Advertisment

2023 ஜனவரி மாத ராசி பலன்கள்

/idhalgal/om/january-2023-zodiac-results

மேஷம்

மேஷ ராசிக்கு இந்த ஜனவரி மாதப் புத்தாண்டு உங்கள் ஜென்ம ராசியில் பிறக்கி றது. 6-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. ராசிநாதன் செவ்வாய் 2-ல் வக்ரமாக இருக்கிறார். சந்திரன் சாரத்தில் (ரோகிணி) சஞ்சரிக்கிறார். 13-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தி. உங்களது தேவைகளும் செயல்பாடுகளும் நிறைவேறும். 5-க்குடைய சூரியன் மாத முற்பாதிவரை 9-ல் திரி கோணம். அரசுவகையில் நிலுவையில் இருந்த காரியங்கள் கைகூடும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சில விவகாரங்களைச் சந்தித்தா லும் முடிவுகள் சாதகமானபடி அமையும். செவ்வாய் 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். அதன் பலன் தகப்பனார்வழியிலும் நன்மைகளை எதிர்பார்க்கலாம். 10-ல் உள்ள சனி தொழில் துறையில் முன்னேற்றத்தைக் கொடுப்பார். திருப்பரங்குன்றத்தில் உள்ள திருக் கூடல்மலையில், கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

ரிஷபம்

Advertisment

ரிஷப ராசிக்கு இந்த ஜனவரி மாதப் புத்தாண்டு 12-ஆவது ராசியிலும், 5-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. ராசிநாதன் சுக்கிரன் 9-ஆமிடத்தில் திரிகோணமாக இருப்பது ஒரு பலம்தான். விரய ராசியில் வருடம் பிறந்தாலும் லக்னம் 5-ஆவது லக்னமாக அமைவது ஒருவகையில் நன்மைதான். மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சுபநிகழ்வுகள் உண்டாகும். அதன்மூலம் சுபவிரயங்களும் ஏற்படலாம். 11-ல் உள்ள குரு காரிய வெற்றிகளையும் அனுகூலங்களை யும் தருவார். 2-க்குடைய புதன் 8-ல் மறைந் தாலும் மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதால் பொருளாதார வரவு- செலவுகள் சரிசமமாக நிகழும். 13-ஆம் தேதிமுதல் 12-க்குடைய செவ்வாய் ஜென்மத்தில் வக்ர நிவர்த்தியாவது நற்பலனுக்கு வழிவகுக்கும். சிலநேரம் உடன்பிறப்புக்களால் பிரச்சினைகளும் விவகாரங்களும் தோன்றி மறையும். வேலூர் மாவட்டம் திருவலம் சென்று ஸ்ரீ சிவானந்த மௌனகுரு சுவாமிகள் ஜீவ சமாதியை வழிபடவும்.

மிதுனம்

இந்த 2023 ஜனவரி மாதப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 11-ஆவது ராசியிலும், 4-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. 11-ஆமிடம் ஜெய ஸ்தானம். எனவே காரிய அனுகூலம், முன்னேற் றம் போன்ற நற்பலன்கள் உண்டாகும். ராசிநாதன் புதன் 7-ல் நின்று ராசியையும் பார்க்கிறார்; 8-ஆம் தேதி முதல் வக்ரநிவர்த்தியுமாகிறார். மிதுன ராசிக்கு அட்டமச்சனியில் கடைசிக்கூறு நடைபெறுகிறது. இந்த வருடம் அட்டமச்சனி விலகுகிறது. அட்டமச்சனியின் ஆரம்பக்காலத்தில் வேலையிலோ அல்லது க

