காளிகாம்பாள் அற்புதங்கள்!
சிவஸ்ரீ தி.ஸா. சண்முக சிவாச்சாரியார்
48
தானங்களின் சிறப்பையும், அவை அளிக்கப்படும்போது சொல்லவேண்டிய மந்திரங்களையும் ஆகமங்கள் விவரிக்கின்றன. அவற்றில் சிலவற்றின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
அசல் ரத்தினக்கல் தானம்
ரத்தினங்கள் யாவும் பேரொளி வீசுபவையாகவும். பூமிதேவியினிடமிருந்தும் (நிலச்சுரங்கத்திலிருந்து), கடலிருந்தும் எடுக்கப்படுபவையாகவும், சகல தெய்வங்களுக்கும் விருப்பமானவையாகவும், அக்னி சம்பந்தமுள்ளதாய் புனிதமானவையாகவும், ஆபரணங்களுக்கு உகந்தவையாகவும், தோஷங்கள் அனைத்தையும் போக்கக் கூடியவையாகவும், நவகிரகப் பீடைகளைப் போக்குபவையாகவும் மகிமை பெற்றுள்ளன. ஆகையால் இவற்றின் தானத்தால் எனக்கு இறைவன் கிரக பீடைகளைப் போக்கி அமைதியை அளித்து அருள்புரியட்டும்.
ரத்தினங்களின் பெயரையும், அதற்குரிய கிரக தேவதையையும் கூறி ரத்தின வகையைத் தனித்தனியே தானம் செய்யவும் மந்திரம் கூறப்படுவதுண்டு.
ஸ்வர்ண புஷ்ப தானம்
(தங்கமலரைக் கொடுத்தல்)
அனைத்து புஷ்பவகைகளிலும் சிறந்ததாய் விளங்கும் பொன்னால் செய்யப்பட்ட தாமரை அல்லது வில்வப்பூவாக உள்ளதும், சகலதேவதைகளுக்கும் விருப்பமானதும், புண்ணியப் பயனளிப்பதும், போக, மோட்சப் பயன்களை எப்பொழுதும் தரக்கூடியதும், பூஜைக்கான முக்கிய பொருளானதும், பழமை தோஷமற்ற சிறப்பு நிர்மால்ய தகுதி வாய்ந்ததும், விரும்பிய பயனைத் தரவல்லதுமான மகிமைமிக்க இப்பொன் மலரை வேதியர்க்கு தானம் செய்திட்ட எனக்கு இஷ்டப் பயனும் அமைதியும் அளிக்கப்படட்டும்.
சௌபாக்கியம் பெறவும், லட்சுமி கடாட்சம் ஏற்படவும் பெண் தெய்வங்களின் வழிபாடுகள் மற்றும் வேள்விகளின் நிறைவில் இத்தானம் செய்யத்தக்கதாகும்.
ஸ்வர்ண பில்வபத்ர தானம்
(மூன்று தளத்துடன் பொன் வில்வ இலை)
பொன்னால் செய்யப்பட்டதும், மும்மூர்த்திகளையே மூன்று தளமாகக் கொண்டு தெய்வாம்சம் உள்ளதும், வில்வமரத்தின் இலையும், மூன்று இதழ்களோடு இருப்பதும், எப்பொழுதும் பாவத்தைப் போக்குவதும், மோட்சத்தைத் தருவதும், விஷ்ணு, சிவன் இருவருக்கும் விருப்பமானதும் வில்வ இலை என்பதால், ஆகமப்படி பூஜிப்பதால் குலத்திற்கே மேன்மை தருவதும், லட்சுமி வாசம் செய்யும் ஸ்ரீபர்ணம் எனும் மங்களகர இலையும், உலக வாழ்க்கைத் துயரத்தை நீக்குவதும், மேலானதுமான இலையை, பொன்னாலான வில்வ இலையாகச் செய்து தானமளிப்பதனால் எனக்கு இறைவன் சுகபோகத்தையும் சாந்தியையும் அளிக்கட்டும்.
