மேஷம்

இந்த ஜனவரி ஆங்கில புத்தாண்டு உத்திராட நட்சத்திரத்திலும், தனுசு ராசியிலும், கன்னி லக்னத் திலும் பிறக்கிறது. ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீசம் வக்ரம் பெற்றாலும், ஜனவரி மாதப் பிறப்பு 9-ஆவது ராசியில் பிறக்கிறது. அது ஒரு சாதகம். பூமி, மனை வாங்கும் சம்பந்தமான திட்டங்கள் செயலாகும். தேக சௌக்கியத்தில் சற்று கவனம் தேவை. மனதில் நிலவிய குழப்பங்கள் சற்று விலகும். ராசிநாதன் 7-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் 7-க்குடையவர் (சுக்கிரன்) 11-ல் நிற்பதாலும் கணவர்வகையில் சில நன்மைகள் உண்டாகும். அன்பு, பாசம், ஒற்றுமையும் நிலவும். 6-ஆமிடத்திலுள்ள கேது போட்டி, பொறாமைகளை விலக்குவது மட்டுமல்லாமல்; புதிய உறவுகளை ஏற்படுத்துவார். 5-க்குடைய சூரியன் 14-ஆம் தேதிமுதல் 10-ல் மாறி வக்ர குருவின் பார்வையைப் பெறுகிறார். தொழில், உத்தியோகம் இவற்றில் இருந்தவந்த சங்கடங்கள் விலகும். உயரதிகாரிகளிடமிருந்து பாராட்டும் கிடைக்கும். ஒருசிலர் பழைய வாகனத் தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம். தொழில்துறையில் நீண்டநாளாக இருந்துவந்த தொல்லை விலகும். 9-க்குடைய குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். வாழ்க்கை, தொழில் இரண்டிலும் பிரச்சினைகள் ஒரு புறமிருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றலும் உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தகப்பனார்வழி உறவால் சில சங்கடம் உண்டாகலாம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை வேலுக்கு பாலாபிஷேகம் செய்யவும்.

ரிஷபம்

இந்த ஜனவரி ஆங்கில புத்தாண்டு உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, கன்னி லக்னத்தில் பிறக்கிறது. குரு 8, 11-க்குடையவர். அவரது வீடான தனுசு மீனம். 8, 11-ஆமிடம் குரு ஜென்மத்தில் வக்ரம். மனச் சங்கடம், கவலை, திடீர் அதிர்ஷ்டம் போன்ற பலன்களைச் சந்தித்தாலும் காரிய அனுகூலம், மூத்த சகோதரவகையில் உதவி, ஒத்தாசை போன்ற நற்பலன்களும் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் கன்னி லக்னம் 5-ஆமிடம் என்பதால் உங்கள் திட்டங்களும் எண்ணிய எண்ணங்களும் நடைபெற தாமதமானாலும் தடைப்படாது. ராசிநாதன் 10-ல் சஞ்சாரம். உத்தியோகம் வேலையில் இருப்பவர்களுக்கு சில நன்மையும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் வருடம் பிறப்பது அரசு சம்பந்தமான முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். தந்தையுடன் நிலவிய கருத்து வேறுபாடு விலகும். ஜென்மத்தில் வக்ரம் பெறும் குரு சில நேரம் தேகநலத்தில் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தலாம். இழுபறியாக இருந்துவந்த திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக அமையும். தடைப்பட்ட நற்காரியங்கள் நடைபெறும். ஒருசிலர் வேலை சம்பந்தமான இடப்பெயர்சியை சந்திக்க நேரும். 12-க்குடையவர் 3-ல் நீசமடைந்தாலும் வக்ரகதியில் செயல்படுகிறார். விரயங்களைத் தவிர்க்கமுடியாது. சிலர் பூமி, மனை போன்றவற்றில் சுபவிரயங்கள் செய்யலாம். அடுத்ததாக மாதக் கடைசியில் 11-ல் உச்சம் பெறும் சுக்கிரன் எல்லாவகையில் காரிய ஜெயத்தைத் தருவார்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை லட்சுமி நாராயணரை வழிபடவும்.