மேஷம்

மேஷ ராசிக்கு இந்த ஜனவரி மாதப் புத்தாண்டு உங்கள் ஜென்ம ராசியில் பிறக்கி றது. 6-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. ராசிநாதன் செவ்வாய் 2-ல் வக்ரமாக இருக்கிறார். சந்திரன் சாரத்தில் (ரோகிணி) சஞ்சரிக்கிறார். 13-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தி. உங்களது தேவைகளும் செயல்பாடுகளும் நிறைவேறும். 5-க்குடைய சூரியன் மாத முற்பாதிவரை 9-ல் திரி கோணம். அரசுவகையில் நிலுவையில் இருந்த காரியங்கள் கைகூடும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சில விவகாரங்களைச் சந்தித்தா லும் முடிவுகள் சாதகமானபடி அமையும். செவ்வாய் 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். அதன் பலன் தகப்பனார்வழியிலும் நன்மைகளை எதிர்பார்க்கலாம். 10-ல் உள்ள சனி தொழில் துறையில் முன்னேற்றத்தைக் கொடுப்பார். திருப்பரங்குன்றத்தில் உள்ள திருக் கூடல்மலையில், கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

ரிஷபம்

Advertisment

ரிஷப ராசிக்கு இந்த ஜனவரி மாதப் புத்தாண்டு 12-ஆவது ராசியிலும், 5-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. ராசிநாதன் சுக்கிரன் 9-ஆமிடத்தில் திரிகோணமாக இருப்பது ஒரு பலம்தான். விரய ராசியில் வருடம் பிறந்தாலும் லக்னம் 5-ஆவது லக்னமாக அமைவது ஒருவகையில் நன்மைதான். மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சுபநிகழ்வுகள் உண்டாகும். அதன்மூலம் சுபவிரயங்களும் ஏற்படலாம். 11-ல் உள்ள குரு காரிய வெற்றிகளையும் அனுகூலங்களை யும் தருவார். 2-க்குடைய புதன் 8-ல் மறைந் தாலும் மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதால் பொருளாதார வரவு- செலவுகள் சரிசமமாக நிகழும். 13-ஆம் தேதிமுதல் 12-க்குடைய செவ்வாய் ஜென்மத்தில் வக்ர நிவர்த்தியாவது நற்பலனுக்கு வழிவகுக்கும். சிலநேரம் உடன்பிறப்புக்களால் பிரச்சினைகளும் விவகாரங்களும் தோன்றி மறையும். வேலூர் மாவட்டம் திருவலம் சென்று ஸ்ரீ சிவானந்த மௌனகுரு சுவாமிகள் ஜீவ சமாதியை வழிபடவும்.

மிதுனம்

இந்த 2023 ஜனவரி மாதப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 11-ஆவது ராசியிலும், 4-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. 11-ஆமிடம் ஜெய ஸ்தானம். எனவே காரிய அனுகூலம், முன்னேற் றம் போன்ற நற்பலன்கள் உண்டாகும். ராசிநாதன் புதன் 7-ல் நின்று ராசியையும் பார்க்கிறார்; 8-ஆம் தேதி முதல் வக்ரநிவர்த்தியுமாகிறார். மிதுன ராசிக்கு அட்டமச்சனியில் கடைசிக்கூறு நடைபெறுகிறது. இந்த வருடம் அட்டமச்சனி விலகுகிறது. அட்டமச்சனியின் ஆரம்பக்காலத்தில் வேலையிலோ அல்லது குடியிருப்பு வகையிலோ இடமாற்றத்தைச் சந்திக்காதவர்கள் இந்த வருடம் இடம் மாறலாம். அது நன்மையான மாற்றமாகவும் அமையும். 12-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவதால் ஒருசில நேரம் விபரீத ராஜயோக அடிப் படையில் நன்மைகள் ஏற்படும். ஆபரணச் சேர்க்கைக்கு இடமுண்டு. சூரியன் 8-ல் மறையும் காலம் தகப்பனார்வழியில் சற்று கவனமுடன் செயல்படவேண்டும். திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஸ்ரீ ஓத சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். திருவாதிரை நட்சத்திரம் சிறப்பு.

கடகம்

கடக ராசிக்கு இந்த 2023 ஜனவரி புத்தாண்டு 10-ஆவது ராசியிலும், 3-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. தொழில் அமைப்பிலும் சரி; வாழ்க்கையிலும் சரி- லாபம், அனுகூலம், முன்னேற்றம் போன்றவற்றைச் சந்திக்கலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலை, உத்தியோகம் இவற்றில் சரியான வருமானமில்லாமல் தவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த புத்தாண்டு வேலை வாய்ப்பையும், சரளமான வருமானப் புழக்கத்தையும் தருமென்பதில் சந்தேகமில்லை. 3, 12-க்குடைய புதன் 6-ல் மறைந்தாலும் தனவரவுகளுக்கு குறை இருக்காது. தைரியத்துடன் பல விஷயங்களை எதிர்கொள்வீர்கள். 15-ஆம் தேதிக்குப்பிறகு 2-க்குடைய சூரியன் 7-ல் மாறுகிறார். அதன்பிறகு சேமிப்பு நிலையும் உயரும். உடன்பிறந்தவர்களால் மனச் சங்கடங்களையும் மனக்கஷ்டங்களையும் சந்தித்த நிலை 13-ஆம் தேதி செவ்வாயின் வக்ர நிவர்த்திக்குப்பிறகு விலகும். உங்கள் மதிப்பு, மரியாதையும் உயரும். நெல்லை அருகில் வல்லநாடு சென்று சாது சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

Advertisment

ss

சிம்மம்

இந்த ஜனவரி 2023 புத்தாண்டு சிம்ம ராசிக்கு 9-ஆவது ராசியிலும், 2-ஆவது லக்னத் திலும் பிறக்கிறது. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி, பொருளாதாரத் தேக்கம் விலகுதல், மனதில் மகிழ்ச்சி போன்ற பலன்களை இந்த புத்தாண்டு தரப்போகிறது. 9-க்குடைய செவ்வாய் 10-ல் வக்ரம் தெளிந்தவுடன் தர்ம கர்மாதிபதி யோகம் பூரணமாக செயல்பட்டு ஆறுதலும் தேறுதலும் தரும். வாழ்க்கை, தொழில் இந்த இரண்டிலும் நிலவிய சங்கடங்கள் விலகி, வீண்கற்பனை பயங்கள் மறைந்து நன்மை தரும். 15-ஆம் தேதிமுதல் ராசிநாதன் சூரியன் 6-ல் மறைந்தாலும் ஆட்சிபெற்ற சனியுடன் இணைவதால் மறைவு தோஷம் பாதிக்காது. பிள்ளைகளைப் பற்றிய கவலைகளும் மறையும். அவர்கள்வகையில் நல்லவையும் சுபநிகழ்வுகளும் ஏற்படும். 2-க்குடைய புதன் 5-ல் இருப்பதால் குடும்ப அமைப்பிலும் எடுத்த முயற்சி கைகூடும். தேகநலனில் கவனம் தேவை. மதுரை- திருப்பரங்குன்றம் சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

கன்னி

இந்த 2023 புத்தாண்டு உங்கள் ராசிக்கு 8-ஆவது ராசியிலும், ஜென்ம லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. ராசி உடல்; லக்னம் உயிர். உட-ல்லாமல் உயிரும் இல்லை; உயிர் இல்லாமல் உடலும் இல்லை. இரண்டுமே முக்கியம்தான். உங்கள் ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் உங்களது திறமையும், செயல்பாடும், கீர்த்தியும் வீண்போகாது. முயற்சிகள் தோற்காது. என்றாலும் 8-ஆமிடம் என்பது சஞ்சலம், சங்கடம், தாமதம் போன்றவற்றைக் குறிக்கிறது. எனவே எவ்வளவு உழைத்தாலும் பலன் தாமதமாக வருவது மனக் கவலைகளை அதிகமாக்கும். 2-ஆமிடத்துக் கேது குடும்பத்திலும் பொருளாதாரத்தில் வரவு- செலவுகளிலும் இறுக்கிப் பிடித்துச் செலவு செய்யும் நிலையைத் தருவார். அதனால் ஒருவித சங்கடம். 3-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பதால் சகோதர சகாயம் ஏற்பட்டாலும், அவர் 8-க்குடையவருமாவதால் சகாயமும் சங்கடமாக சிலசமயம் முடியும். தேகநலன் நலம்பெறும். வாகனவழியில் நன்மை அமையும். திருவாரூர் மடப்புரத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

