Advertisment

பழுதின்றி காப்பவன்! -விஜயா கண்ணன்

/idhalgal/om/immaculate-protector-vijaya-kannan

ந்தியாவிலேயே விபத்து சிகிச்சையில் எங்கள் மருத்துவமனை முதலிடம் பெற்றது எங்கள் குலதெய்வம் பழனி முருகப்பெருமானின் பரிபூரண அருளால்தான் என்று பக்தி மெய்சிலிர்க்க கூறினார் சென்னை குரோம்பேட்டையில் 2004 ஆண்டுமுதல் பல்வேறு சிறப்புகளுடன் துவங்கி இப்போது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக பல மருத்துவ சாதனைகளை செய்து வரும் "பார்வதி மருத்துவமனை' நிறுவனர் டாக்டர்.எஸ். முத்துகுமார் அவர்கள். நாம் அவரை சந்தித்து பேசியபோது முதலில் தமது மருத்துவமனை குலதெய்வம் பழனி முருகன் அருளால் மற்றும் இஷ்ட தெய்வம் திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் அருளுடன் படிப்படியாக பெற்ற உயர்வுகளை கூறினார்.

Advertisment

"எங்கள் குரோம் பேட்டை பார்வதி மருத்துவமனை அதிக அளவில் விபத்து சிகிச்சைகள் செய்துதான் ஆரம்பத்தில் அற்புதமான புகழை பெற்று இன்று பெரும் வளர்ச்சிளை பெற்றுள்ளது. இதற்கு முழு காரணமாக எங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் நிர்வாக தலைமை ஏற்றுள்ள என் துணைவியார் திருமதி. வசந்த குமாரி ஆகியோர்கள்தான்.

palani

துவக்கத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விபத்து சிகிச்சைகள் செய்து அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை நாங்கள் காப்பாற்றி இந்திய அளவில் முதலிடம் பெற்றதற்கு ஆறுமுகன் அருளும் எங்கள் மருத்துவமனை குழுவின் சுறுசுறுப்பான செயல்பாடு களே காரணம் என்று பெருமையாக கூறுவேன்.

விதவிதமான விபத்துகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் வரும் பேஷண்டுகளை பார்த்து "முதல் உத வி' செய்ய துவங்கும்முன்பு எங்கள் குலதெய்வம் பழனி முருகனை மனமுருக பிரார்த்தனை செய்வோம்.

அதன்பிறகே சிகிச்சை துவங்குவோம். பழனி முருகப்பெருமானின் பரிபூரண அருளால் விபத்தில் உயிர் பிழைப்பது அரிதான சூழ்நிலையில் விபத்தில் உருக்குலைந்து போன பேஷண்ட் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லையென்ற பரிதாபமான நிலையில் கூட நாங்கள் வேண்டும் பழனி முருகன் பேஷண்டுகளின் உறவினர்கள் சுற்றி அழுவதை பார்த்து மனமிரங்கி அற்புதம் நிகழ்த்தி, எங்களுக்கு அசாத்தியமான மருத்துவ திறமையை கொடுத்து பேஷண்டை எங்களின் முழுமையான, திறமையான அறுவை சிகிச்சைமூலம் காப்பாற்றிய சம்பவங்கள் பல உண்டு. விபத்தில் அபூர்வமாக உயிர் பிழைத்து டிஸ்சார்ஜ் ஆகி செல்லும்போது பேஷண்டும், அவரது உறவினர்களும் எங்கள் காலில் விழுந்து கும்பிட்டு செல்வது மட்டுமின்றி, எங்கள் "பார்வதி மருத்துவமனை' கட்டட வாசலை கோவிலை போல் நினைத்து விழுந்து கும்பிட்டுவிட்டு எங்கள் குடும்பம், பரம்பரையை நன்றாக மனமார பாராட்டி வாழ்த்திவிட்டு செல்வார் கள்.

சென்னை குரோம் பேட்டையில் "பார்வதி மருத்துவமனை' என்ற பெயரில் எங்கள் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் இருப்பதால் அன்னை பார்வதி தேவி யின் மகன் பழனி முருகன் தன் அம்மாவின் பெயர் என்பதாலேயே விஷேச அருளை தருகிறார் போலும் என்று நாங்கள் மனமுருகி ஆத்ம திருப்தி அடைந்து வருகிறோம்.