மிதுனம்

இந்த ஆங்கில புத்தாண்டு ஜனவரி மாத பிறப்பு உத்திராட நட்சத்திரம் தனுசு ராசி, கன்னி லக்னத்தில் பிறக்கிறது. 4-ஆவது லக்னம் 7-ஆவது ராசியில் பிறக்கிறது. 4, 7 என்பது கேந்திர ஸ்தானம். அங்கு கேது (4-ஆமிடத்தில்) இருக்கிறார். வக்ர குருவும் பார்க்கிறார். ராசிநாதன் புதனும் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ஆக, இத்தனை பலம் இருப்பதால் புதிய முயற்சிகளில் அனுகூலம், காரிய ஜெயம் உண்டாகும். எனினும் குரு 10-க்குடையவர் 12-ல் வக்ரமாக இருப்பதால் விரயங்களைத் தவிர்க்க முடியாது. 11-க்குடைய செவ்வாய் 2-ல் நீசம் பெற்றாலும் வக்ரகதியில் 12-க்குடைய சுக்கிரனைப் பார்க்கிறார். எனவே வெளியூர் அல்லது வெளிநாட்டு முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். திடீர் முன்னேற்றத் திற்கும் இடமுண்டு. மாத மத்தியில் 3-க்குடைய சூரியன் 8-ல் மறைவு. அக்காலகட்டம் மனதைரியத்தில் சிறு கலக்கங்கள் உண்டாகலாம். பூமிகாரகன் செவ்வாய் 2-ல் நின்று சூரியனைப் பார்ப்பதால் பூமி, மனை சம்பந்தமாக சில பிரச்சினைகள் சுமூக தீர்வுக்கு வருமென நம்பலாம். 9-ல் உள்ள சனி ராகுவின் சாரத்தில் இருப்பதால் தந்தை வழியே சில சங்கடங் களைச் சந்திக்கலாம். கடன் வாங்கும் அமைப்பும் ஏற்படும். மாற்று இனத்தவர் ஒருவரின் ஒத்துழைப்பு கைகொடுக்கும். சுய தொழில்புரிவோருக்கு நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை யன்று லட்சுமி நரசிம்மருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.

கடகம்

உங்கள் ராசிக்கு 6-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 3-ஆவது லக்னமான கன்னியிலும் இந்த ஜனவரி புத்தாண்டு பிறக்கிறது. மேலும் கடக ராசிக்கு அட்டமத்துச்சனி 2026 மார்ச்வரை நடைபெறுகிறது. "அகப்பட்டவனுக்கு அட்டமத்துச்சனி' என்பது போல எந்தப்பக்கம் திரும்பினாலும் அடி விழுந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஓரிரு கடக ராசிக்காரர்களுக்கு சில நன்மை களைச் சந்தித்திருக்கலாம். அது பூர்வஜென்ம பயன் ஆகும். மற்றபடி அனேகம் பேருக்கு வேலையில் இடமாற்றம், குடியிருப்பில் இடமாற்றம், ஒரு வேலையை விட்டுவிட்டு வேறொரு வேலைக்கு மாறுதல் போன்றவற்றையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். 10-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் நீசம் வக்ரம். தொழில்துறையினருக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசாக ஓடுகிறது. என்றாலும் முயற்சியும் தெய்வ நம்பிக்கையும் இருப்பவர்களுக்கு வேதனைகள் விரட்டி சோதனைகளை மிரட்டி சாதனைக்கு வித்திடலாம். சகோதரகாரகன் நீசம். சகோதரவகையில் செலவுகள் அல்லது உடன்பிறந்தோருக்கு வைத்திய விரயங்கள் ஏற்படலாம். குரு வக்ரநிவர்த்திக்குப்பிறகு மன ஆறுதலும் தேறுதலும் உண்டாகும். மாத மத்தியில் குடும்ப ஸ்தானாதிபதி 7-ல் வருகிறார் (சூரியன்). குடும்பத்தில் சில சலசலப்புகள் தோன்றி மறையும். 11-க்குடைய சுக்கிரனும் 8-ல் மறைவு ஒட்டிக்கு ரெட்டி வேலையாகவும் அமையும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு 2-ஆவது லக்னமாக கன்னியிலும், 5-ஆவது ராசியான தனுசுவிலும் ஜனவரி புத்தாண்டு பிறக்கிறது. திரிகோண ராசியில் பிறப்பதால் உங்கள் எண்ணம், திட்டம், யாவும் செயல் வடிவம் பெறும். மேலும் 12-ல் செவ்வாய் நீசம் பெற்றாலும் அவர் 7-ல் சஞ்சரிக்கும் சுக்கிரனைப் பார்க்கிறார். 9-க்குடையவர் 10-க்குடையவரை பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். அது கூடுதல் பூஸ்ட். இந்த ஆண்டு வாழ்க்கை, தொழில் இரண்டிலும் நற்பலன்கள் உண்டாகும். மே மாதம் குரு 11-ல் வருவது மேலும் சிறப்பு. பூமி, மனை சம்பந்தப்பட்ட வகையிலும் வெற்றி வாய்ப்புகள் தேடிவரும். வெளிநாடு சென்று வேலை செய்யும் முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு இம்மாதம் கைகூடும். சில நேரம் பிள்ளைகள் பற்றிய கவலை மனதை வருத்தினாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகும். ஒருசிலர் உத்தியோகம் மாற்றத்தைப் பற்றிய சிந்தனைகளைத் தீவிரப்படுத்தலாம். குரு வக்ரநிவர்த்திவரை பொறுமை காப்பது அவசியம். கூட்டுத்தொழில் செய்கிறவர்களும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். மாத பிற்பாதியில் 7-ல் ராசிநாதன் சூரியன் மாறுகிறார். அவரை 12-ல் உள்ள செவ்வாய் பார்க்கிறார். எதிர்பாராத சில சங்கடம் தோன்றினாலும் அதை சமாளிக்கும் வழிகளும் பிறக்கும்.

பரிகாரம்: ஞாயிறுதோறும் விநாயகருக்கு செம்பருத்தி பூ மாலை சாற்றி வழிபடவும்.

கன்னி

இந்த ஆங்கில புத்தாண்டு உங்கள் லக்னமான கன்னியிலும், 4-ஆவது ராசியான தனுசுவிலும் பிறக்கிறது. உங்கள் முயற்சிகளில் சிறுசிறு குறுக்கீடுகள் காணப்பட்டாலும் முடிவில் அனுகூலத்தை எதிர்பார்க்கலாம். ராசிநாதன் புதனும் கேந்திர பலம் பெறுகிறார் ரியல் எஸ்டேட் தொழில் புரிவோர் சற்று மந்தமான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். "ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்துக் குரு' என்ற ஜோதிட பழமொழி இங்கு முழுமையாக வேலை செய்யாவிட்டாலும் 60 சதவிகிதம் நற்பலனை அனுபவிக்கலாம். ஏனெனில் குரு வக்ரகதியில் அல்லவா உங்கள் ராசியைப் பார்க்கிறார்! அதே நேரம் 8-க்குடையவர் 11-ல் நீசபலம் பெறுவது நல்லதுதான். சகோதரவழியில் சுபநிகழ்வுகள் உண்டாகும். அதன்மூலம் உங்களுக்கு செலவுகளும் ஏற்படும். 12-க்குடைய சூரியன் 5-ல் சஞ்சாரம் பண்ணுகிறார். (14-ஆம் தேதி முதல்). வக்ரகுருவின் பார்வையைப் பெறுகிறார். பிள்ளை களால் வீண் விரயங்கள் உண்டாகும். அது மனக் கவலையை சற்று ஏற்படுத்தும். ஜென்ம கேது சப்தம ராகு கணவன்- மனைவிக்குள் வாக்குவாதப் பிரச்சினை களைச் சந்திக்க நேரும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன்மூலமே தீர்வு உண்டாகும். வள்ளுவப் பெருந்தகை கூறியதுபோல் "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை பண்பும் பயனும் அது'' என்பதைத் முடிந்தளவு கடைப்பிடித்தால் நலம்.

