யாதுமாகி நின்றாள்! - இந்திரா சௌந்தர்ராஜன்

/idhalgal/om/indira-parathsarathy

விஸ்வாமித்திரர் வடிவிலிருக்கும் பிராமணர் தனக்குத் தருவதாகச் சொன்ன தட்சணையைப் பற்றிக் கேட்கவும், சுற்றியிருந்த அவ்வளவுபேரும் விக்கித்து நின்றனர். "இது என்ன கத்திபோய் வால் வந்த கதையாக' என்பதுபோல் பார்த்தனர். அரிச்சந்திரனேகூட அதை எதிர்பார்க்கவில்லை.

""என்ன அரிச்சந்திரா... மௌமாக இருந்தால் எப்படி? எங்கே எனக்கான தட்சணை? அதையும் தருவதாக அல்லவா வாக்குறுதி அளித்துள்ளாய்...''

""ஆம் சுவாமி... நான் ஏதோ ஞாபகத்தில் மறந்து விட்டேன்.''

""உண்மையில் மறந்துவிட்டாயா. இல்லை மறந்தது போல் நடிக்கிறாயா?''

சுவாமி... எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது- என்னை நம்புங்கள்...''

""சரி சரி... எதற்கு வீண்பேச்சு. எனக்கான தட்சணையைத் தந்துவிட்டு நீ எங்கு வேண்டு மானாலும் போ...'' ""சுவாமி... அந்த தட்சணை எவ்வளவென்று சொல்லவில்லையே?'' ""என் எடைக்கு எடை பொன்தான் நீ தரப்போகும் தட்சணை.'' அதைக்கேட்ட மாத்திரத்தில் அரிச் சந்திரன் மட்டுமல்ல; அவையோர் அவ்வளவு பேருமே விக்கித்துப்போய் பார்த்தனர். அவர் களில் ஒருவர், ""அந்தணரே... நாடு நகரம் என்று சகலத்தையும் உங்கள் மகள் நிமித்தம் இழந்துவிட்டு ஒரு ஆண்டியைப்போல நிற்கும் இவரிடம்போய் எடைக்கு எடை பொன் கேட்கிறீர்களே... நியாயமா? இவர் எங்கே போவார்?'' என்றார்.

""அப்படியானால் பொன்னாக வேண்டாம்- பத்தாயிரம் வராகன் பணமாகத் தரட்டும்... எனக்கு ஆட்சேபணையில்லை.''

""சரிதான்... ஒரு செப்புக்காசுக்குக்கூட விதியின்றி நிற்பவரிடம் நீங்கள் இப்படியா கேட்பது? இவர் மட்டும் அரசனாக இருந்திருந்தால் நீங்கள் கேட்டதைப்போல பலமடங்குகூட அளித்திருப்பார். அவரிடம் இருக்கும் சகலத்தையும் பறித்துவிட்டு இது என்ன பேச்சு?''

""அது சரி... நான் கேட்டது இவரிடம்- நீர் யார் என்னை கேள்வி கேட்க...''

""நான் இவர் அரண்மனை நிர்வாகிகளில் ஒருவன்.''

""இப்போது இவர் அரசராக இல்லாத போது எப்படி நீங்கள் என்னைக் கேட்கலாம்?''

-அந்த கேள்வி அவரை மட்டுமல்ல;

அங்குள்ள எல்லாரையும் கட்டிப்போட்டது. அரிச்சந்திரனும் ஒரு முடிவுக்கு வந்தான்.

""சுவாம

""சுவாமி... எனக்கு சற்று அவகாசம் தாருங்கள். நீங்கள் கேட்ட பத்தாயிரம் வராகனை நான் எப்பாடு பட்டாவது உங்களுக்குத் தந்துவிடுகிறேன்.''

""அவகாசமென்றால் எவ்வளவு காலம்?'' ""ஒரு.. ஒரு மாத காலம்...'' ""சரி... நீ நாட்டைவிட்டு ஓடிவிடக்கூடாது. நேர்மையாக நடக்கவேண்டும். சரிதானே?'' ""நிச்சயமாக நடப்பேன்.''

""இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. எனக்கு இதுபோல் சத்தியம் செய்து தரவில்லை என்று மட்டும் சொல். இந்த நாடுமுதல் இழந்த சகலத்தையும் நீ திரும்பப் பெற்றிடலாம்.''

