மேஷம்
2024 ஆங்கில புத்தாண்டு பூரம் நட்சத்திரத்திலும், சிம்ம ராசியிலும், கன்னி லக்னத்திலும் பிறக்கிறது. ஐந்தாவது நட்சத்திரத்தில் பிறப்பதால் மனது, திட்டம், மகிழ்ச்சி சம்பந்தப்பட்டவகையில் நன்மைகள் உண்டாகும். மனதளவி-ருந்து வந்த குழப்பங்கள் படிப்படியாகக் குறையும். 11-ல் உள்ள சனி காரிய அனுகூலத்தைத் தருவார். ஜென்மத்திலுள்ள குருவும் 5, 7, 9-ஆமிடங்களைப் பார்ப்பதால் பிள்ளைகள்வகையில் நல்லவைகள் ஏற்படும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடும். தகப்பனார்வழியில் உதவி, ஒத்தாசைகள் கிடைக்கும். கோவில் மற்றும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 2-க்குடையவர் 8-ல் மறைந்தாலும் மாதப் பிற்பாதியில் 9-ல் மாறுகிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறைக்கு பெரிதளவில் இடம் ஏற்படாது. 15-ஆம் தேதிமுதல் 5-க்குடைய சூரியன் 10-ல் கேந்திரபலம் பெறுகிறார். உத்தியோக முன்னேற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். 12-ல் உள்ள ராகு வெளியூர் பயணங்களால் நன்மையைத் தருவார். 6-ல் கேது தேக சுகம், சத்ரு ஜெயம், போட்டி, பொறாமை கள் விலகுதல் போன்ற பலன்களைத் தரும். ஜென்ம குரு சற்று அலைச்சலைத் தருவார். செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 2024-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு 4-ஆவது ராசியான சிம்மத்திலும், 5-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. எனவே கடந்த காலத்தில் நடந்த சங்கடங்கள் விலகி சந்தோஷங்கள் உண்டாகும். குடியிருப்பு மாற்றம், வேலையில் உத்தியோக இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். குரு 12-ல் இருப்பதால் விரயங்களைத் தவிர்க்க முடியா விட்டாலும் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தலாம். 11-ஆமிடமான நல்ல இடத்தில் இருக்கும் ராகு மூத்த சகோதரவகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ராசிநாதன் சுக்கிரன் 19-ஆம் தேதிவரை 7-ல் நின்று ராசியை பார்ப்பதால் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகும். கடந்த மாதம் ஏற்பட்ட சனிப்பெயர்ச்சியால் 9-க்குடைய சனி 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். தொழில்ரீதியாக எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுத் தொழில்வகையில் சற்று கவனமுடன் செயல்படவேண்டும். 5-லுள்ள கேது உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றத் துணை புரிவார். ஒரு சிலருக்கு பிள்ளைகள்வகையில் தவிர்க்கமுடியாத வைத்தியச் செலவுகளை சந்திக்க நேரும். 4-க்குடைய சூரியன் 15-ஆம் தேதிமுதல் 9-ல் வருவதால் தந்தையிடையே மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும். உத்தியோக உயர்வுக்கு வெள்ளிக்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு மூன்றாவது ராசியிலும், நான்காவது லக்னமான கன்னியிலும் 2024-ஆம் ஆண்டு பிறக்கிறது. மாதத் தொடக்கத்தில் மிதுன ராசிநாதன் புதன் 6-ல் மறைந்தாலும் எட்டாம் தேதிமுதல் 7-ல் மாறி ராசியைப் பார்க்கிறார். கடந்த இரண்டரை வருடமாக உங்களை ஆட்டிப்படைத்த அட்டமத்துச்சனி போன டிசம்பர் மாதம் 20-ஆம் தேதிமுதல் விலகியது. ஒரு பெரிய ரிலீஃப். மாதத் தொடக்கத்தில் பொருளாதாரம் சற்று குறைவாக இருந்தாலும் ராசிநாதன் 7-ல் மாறியபிறகு சரளமான பணப்புழக்கம் உண்டாகும். 3-க்குடைய சூரியன் 8-ல் 15-ஆம் தேதிமுதல் மறைக்கிறார். "கெட்டவன் கெட்டிடில் கிட்டும் யோகம்' என்பதுபோல சில நன்மைகளை அனுபவிக்கலாம். 