என் அம்மா வேலம்மாள். அவருக்கு இப்போது 87 வயதாகிறது. சுயநலமற்ற தாய். அவர்கள் கடினமான பாதையை கடந்துவந்தவர். நான் பிறந்தது திருவானைக் காவல் திருவழஞ்சோலையில்தான். கிராமத்தில் பிறந்த என்னை திருச்சி அழைத்துவந்து படிக்கவைத்து உருவாக்கியது என் அம்மாவின் தாயார் பார்வதி அவர்கள்தான். அதனால் பாட்டி பெயரில் இந்த மருத்துவமனை துவங்கினோம். எங்கள் குடும்பம் முழுக்க ஆன்மிக ஈடுபாடு அதிகம் உள்ளவர்கள். அந்த தெய்வ சக்திதான் என்னை இந்த அளவு பெரிதாக உயர்த்தி உள்ளது. தினமும் எட்டு கிலோமீட்டர் சாமி கும்பிட்டபடியே நடந்துவந்து என் அம்மாவும் பாட்டியும் படிக்க ஊக்குவித்து "டாக்டர்' ஆக்கிகாட்டி ஆன்மிகத்தால் முடியாதது எதுவும் இல்லையென்று நிரூபித்து காட்டினார்கள். தந்தை அமரர் டி.கே. சுப்பிரமணியம் அரிசி வியாபாரி. என் அப்பா, அம்மா, பாட்டி தந்த ஊக்கம்தான் அவர்கள் எனக்காக செய்த தெய்வ ஈடுபாடு, கடுமையான விரதங்கள்தான் என்னை மெரிட்டில் தேர்ச்சிபெறவைத்து டாக்டர் ஆக்கியது.

Advertisment

palani

இரண்டு வருடம் நாத்திகன் ஆக இருந்த என்னை தீவிர ஆத்திகன் ஆக 18 வயதுமுதல் ஆக்கியது எங்கள் குலதெய்வம் பழநி முருகன்தான்.

குடும்பத்தோடு நாங்கள் பழநி முருகன் சந்நிதியை சுற்றி அங்க பிரதட்ணம் செய்துவருகிறோம். இது எங்களுக்கு மன ஆறுதலை தருகிறது. பழநி முருகன் உத்தரவு தந்துதான் முக்கிய செயல்களை செய்துவருகிறேன். பழநி முருகன் அருளால் மகன் வெற்றிகுமார் பிறந்து இப்போது அவர் முழங்கால் மூட்டு சிகிச்சையில் சிறந்த புகழ்பெற்ற டாக்டராக செயலாற்றிவருகிறார்.

அதிகாலை 4.30 மணிக்கு மகன், மருமகள், பேரக்குழந்தைகள், மனைவியுடன் 14 கிலோமீட்டர் திருவண்ணாமலை "கிரிவலம்' நடப்பதால் பல அற்புதங்களை தனிப்பட்ட வாழ்விலும், மருத்துவ பணியிலும் பார்த்துவருகிறோம். பழநி முருகன் தரிசனம் செய்ய வருடத்தின் முதல்நாள் விஷேச நாட்கள் சென்று வருகிறோம். என் மனைவி 7 நாட்கள் தண்ணீர் மட்டும் குடித்து சாப்பிடாமல் "சஷ்டி விரதம்' இருந்துவருகிறார்.

என் தாய் அறுபது வருடமாக சஷ்டி விரதம் இருந்துவருகிறார். பழநிமலை நடைபாதையில் என் தந்தை பெயரில் மண்டபம் அமைத்துள்ளோம்.

பழநி திருவண்ணாமலையில் அடிக்கடி அன்னதானம் செய்துவருகிறோம். இதில் மன அமைதி கிடைத்துவருகிறது. டோனராக கோவிலுக்கு பல ஆன்மிக உதவிகளை செய்துவருகிறோம்.

திருவாணைகாவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் திருத்தேர் புதுப்பித்து இருக்கிறோம்.

மருத்துவ தொண்டுடன், தெய்வீக திருப்பணிகளும் செய்துவரும் பார்வதி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ந. முத்துகுமார் அவர்களை வாழ்த்தி விடை பெற்றோம். இவரை வாழ்த்த தொடர்பு கைபேசி எண்: 72990 02695

படங்கள்: விஜயா கண்ணன்

om010124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe