவாமி ஜீவசமாதி சென்று வழிபடவும்.
துலாம்
துலா ராசியில் ஜென்ம குரு நின்று 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்ப்பதோடு, 3-ல் உள்ள சனியும் 5-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அடிஷனலாக சனி 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார். எனவே இந்த பாவங்களைப் பொருத்து குரு ஆக்கப் பலனையும், சனி தேக்கப் பலனையும் தரலாம். அதாவது, ஆவதும் அழிவதுமான பலன். அதாவது எழுதி யெழுதி அழித்துவிட்டு மீண்டும் எழுதுவதுபோல! ஒருசிலருடைய அனுபவத்தில் ஓட்டைப்பானையில் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து இறைத்து ஊற்றுவதுபோல, முயற்சிகள் எல்லாம் வளர்ச்சியில்லாமல் வீணாகும். ஏழரைச்சனி நடந்த காலத்தில் இப்படி இல்லையே- இப்போது மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று யோசிக்க லாம். 10-ஆம் இடம் தொழில், முயற்சி, வேலை, வாழ்க்கையைக் குறிக்குமிடம். அங்கு ராகு இருக்க கேது பார்ப்பது தான் காரணம்! கேது சுகத்தைக் கெடுப்பார்; கல்வியைத் தடுப்பார்; தாயன்பைக் கொடுப்பார். காரணம் தாய் ஸ்தானாதிபதி சனி (4-க்குடைய வர்) குரு வீட்டில் இருக்க, அவருக்கு 11-ல் குரு இருப்பதுதான்! சிலர் நல்ல காரியங்களுக்காகவும் சுபகாரியங்களுக் காகவும் கடன் வாங்கலாம்.
பரிகாரம்: திருவாரூரில் சுவாமி சந்நிதிக்கு இடப்புறம் ரிணவிமோசன லிங்க சந்நிதி உண்டு. அங்கு சென்று பூஜை செய்யவும். இதுதான் ஆதி சந்நிதி. இதைப்பார்த்துதான் பின்னர் திருச்சேறையில் ரிணவிமோசன லிலிங்கேஸ்வரரை பிரதிஷ்டை செய்தார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 2-ல் சனி. ஏழரைச்சனியின் கடைசிக் கட்டம். இந்த ஏழரைச்சனி முதல் சுற்றாக இருந்தாலும் சரி; இரண்டாம் சுற்றாக இருந்தாலும் சரி- ஒருசிலருக்கு மங்கு சனியாக இருக்கலாம்; ஒருசிலருக்கு பொங்கு சனியாக விளங்கும். அது அவரவர் ஜென்ம லக்னத்தைப் பொருத்தது. அதாவது ரிஷப லக்னம் அல்லது துலா லக்னமாக இருப்பவர்களுக்கு இந்தச் சனி பொங்கு சனியாக தங்கு தடையில்லாத யோகங்களைத் தரலாம். மேஷ லக்னம், விருச்சிக லக்னம், மிதுன லக்னம், கன்னி லக்னத்தாருக்கு மங்கு சனியாகப் பலன் செய்யும். மற்ற லக்னத்தாருக்கு சாதக பாதகமில்லாத பலன்களாக நடக்கும். 2-க்குடைய குரு 12-ல் மறைவதால் தேவையில்லாத வகையில் செலவுகள் ஏற்படும்; வீண்விரயங்களும் உண்டாகும். சிலருக்கு வேலை அல்லது குடியிருப்பில் இடமாற்றம் ஏற்படலாம். விருச்சிக ராசிக்கு இப்போது ஏழரைச்சனி நடப்பதால் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் அந்த மாற்றம் ஏமாற்றமாக இருக்கும். மற்ற தசாபுக்திகள் நடந்தால் முன்னேற்றமாக அமையும்.
பரிகாரம்: திங்கள்கிழமைதோறும் சிவலிலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்ய வேண்டும். ஒருமுறை சிவன் கோவிலிலில் ருத்ராபிஷேக பூஜை செய்யலாம்.
தனுசு
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடந்தாலும், ராசிநாதன் குரு 11-ல் நிற்பதாலும், 3-ஆம் இடம், 5-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்ப்பதாலும், ஏழரைச்சனியின் பாதிப்பு இருக்காது. கனிவாகப் பேசி காரியத்தைச் சாதிக்கலாம். குடும்பத்தில் அடிப்படை வசதிகளையும் தேவைகளையும் நிறைவேற்றவும், பூர்த்தி செய்யவும் தீவிர முயற்சி எடுத்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்திலும் வெளிவட்டாரத்திலும் உங்களுக்கென்று ஒரு தனி மரியாதையும் மதிப்பும் கௌரவமும் ஏற்படும். அதற்கு எந்த வகையிலும் பாதிப்பு வராதபடி காப்பாற்றிக் கொள்வீர்கள். பணத்தேவைகள் அதிகமாக இருந்தாலும் அதைச் சரிக்கட்ட நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் கையாளும் நடவடிக்கைகளும் கச்சிதமாக அமைந்து வெற்றியை ஏற்படுத்தும். வீடு, மனை, வாகனம் போன்ற திட்டங்களில் சிலர் சுப முதலீடு செய்வீர்கள். அதற்காகக் கடன் வாங்கினாலும் அது சுபக்கடனாக அமையும். வங்கிக் கடன் அல்லது எல்.ஐ.சி கடன் போன்று குறைந்த வட்டிக் கடன் அமையும்.
பரிகாரம்: ஜென்மச்சனியின் பாதிப்பு விலக அவரவர் வயதுடன் ஒன்று சேர்த்து, அந்த அளவு எண்ணிக்கை மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் தீபமேற்றவும்.
மகரம்
மகர ராசிநாதன் 12-ல் இருக்கிறார். அதனால் இது விரயச்சனி ஆகும். அந்த விரயச்சனியை சுப விரயச்சனியாக மாற்றிக்கொள்வது உங்கள் பொறுப்பாகும். விரயச்சனி என்பது சுபவிரயச்சனி, அசுப விரயச்சனி, வீண் விரயச்சனி என்று மூன்று வகைப்படும். திருமணம், மனை அல்லது வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது எல்லாம் சுபவிரயம். அசுப விரயம் என்பது வைத்தியச் செலவு போன்றவை. வீண்விரயம் என்பது வட்டிக்கடன், தண்டம் தீர்வை போன்றவை. அவரவர் ஜாதகரீதியான தசாபுக்திகளை அனுசரித்து மேற்கண்ட விரயம் நடக்கும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். ஜென்ம கேது- சப்தம ராகு என்பதால், நாகதோஷம் உண்டாகிறது. திருமணம் போன்ற நல்ல காரியங்கள் தடைப்படலாம். அல்லது தாமதப்படலாம். தசாபுக்திகனை அனுசரித்துத் தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.
பரிகாரம்: ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வர கலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் நல்ல மண வாழ்க்கை அமையும்.
கும்பம்
கும்ப ராசிக்கு 9-ல் உள்ள குரு பார்வை கிடைக்கும். ராசிக்கு 2, 11-க்குடையவர் குரு. அத்துடன் ராசிநாதன் சனியும் 11-ல் இருந்து தன் ராசியைப் பார்ப்பது விசேஷம்! தைரியமாக சில முடிவுகள் எடுக்கலாம். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி காணலாம். சிலசமயம் கோபமாகப் பேசியும் சிலசமயம் கனிவாகப் பேசியும் காரியங்களை சாதிக்கலாம். சுயநலவாதிகள் சூழ்ந்த இந்த உலகத்தில் சமயோசித புத்தியும் சாமர்த்தியமும் இருப்பதோடு, சந்தர்ப்பவாதியாகவும் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். பனைமரம் மாதிரி விறைப்பாகவும் வறட்டுக் கௌரவமாகவும் இருந்தால் பெரும்புயலில் வேரோடு வீழ்ந்துவிடும் நிலை ஏற்படும். சிறு காற்றுக்குக்கூட ஆடி அசைந்தாலும், பெரும்புயலிலிலும் வீழாமல் நிலையாக இருக்கும் நாணல் மாதிரி தாக்குப் பிடிக்கலாம். பொருளாதாரத்தில் பாதிப்பு இருக்காது. தாராளமான பணப்புழக்கம் இருப்பதால் தேவைகள் எல்லாம் நிறைவேறும் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிலவும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் குடவாசல் வழி சேங்காலிலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடலாம். நாமக்கல் வழி சேந்தமங்கலத்திலும் (சாமியார் கரடு டாப்) தத்தாத்ரேயர் கோவில் உண்டு.
மீனம்
மீன ராசிக்கு 8-ல் குரு இருப்பது ஒருவகையில் பலக்குறைவுதான். அதிலும் குரு 1, 10-க்குடையவர். 2-ஆம் இடம் கௌரவம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, ஆயுளைக் குறிக்கும். 10-ஆம் இடம் தொழில், வாழ்க்கை, முயற்சி, வேலை, உத்தியோகம் ஆகியவற்றைக் குறிக்கும். எனவே ஆயுள் பலமுண்டு. ஆரோக்கியத்திலும் பிரச்சினை இல்லை. ஆனால் தொழில், வாழ்க்கையில் இயக்கம் இருந்தாலும் உப்பில்லாத உணவை சாப்பிடுவதுபோல தொழில், வேலை, உத்தியோகம், வாழ்க்கை எல்லாவற்றிலும் பாய் மரமில்லாத கப்பல்- துடுப்பில்லாத படகு காற்றடித்த பக்கம் போவதுபோல திட்டமில்லாத செயல்களாக நடக்கும். கணக்கு எழுதும்போது ஒன்றும் இரண்டும் மூன்று என்று மனம் எண்ணும். கை நான்கு என்று எழுதும். அதனால் கணக்குத் தவறாகிவிடும். ஒரு திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். "அவன் போட்ட கணக்கொன்று அவள் போட்ட கணக்கொன்று இரண்டுமே தவறானது. இறைவன் போடும் கணக்கே சரியாது' என்ற பாடலிலின் கருத்துப்படி, கடவுள் போடும் கணக்கு வேறுவிதமானது. இதெல்லாம் தெய்வ ரகசியம்- கிரக ரகசியம்!
பரிகாரம்: விதியின் ரகசியம் சித்தர்களுக்குத்தான் தெரியும். ஆனால் சித்தர்கள் அந்த ரகசியத்தை வெளியிடாமல் காப்பாற்றுவார்கள். சித்தர்களின் ஜீவசமாதியை நம்பிக்கையோடு ஆன்மார்த்தமாக வழிபட்டால் ஆபத்தில்லாமல் நம்மைக் காப்பாற்றுவார்கள்.