அந்தணர் விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனுக்கு பேரதிர்ச்சியளித்தார்.

""என்ன அரிச்சந்திரா... பதிலேதும் சொல்லாது இருக்கிறாய்?''

""ஒன்றுமில்லை சுவாமி. நான் சூரியகுலத் தோன்றல்! உயிரைக்கூட விடுவேன். சொன்ன சொல் மாறமாட்டேன்.''

""எதற்கு இப்படி ஒரு வைராக்கியம்...?''

""வைராக்கியம்தானே நல்ல புருஷர்களின் லட்சணம்.''

""அதெல்லாம் வெற்றிமேல் வெற்றி பெற்றவர்களுக்கு. நீ இப்போது சகலத்தையும் இழந்துவிட்டவன். எதற்கு வீண்பேச்சு?''

""இல்லை சுவாமி. ஒரு மண்டலம்

அவகாசம் தாருங்கள். நான் பாடுபட்டு உழைத்து உங்களுக்குரியதை அளித்து விடுகிறேன்.''

""சரி... ஒரு மண்டலம் என்றால் ஒரு மண்டலம்தான் நான் பொறுப்பேன். அதன் பின் ஒரு நாள்கூட பொறுக்கமாட்டேன்'' என்று கூறிவிட்டுச் சென்றார் அந்த பிராமணர்.

அரிச்சந்திரன் அமர்ந்திருந்த அரியாசனத் தில் விஸ்வாமித்திரர் உருவாக்கிய மகள்- மருமகன் என்னும் ஜோடி அரசன்- அரசியாக அமர்ந்திருந்தது. அதைக்காணவே பலருக்கும் சகிக்கவில்லை. அரசன்- அரசியான அவர் களோ அப்போதே தங்கள் தர்பாரைத் தொடங்கிவிட்டனர். அரிச்சந்திரனை மனைவி, மகனோடு வெளியேறும்படிக் கட்டளையிட்டனர்.

உலகின் மோசமான கட்டளையாகவும் இதுவே இருக்கமுடியும்.

வியாசர் ஜெனமேஜெயனிடம் இது காறும் கூறியதைக்கேட்ட அவன் மெல்லக் கண்ணீர் விடலானான். இதற்குமுன்வரை எவ்வளவோ சம்பவங்கள், கதைகள் மற்றும் நீதிநெறிகளைச் சொன்னபோது வராத கண்ணீர் இப்போது அவனிடம் வர ஆரம்பித்திருந்தது.

""என்ன ஜெனமே ஜெயா... அரிச்சந்திரன் வரலாறு மனதை நெகிழ்த்திவிட்டதா?'' ""ஆம் குருவே! இப்படிக்கூட ஒரு மன்னவனா என்று வியப்பும் மேலிடுகிறது.''

""உனக்கு மட்டு மல்ல; அரிச்சந்திரன் வரலாறு மனித உயிர் கள் அவ்வளவுபேருக் குமே ஒரு உருக்கமான சங்கதியே... அந்த ஈசனேகூட அழுதாலும் அழுதிடுவார்...''

""இந்த விஸ்வாமித்திரருக்கு ஏன் இத்தனை கொடியபுத்தி?''

dd""கொடியபுத்தி என்றும் கூறலாம். அரிச்சந்திரன் புகழை உலகறியச்செய்ய அவர் தன்னையே பணயம் வைக்கிறார் என்றும் சொல்லலாம்.''

""இது என்ன புதிய கோணம்?''

""எந்தவொரு விஷயத்திற்கும் இதுபோல சில மறுபக்கங்கள் இருக்கும். அவற்றையும் காணும் தெளிவும் நோக்கும் நமக்கு வேண்டும்.''

""பிறகு என்னாயிற்று?''

""சொல்கிறேன்... இதன்பிறகே அரிச்சந்திர னின் துன்பம் பலமடங்கு அதிகரித்தது...''

""எப்படி?''

