Advertisment

அழிவற்ற மூல முதல்வன்! யோகி சிவானந்தம்

/idhalgal/om/indestructible-source-yogi-sivananda

டந்த வருடத்தில் எவ்வளவோ இழப்புகளும், வருத்தங்களும், துன்பங்களும் தரக்கூடிய நிகழ்வுகள் இருந்தாலும், இந்த புது வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடிய வருடமாக அமையட்டும். "ஓம் சரவணபவ' பக்தி இதழின் பக்த உள்ளங்களுக்கும், தோழமைகளுக்கும், "நக்கீரன்' குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

Advertisment

வினைகள் இரண்டு என்று உடல் தத்துவம் சொல்கிறது. உடல் தத்துவத்தைப் பற்றி திருமந்திரத்திலும், சித்தர்களின் மருத்துவ நூல்களிலும் நாம் விரிவாக தெரிந்துகொள்ளலாம். மானுட உடலானது 96 தத்துவங்களின் அடிப்படையில் இயங்குகிறது. இதில் மிக முக்கியமான தத்துவம் இரண்டு. ஒன்று நல்வினை. மற்றொன்று தீவினை. உடல் தத்துவமே உலக தத்துவம். வினைகள் நல்வினை, தீவினை (டர்ள்ண்ற்ண்ஸ்ங், சங்ஞ்ஹற்ண்ஸ்ங்) என்ற வகையில் செயலாற்றுகிறது. ஒருவன் நல்வினை செய்தால் நன்மையானவற்றை பெறமுடியும். ஒருவன் தீவினையை செய்தால் தீமையானவற்றை மட்டுமே பெறமுடியும். இவ்விரு வினைகளைப் பற்றி மருத்துவ ஞானி திருவள்ளுவர் அருளிச் செய்ததை பார்க்கலாம்.

"பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவு அகற்றும்

ஆகழ்ஊழ் உற்றக் கடை.'

பொருள்: போவதற்குக் காரணமான தீய ஊழ் வந்துற்றபோது, (ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அவனை அது) பேதையாக்கும் (அறிவிலி). அதற்கு மாறாக, பொருள் சேர்வதற்கு காரணமான நல்ல ஊழ் வந்துற்றபோது, (ஒருவன் எவ்வளவு பேதையாய் இருந்தாலும் அவனை அது) பேரறிஞனாக்கும்.

ss

Advertisment

ஆக, நல்வினை என்பது இயற்கை. தீவினை என்பது செயற்கை. இவையிரண்டும் ஒருவனது பிறப் பில் வழிவழியாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளாகும். கடவுளில்லை என்பவ

டந்த வருடத்தில் எவ்வளவோ இழப்புகளும், வருத்தங்களும், துன்பங்களும் தரக்கூடிய நிகழ்வுகள் இருந்தாலும், இந்த புது வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடிய வருடமாக அமையட்டும். "ஓம் சரவணபவ' பக்தி இதழின் பக்த உள்ளங்களுக்கும், தோழமைகளுக்கும், "நக்கீரன்' குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

Advertisment

வினைகள் இரண்டு என்று உடல் தத்துவம் சொல்கிறது. உடல் தத்துவத்தைப் பற்றி திருமந்திரத்திலும், சித்தர்களின் மருத்துவ நூல்களிலும் நாம் விரிவாக தெரிந்துகொள்ளலாம். மானுட உடலானது 96 தத்துவங்களின் அடிப்படையில் இயங்குகிறது. இதில் மிக முக்கியமான தத்துவம் இரண்டு. ஒன்று நல்வினை. மற்றொன்று தீவினை. உடல் தத்துவமே உலக தத்துவம். வினைகள் நல்வினை, தீவினை (டர்ள்ண்ற்ண்ஸ்ங், சங்ஞ்ஹற்ண்ஸ்ங்) என்ற வகையில் செயலாற்றுகிறது. ஒருவன் நல்வினை செய்தால் நன்மையானவற்றை பெறமுடியும். ஒருவன் தீவினையை செய்தால் தீமையானவற்றை மட்டுமே பெறமுடியும். இவ்விரு வினைகளைப் பற்றி மருத்துவ ஞானி திருவள்ளுவர் அருளிச் செய்ததை பார்க்கலாம்.

"பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவு அகற்றும்

ஆகழ்ஊழ் உற்றக் கடை.'