பரிகாரம்: புதன்தோறும் சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

துலாம்

இந்த ஜனவரி புத்தாண்டு உங்கள் ராசிக்கு 12-ஆவது லக்னம் கன்னியிலும், 3-ஆவது ராசி தனுசுவிலும் பிறக்கிறது. விரயஸ்தானத்தில் வருடம் பிறக்கிறதே என்று கவலை வேண்டாம். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு என்ற ஒன்று உள்ளதல்லவா! அதுபோல விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்ளும் யோசனையை மேற்கொள்ளுங்கள். மேலும் ராசிநாதன் சுக்கிரன் 5-ல் திரிகோணமாக சஞ்சாரம் பண்ணுகிறார். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன்மெய் வருத்தக் கூ-தரும்'' என்பதுமாதிரி உங்கள் முயற்சியைத் தீவிரப்படுத்துவதன்மூலம் காரிய அனுகூலத்தை அடையலாம். மாத பிற்பாதியில் 11-க்குடைய சூரியன் 4-ல் கேந்திரபலம் பெறும் காலம் குரு பார்வையைப் பெறுகிறார். ஜெயம், முன்னேற்றம் போன்றவற்றையும் சந்திக்கலாம். தனஸ்தானாதிபதி 10-ல் நீசம், வக்ரம். பல வழிகளில் வரவேண்டிய பண வசூல்கள் வராமல் இழுத்தடிப்பு. எனினும் குரு வக்ரகதியில் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் நூறு என்ற இடத்தில் ஐம்பதாவது கிடைத்து கைகொடுக்கும். சகோதரகாரகன் நீசம் பெறுவதால் உடன்பிறந்தவர்களால் தொல்லை களைச் சந்திக்க நேரும். மனக்கசப்புகள் ஏற்படலாம். அவர் களால் இழப்பு, விரயம் போன்றவற்றையும் சந்திக்கலாம். என்றாலும் இறைபலம் துணை நிற்பதாலும் மனதைரியம் குறையாமல் அமைவதாலும் துணிந்து செயலாற்றலாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் சரபேஸ்வரரை வழிபடவும். மகாலட்சுமிக்கு தாமரைமாலை சாற்றி வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி 11-ஆவது லக்னம், 2-ஆவது ராசி இவற்றில் புத்தாண்டு பிறப்பது சிறப்பு. உங்கள் முயற்சிகளிலும், காரியங்களிலும் வெற்றி வாகை சூடலாம். அர்த்தாஷ்டமச்சனி ஒருபுறம் இருந்தாலும் அது சனிபகவானுக்கு சுயவீடு. எனவே பெரிய கெடுதல்களைத் தரமாட்டார். ஜனன ஜாதக தசாபுக்தி கள் மோசமாக இருந்தால் தேக ஆரோக்கியத்தில் பாதிப்புகளைச் சந்திக்கலாம். ஒருசிலர் அறுவை சிகிச்சையையும் சந்திக்க நேரும். 7-ல் குரு வக்ரகதியில் ராசியைப் பார்ப்பதால் சிலநேரம் சந்தேகம் வந்தாலும் அதை பூர்த்தி பண்ணும்விதமாக காரிய அனுகூலம் ஏற்படும். ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசமடைந்தாலும் வக்ரம் பெறுகிறார். குருவின் சாரத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறலாம். தொழில் கூட்டாளிகள்வகையில் ஒற்றுமையும் அன்யோன்யமும் ஏற்படும். 5-ல் உள்ள ராகு சனியின் சாரத்தில் சஞ்சரிப்பதால் பிள்ளைகள்வழியில் மனக்கவலைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். ஒருசிலருக்கு பிள்ளைகள்வகையில் தோஷமும் உண்டாகும். குரு வக்ர நிவர்த்திக்குப்பின் ஒன்று திறந்து ஒன்று அடைப்பட்ட கதவுகளில் இரண்டும் திறந்து வழி கிடைத்த மாதிரியான நிகழ்வுகளைச் சந்திக்கலாம். சகோதர சகாயமும் உண்டாகும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையன்று முருகப் பெருமானின் வேலுக்கு பாலாபிஷேகம் செய்யவும்.

தனுசு

இந்த ஜனவரி புத்தாண்டு உங்கள் ராசியிலும், 10-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. ராசிநாதன் குரு 6-ல் மறைவு, வக்ரம். 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பணப்பற்றாக்குறை தீரும். தேக ஆரோக்கியத்தில் அவ்வப்போது வைத்தியச் செலவுகள் உண்டாகும். மேஜர் பாதிப்புகளுக்கு இடமில்லை. ஜனன ஜாதகரீதியாக பாதக தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு முதுகு தண்டு அல்லது நரம்பு சம்பந்தமான தொந்தரவுகள் உருவாகும். ஜென்ம ராசியில் பிறக்கும் வருடம் உங்கள் முயற்சிகளில் நிலவிய தாமதங்களை விலக்கி காரிய நிறைவேற்றத்தைத் தரும். அதற்கு உங்கள் விடாமுயற்சியும் கைகொடுக்கும். 10-ஆவது லக்னம் என்பதால் உத்தியோகம், தொழில் இவற்றில் முன்னேற்ற கரமான சூழ்நிலைகள் அமையும். குருவின் வக்ர நிவர்த்திக்குப்பிறகு காரிய அனுகூலமும் ஏற்படும். 12-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவு. நீசமாகவும் இருக்கிறார். வக்ரமும் பெறுகிறார். அது ஒருவகை யில் நன்மைதான். 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். அந்நியர் பணம் உங்கள் கையில் புரளும். பிள்ளைகள் வகையில் நோய், நொடி உண்டாகும். 10-க்குடைய புதன் ஜென்மத்தில் சஞ்சாரம். 10-ஆமிடத்துக்கு குருபார்வை. மேலதிகாரிகளிடம் சில நேரம் மனக்கிலேசம், வேலைப்பளு காணப்பட்டாலும் உங்கள் திறமையினால் நற்பெயரைக் காப்பாற்றலாம். சிலர் உத்தியோகம் மாற்றம் பற்றிய சிந்தனைகளைச் சிந்திப்பர்.

பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் நவகிரக குருபகவானுக்கு இரண்டு நெய்தீபமேற்றி வழிபடவும்.

மகரம்

மகர ராசிக்கு ராசியின் அடிப்படை யில் 12-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 9-ஆவது லக்னமான கன்னியிலும் வருடம் பிறக்கிறது. ஏற்கெனவே மகர ராசிக்கு ஏழரைச்சனி நடந்துகொண்டிருக்கிறது. வீண் விரயம், எதிர்பாராத இடமாற்றம், திடீர்செலவு போன்றவற்றை சந்திக்கலாம். திரிகோண லக்னம் என்பதால் முடிவில் காரிய ஜெயம் என்பது ஒரு ப்ளஸ்பாயிண்ட். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். 4-க்குடைய செவ்வாய் 7-ல் நீசம், வக்ரம். எனவே சௌகரியக் குறைவுகள் ஏற்படலாம். சிலருக்கு பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தலைதூக்கலாம். 2-ல் சனி இருப்பதால் வாக்குச்சனி கோப்பைக் குலைக்கு என்பதாலும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் அவசியம். 5-க்குடைய சுக்கிரன் சனியுடன் சேர்க்கை என்பதால் பிள்ளைகள் வகையில் சில பிரச்சினைகள் தோன்றலாம். வக்ரகுருவும் அதற்கு ஒரு காரணமாக அமையும். 3-ஆமிடத்து ராகு மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தருவார். மனோதிடம் இருப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உருவாகும். கணவன்- மனைவிக் குள் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் உண்டாகும். ஒருசிலர் பிள்ளைகளின் திருமணம் பற்றிய கவலை களைச் சந்திக்க நேரும். குரு வக்ரநிவர்த்தி அதற்கு ஒரு தீர்வாக அமையும். 5-க்குடைய சுக்கிரன் குரு சாரம் (பூரட்டாதி) பெறும்போது ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு இடமுண்டு.