""அவன் அரசாண்ட அயோத்தியில் அவனுக்கு எவரும் வேலைதரத் தயாரில்லை. எல்லாரும் அதைப் பாவமாய் நினைத்த னர். அதேசமயம் தங்கள் அரசனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் உதவிட அவர் கள் தயாராக இருந்தனர். ஆனால் விஸ்வாமித் திரரோ யாசகம் பெற்ற பணத்தை வாங்க மாட்டேன் என்று கூறிவிடுவார். எனவே அயோத்தி மக்களால் அரிச்சந்திரனுக்கு உதவ முடியவில்லை. அவனும் மக்களை வருத்தாமல் அயோத்தியைவிட்டுப் பிரிந்து சென்றான்.

பஞ்சணையில் உறங்கி, பால்பழங்கள் உண்டு, கால்களால் நடப்பது என்றில்லாத படி ரதமேறிப் பயணித்து, உல்லாச மான ராஜயோக வாழ்வை வாழ்ந்த சந்திரமதியும் அரிச் சந்திரனின் புதல்வ னான லோகிதாசனும் அரிச்சந்திரனோடு சேர்ந்து நடந்தே காசி நகரை அடைந்தனர்.

கங்கை நதி பாய்ந்தி டும் புண்ணிய தீரம்.

கட்டுக்கடங்காத கூட்டம். நடந்து வந்த தில் நாட்களில் ஒரு மண்டலமும்போய் ஒரு நாள்தான் பாக்கி இருந்தது. பிராமணர் வேடத்தில் விஸ்வாமித்திரர் வந்து நிற்பாரே என்று எண்ணும்முன் அவரும் வந்துநின்றார்.

""என்ன அரிச்சந்திரா... உன்னை எங்கெல் லாம் தேடுவது? இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் காசிக்கு வருவாய். உன்னால் பார் நானும் வர நேர்ந்துவிட்டது'' என்று கடிந்துகொண்டதோடு, ""ஒருநாள்தான் உள்ளது. நாளை வரும்போது பத்தாயிரம் வராகன் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவுதான்'' என்று மிரட்டிவிட்டுச் சென்றார்.

சந்திரமதி கலங்கிப்போனாள்.

""அரசே... என்னை விற்றாவது இந்த கடனிலிருந்து விடுபடுங்கள்'' என்று அழுதாள்.

""அய்யோ சந்திரமதி- உன்னை நான் விற்பதா?''

""வேறுவழியே இல்லை. இங்கு வேலை பார்த்து சம்பாதிக்க பல காலமாகும். கெடுவுக்குள் பணம் தர இதுவொன்றே வழி.''

""எப்படி சந்திரமதி- அக்னி சாட்சியாக உயிருள்ளவரை உன்னைப் பாதுகாப்பேன் என்று சத்தியம் செய்தல்லவா உன்னை நான் மணந்துள்ளேன்.''

""நீங்கள் விற்க நினைத்தால்தானே தவறு. நானாக முன்வந்தால் ஒரு தவறுமில்லையே...''

""சந்திரமதி... நீயா இப்படிப் பேசுகிறாய்?''

""உங்களில் சரிபாதியான நான் பேசாமல் வேறு யார் பேசுவார்?''

""சந்திரமதி...''

""நீங்கள் இனி எதுவும் பேசவேண்டாம். என்னை நானே ஏலம் விடப்போகிறேன்'' என்ற சந்திரமதி அதற்காகத் தயாராகவும், விஸ்வாமித்திரரே இங்கே ஏலம் எடுக்கின்றவராக வந்து, ""உன் வயதுக்கும் திறமைக்கும் 5,000 வராகன்தான் தரமுடியும்...'' என்றார்.

வேறுவழியின்றி 5,000 வராகனை அரிச் சந்திரன் பெற்றிட, ஒரு மாட்டை ஓட்டிச் செல்வதுபோல சந்திரமதியை அவர் ஓட்டிச் செல்லலானார். அப்போது தாயைப் பிரிய மனமில்லாத லோகிதாசன் கண்ணீரோடு அவளைத் தொடர்ந்தான். அதைக்கண்ட சந்திரமதி, ""அய்யா... என் பிள்ளையையும் சேர்த்து ஏற்றுக்கொள்ளுங்கள். அவன் என்னைப் பிரிந்து வாழ முடியாதவன். கருணை காட்டுங்கள். நாளை வளர்ந்து அவன் உங்களுக்குப் பாடுபடுவான்'' என்று கதறினாள்.