துலாம்

இந்த 2023 ஜனவரி புத்தாண்டு உங்கள் ராசிக்கு 7-ஆவது ராசியிலும், 12-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திரமாக இருக்கிறார். கணவ னாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவருக்கும் ஆதாயமும் அனுகூல மும் ஏற்படலாம். 12-க்குடைய புதன் 3-ல் மறைகிறார். விரயங்கள் சற்று கட்டுக்குள் இருக்கும். அதுவும் மாத முற்பாதிவரை விரயச் செலவுகள் குறைவாகக் காணப்படும். 13-ஆம் தேதி 2-க்குடைய செவ்வாய் 8-ல் வக்ரநிவர்த்தியானபிறகு மீண்டும் செலவுகள் காணப்படலாம். என்றாலும் சமாளிக்கும் வழிவகைகளும் உண்டாகும். 11-க்குடைய சூரியன் 15-ஆம் தேதிமுதல் மகர ராசியான 4-ஆமிடத்திற்கு மாறியப் பிறகு உத்தியோகம் அல்லது தொழில்துறையில் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம், 2-க்குடைய செவ்வாய் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் சுபச்செலவுகள் ஏற்படும். பொன்னமராவதி- குழிபிறைவழியில் சிவந்தி-ங்கர் மற்றும் ஏகம்மை அவர்கள் தம்பதி சகிதமாக ஜீவசமாதியாக உள்ளனர். வழிபடவும்.

விருச்சிகம்

இந்த ஜனவரி 2023 புத்தாண்டு உங்கள் ராசிக்கு 6-ஆவது ராசியிலும், 11-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. 2-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். இழுபறி யாகவும் நிலுவையிலும் இருந்த செயல்பாடு கள் நிறைவேறும். ராசிநாதன் செவ்வாய் 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது ஒருபலம் தான். 13-ஆம் தேதிக்குப் பிறகு, செவ்வாய் வக்ர நிவர்த்தியான பிறகு ஆதாயம் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் நிலவிய பனிப்போர் விலகும். பிணக்குள் மறைந்து இணக்கங்கள் ஏற்படும். கேட்ட இடத்தில் உதவியும் கிடைக் கும். 11-க்குடைய புதன் 2-ல் வக்ரம் பெறுகிறார். வக்ரத்தில் உக்ரபலம். தனவரவுகள் பெருகும். 8-ஆம் தேதி வக்ரநிவர்த்திக்குப்பிறகு தொழில் துறை சமபந்தமான நல்லமுடிவுகளும் கூட்டணி அமைப்புகளும் பலன்தரும். 3-ஆமிடத்து சனி உடன்பிறந்தவகையில் நற்பலன்களைத் தருவார். பழனி செல்லும்வழியில் கணக்கன்பட்டி சென்று சற்குரு பழனி மூட்டைசுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

தனுசு

இந்த ஜனவரி மாதம் 2023 புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ஆவது ராசியிலும் 10-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. உங்கள் மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். கருதிய காரியங்கள் கைகூடும். நினைத்த செயல்பாட்டை ஈடேற்றலாம். 9-க்குடைய சூரியன், 10-க்குடைய புதன் இணைந்து ஜென்ம ராசியில் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே இந்த ஒரு யோகமே வாழ்க்கை, தொழில் இரண்டிலும் ஒரு நல்ல அமைப்பைத்தரும். 12-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவது யோகம்தான். விரயச் செலவுகள் குறையும். உடன்பிறந்தவகையில் நிலவிய கருத்து வேறுபாடுகள் இம்மாதம் 13-ஆம் தேதிக்குப்பிறகு விலகும். பொருளாதார நிலை திருப்திகரமாக விளங்கும். 11-க்குடைய சுக்கிரன் அதற்குத் துணைபுரிவார். ஒருசிலர் உத்தியோக உயர்வை எதிர்பார்க்கலாம். ஊதிய உயர்வுக்கு வழிவகை உண்டு. மாதக்கடையில் சுபவிரயம் ஏற்படலாம். திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டியில் மௌனகுரு நிர்வாண சுவாமி ஜீவசமாதி சென்று வழிபடவும்.

மகரம்

இந்த ஜனவரி 2023 புத்தாண்டு உங்கள் ராசிக்கு 4-ஆவது ராசியிலும், 9-ஆவது லக்னத் திலும் பிறக்கிறது. ஒருசிலருக்கு குடியிருப்பு மாற்றம் ஏற்றம் தரும். வாடகை வீட்டி-ருந்து ஒத்தி வீட்டுக்குப் போகலாம். புதிய மனை வாங்குவதற்காக அச்சாரம் போடலாம். ஜென்மச்சனி 3, 7, 10-ஆமிடத்தைப் பார்ப்ப தால் உத்தியோகவகையில் இடமாற்றம் வந்தால் ஏற்றுக்கொள்ளலாம். 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் சகோதர சகாயம் ஆதாயம் தரும். 8-க்கு டைய சூரியன் 12-ல் மறைவது "கெட்டவன் கெட்டிடில் கிட்டும் யோகம்' என்பதுபோல நன்மைகளும் உண்டாகும். 4-க்குடைய செவ்வாய் 5-ல் வக்ரம்பெற்று 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். மேற்கூறியதுபோல் பூமி. வீடு மனை சம்பந்தமான விரயங்கள் சுபவிரயமாக மாறிச் செயல்படும். பிள்ளைகள்வகையிலும் நல்லவை நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். கரூர் அருகில் நெரூர் சென்று சதாசிவப் பிரம்மேந்திராள் ஜீவசமாதியை வழிபடவும்.

கும்பம்

இந்த ஜனவரி 2023 புத்தாண்டு உங்கள் ராசிக்கு 3-ஆவது ராசியிலும், 8-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. ஏழரைச்சனியில் விரயச்சனி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. 3-க்குடைய செவ்வாய் 4-ல் வக்ரம். உடன்பிறந்த சகோதர- சகோதரிவழியில் பிரச்சினைகள், இன்னல்களைச் சந்திக்கலாம். கருத்து வேறுபாடும் ஏற்படலாம். இந்த புத்தாண்டு எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் எண்ணத் தையும் உருவாக்கும். தைரியமும் தன்னம்பிக்கை யும் அதிகமாகும். 7-க்குடைய சூரியன் 11-ல் இருப்பது ஒரு பலம். தகப்பனாரால் ஆதாயமும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். தாயார் உடல் நிலையிலோ அல்லது தன் தேகசுகத்திலோ கவனம் தேவைப்படும். மருத்துவச் செலவு களுக்கு இடமுண்டு. பொருளாதாரப் பற்றாக் குறைக்கு இடமில்லை. வரவு- செலவு தாராள மாக நடைபெறும். பொன்னமராவதி- புதுக்கோட்டை பாதையில் பனையூர் ஒடுக்கத் தில் சாது புல்லான் சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். சதய நட்சத்திரத்தில் சிறப்புப் பூஜை.

மீனம்

இந்த ஜனவரி 2023 புத்தாண்டானது உங்கள் ராசிக்கு 2-ஆவது ராசியிலும், 7-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. பொருளாதாரத்தில் பற்றாக்குறை விலகும். நிம்மதியும் நிறைவும் உண்டாகும். ஜென்ம குரு 5-ஆமிடம், 7-ஆமிடம் 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகள்வழியில் சுபகாரிய நிகழ்வு ஏற்படும். கணவன்- மனைவி பிரச்சினைகள் சுமூகமாகும். மனைவியினால் கணவருக்கு ஆதரவு உண்டாகும். 2-ஆமிட ராகு சிலநேரம் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் பிரிவினைக்கு இடமில்லை. 3-ல் செவ்வாய் வக்ரம். உடன்பிறந்த வர்களால் பிரச்சினைகளை சந்திக்கலாம். 9-ஆமிடத்தை குரு பார்த்தாலும் 9-க்குடைய செவ்வாய் வக்ரம் பெறுவதால் தகப்பனாருக்கு வைத்தியச் செலவுகள், உடல்நலத் தொந்தரவுகள் ஏற்படலாம். 6-க்குடைய சூரியன் 10-ல் இருப்ப தால் தொழி-ல் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சிங்கம்புணரியில்- முத்துவடுகநாத சித்தர் என்னும் வாத்தியாரய்யா ஜீவசமாதி சென்று வழிபடவும். மிகவும் சக்திவாய்ந்தவர்.

அலைபேசி: 99440 02365.

om010123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe