நான் இருக்கிறேன்... கவலை வேண்டாம்!

/idhalgal/om/im-dont-worry

21-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆன்மிக எழுச்சியாக அமைந்தது காஞ்சி அத்திவரதர் வைபவம். சாமானியர்முதல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர்வரை உலகம் முழுவதிலுமிருந்து ஒரு கோடிபேர் ஆதி அத்திவரதரை தரிசிக்கும் மகா பாக்கியம் பெற்றனர்.

2019, ஜூலை 1-ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதிவரை உலகமே காஞ்சி நகரைத் திரும்பிப் பார்த்து அதிசயித்தது.

பொதுவாக கருங்கல், சாளக்ராமம் போன்றவற்றில் எழுந்தருளும் இறைவன் அத்திமரத்தில் எழுந்தருளிய வரலாறு, நீர்நிலைகளைப் பாதுகாப்பது, வனங்களைப் பாதுகாப்பது போன்றவற்றையும் எடுத்துரைப்பதாக உள்ளது.

வேதங்களின் மூலவரான பிரம்மா, தம்முடைய படைப்புத்தொழில் செவ்வனே நடைபெற விரும்பி, மகாவிஷ்ணுவை சங்கு, சக்கரம், கதை, தாமரை தாங்கிய நான்கு திருக்கரங்களுடன் தரிசிக்க விரும்பினார். இதற்காக கடுந்தவம் புரிந்தார்.

அப்போது, மாலவன் ஒரு புஷ்கரணி வடிவில் தோன்றி னார். இதில் திருப்தியடையாத பிரம்மா தவத்தைத் தொடர்ந்தார். அடுத்து காட்டின் வடிவில் தோன்றி னார் விஷ்ணு. அதுவே நைமிசாரண்யம் என்றானது. இந்த தரிசனத்திலும் பிரம்மா திருப்தியடையவில்லை. அப்போது, "நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தால் திருமாலை நான்கு திருக்கரங்களுடன் தரிசிக்கலாம்' என்

21-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆன்மிக எழுச்சியாக அமைந்தது காஞ்சி அத்திவரதர் வைபவம். சாமானியர்முதல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர்வரை உலகம் முழுவதிலுமிருந்து ஒரு கோடிபேர் ஆதி அத்திவரதரை தரிசிக்கும் மகா பாக்கியம் பெற்றனர்.

2019, ஜூலை 1-ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதிவரை உலகமே காஞ்சி நகரைத் திரும்பிப் பார்த்து அதிசயித்தது.

பொதுவாக கருங்கல், சாளக்ராமம் போன்றவற்றில் எழுந்தருளும் இறைவன் அத்திமரத்தில் எழுந்தருளிய வரலாறு, நீர்நிலைகளைப் பாதுகாப்பது, வனங்களைப் பாதுகாப்பது போன்றவற்றையும் எடுத்துரைப்பதாக உள்ளது.

வேதங்களின் மூலவரான பிரம்மா, தம்முடைய படைப்புத்தொழில் செவ்வனே நடைபெற விரும்பி, மகாவிஷ்ணுவை சங்கு, சக்கரம், கதை, தாமரை தாங்கிய நான்கு திருக்கரங்களுடன் தரிசிக்க விரும்பினார். இதற்காக கடுந்தவம் புரிந்தார்.

அப்போது, மாலவன் ஒரு புஷ்கரணி வடிவில் தோன்றி னார். இதில் திருப்தியடையாத பிரம்மா தவத்தைத் தொடர்ந்தார். அடுத்து காட்டின் வடிவில் தோன்றி னார் விஷ்ணு. அதுவே நைமிசாரண்யம் என்றானது. இந்த தரிசனத்திலும் பிரம்மா திருப்தியடையவில்லை. அப்போது, "நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தால் திருமாலை நான்கு திருக்கரங்களுடன் தரிசிக்கலாம்' என்று அசரீரி ஒலித்தது.

அதைக்கேட்டு மகிழ்ந்த பிரம்மா நூறு அஸ்வமேத யாகங்கள் செய்வது எப்படி என்ற சிந்தனையில் ஆழ்ந்தார்.

அப்போது பூலோகத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு யாகம் செய்தால் அது நூறு யாகங்களுக்குச் சமமாகும் என்பதையறிந்தார். உடனே தமது தேவியரையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் வந்தார். அத்தி வனமாக இருந்த காஞ்சியில் யாகத்தைத் தொடங்கும்போது, சரஸ்வதி தேவி வரத் தாமதமானது. ஆனாலும் காயத்ரி தேவி, சாவித்திரி தேவி உடனிருக்க பிரம்மா யாகத்தைத் தொடங்கிவிட்டார். இதனால் கோபமுற்ற சரஸ்வதி தேதி, வேகவதி ஆறாக மாறி, யாகத்தை அணைக்க முற்பட்டாள். உடனே மகாவிஷ்ணு வேகவதி ஆற்றின் குறுக்கே சயனித்து, அதன் போக்கை மாற்றினார். பின்னர் யாகம் சிறப்பாக நடைபெற்றது. அப்போது யாகத்தீயிலிருந்து திருமால் நான்கு கரங்களுடன் மகாலட்சுமி சமேதராகத் தோன்றி தரிசனம் தந்தார். பின்னர் அனைவருக்கும் வேண்டும் வரங்களை வழங்கிவிட்டு வைகுண்டம் சென்றார்.

தாம் தரிசித்த திருவுருவை தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம் விவரித்து சிலை வடிக்கும்படி கூறினார் பிரம்மா. அதன்படி, அத்தி மரத்தில் திருமால் விக்ரகத்தை உருவாக்கினார் விஸ்வகர்மா. இந்த அத்தி வரதரை காஞ்சியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் பிரம்மா. கிருதயுகம்முதல் மூலவராக வழிபடப்பட்டார் இந்த அத்தி வரதர். திரேதா யுகத்தில் கஜேந்திரன் என்ற இந்திரனும், துவாபர யுகத்தில் தேவ குருவான பிரகஸ்பதியும் வழிபட்டனர்.

கலியுகத்தில் அனந்தன் என்ற நாகமும் வழிபட்டுள்ளது.

16-ஆம் நூற்றாண்டுவரை ஆலயத்தில் வீற்றிருந்த அத்திவரதர், முகலாயப் படையெடுப்பின்போது, இங்குள்ள அனந்த சரஸ் திருக்குளத்திற்குள் எழுந்தருளச் செய்யப்பட்டார். இதன்காரணமாக மூலவர் இல்லாமலேயே பூஜை நடைபெற்றுவந்தது. ஒரு நாள் அர்ச்சகர் கனவில் தோன்றிய அத்திவரதர், ""எம்மைப்போல தோற்றம் கொண்டுள்ள தேவராஜப்பெருமாள் விக்ரகம் சீவரத்தில் உள்ளது. அவரைக் கொண்டுவந்து பூஜிக்கவும். எம்மை 40 ஆண்டுகளுக்கொருமுறை அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியே எடுத்து, ஒரு மண்டல காலம் பூஜித்து வழிபாடு செய்யுங்கள்'' என்றார். அதன்படி, திருக்குள நீர் வற்றியபோது 1709-ஆம் ஆண்டுமுதல் திருக்குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, வசந்த மண்டபத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கத் தொடங்கினார்.

aa

அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் கொண்டிருந்த அத்திவரதர், இவ்வாண்டு 1-7-2019 முதல் 16-8-2019 வரை 47 நாட்கள் வரதராஜப்பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களை ஆசிர்வதித்தார்.

2019, ஜூலை 1-ஆம் தேதிமுதல் 31 நாட்கள் சயனக்கோலத்திலும், ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 16-ஆம் தேதிவரை நின்ற திருக்கோலத்திலும் சேவை சாதித்தார். 17-ஆம் தேதி மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டார்.

இந்த 48 நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சைவ- வைணவ வேறுபாடின்றி, மாநில, இன, ஜாதிப் பாகுபாடின்றி, வசதியானவர்- ஏழை என்ற பிரிவின்றி அனைவரும் ஒருசேர அத்திவரதரை தரிசித்தனர். மொத்தம் ஒரு கோடியே 7,500 பக்தர்கள் தரிசித்தாக தமிழக அரசு கூறியுள்ளது. அதிகபட்சமாக ஒரே நாளில் ஐந்து லட்சம்பேர் தரிசனம் செய்துள்ளனர். சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவு வரிசையாக நின்று, 17 மணி நேரம்வரையிலும் பொறுமையாகக் காத்திருந்து தரிசித்தனர்.

வைபவ நிறைவு நாளன்று அத்திவரதருக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டது. 60 கிலோ மூலிகைத் தைலம், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, வெட்டிவேர், நொச்சிவேர், சாம்பிராணி, ஏலம், ஜாதிக்காய், லவங்கம் ஆகியவற்றை அரைத்து சந்தனாதித் தைலத்தில் காய்ச்சி, வடிகட்டி மூன்று மணி நேரத்திற்கொருமுறை அத்திவரதர் விக்ரகத் திருமேனிமீது பூசப்பட்டது. பின்னர் சயனக் கோலத்தில், அனந்தசரஸ் திருக்குளத்தின் நீராழி மண்டபத்தின் அடியிலுள்ள சிறிய மண்டபத்தினுள் ஆதிசேஷன் மடியில் மேற்கில் தலைவைத்து, கிழக்கில் கால்வைத்து வெண்பட்டு அணிந்து சயனக்கோலம் கொண்டு வாசம் செய்யத் தொடங்கினார்.

அங்கு காவலாக தெற்குச் சுவரில் இரண்டு சிங்கச் சிலைகளும், ஏழு நாகர் சிலைகளும் உள்ளன.

""அத்தி மரம் விசேஷ மருத்துவ குணம் கொண்டது. பல தோஷங்கள் போக்கும். அத்திமரச் சிலையை மூலிகைக்கலவை பூசி நீருக்குள் பல ஆண்டுகள் வைத்தாலும் உருவ அமைப்பு மாறாமல் அப்படியே இருக்கும். அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள்போல பொலிவு மாறாமல் அப்படியே இருக்கும்'' என்கிறார் அரிதாஸ் ஸ்தபதி. (இவர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வடிவமைத்த கணபதி ஸ்தபதியிடம் பயின்றவர்.)

அத்திவரதரின் கரத்தில் "மாசுச' ஆகிய எழுத்துகள் பொறிக்கப்பட்ட கவசம் பொருத்தப்பட்டிருந்தது.

"சர்வ தர்மான் பரித்யஜ்ய

மாம் ஏகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வா சர்வ பாபேப்யோ

மோஷ இஷ்யாமி மாசுசஹ'

என்னும் பகவத் கீதையின் 18-ஆவது சுலோகத்திலுள்ள எழுத்துகளே அவை. இதன் பொருள்- "தர்மத்தைக் காப்பவன் நான் ஒருவனே. என்னை நம்பி என்னுடைய திருவடிகளைச் சரணடைந்தால் மோட்சம் உறுதி. எதற்கும் கவலைப்படாதே! நான் பார்த்துக்கொள்கிறேன்' என்பதே!

சனாதன தர்மத்தின் சிறப்பே சரணடைந் தோரைக் காப்பதே! ஒரு கோடி பக்தர் கள் நேரில் தரிசித்து சரண்புகுந்துள்ளனர்.

இன்னும் பல கோடி பக்தர்கள் தங்கள் நெஞ்சங்களில் அத்திவரதரை சுமந்து கொண்டுள்ளனர்- 2059-ல் தரிசனம் பெறும்வரை!

-கி. ஸ்ரீமுருகன்

om010919
இதையும் படியுங்கள்
Subscribe