விஸ்வாமித்திரரும் சரியென்று ஏற்றுக் கொண்டார். காசி நகர வீதியில் அரிச்சந்திரன் மனைவி, மகனை இழந்து தனித்து நின்றான். பத்தாயிரம் வராகனுக்கு ஐந்தாயிரம் உள்ளது. மீதத்துக்குத் தன்னை ஏலம்விடவேண்டும்.

எனவே தன்னை ஏலத்தில் அவன் நிறுத்திக் கொண்டபோது இங்கும் விஸ்வாமித்திரர் வேறுவிதத்தில் துன்புறுத்தத் தயாரானார்.

அரிச்சந்திரனை ஏலத்தில் எடுக்க பலர் முன் வந்தபோது தன் திருஷ்யால் வந்தவர் களைத் தடுத்த விஸ்வாமித்திரர், காசி மயானப் புலையனை அவனை நோக்கி அனுப்பினார்.

புலையனும் அரிச்சந்திரனை நெருங்கி, ""நீ கேட்கின்ற 5,000 வராகனுக்கு உன்னை நான் அடிமையாக்கிக் கொள்கிறேன்'' என்றான். அதைக்கேட்ட அரிச்சந்திரன், ""நான் ஷத்திரியன்- நீயோ புலையன். என்னை நீ அடிமையாகக் கொள்ள முடியாது. ஒரு ஷத்திரியனை இன்னொரு ஷத்திரியனே அடிமையாகக் கொள்ள முடியும்'' என்று கூறவும், அந்த புலையனின் முகம் சிறுத்துவிட்டது.

""நீ எப்போது நாடு, நகரம், மாடு, மனை, மனைவி, பிள்ளையை இழந்து கடன்காரனாக வும் ஆகிவிட்டாயோ அப்போதே ஷத்திரிய தகுதியையும் இழந்துவிட்டாய். இவ்வளவையும் இழந்த உன்னால் நான் ஷத்திரியன் என்கிற எண்ணத்தை இழக்க முடியவில்லை பார்...'' என்று கொக்கரித்தான். அந்த புலையனின் பேச்சு அரிச்சந்திரனை கண்ணீர் துளிர்க்கச் செய்துவிட்டது.

அப்போது அங்கு வந்த விஸ்வாமித்திரர், ""என்ன அரிச்சந்திரா... உன் வாய்மை உன்னை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது பார்த்தாயா?'' என்று கேட்டார்.

அரிச்சந்திரனோ, ""அந்த வாய்மையே என் அடையாளம். அது இருப்பதாலேயே என்னையும் நீங்கள் மதித்துவருகிறீர்கள். சாமான்யர்கள் இந்த உலகில் கோடானுகோடி பேர். ஏன் அவர்களில் ஒருவரை நோக்கி நீங்கள் செல்லவில்லை'' என்று கேட்டான்.

அவன் கேள்வி விஸ்வாமித்திரர் கன்னத் தில் அறைந்ததுபோல் இருந்தது.

""அரிச்சந்திரா... உனக்குள் நான் என்கிற மமதை போகவேயில்லை. சரி சரி... எக்கேடோ கெட்டுப்போ. கெடு முடியப்போகிறது 10,000 வராகனைத் தா...'' என்றிட, வேறுவழியின்றி புலையனின் அடிமையாகச் சம்மதித்து பணத்தை வாங்கி விஸ்வாமித்திரருக்குக் கொடுத்துவிட்டு புலையன் பின்னால் சென்றான்.

அந்த புலையன் சுடுகாட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும்- பிணங்களை எப்படி தடவிப்பார்த்து தீயில் இட்டுச் சுடவேண்டும் என்று பாடம் நடத்தியதோடு, அப்போதே சுடுகாட்டுக்குரிய தண்டக்கோலைக் கையில் கொடுத்து, அப்போது வந்த ஒரு பிணத்தை எரிக்கச் சொன்னதோடு, ""பிணத்தோடு சேர்த்துவரும் வாய்க்கரிசிதான் உனக்கான உணவு'' என்றும் கூறினான். அரிச்சந்திரனும் சம்மதித்தான்.

(தொடரும்)

om010519
இதையும் படியுங்கள்
Subscribe