சொர்க்கத்தின் திறப்பு விழா! வைகுண்ட ஏகாதசி -டி.ஆர்.பரிமளரங்கன்

/idhalgal/om/inauguration-paradise-vaikuntha-ekadasi

பொதுவாக, ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசியன்று விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இயலாத நிலையில், மூன்று கோடி ஏகாதசி நாட்களில் விரதம் மேற் கொண்டால் கிட்டும் புண்ணியப் பலன்களைத் தரும் வைகுண்ட ஏகாதசியிலாவது கண்டிப் பாக விரதம் மேற்கொள்ளவேண்டும். இதனால் தான் இந்த ஏகாதசியை "முக்கோடி ஏகாதசி' என்று போற்றுகின்றனர்.

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியே "வைகுண்ட ஏகாதசி' எனப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித் தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்குமென்று ஞான நூல்கள் கூறுகின்றன.

ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் ஒருவேளை மட்டும் சாத்வீக உணவு மிதமாக உண்ணவேண்டும்.

ஏகாதசி நாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடவேண்டும். ஆறு அல்லது குளத்தில் குளிப்பவர்கள் இடுப்பளவு நீரில் நின்றுதான் குளிக்கவேண்டும். அதைவிட ஆழத்தில் நின்று குளிப்பது பாதுகாப்பற்றது. ஓடும் நீரில் எதிர்முகமாக நின்றும், குளமானால் கிழக்கு அல்லது வடக்குமுகமாக நின்றும் குளிக்க வேண்டும். நீரில் மூழ்கிக் குளிக்கும் போது இரண்டு காதுகளையும் இரண்டு பெருவிரல்களால் மூடிக்கொள்ளவேண்டும். கண்களை மூடி, சுட்டு விரல்களால் மறைத் துக்கொள்ளவேண்டும். நாசியின் இரண்டு பக்கங்களையும் இரண்டு நடுவிரல்களால் மூடிக்கொள்ளவேண்டும். இந்த முத்திரைக்கு "சண்முகி முத்திரை' என்று பெயர். இந்த முத்திரையுடன் குளித்தால் பாதுகாப்பாக இருப்பதுடன் கிருமிகளினால் தொல்லை கள் ஏற்படாது என்று யோக நூல்கள் கூறுகின்றன.

பொதுவாக, நீராடும்போது வடக்கு முகமாக நின்று "ஓம் நமோ நாராயணாய' என்று மும்முறை ஜெபிக்கவேண்டும்.

ஏகாதசியன்று பெருமாள் கோவிலுக் குப் போகும்போது துளசி தளத்தை எடுத்துச் செல்லவேண்டும். ஏகாதசி நாளில் துளசியை செடியி−ருந்து பறிக்கக் கூடாதென்று சாஸ்திரம் சொல்வதால், முதல்நாளே எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஆண்கள் காலையில் நீராடியபின் மகாவிஷ்ணுவை மனதால் வணங்கித் துளசியைப் பறிக்கவேண்டும்.

நான்கு இலைகளும், நடுவில் தளிரும் (ஐந்து தளங்கள்) இருக்குமாறு துளசியைக் கிள்ளி சேகரிக்கவேண்டுமென்று துளசிமகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

ஏகாதசியன்று தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் கடைப்பிடித்தல் வேண்டுமென்று சாஸ

ஏகாதசியன்று தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் கடைப்பிடித்தல் வேண்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. இருந்தாலும் பெருமாளுக் குப் படைத்த பழங்களை பிரசாதமாக உண்ண லாம்; துளசி தீர்த்தமும் அருந்தலாம். அன்றைய தினம் பக−லும் இரவிலும் தூங்கக்கூடாது.

"ஓம் நமோ நாராயணாய' என்ற மூல மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருந்தால் பெருமாளின் அருளாசி கிட்டும். விடியும் நேரத்தில் காலை நான்கு மணிக்குமேல் நீராடிவிட்டு, பெருமாளுக்கு துவாதசிக்குரிய படையலை சமர்ப்பணம் செய்து வழிபட்டபின், காலை ஆறுமணிக்குமேல் பிரசாதம் உண்ணலாம் என்று ஆன்மிகச் செல்வர்கள் கூறுவர்.