பரிகாரம்: சேந்தமங்கலம் அருகில் ராசிபுரம்வழி சாமியார் கரடு பேருந்து நிறுத்தத்தில் தத்தகிரி முருகன் கோவில் சென்று சனீஸ்வரர் மற்றும் ஆஞ்சனேயரையும் வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிக்கு 11-ஆவது ராசியிலும், 8-ஆவது லக்னத்திலும் வருடம் பிறக்கிறது. நன்மையும் உண்டு; தீமையும் உண்டு என்பது போல இரண்டும் கலந்து நடக்கும். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுகிறது. ஒருசிலருக்கு உத்தியோக மாற்றம், ஒருசிலருக்கு ஊர்மாற்றம், ஒருசிலருக்கு வேலையில்லாத நிலை போன்றவற்றை சந்திக்கலாம். என்றாலும் ஜெய ஸ்தானத்தில் வருடம் பிறப்பது சில ஆறுதல்களையும் தேறுதல்களையும் தரும். 3-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்தாலும் மற்ற கிரகங்களுக்கு 6-ஆமிடம் மறைவு என்றால் 3, 6, 11 போன்ற இடங்கள் செவ்வாய்க்கு நல்ல இடமே. இருந்தாலும் நீசமும் வக்ரமும் அல்லவா பெறுகிறார். மனதைரியம் குறையும். சகோதர- சகோதரிவகையில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றலாம். மாத பிற்பாதியில் கணவர் அல்லது மனைவிவழியில் சில விரயச் செலவுக்கு இடமுண்டு. ஜென்மச்சனி செவ்வாயை பார்க்கிறார். திருமண முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு காதல் அல்லது கலப்புத் திருமணத்தை சந்திக்க நேரும். 10-க்குடைய செவ்வாய் நீசமடைவதால் மேற்கூறிய இடமாற்றம் சம்பந்தப்பட்ட பலன்கள் ஏற்படலாம். 2-ல் ராகு குடும்பத்தில், கணவன்- மனைவியிடையே சச்சரவுகள் தோன்றினா லும் பிரிவினைக்கு இடமிருக்காது. ஒரு சிலர் சொந்தமாக வீடு கட்டும் முயற்சியில் இறங்கலாம். தாமதமாக செயல்படுமே தவிர நடைபெறாமல் போகாது.

பரிகாரம்: ஏழரைச்சனிக்கு சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

மீனம்

மீன ராசிக்கு 7-ஆவது லக்னமான கன்னியிலும், 10-ஆவது ராசியான தனுசு ராசியிலும் ஜனவரி புத்தாண்டு பிறக்கிறது. விரயமும் அதனுடன்கூடிய ஆதாயமும் ஏற்படும். ஜென்ம ராசிநாதன் குரு 3-ல் வக்ரம் பெற்றிருந்தாலும் 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். வக்ர நிவர்த்திக்குப்பிறகு பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். (குரு- புத்திரகாரகன்தானே!) 2-க்குடைய செவ்வாய் 5-ல் நீசபலம் பெற்றாலும் வக்ரம் பெறுகிறார். பணத் தட்டுப்பாடுகள் நிறைவேறும். எடுத்த காரியங்களில் தடை ஏற்படலாம். வீடு சம்பந்தப்பட்ட வேலைப்பாடுகள் மீண்டும் துவங்கும் அமைப்பு ஏற்படும். அதற்காக எதிர்பார்த்துக் காத்திருந்த வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். சிலர் ஆன்மிகப் பயணமும் மேற்கொள்வார் கள். ஜென்ம ராகு சப்தம கேது திருமண வயதை ஒட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமணம் தாமதமாகலாம். உத்தியோகத்தில் சிலர் இடமாற்றத்தைச் சந்திக்க நேரும். ஒருசிலர் ஊர்மாற்றத்தையும் சந்திக்கலாம். வெளிநாட்டு வேலை முயற்சிக்காக காத்திருப்பவர்களுக்கு இக்கால கட்டம் முயற்சி பலன்தரும். பொதுவாக ஏழரைச்சனி நடக்கும்போது குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வதே ஒரு பரிகாரம்தான். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பூர்வீக சொத்து சம்பந்தமாக நற்பலன்கள் உண்டாகும். பங்கு பாகவிஸ்திகள் முறைப்படி வந்துசேரும். ஜென்ம ராகுவினால் ஏற்படும்.

பரிகாரம்: குழப்பம் தீர வடக்கு பார்த்த காளியம்மனையோ அல்லது துர்க்கையம்மனையோ வழிபடவும்.

செல்: 99440 02365