ருத்ராட்ச தானம்
ருத்ராட்சம் எனப்படுவது மரத்திலிருந்து கிடைப்பதும், தெய்வங்களைத் தன்னுள் கொண்டு தெய்வாம்சமானதும், தேவலோக கால அளவுக் கணக்கில் ஆயிரம் வருடங்களுக்கொருமுறை ருத்ரதேவனின் கண்ணீரிலிலிருந்து வெளிப்பட்டு (கண்ணிமைப்பால் வெளிப்படுகிற) முதலில் தோற்றமுடையதும், பல எண்ணிக்கையில் முகங்களைக் கொண்டதும், அணிந்திடு வோரின் துயரம், ரோகம், பயம் போக்குவதும், ஜபத்திற்கு உறுப்பாக ஜப மாலையாக உள்ளதும், பூஜிக்கத் தக்கதும், அணிந்து கொள்வதால் சுகபோகத்தையும் சிவசாயுஜ்ய மோட்சத்தையும் கொடுப்பதும், மாபெரும் மகாத்மியம் கொண்டு மேலானதாகவும் விளங்குவதால், இந்த ருத்ராட்சத்தினுடைய தானத்தினால் இறைவா, எனக்கு சாந்தியைக் கொடுத்திடுவீர்.
ருத்ரன் மிருத்யுஞ்ஜய ப்ரீதிக்கும், அப மிருத்யு அகலவும் இத்தானம் ஏற்றதாகக் கூறப்படுகிறது.
லிங்க தானம்
(சிவலிங்க தானம்)
சிவபூஜைக்குச் சிறந்த மூர்த்தமாகவுள்ள சிவலிலிங்கமானது தெய்வாம்சமானதும், உருவம் வெளிப்பட்டது- வெளிப்படாதது என இருவகையும் சேர்ந்த முகலிங்க மாயும் மூவகையில் விளங்குவதும், சகல தேவதைகளையும் தம்முள் கொண்டதும், வணங்குவோரின் சர்வ பாவங்களைப் போக்குவதும், சர்வ தத்துவங்களையும் தம்முள் கொண்டுள்ளதும், சாந்தரான சதாசிவராய் உள்ளதும், புண்ணிய வடிவில் உள்ளதும், விரும்பும் எப்பயனையும் அளிப்பதுமாகவும் அளவற்ற மகிமையுடன் உள்ளதால், இந்த லிலிங்க தானத்தினால் இறைவன் எனக்கு சாந்தியை அளிக்கட்டும்.
சிவனது விரதபல சித்திக்கும், சிவயோக சித்தர்கள், பக்தர்களின் ஆன்ம சாந்திக்கும் உரிய பஞ்சதான வகைகளுள் ஒன்றாக லிங்கதானம் செய்யத்தக்கது.
ரசமணித்தாது தானம்
(பாதரசமணிக் கொட்டை)
அரிதாரம், மனோசிலை, லிங்கம், பாதரசம், பாஷாணம் முதலான கனிம தாதுவகைகளால் முறைப்படி உருவாக்கப்பட்டதும், லிலிங்கமாகவும், உருண்டைக் குளிகையாகவும், துண்டுக்கட்டியாகவும், முத்துப்போல அணியத்தக்க- துளையுள்ள ரசமணியாக உள்ள தாதுவும், பாதரசம் கட்டிய ரசமணி, ரசலிலிங்கம் முதலிலிய தாதுவாலானதும், பிறப்பையறுத்து முக்தியளிப்பதும், பவரோக மருந்தாக உள்ளதுமான மகிமைமிக்க ரசமணி தாதுவை தானம் செய்வதால் இறைவன் மகிழ்ந்து எனக்கு அமைதியை அருளட்டும்.
சாக தானம்
(காய்கறிக் கொடை)
வாழைக்காய், பலாக்காய், மாங்காய், அவரை, கோவை, பூசணி, பாகல், கொத்தவரை, கத்தரி, வெண்டை ஆகிய காய்களையும்; முள்ளங்கி, சேனை, கருணை முதலிலிய கிழங்குகளையும் புதியதாயும் சிறந்ததாயும் உள்ளவற்றையும், பொரியல், கூட்டாக சமைக்கத் தக்கதாய், உணவுக்கு உறுப்பாக விளங்குவ தாய், சுபமளிப்பதாய், பலம் அளிப்பதாய் உள்ளவை என்பதால் இந்தக் காய்களின் தானத்தால் இறைவன் எனக்கு அமைதியை அளிக்கட்டும்.
இத்தானத்தை கேட்டை அல்லது மூல நட்சத்திரங்களில் செய்வது இஷ்ட சித்தியைத் தருவதாகும்.
துகூல தானம்
(அசல் பட்டாடை)
துகூலம் எனப்படும் வெண்பட்டாடை யானது பூச்சியின் தேகத்திலிலிருந்து தோன்றியதும், பொன் நூலிலிழையோடு கூடியதும், செல்வமளிப்பதும், லட்சுமியின் இருப்பிடமானதும், புனிதப்படுத்துவதும், வெண்ணிறமானதும், அனைவரின் மனதைக் கவரக்கூடியது மாக மகிமை பெற்றுள்ளதால் கௌசேயம் அல்லது க்ஷௌமம் எனப்படுகிற வெண்பட்டாடையின் தானத்தால் மங்களம் தரும் லட்சுமியானவள் மகிழ்ந்தவளாகட்டும். அவள் எனக்கு அமைதியைத் தரட்டும்.
பக்ஷ்ய தானம்
(இனிப்புப் பட்சணவகை தானம்)
பட்சணமாகிய இனிப்புவகைகள் யாவும், தானிய மாவினால் வெல்லத்தோடு கூடியவையும், பசு நெய்யில் சமைக்கப்பட்ட தும், அதிரசம், லட்டு, ஜிலேபி, சோமாசி, முறுக்கு முதலான பல வகை உருவம் கொண்டவையும், சிறுவர்களுக்கு விருப்ப மானதுமாக உள்ளன. எனவே இந்த பட்சணங்களின் தானம் எனக்கு சாந்தியைத் தரட்டும். இந்த தானத்தைப் பூரட்டாதி, உத்திராட நட்சத்திரங்களில் செய்வது சாந்தியைத் தருவதாகும்.மேலும், இவ்வாறு பல வகை தானங்கள், பல்வேறு நோக்கங்கள், பயன்கள் குறித்தும், பல நட்சத்திர தேவதைகளுக்காகவும் பல காரியங்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றையும் இவ்விதமாகவே உரிய மந்திரத்தை குரு முகமாய் அறிந்து, முதலில் அதன் மகிமைகளை எண்ணிப் புகழ்ந்து கூறி, பின்பு தாம் விரும்பும் பயனைவேண்டி அளித்திடுவது முறையாகும்.
பொருட்களை மந்திரம், மந்திரார்த்தம், கிரியை, நோக்கம், பயன் ஆகியவற்றை அறிந்து தானம் செய்தல்வேண்டும். தானம் பரோபகார, ஜீவகாருண்ய தர்மத்தை வளர்ப்பதாகிறது.ஆகமங்களில் சாந்திதரும் கிரியைகள்இந்த தானங்களைப் போன்று பயணம் மேற்கொள்ளும் காலத்திலும், பூஜை செய்யப்பட்டு அந்த தெய்வத் திருவுருவங்கள் அல்லது கலசங்கள், தெய்வமூர்த்தங்கள் புறப் படும் தருணங்களிலும் செய்யவேண்டிய தானவகைகள் யாத்ராதானம் எனப்படும். இதனை முறையே உரிய நோக்கக் காரணத்தைக்கூறி சங்கல்பம் செய்து, ஏழை எளியோர், ஊனமுற்றோர், யாசிப்போர்களுக்கு எப்பொழுதும் இந்த யாத்ராதானத்தைச் செய்ய வேண்டும் என்கிறது ஆகமம்.
(தொடரும்)