அம்மனாக நடிக்கும்போது பயமாக இருந்தது! புன்னகை அரசி கே. ஆர். விஜயா

/idhalgal/om/it-was-scary-when-i-played-amman-smiling-queen-k-r-vijaya

ரஸ்வதி சபதமாக இருக்கட்டும், கந்தன் கருணையாக இருக்கட்டும் எந்தப் படங்கள் என்றாலும் பிரஷ்ஷாக இருக்கும் அந்தப் படங்களைப் பார்க்கும் போது இன்றும் அம்மன் என்றாலே முதலில் அவர் முகம் தான் நமக்கு ஞாபகத்தில் வரும்!

கடவுள் கதாபாத்திரத்துக்கு முதல் சாய்ஸாக அவர் இருந்தார். இதற்கு காரணமாக அவரது முக அமைப்பும், சாந்தமான லுக்கும் இருந்தது.

krv

அவர் தமிழ் சினிமாவின் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.

கறுப்பு வெள்ளைக் காலத்திலிருந்து ஈஸ்ட்மென் கலர் காலம் வரையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்க

ரஸ்வதி சபதமாக இருக்கட்டும், கந்தன் கருணையாக இருக்கட்டும் எந்தப் படங்கள் என்றாலும் பிரஷ்ஷாக இருக்கும் அந்தப் படங்களைப் பார்க்கும் போது இன்றும் அம்மன் என்றாலே முதலில் அவர் முகம் தான் நமக்கு ஞாபகத்தில் வரும்!

கடவுள் கதாபாத்திரத்துக்கு முதல் சாய்ஸாக அவர் இருந்தார். இதற்கு காரணமாக அவரது முக அமைப்பும், சாந்தமான லுக்கும் இருந்தது.

krv

அவர் தமிழ் சினிமாவின் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.

கறுப்பு வெள்ளைக் காலத்திலிருந்து ஈஸ்ட்மென் கலர் காலம் வரையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன் என முன்னணி ஹீரோக்களுடன் வெற்றி நாயகியாக வலம் வந்தவர். அம்மன் வேடம் தரித்தாலும் சரி, பிற கேரக்டர்கள் என்றாலும் சரி அப்படியே மாறிவிடும் நடிப்பு ஆளுமை. சாதாரணக் குடும்பப் பின்னணியில் பிறந்து, தன் உழைப்பின் மூலம் வெற்றிகளைக் குவித்தவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 450 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள கே.ஆர்.விஜயா தனது 50 ஆண்டுகால திரை வாழ்க்கை பற்றி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் பிரத்யேகமாக சில செய்திகளைச் சொல்லியிருந்தார்.

குறிப்பாக அம்மன் கேரக்டரில் நடிப்பதற்கு தனக்கு பயமாக இருந்தது என்கிறார் நடிகை கே.ஆர்.விஜயா.

krv

முதலில் "நம்ம வீட்டு தெய்வம்' படத்தில் தான் தெய்வமாக என்னை மாற்றினார்கள். அந்தப் படத்தை தயாரிப்பாளர் வேலுமணி தான் தயாரித்தார். முதலில் பேய் கதையாகக் கூறிய அவர்கள் பின்னர் தெய்வமாக நடிப்பதாக மாற்றினார்கள். அதைக் கேட்டதும் எனக்கு பயமாக இருந்தது. தெய்வமாக நாம் நடிக்கப் போகிறோமா என்று ரொம்பவே பயந்தேன். அதற்கு முன்பு வரை புராணக் கதைகüல் நான் நடித்திருந்தேன். ஆனால் சமூகப் படம் ஒன்றில் தெய்வமாக நடிக்க வேண்டும் என்றபோது... எனக்கு வெடவெடத்தது. தெய்வம் என்பது நம் வீட்டிற்குள் வருவது போன்றது, அப்படி என்றால் அதை எப்படிச் செய்வது, எனக்குக் கையும், காலும் புரியவில்லை. மிகப் பயமாக இருந்தது. அப்பொழுதுதான் நான் விரதம் இருக்கத் தொடங்கினேன். அது மட்டுமல்லாமல் எப்பொழுதும் ஷூட்டிங் செல்லும் முன்பாக குüத்து விட்டு பூஜை அறைக்குச் சென்று, இன்று நாம் செய்ய இருக்கின்ற கேரக்டரை நன்றாகச் செய்ய வேண்டும் என்று சாமி கும்பிட்டு விட்டுத்தான் போவேன்.

இந்த மாதிரிப் படங்கüல் நடிக்கும் போது கொஞ்ச நேரம் பூஜை அறையில் நின்று எல்லா சாமி படங்களையும் கூர்ந்து கவனிப்பேன். சரஸ்வதி, லட்சுமி, முருகன் படங்கüல் அவர் களுடைய கண் எப்படி இருக்கிறது, கை எப்படி இருக்கிறது, அவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என்று கவனிப்பேன். இவையெல்லாம் யாரும் சொல்லாமலே எனக்குத் தோன்றியது. ஒருவேளை அப்படித் தோன்றியது எனக்குக் கடவுள் கொடுத்த அனுக்கிரகமாகக்கூட இருக்கலாம். எதுவுமே நான் கேட்காம, எதிர் பார்க்காம எல்லாமே தானாக அமைஞ்சதுதான் என்கிறார் நடிகை கே.ஆர். விஜயா.

-எஸ்.

om010824
இதையும் படியுங்கள்
Subscribe