ஜூலை மாத எண்ணியல் பலன்கள்

/idhalgal/om/july-month-numbers-palan

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். அமைதியான குணம் கொண்ட உங்களது செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டுமளவுக்கு சிறப்பாக அமையும். புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளலாம். வருமானம் அதிகரிக்கும். பெற்றோர்களுக்குரிய பணிவிடைகளைச் செய்வீர்கள். உடல்நிலை நல்ல முன்னேற்றம் தரும். இருப்பினும் ஒருசிலருக்கு அடிவயிறு, பாதத்தில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். விட்டுக்கொடுக்கும் குணமும், மன்னிக்கும் குணமும் உங்களுக்கு இந்த மாதம் அதிகம் தேவை. அதனால் குடும்பத்தில் குதூகலம் நிலவும். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு, வேலையாட்களின்மீது கண்காணிப்பு தேவை. அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் இருதரப்பினருமே நல்ல பலனைப்பெறும் மாதம். எண்ணம்போல பதவி உயர்வு தேடிவரும். அதேசமயம், மேலிடத்துக்கு எதிராக நீங்கள் சொல்லும் ஒரு வார்த்தைகூட எதிராக மாறலாம். எனவே வாய்ப்பதனம், கைப்பதனம், மெய்ப்பதனம் ஆகியவற்றைக் கடைப் பிடித்து உயர்வடைய வேண்டும். பெண்கள் குணமுடன் இருப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சி பொங்கும். நினைத்தபடி திருமணம் நடக்கும். மாணவர்கள் ற்றுலா சென்றுவருவார்கள். இளைஞர்கள் தண்ணீரில் மிகவும் எச்சரிக்கையுடன் சென்றுவர வேண்டும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.v தவிர்க்கவேண்டிய தேதி: 3, 4; 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் யார் தவறு செய்தாலும் உடனடியாகத் தட்டிக்கேட்கும் குணம் கொண்டவர். இந்த மாதம் உறவினர்கள், மகான்களின் சந்திப்பு கிட்டும். அதனால் மகிழ்ச்சியும் லாபமும் ஏற்படும். உங்கள் உடன்பிறந்தவர்களால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. எனவே அவர்களிடம் பொறுமையாகச் செயல் பட வேண்டும். தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டிய காலம். விற்பனையாளர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத்தொகை வந்துசேரும். அருகில் உள்ளவர்களால் தொல்லைகள் வரலாம். எனவே கவனமுடன் செயல்பட வேண்டும். கனவுத் தொல்லைகள் உண்டு. பிள்ளைகளின் உயர்வால் பெற்றோர் மகிழ்ச்சி பெறுவார்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிட்டும். அயல்நாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வரவேண்டிய பணம் திடீரென வசூலாகும். அரசியல்வாதிகள் நினைத்தபடி பொறுப்புகளையும், பொதுமக்கள் பாராட்டையும் ப

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். அமைதியான குணம் கொண்ட உங்களது செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டுமளவுக்கு சிறப்பாக அமையும். புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளலாம். வருமானம் அதிகரிக்கும். பெற்றோர்களுக்குரிய பணிவிடைகளைச் செய்வீர்கள். உடல்நிலை நல்ல முன்னேற்றம் தரும். இருப்பினும் ஒருசிலருக்கு அடிவயிறு, பாதத்தில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். விட்டுக்கொடுக்கும் குணமும், மன்னிக்கும் குணமும் உங்களுக்கு இந்த மாதம் அதிகம் தேவை. அதனால் குடும்பத்தில் குதூகலம் நிலவும். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு, வேலையாட்களின்மீது கண்காணிப்பு தேவை. அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் இருதரப்பினருமே நல்ல பலனைப்பெறும் மாதம். எண்ணம்போல பதவி உயர்வு தேடிவரும். அதேசமயம், மேலிடத்துக்கு எதிராக நீங்கள் சொல்லும் ஒரு வார்த்தைகூட எதிராக மாறலாம். எனவே வாய்ப்பதனம், கைப்பதனம், மெய்ப்பதனம் ஆகியவற்றைக் கடைப் பிடித்து உயர்வடைய வேண்டும். பெண்கள் குணமுடன் இருப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சி பொங்கும். நினைத்தபடி திருமணம் நடக்கும். மாணவர்கள் ற்றுலா சென்றுவருவார்கள். இளைஞர்கள் தண்ணீரில் மிகவும் எச்சரிக்கையுடன் சென்றுவர வேண்டும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.v தவிர்க்கவேண்டிய தேதி: 3, 4; 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் யார் தவறு செய்தாலும் உடனடியாகத் தட்டிக்கேட்கும் குணம் கொண்டவர். இந்த மாதம் உறவினர்கள், மகான்களின் சந்திப்பு கிட்டும். அதனால் மகிழ்ச்சியும் லாபமும் ஏற்படும். உங்கள் உடன்பிறந்தவர்களால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. எனவே அவர்களிடம் பொறுமையாகச் செயல் பட வேண்டும். தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டிய காலம். விற்பனையாளர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத்தொகை வந்துசேரும். அருகில் உள்ளவர்களால் தொல்லைகள் வரலாம். எனவே கவனமுடன் செயல்பட வேண்டும். கனவுத் தொல்லைகள் உண்டு. பிள்ளைகளின் உயர்வால் பெற்றோர் மகிழ்ச்சி பெறுவார்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிட்டும். அயல்நாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வரவேண்டிய பணம் திடீரென வசூலாகும். அரசியல்வாதிகள் நினைத்தபடி பொறுப்புகளையும், பொதுமக்கள் பாராட்டையும் பெறுவார்கள். காவல்துறை, நீதித்துறையில் உள்ளவர்களுக்கு இதுவரை வராமலிருந்த பதவி உயர்வு வந்துசேரும். மாணவர்கள் வெளியூர்ப்பயணம் மேற் கொள்வார்கள். கோடைகாலப் படிப்பில் மனம் ஈடுபடும். வெற்றிக்கு வழிகாட்டும். சிலருக்கு முதுகுத் தண்டுவடப் பகுதியில் சிறுசிறு உபாதைகள் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20, 29; 14; 7, 25.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 26; 9, 18.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

குரு ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களால் செய்யமுடியாத காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். இந்த மாதம் எந்த காரித்தையும் தடை, தாமதத்தோடு செய்ய வேண்டி இருக்கும். எனவே பொறுமையுடன் செயல்படவேண்டும். அதனால் வெற்றி யடையலாம். திடீர் பணவரவுகள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு இந்த மாதம் நல்ல வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் லாபம் பெறுவார்கள். இதுவரை எதிராக செயல்பட்டு வந்த தொழிலாளர்கள் நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அரசு ஊழியர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். சிலருக்கு காவல்துறை நடவடிக்கை வர வாய்ப்பு உள்ளது. நண்பர்களே எதிரியாகலாம். எனவே எந்த காரியம் செய்தாலும் உங்கள் முடிவுப்படி செய்யவேண்டும். சிலருக்கு கட்டாய மாறுதல் வரலாம். அது உங்களுக்குப் பிடித்தமானதாக இல்லாவிட்டாலும் நன்மையாக இருக்கும். பிள்ளைகள் கொடுத்து வந்த தொல்லைகள் மாறும். பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து திடீரென வந்து சேர்வர். வியாபாரிகள் கொள்முதல் செய்யும் பொருட்களால் லாபம் இரட்டிப்பாகும். கனவுத் தொல்லைகள் உண்டு. கணவனிடம் கோபித்துக்கொண்டு பிறந்தவீடு சென்ற பெண்கள் சிலர் பிரச்சினை தீர்ந்து கணவர் வீட்டுக்குச் செல்வார்கள். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். இதுவரை உங்களை எதிர்த்து வந்தவர்கள் விலகிநிற்பார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 8, 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

ராகு பகவான் ஆதிக்கம் பெற்ற நீங்கள் மற்றவர்கள் செய்யாத செயலை எளிதாகச் செய்து முடிப்பவர்கள். புதிய முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். அரசு ஊழியர்கள் வேலை பார்க்குமிடத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படாமல் நிதானமாகச் செயல்பட்டால் நல்ல பெயர் எடுக்கலாம். மற்றவர்கள் தவறை நீங்கள் பெரிதுபடுத்தினால் உங்கள் தவறுகள் விசுவரூபம் எடுக்கும். எனவே மேலதிகாரிகளின் தண்டனைக்கு ஆளாகாமல் செயல்பட வேண்டும். பணவரவுகள் சீராக இருக்கும். உடல்நிலையில் பாதிப்பு வராது. தொழிலதிபர்களுக்கு உற்பத்தி செலவு கூடினாலும் லாபம் இரட்டிப்பாகப் பெறுவீர்கள். வியாபாரிகள் சிலருக்கு அரசாங்கத்தால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி நினைத்தபடி நடக்கும். சடங்கு வைபவங்களில் கலந்துகொள்வதால் மனம் உற்சாகமாகும். வெளிநாட்டுலிருந்தும், தொலைத்தொடர்பாலும் நல்ல செய்திகள் வரும். பெண்கள் கணவருடன் அனுசரித்துச் செல்லவேண்டும். பிள்ளைகள் தாய்- தந்தையரை அனுசரித்துச் செல்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள். சாமர்த்தியமான பேச்சும், நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள். எப்போதுமே மனநிறைவுள்ளவர்கள். புதிய தொழில் முயற்சிகள் கைகொடுக்கும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் கையில் காசில்லை என்ற நிலைமை வராது. பிரிந்து சென்ற தம்பதிகள் ஒன்றுகூடுவார்கள். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு ஷேர் மார்க்கெட்டில் லாபம் பெருகும். இளைஞர்கள் அயல்நாடு செல்லும் திட்டம் நிறைவேறும். ராணுவத்தில் சேரும் வாய்ப்புகள் உண்டு. அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதல் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழிகளில் லாபம் பெருகும். வியாபாரிகள் ஏற்கெனவே வாங்கி வைத்த சரக்குகளை விற்க வேண்டும். மேலும் சரக்குகளைக் கொள்முதல் செய்வதைத் தவிர்த்தால் நஷ்டத்திலிருந்து மீளலாம். தொழிலதிபர்களுக்கு, தொழிலாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் இரட்டிப்பாகும். இதுவரை வராமலிருந்த பூர்வீக சொத்துகள் வந்துசேரும். எதிரிகள் தொல்லை விலகும். வாகனங்களில் நிதானமாகச் செல்லவேண்டும். இதுவரை நீங்கள் பிரியமாக நேசித்த ஒருவரைப் பிரியவேண்டி வரலாம். பேங்க் பேலன்ஸ் கூடும். பெண்களால் நன்மையுண்டு. மனைவி சொல்லே மந்திரமாக எடுத்துக்கொள்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். காவல்துறையினர் பதவி உயர்வு பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களுக்கு, தங்களது முயற்சி பயன்பட வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். வியாபாரிகள் புதிய யுக்தியுடன் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உடல்நிலை சீராக இருக்கும். உடன்பிறந்த வர்களின் நேசம் கூடும். அரசு ஊழியர்கள் பிரச்சினையின்றிப் பணியாற்றும் காலம். தொழிலாளர்- முதலாளி கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். மனைவி பயன்பெறும் மாதம். விலைபோகாமலிருந்த பூர்வீகச் சொத்து நல்ல விலைக்கு விற்கும். ஒருசில இளம்பெண்கள் மாந்திரீகர்கள் தொந்தரவால் அவதிப்படலாம்; எச்சரிக்கை தேவை. கணவன்- மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். வெளியூர்ப்பயணம் மேற்கொள்பவர்கள் உடைமைகளில் கவனம் செலுத்த வேண்டும். களவு போகும் வாய்ப்புகள் உண்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் வாங்கிப் போட்டுள்ள இடம் விற்றுவிடும். வெளிநாட்டுத் தகவல்கள் வந்துசேரும். தாய்- தந்தையரின் அனுசரிப்பு உண்டு. வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். பொற்கொல்லர்கள், விவசாயத் தொழில்புரிவோர் மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வோர் அதிக லாபம்பெறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கேது ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எண்ணியதை எண்ணியபடி நடத்தும் ஆற்றல் பெற்றவர்கள். சிலருக்கு எப்போதும் மனதில் ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். ஒரு செயல் நிறைவுபெறும்போது மற்றொரு குறை வந்துவிடும். அலைந்து திரிந்து வேலை செய்தாலும் சரியான வருமானமில்லையென்று இருப்பவர்கள் இந்த மாதம் நல்ல லாபத்தைப் பெறுவர். சந்தேகமே உங்களது பின்னடைவுக்குக் காரணம். அரசு ஊழியர்களுக்கு வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நண்பர்களால் லாபம் பெறலாம். வேலைபார்க்கும் இடத்தில் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருசிலர் பூமியிலிருந்து புதையல் போன்றவற்றைப் பெறுவர். பூர்வீக பூமியில் கிடைக்க வாய்ப்புண்டு. கடன் தொல்லை நீங்கும். வழக்குகள் சாதகமாகச் செல்லும். பிள்ளைகளுக்கு தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். வாங்கி வைத்த சரக்குகள் உடனுக்குடன் விற்பனையாகும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை கட்டும் திட்டம் நன்மையாக நடக்கும். அரசாங்க ஆதரவு கிட்டும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்து, பெரிதாகாமல் அகன்றுவிடும். மாணவர்கள் திட்டமிட்ட உயர்கல்வி கைகூடும். பெண்கள் தங்க ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாடு சென்ற கணவர் இதுவரை அனுப்பியதைவிட அதிகமாகப் பணத்தை அனுப்புவார். கடன் தீரும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சனி பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள், உங்கள் சொல்லில் அதிக நம்பிக்கையும், பிறரை மதிக்கும் உள்ளமும் கொண்டவர். இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்புப்படி அனைத்து காரியங்களும் நிறைவேறும். நன்மையான பலன்கள் நடக்கும். பிரிந்துசென்ற உறவினர் கள் வந்துசேர்வார்கள். அரசு ஊழியர்களுக்கு இதுவரை தாமதமாகி வந்த சலுகைகள் தடையின்றிக் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரிகள் திட்டமிட்டபடி கொள்முதலை உயர்த்திக்கொள்வார்கள். கணவர் பேச்சை மீறி தாய்வீடு சென்ற பெண்கள் மனம் திருந்தி மீண்டும் கணவர் வீடு வந்து சேர்வார்கள். தந்தை- மகன் உறவு சுமுகமாக இருக்கும். தொழிலாளர்கள் கூடுதல் லாபத்தையும், நிர்வாகத்தினரின் பாராட்டையும் பெறுவர். கலைஞர்கள் புதிய வாய்ப்பினைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலையின் உற்பத்திப் பொருட்களின் தரத்தை உயர்த்துவார்கள். லாபம் இரட்டிப்பாகும். காலதாமதமாகி வந்த திருமணம் கைகூடும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் லாபம் அதிகம் பெறுவார்கள். நேர்மையானவர்கள் பாராட்டப்படுவார்கள். நேர்மை தவறியவர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள். பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். குழந்தைகளால் பெருமையடைவார்கள். கல்வி பயில்வதன்மூலம் எதிர்கால வேலைக்கு அடித்தளமிடுவார்கள். பெண்களாலும், நண்பர்களாலும் சிலர் லாபமடைவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள், கூர்மையான சிந்தனை உள்ளவர்கள். உதவியென்று வந்தவர்களுக்கு முடிந்த உதவிகளை மறுக்காமல் செய்யும் எண்ணம் கொண்டவர்கள். இந்த மாதம் உங்கள் வீட்டுத் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்யும் நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பேச்சைக் குறைத்து செயலில் ஆர்வம் காட்டினால் நிறைய சம்பாத்தியம் வரும். கடன் தொந்தரவுகளிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். வீட்டு வசதி களை செய்துகொள்வதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். தடைப்பட்டு வந்த பிள்ளைகளின் திருமணம் கைகூடும். பிள்ளைகளால் பெருமைப்படும் மாதம். வியாபாரிகள் சரக்குகளை அதிகமாகக் கொள்முதல் செய்தால் எதிர்காலத்தில் கூடுதல் லாபம் கிட்டும். வேலையாட்கள் நல்ல லாபத்தை ஈட்டித்தருவார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் போடுவார்கள். அதனால் லாபம் இரட்டிப்பாகும். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தன்னை நம்பியுள்ள குடும்பத்தார்க்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு ஊழியர்களுக்கு வேலைப்பளு கூடினாலும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். கணவன்- மனைவி உறவு சுமுகமாக இருக்காது. மனைவியால் செலவுகள் வரும். எனவே கணவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பணம் கையிருப்பு எப்போதும் குறையாது.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

இதையும் படியுங்கள்
Subscribe