பொருள்: போவதற்குக் காரணமான தீய ஊழ் வந்துற்றபோது, (ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அவனை அது) பேதையாக்கும் (அறிவிலி). அதற்கு மாறாக, பொருள் சேர்வதற்கு காரணமான நல்ல ஊழ் வந்துற்றபோது, (ஒருவன் எவ்வளவு பேதையாய் இருந்தாலும் அவனை அது) பேரறிஞனாக்கும்.

ss

Advertisment

ஆக, நல்வினை என்பது இயற்கை. தீவினை என்பது செயற்கை. இவையிரண்டும் ஒருவனது பிறப் பில் வழிவழியாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளாகும். கடவுளில்லை என்பவனும், கடவுள் எங்கே என்று கேட்பவனும் கொஞ்சம் பிரபஞ்சத்தில் ஆக்கிரமித்துள்ள பஞ்சபூதங்களைப் பற்றி (எண்ஸ்ங் ஊப்ங்ம்ங்ய்ற்ள்) தெரிந்து, புரிந்து, அறிந்து யோசித்தால் இந்தக் கேள்விகளை கேட்டவனுக்கு விடை கிடைத்துவிடும். ஏனென்றால் அண்டத்தில் உள்ளதே, பிண்டத்திலும் உள்ளது. உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் இருக்கக்கூடிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களைப் பற்றி கொஞ்சம் அறிவை பயன்படுத்தி விரிவாகப் பார்ப்போம் காற்றானது பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரையும் இயக்கும் சுவாசக் கடவுள். நீரானது ஒவ்வொரு உயிரும் உயிர் வாழ பயன்படும் உணவுக் கடவுளாகும். நெருப்பானது ஒவ்வொரு உயிரினத்தின் ஆரோக்கியத்தை, வளர்ச்சியை காக்கும், வளர்க்கும் கடவுளாகும் (விட்டமின் "உ'', ஒளிச்சேர்க்கை). நிலமானது இவையனைத்தையும் தாங்கிக்கொண்டு உருவாக்கவும், இயங்கவும் செய்யக்கூடிய தாங்கும் கடவுளாகும் (பூமித்தாய்). ஆகாயம் என்பது பிரபஞ்ச இயக்கத்தை இயங்கச் செய்து, தான் இயங்காமல், சகலத்தையும் இயக்கி, அனைத்தையும் கண்காணித்துக்கொண்டிருக்கும் "கண்காணி'' எனும் கடவுளாகும்.

இதுதான் கடவுளா என்று கேட்பதற்கு இங்கே பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.

பகுத்தறிபவனுக்கு மட்டுமே இதன் உள்ளே இருக்கும் இயற்கை சக்தியான இறை சக்தியைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக இன்றைய சூழலில் ஒரு இ.ஊ படித்தவனையோ ஒரு இள்ஸ்ரீ படித்தவனையோ, ஒரு இ.பங்ஸ்ரீட் படித்தவனையோ அல்லது மருத்துவம் படித்தவனையோ எத்தகைய கல்வியை கற்றிருந்தபோதும், அவன் படித்த பாடத்திட்டத்தில் இரண்டு வருடங்களுக்கு முந்தைய ஏதேனும் ஒரு இரண்டு விஷயத்தை கேட்டால் அதற்கே அவன் பதில் சொல்லமுடியாமல் முழி முழி என்று முழிப்பதைப் பார்க்கமுடியும். எனவே பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டும், கண்காணித்துக்கொண்டும் இருக்கும் கடவுளை கேள்வி கேட்டு மட்டும் தெரிந்துகொள்ளமுடியாது. உணர்ந்து, புரிந்து செயல்படுவதால் மட்டுமே அறிந்துகொள்ளமுடியும். அவனால் மட்டுமே இறைவனை உணர்வு பூர்வமாக அணுகவும் முடியும். உள்வாங்கவும் முடியும், வாழ்வியல் சித்தர் திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.'

தீய வினைகளை தம் நெஞ்சத்தால் நினைப் பதும் மாபெரும் குற்றமாகும். ஆகையால் பிறன் பொருளை அவன் அறியாமல் கவர்ந்துகொள்வோம் என்று கருதக்கூடாது.

இயற்கையும் அப்படியே. இயற்கை யாருடைய பொருளையும் கவர்ந்து கொள்ளாது. ஆனால் மனிதன் இயற்கைக்கு சொந்தமான இடங்களையோ, பொருளையோ அபகரிக்கும்போது அதன் பின்விளைவு மிகக் கொடூரமானதாக இருக்கும். அதற்கு உதாரணம் இந்த வருட இறுதியில் தமிழகத்தின் தலைநகரை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவமே மிகச் சிறந்த உதாரணமாகும்.

இயற்கையைப் பற்றி மருத்துவ மாமேதை திருவள்ளுவர் அருளிச்செய்வதை பார்க்கலாம்.

"வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.'

வஞ்ச மனதுடையவனின் பொய்யான ஒழுக்கத்தை அவன் உடம்போடு உடம்பாய்க் கலந்துள்ள (நீர், நிலம், நெருப்பு. காற்று, ஆகாயம்) ஐம்பூதங்களும் அவனைக்கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும்.

இயற்கையாக இருக்கும் இறையாற்றல் எனும் பிரபஞ்ச பேராற்றல் தன்னை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாமல் இயற்கையாகவே இருக்கும். இது புரியாதவனிடத்தில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் இருக்காது. பக்தி என்பது பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காமல் இருப்பதே மிகச்சிறந்த பக்தியாகும். திருக்குறள் கூறுவதை பார்ப்போம்.

"நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.'