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் கடைப்பிடிப்பதில் ஆன்மிகம் மட்டுமல்ல; அறிவியலும் கலந்திருக்கிறது.

ஏகாதசி திதியன்று சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடையும்போது, சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பூமியிலுள்ள நீர்வர்க்கம் பாதிப்புக்குள்ளாகிறதாம். அப்போது நமது உடலி−ல் எழுபது சதவிகிதம் நீர் நிறைந்திருப்பதாக மருத்துவம் கூறுகிறது. எனவே ஏகாதசியன்று மனித உடலும் சந்திரனின் ஈர்ப்புக்கு ஆளாகிறது. அந்த சமயத்தில் ஜீரண உறுப்புகள் சரியாக இயங்காது. எனவே அன்று உண்ணும் ஆகாரத்திலுள்ள முழுசக்தியையும் உடல் இழுத்துக்கொள்ள இயலாத நிலை ஏற்படும். அன்று விரதமிருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களி−ருந்து பாது காத்துக் கொள்ளலாம். இந்த நாளில் விரதம், ஜெபம், தியானம் செய்பவர்களுக்கு சந்திரனின் ஆற்றல் பயனுள்ள சக்தியாக மாறிவிடுவதால் உடல் வளம்பெறும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.

விரதம் மேற்கொள்வதால் உட−லுள்ள கொழுப்பு கரையும் வாய்ப்புள்ளது. இதனால் உடல் எடைகுறையும். நோயெதிர்ப்பு சக்தியும் கூடும்.

துவாதசியன்று காலையில் பெருமாளுக் குப் பூஜைசெய்து நிவேதனம் படைத்தபின் உணவுண்ணவேண்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.

அன்று உணவில் அகத்திக்கீரை, நெல்லி−, சுண்டைக்காயைத் தவறாமல் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவை மூன்றும் மருத்துவகுணம் கொண்டவை.

ஒருசிலர் உடல்நலம் குன்றித் துன்பப்படும்போது, ""யாரோ உனக்கு "இடுமருந்து' வைத்திருக்கிறார்கள்.

அதனால்தான் உன் உடல்நலம் பாதிக்கப்பட்டு துன்பப்படுகிறாய்'' என்று வயதானவர்கள் கூறுவதைக் காணலாம்.

அப்படி கொஞ்சம் கொஞ்சமாகத் தரப்பட்ட வசிய மருந்தை முறிக்க, மாற்று மருந்தாக அகத்திக்கீரையின் சாறு வேலைசெய்யும். மேலும் வசிய மருந்து உட்பட எல்லா வகையான மருந்துகளின் ஒவ்வாமைத் தாக்குதல் களையும் முறிக்கக்கூடியது அகத்திக் கீரையின் குணமாகும். இந்த மருத்துவப் பயன்களைக் கருதிதான், விரதமிருந்தபின் அகத்திக்கீரை உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மேலும் குடலில் "புண்' ஏற்பட்டிருந்தால் அதனை குணமாக்கும் சக்தி கொண்டது அகத்திக் கீரை.

pp

நெல்லிக்கனியை அறியாதவர்கள் இல்லை. உடல் நலத்திற்கு உறுதுணை யாக இருப்பதுடன், உடலுக்கு நல்ல ஊக்கத்தையும் இரும்புச்சத்தையும் கொடுக்கும் வல்லமை படைத்தது.

அதேபோல் சுண்டைக்காய்க்கும் நோயெதிர்ப்பு சக்தி தரும் வல்லமை இருப்பதால், துவாதசியன்று இந்த மூன்றும் உணவில் இடம்பெறுகின்றன.

மேலும், விரதங்களில் மேன்மையானது ஏகாதசி விரதம். வைணவத் திருத்தலங் களில் நடைபெறும் சொர்க்கவாசல் வைபவத்தில் கலந்துகொள்வதால், தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டுவதுடன், மனமும் ஒருநிலையில் நிலைத்திருக்கும்.

"நாகங்களில் சேஷனும், பறவைகளில் கருடனும், தெய்வங்களில் விஷ்ணுவும், மனிதர்களில் வேதங்கள் அறிந்தவர்களும் எவ்வாறோ, அவ்வாறே விரதங்களில் ஏகாதசி விரதமென்று பகவான் அருளியிருக்கிறார்' என வேதநூல்கள் கூறுகின்றன.

அழகே உருவான விழா

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா உலகப்புகழ் பெற்றது.

இந்த விழா இக்கோவிலின் கிழக்கு திசையிலிருக்கும் வெள்ளைக் கோபுர வாசலுக்குள் நுழைந்ததும், வலப்புறத்தில் அமைந்துள்ள பெரிய மண்டபத்தில் நடைபெறும். எப்பொழுதும் பூட்டியே இருக்கும் இதனை "ஆயிரங்கால் மண்டபம்' என்று போற்றுவர். இந்த கல்மண்டபத்தில் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்று (953) கருங்கல் தூண்கள் உள்ளன. மீதமுள்ள நாற்பத்தேழு தூண்களுக்காக நாற்பத்தேழு முழு தென்னை மரங்களை வெட்டிக் கால்களாக நாட்டி, அதன்பின் அழகிய பெரிய பந்தல் அமைக்கப்படும். ஆக, இப்போது ஆயிரம் தூண்களாகிவிட்டன. இந்தப் பந்தல் அமைக்கும் பணியை இரண்டு மாதங்களுக்குமுன்பே ஆரம்பித்துவிடுவார்கள். இந்தப் பெரிய மண்டபத்தின் நடுவில் தேர்வடிவில் ஒரு சிறிய மண்டபம் உள்ளது. இதனைத் திருமாமணி மண்டபம் என்பர். இங்குதான் பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியவர்களின் திருமூர்த்தங்களை சாஸ்திர சம்பிரதாயப்படி எழுந்தருளச் செய்வர்.

பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை தரிசித்துப் புனிதம்பெறுவர்.

அழகே உருவான- அற்புதமான திருவிழா வைகுண்ட ஏகாதசி. பட்டர் பெருமக்களின் கைத்திறன், அரையர்களின் அபிநயப் பாடல்கள் என பகல்பத்து, ஏகாதசி, ராப்பத்து உள்ளிட்ட 21 நாட்களிலும் ஆயிரங்கால் மண்டபத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்விழாவில் மோகினி அவதாரத்தில் பெருமாள் காட்சிதருவது மிகச்சிறப்பாகப் போற்றப்படுகிறது. பாற்கடலைக் கடந்தபோது கிடைத்த அமிர்தத்தைப் பங்கிடுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோதல் உருவாக, அதன்பொருட்டு மகாவிஷ்ணு எடுத்ததே மோகினி அவதாரம். அதன்விளைவால் தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது.

இந்த மோகினி அவதார நிகழ்ச்சியை வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் தரிசிக்கலாம். பகல்பத்து திருவிழாவின் கடைசி நாளான அன்று பகவானுக்கு ஆண்டாள் கொண்டையைப்போல் அலங்கரித்திருப்பார்கள். மணப் பெண்ணைப்போல் வலக்காலை சிறிதே மடித்திருப்பார். வலக்கையில் தங்கக்கிளி இருக்கும். இடக்கையை பெண்ணுக்கே உரிய நளினத் துடன் காலின்மீது வைத்திருப்பார். வைரமும், வைடூரியமும், பவளமும் மின்னும்விதமாக விதவிதமான நகைகள் அணிந்திருப்பார். நீண்ட ஜடையலங்காரமும், அதில் பூட்டப்பட்டிருக்கும் நகைகளும் அழகுக்கு அழகூட்டும். இத்திருக்கோலத்தினால் கண்பட்டுவிடுமோ என்று, பெருமாளின் வலக்கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வைத்திருப்பார்கள். இதனை "நாச்சியார் திருக்கோலம்' என்பர்.

இத்திருக்கோல வைபவத்திற்கு அடுத்த நாள் அதிகாலை நான்கு மணியளவில், வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறப்பு வைப்பு நடைபெறும். சொர்க்கவாசல் திறந்து சுவாமி நம்பெருமாள் வரும்போது, முதல்நாள் பெண்ணாகக் காட்சிகொடுத்தவரா இத்தனை மிடுக்குடன் வருகிறார் என்று பக்தர்கள் ஆச்சரியப்படும் நிலை ஏற்படும். பெருமாளுடன் சொர்க்கவாசல் வைபவத்தில் கலந்துகொள்வதால் சொர்க்கத்தில் ஓரிடம் கிடைக்குமென்பது ஐதீகம்.

பெருமாள், சொர்க்கவாசல் வழியாக மாதுளை முத்துகளாக ஜொலிக்கும் ரத்தின அங்கியை அணிந்து, கழுத்தில் கிளிமாலையுடன் ராஜாவாக வருவதைப் பார்த்து பக்தர்கள் "ரங்கா... ரங்கா... ரங்கா' என்று பக்திப் பரவசத்தால் குரல் எழுப்புவார்கள். இந்தத் திருக்கோலத்தை ஏகாதசி அதிகாலை முதல் இரவு வரை ஆயிரங்கால் மண்டபத்தில் தரிசிக்க லாம்.

வைகுண்ட ஏகாதசியன்று முற்றிலும் ரத்தினங்களாலான அங்கியை அணிந்திருப்பார். இந்த அங்கி சூரியனின் கதிர்வீச்சுக்கு சமமானது. இந்த கதிர்வீச்சு தெய்வீக மற்றும் மருத்துவகுணம் கொண்டது. அதேபோல, அன்று மூலவருக்கு சந்திரனின் கதிர்வீச்சு சக்திகொண்ட முத்தங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். இதனை முத்தங்கி சேவை என்று போற்றுவர்.

சந்திர கிரணங்கள் குளிர்ச்சியானவை என்பதால், சூரிய கிரணங்களால் ஏற்படும் வீரியத்தை ஈடுசெய்யும் வகையில், பெருமளவிலான முத்துகள் கொண்ட பெரிய அங்கி, பெரிய பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. தலைக்கவசத்தில் மட்டும் 36 ஆயிரம் முத்துகள் உள்ளனவாம். அப்படியென்றால் உடலெங்கும் வியாபித்திருக்கும் முத்துகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது எனப்படுகிறது. இச்சேவை ஏழு நாட்கள் நடக்கும்.

பகல்பத்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து ராப்பத்தின் எட்டாம் நாள் வேடுபறி உற்சவம் நடைபெறும். அன்று மாலை குதிரை வாகனத்தில் சுவாமி நம்பெருமாள் படைக்கலங்களுடன் பவனிவருவார். இந்த வைபவத்திற்காக வெள்ளைக் கோபுரம் அருகிலுள்ள திறந்த வெளியில் மணல் கொட்டியிருப்பார்கள். அதில் குழந்தைபோல் பெருமாள் குதித்து ஓடுவதையும், சுற்றிச்சுற்றி வருவதையும் தரிசிக்க ஆனந்தம் பெருகும்.

இந்த நிகழ்ச்சிக்கு அடுத்தநாள் திருக்கைத் தல சேவை. அப்போது பட்டர்கள் பெருமாளை தங்கள் கையில் தாங்கியெடுத்து வருவார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

மேற்கண்ட நிகழ்ச்சிகள் எல்லாம் வைகுண்ட ஏகாதசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெறுவதால் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் நிறைந் திருக்கும்.

பொதுவாக வைணவத் தலங்கள் அனைத் திலும் அத்யயன உற்சவமும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடை பெறும் வைகுண்ட ஏகாதசி விழா பெருஞ் சிறப்பு வாய்ந்தது என்றால் மிகையல்ல.

om010120
இதையும் படியுங்கள்
Subscribe