11-ஆமிடத்துக் குரு 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால் உடன்பிறந்த வகையில் நன்மையும் உண்டு; செலவும் உண்டு. 9-ல் உள்ள சனி தகப்பனாருக்கு கண்டத்தை ஏற்படுத்தலாம். 10-ல் ராகுவும் அவரைப் பார்க்கும் கேதுவும் உத்தியோகத்தில் மாற்றத்தைத் தந்தாலும் நன்மதிப்பும் ஏற்படும். நீண்டநாள் எதிர்பார்த்த காரியம் ஒன்று நிறைவேறும். 7-ல் செவ்வாய் இருப்பது தோஷம் என்றாலும் புதன் மாறியபிறகு தோஷ விதிவிலக்கு உண்டாகும். தாமதத் திருமணத்தை ஏற்படுத்தும். புதன்கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு இரண்டாவது ராசியிலும் மூன்றாவது லக்னத்திலும் 2024-ஆம் ஆண்டு பிறக்கிறது. பொருளாதாரத்தில் தாராள பணப்புழக்கம் உண்டாகும். பத்திலுள்ள குரு இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் குடும்பவகையில் நிம்மதி ஏற்படும். தனவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் நற்பலன்கள் மற்றும் இடமாற்றம் உண்டாகும். அட்டமத்துச்சனி நடக்கிறது என்றாலும் 8-க்குடையவர் 8-ல் ஆட்சிபெறுவதால் அதிக பாதிப்புகளைத் கொடுக்கமாட்டார் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம் ஜனன ஜாதக தசாபுக்திகளில் சந்திர தசையோ, சந்திர புக்தியோ நடைபெற்றால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். வேலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் அல்லது ஊர்மாற்றம் உண்டாகலாம். அல்லது குடியிருப்பு மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. சுய தொழில் செய்பவர்களுக்கு சிப்பந்திகள்வழியில் தொல்லைகள் உண்டாகும். என்றாலும் 10-ஆமிடத்தைச் சனி பார்ப்பதால் தொழில் இயக்கம் தடைப்படாது. 2-ஆமிடத்தையும் சனி பார்ப்பதால் தனவரவும் உண்டு. படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை உருவாகும். எனவே அக்கறையுடனும் கவனத் துடனும் படிப்பில் இருப்பது அவசியம். தேக சுகத்திலும் கால் சம்பந்தப்பட்ட உபாதை வந்து விலகும். சனிக்கிழமைதோறும் காலபைவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.
சிம்மம்
2024-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு உங்கள் ராசியிலும், 2-ஆவது லக்னத் திலும் பிறப்பது ஒரு பெரிய நன்மையை ஏற்படுத்தும். மேலும் 9-ல் குரு நின்று ராசியைப் பார்க்கிறார். கடந்த மாதம் 20-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தியானதால் அதன்பிறகு உங்கள் வார்த்தையில் ஒரு பக்குவம், செயல்பாட்டில் தெளிவு, நிதானம் போன்றவற்றைச் சந்தித்துக்கொண்டிருப்பீர்கள். ஒருசில சமயம் குடும்பத்தில் நிம்மதிக்குறைவு காணப்படலாம். 2-லுள்ள கேதுவினால் ஏற்படும் பலன் என்றாலும் 8-ல் ராகு இருப்பதால் அது ஒரு நன்மைதான். ஐந்தாமிடத்தை ஐந்துக்குடையவரே பார்ப்பதால் பிள்ளைகள்வகையில் நல்லவைகள் நடக்கும். தொழில் தொடர்பான கடன் உதவியும் கிடைக்கும். மாத முற்பாதியில் ராசிநாதன் 5-ல் இருந்து குருபார்வையைப் பெறுகிறார். உங்கள் சொல்வாக்கு செல்வாக்கு பெறும். பேச்சுக்கு மரியாதை ஏற்படும். 7-ல் சனி நின்று ராசியைப் பார்ப்பதால் கணவன்- மனைவிவகையில் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். 15-ஆம் தேதிமுதல் சூரியன் 6-ல் மறைகிறார். அக்காலகட்டம் செயல்பாட்டில் மந்தம், தேவைகள் நிறைவேறுவதில் தாமதம் போன்றவை ஏற்படலாம். தகப்பனார்வழி தொழி-ல் புதிய வாய்ப்புகள் உண்டாகலாம். ஞாயிற்றுக் கிழமைதோறும் விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை சாற்றி வழிபடவும்.
கன்னி
2024 ஆங்கில புத்தாண்டு 12-ஆவது ராசியிலும், ஜென்ம லக்னத் திலும் பிறக்கிறது. மனதில் தைரியம் உண்டாகும். ஜென்ம கேது அலைச்சல், திரிச்சலைத் தந்தாலும், உங்களது லக்னத்தில் ஆண்டு பிறப்பதால் நன்மைகளும் நன்மதிப்புகளுக்கும் இடமுண்டு. 6-ல் சனி ஆட்சி. அது ஒரு பலம். போட்டி, பொறாமை கள் விலகும். 2-க்குடைய சுக்கிரன் 3-ல் மறைந்தாலும் 2-ஆமிடத்தைக் குரு பார்ப்பதால் வரவுக்கு இடமுண்டு. செலவுக்கும் பஞ்சமில்லை. மாத பிற்பாதியில் செலவுகள் கட்டுப்படும். கொடுக்கல்- வாங்க-ல் சற்று கவனமுடன் செயல்படவும். யாருக்கும் ஜாமின் பொறுப்பு ஏற்கவேண்டாம். 7-லுள்ள ராகு திருமணத் தடைகளை உண்டாக்குவார். கணவன்- மனைவிக்குள்ளும் கருத்து வேற்றுமைகள் தோன்றி மறையும். 15-ஆம் தேதிமுதல் சூரியன் 5-ல் மாறுகிறார். திருமணமான தம்பதிகளுக்கு வாரிசு யோகம் தாமதமாகலாம். அதனால் வீண் மனக்கவலை ஏற்படலாம். 4-ஆமிடத்தை 4-க்குடைய குரு பார்க்கிறார். அங்கு செவ்வாயும் சஞ்சாரம். ஜனன ஜாதகத்திலும் சாதக தசாபுக்திகள் நடந்தால் வீடு, மனை, வாகன யோகம் ஏற்படும். சொந்த வீட்டில் குடியிருப்போர் பழுது வேலைகளைப் பார்த்து வீட்டைப் புதுப்பிக்கலாம். பூர்வீக சொத்துகள் வழியே அதிக அலைச்சல் சந்திக்க நேரும். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியையும் ஆரணவல்- அம்மனையும் வழிபடவும்.
துலாம்
2024 -ஆங்கில புத்தாண்டு உங்கள் ராசிக்கு 11-ஆவது ராசியிலும், 12-ஆவது லக்னத்திலும் (கன்னி) பிறக்கிறது. ராசிநாதன் சுக்கிரன் 2-ல் சஞ்சாரம். குருவும் வக்ரநிவர்த்தியாகி ராசியைப் பார்க்கிறார். 5-க்குடைய சனியும் 5-ல் ஆட்சி. காரிய அனுகூலமும் உண்டு. செலவுக்கும் இடமுண்டு. 12-ல் கேது. 6-ல் ராகு. இரண்டும் ஒரு நன்மையான மாற்றத்தைத் தரும். மனதை குழப்பிய சில விஷயங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். 7-ல் உள்ள குரு 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். மூத்த சகோதரவகையில் உதவிகள் கிடைக்கும். கடந்த ஆண்டு வரும் என்ற நம்பிக்கையில் ஒருசிலர் பண உதவிசெய்து தற்போது வரையிலும் வராமல் இழுபறியாக இருந்த நிலை இந்த ஆண்டு மாறும். வரவேண்டிய தொகையும் வந்துசேரும். துலா ராசிக்கு ராஜ யோகாதிபதியான சனி 5-ல் வந்தபிறகு உங்கள் திட்டங்களில் காரிய வெற்றியைத் தருவார். மனக்கவலைகளையும் அகற்றுவார். தேக ஆரோக்கியத்தில் சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். மாத பிற்பாதியில் அரசுவழி சம்பந்தமாக நிலுவையில் இருந்த செயல்பாடுகள் அல்லது சகாயங்கள் இம்மாதக் கடைசியில் பூர்த்தியாகும். கணவன்- மனைவிக்குள் சச்சரவுகள் தோன்றினாலும் அன்யோன்யம் பாதிக்காது. வெள்ளிக்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மர் மற்றும் லட்சுமி நாராயணரை வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 2024 ஆங்கில புத்தாண்டு பத்தாவது ராசியிலும், 11-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. 10-க்குடைய சூரியன் 2-ல் நின்று 2-க்குடைய குருவின் பார்வையைப் பெறுகிறார். கடந்த மாதம் ஏற்பட்ட பண நெருக்கடி இம்மாதம் தீரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கப்பெற்று கொடுக்க வேண்டியவருக்குக் கொடுத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். ராசிநாதனுக்கும் குரு பார்வை இருப்பதால் திறமையுடன் செயல்படலாம். 4-ல் சனி ஆட்சி. ஒருசிலருக்கு சொந்த மனை யோகம் அமைய இடமுண்டு. 11-ஆமிடத்துக் கேது தடைப்பட்ட பணிகளை செய்துமுடித்து மதிப்பு, மரியாதையைக் காப்பாற்ற வைப்பார். 5-லுள்ள ராகுவும் எண்ணிய எண்ணங்களை ஈடேற்றித் தருவார். சனி ராசியைப் பார்க்கிறார். ஒருசில நேரம் உங்கள்மீது உங்களுக்கே சந்தேகம் தோன்றினாலும் ராசிநாதனுக்கு குருபார்வை கிடைப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கப் பெறுவீர்கள். 19-ஆம் தேதிமுதல் 12-க்குடையவர் சுக்கிரன் 2-ல் சஞ்சாரம் செய்கிறார். அந்நிய தனம் உங்கள்வசம் புரளும்; தேவைகள் நிறைவேறும். 10-க்குடைய சூரியன் 3-ல் 15-ஆம் தேதிமுதல் சஞ்சாரம். தொழி-ல் மந்தம் காணப்படலாம். வீண் அலைச்சல்களும் உண்டாகும். செவ்வாய்க்கிழமைதோறும் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடவும்.
தனுசு
2024 ஆங்கில புத்தாண்டு உங்கள் ராசிக்கு 9-ஆவது ராசியிலும், 10-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. கடந்த மாதம் சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு ஏழரைச்சனியும் நிவர்த்தியானது. ராசிநாதன் குருவே ராசியையும் பார்க்கிறார். எனவே பழம் நழுவி பா-ல் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரியான நற்பலன்களை அடையலாம். திரிகோண ராசியில் ஆண்டு பிறப்பதால் பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்க, விவகாரம், வியாஜ்ஜியங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு அற்புதமான நன்மைகளும் ஏற்படும். 8-ஆம் தேதிமுதல் 10-க்குடைய புதன் ஜென்ம ராசியில் சஞ்சாரம் பெற்று ராசிநாதன் குருவின் பார்வையையும் பெறுகிறார். உத்தியோகத்தினருக்கு வேலையில் ப்ரமோஷன் மற்றும் ஊதிய உயர்வு ஏற்படும். 4-ல் உள்ள ராகு தாயார்வழியில் சில சங்கடங்களைத் தரலாம். 3-ல் சனி இருப்பது ஒரு பலம். 3, 6, 11-ஆமிடங்கள் சனிக்கு யோகம் தரும் இடங்கள். எனவே இந்த மாதம் மட்டுமல்ல இந்த ஆண்டு முழுவதும் யோக பலன்களை அனுபவிக்கலாம். 11-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மூத்த சகோதர- சகோதரிவகையில் நன்மைகளையும் அனுகூலங்களையும் உண்டாக்கும். சுபச்செலவுகளும் ஏற்படலாம். வியாழக்கிழமை நவகிரக குருபகவானை வழிபடவும். மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு 2024 ஆங்கிலப் புத்தாண்டு 8-ஆவது ராசியிலும், 9-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. 12-க்குடைய குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் விரயங்கள், தொழில்துறையில் வேலையாட்கள் பிரச்சினை போன்றவற்றை சந்திக்கும் நிலை! 9-ஆவது லக்னமாக திரிகோண லக்னத்தில் ஆண்டு பிறப்பதாலும் 3-ல் ராகு இருப்பதாலும் இவை அனைத்தையும் சமாளிக்கக் கூடிய தைரியமும் தன்னம்பிக்கையும் குறையாது. தலைக்குமேல் வெள்ளம் போனாலும் சாண் என்ன முழம் என்ன என்ற நிலையிலும் எதிர்நீச்சலடித்து வெற்றிபெறலாம். 2-ல் சனி ஆட்சி என்பதால் அவ்வப்போது தனவரவுக்கும் இடமுண்டு. 4-ல் உள்ள குரு குடியிருப்பு மாற்றத்தைத் தரும். 11-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவு. எனவே போராட்டம் அதிகமாகக் காணப்படும். 9-ல் உள்ள கேது பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சங்கடங்கள் ஏற்படலாம். தகப்பனாருடன் கருத்து மோதல்கள் உருவாகலாம். 15-ஆம் தேதிமுதல் 8-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சாரம். மாத பிற்பாதியில் வேலையில் அனுகூலம். சிப்பந்திகள் பிரச்சினையில் சுமூகம் போன்ற நன்மைகள் ஏற்படும். என்றாலும் ஏழரைச்சனியின் தாக்கம் குறையாமல் சங்கடப்படுத்துவதையும் தவிர்க்க முடியாது. சனிக்கிழமைதோறும், காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிக்கு 2024 ஆங்கிலப் புத்தாண்டு ராசிக்கு 7-ஆவது ராசியிலும், 8-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. மேலும் கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடந்துகொண்டிருக்கிறது. சனி ராசிநாதன் என்பதால் பெரிய பாதிப்புகளையோ, தொல்லைகளையோ தரமாட்டார் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம் சந்திர தசை சந்திர புக்தி நடப்பவர்கள் மட்டும் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது அவசியம். ஜென்மத்திலுள்ள சனி 3, 7, 10 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். 3-ல் உள்ள குருவும் 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆண் அல்லது பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும். இந்த ஆண்டு திருமணத்தை முடித்து தம்பதிகளாக மாறும் யோகத்தைத் தரும். 2-ல் உள்ள ராகு ஏற்கெனவே திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் சில வாக்குவாதம் காணப்பட்டாலும் பிரிவினைகள் ஏற்படாது. மாத முற்பாதிவரை சூரியன் 11-ல் பலம் பெறுவது நன்மை தரும். தொழி-ல் அனுகூலமும் உண்டாகும். பிற்பாதியில் செலவும் ஏற்படும். என்றாலும் 9-க்குடைய சுக்கிரன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் வேலை செய்யும். மேற்சொன்ன சந்திர தசாபுக்தி நடப்பவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவ-ங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யவும். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.
மீனம்
2024 ஆங்கில புத்தாண்டு உங்கள் ராசிக்கு ஆறாவது ராசியிலும், ஏழாவது லக்னத்திலும் பிறக்கிறது. ராசிப்படி ஆறு மறைவு ஸ்தானம் என்றாலும், லக்ன அடிப்படையில் 7-கேந்திரமாக அமைவதால் நற்பலனையும் சந்திக்கலாம். மீன ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. ராசிநாதன் குரு 2-ல் இருப்பது பலம். 10-ல் செவ்வாயையும் குரு பார்ப்பதால் தொழில் அமைப்பும் தடைப்படாமல் இயங்கும். தனவரவும் உண்டாகும். 6-க்குடைய சூரியன் 10-ல் இணைவதால் போட்டி, பொறாமைகள் சற்று அதிகமாகவே காணப்படும். ஜென்மத்திலுள்ள ராகு சிலநேரம் நன்றாக ஓடி உழைக்க வைக்கும். சிலநேரம் அசதியாக சோர்வையும் உண்டாகும். 12-ல் சனி ஆட்சி என்பதால் விரயங்களை வீண்விரயமாக ஏற்படுத்தாமல் சுபவிரயமாக ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். 7-ல் கேது இருப்பதால் திருமணமுயற்சிகள் தாமதமாகலாம். 2-ல் உள்ள குரு 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் கடன் உருவாகலாம். அது குடும்பத் தேவைக்காகவும் அமையும். தொழில்துறைக் காகவும் அமையும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவதன்மூலம் கடன் ஏற்படலாம். ஏழரைச்சனி ஆரம்பமாகியதால் சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமும், ஆஞ்சனேயருக்கு நெய் தீபமுமேற்றி வழிபாடு செய்யவும். பிரார்த்தனை பலம் இறையருளால் துணைபுரியும்.
அலைபேசி: 99440 02365