துன்பங்கள் எல்லாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்தவரையே சார்ந்தனவாகும். ஆகையால், துன்பமில்லாத வாழ்தலை விரும்புகின்றவர், பிற உயிர்களுக்கு துன்பம் செய்யமாட்டார்.

ஏனென்றால் மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளும், அவன் ஈட்டிய பொருட்செல்வமும் ஒருநாள் ஒன்றுமில்லாமல் முற்றிலுமாக அழிந்து போய்விடும். இதைப்பற்றி திருக்குறள் கூறுவதை பார்ப்போம்.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அது பெற்றால்

அற்குப ஆங்கே செயல்.

செல்வமும், உயிரும் நிலைக்காத தன்மை உடையது. ஆகையால் அத்தகைய செல்வத்தை ஒருவன் பெற்றால், அவனது உயிர் இருக்கும்போதே நிலையான தன்மையுடைய அறங்களை அப்பொழுதே, அந்தக்கணமே செய்துவிடவேண்டும்.

அவ்வாறு ஒருவன் செய்யக்கூடிய அறமே, "அறம் செய்வதே' சிறந்த பக்தியாகும். எனவே பூமியில் பிரளயம் என்பது யாரும் கணிக்க முடியாமலும், யாரும் எதிர்பாராத நேரத்திலும், மனித இனத் திற்கு பாடம் புகட்டுவதற்கு வினாடிப் பொழுதில் வந்து அனைத்தையும், அதாவது இயற்கைக்கு எதிரான சகலத்தையும் சம்காரம் செய்துவிடும். திருமந்திர சிற்பி அருளிச்செய்த திருமந்திரம் கூறுவதை பார்ப்போம்

"கருவரை மூடி கலந்தெழும் வெள்ளத்(து)

இருவருங் கோவென்(று) இகல இறைவன்

ஒருவனும் நீரூற ஓங்கொளி யாகி

அருவரை யாய்நின்(று) அருள் புரிந்தானே.'

உலகத்தில் உற்பத்தி முற்றிலுமாக நின்றுபோனது. எங்கு பார்த்தாலும் நீர்மயமாய் வெள்ளக்காடாக காட்சி யளித்தது. படைக்கும் பிரம்மனும், காக்கும் திருமாலும் ஆகிய இருவரும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாமல், ஒருவரோடு ஒருவர் மாறுபட்டு நின்றனர். அப்போது சிவப்பரம்பொருள் மட்டுமே, பெருவெள்ளப் பெருக்கில் பேரொளிப் பிழம்பாகத் தோன்றினான். அளந்து அறியமுடியாத பெரிய மலைபோல தோன்றி நின்ற சிவப்பரம் பொருளானது பிரம்மன், திருமால் இருவரையும் பார்த்து அஞ்ச வேண்டாம் என்று அருள் செய்தான்.

இங்கே ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். இயற்கையோடு இயற்கையாக நாம் நல்லதை மட்டும் செய்துவந்தால் நன்மையானதை பெறமுடியும். தீயவை செய்வதையோ, தீமையானவற்றுக்கு துணை போனாலோ, இயற்கையில் இருக்கும் இறைவன் அதற்கு எதிரான செயற்கையான அத்தனையையும் அழித்து ஒழித்து தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும். அப்போது நீ பெரியவன், நான் பெரியவன், அவன் உலக கோடீஸ்வரன், இவன் கடைந்தெடுத்த பிச்சைக்காரன் என்ற நிலைமையெல்லாம் இருக்காது. இறைவனின் இயற்கையின் சமூகத்தில் மனிதகுலம் அனைத்தும் பிச்சைக்காரர்களாகவே இருப்போம். அதாவது ஒன்றுமில்லாதவர்களாக இருப்போம். அப்போதும் நம்மை இயற்கையில் இருக்கும் இறைசக்தியே காப்பாற்றும். தீங்கு நிகழ்ந்த நேரத்தில் அல்லது தீமை நடந்த பேரிடர் காலத்தில் யாரும் யாரையும் குறை சொல்லாமல் ஒவ்வொருவரும் தமக்கு இயன்ற உதவிகளை அன்போடும் கருணையோடும் மற்றவர்களுக்கு செய்யவேண்டும். குறை கூறிக்கொண்டு கால விரயம் செய்யக்கூடாது.

இறைவனின் (இயற்கை) உண்மையான புகழை (சக்தியை) உள்ள விருப்பத்தோடு சொல்லிப் போற்றுபவரிடம், அறியாமையால் விளையும் பெரும் துன்பங்கள் எதுவும் சேர்வதில்லை. உண்மையான பக்தி செய்வோம். அப்போது இயற்கைப் பேரிடர்களில் இருந்து நாம் காப்பாற்றப் படுவோம். ஏனென்றால் அந்த சமயத்தில் நாம் அனைவரும் பரம்பொருளின் பாதுகாப்பு வளையத்தில் மகிழ்ச்சியாக இருப்போம். பக்தி செய்வோம். சிவப்பரம் பொருளின் பாதுகாப்பைப் பெறுவோம்.

om010124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe