Advertisment

துயரம் தாண்டினால் உயரம் வரும்! சேலம் ஆர்.ஆர்.பிரியாணி அதிபரின் இறை அனுபவங்கள்! - விஜயா கண்ணன்

/idhalgal/om/if-you-overcome-grief-you-will-get-high-salem-rr-biryani-principals-divine-experiences

சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் மற்றும் தொழிலதிபர் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆன்மிக அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார். இங்கு செய்வதை சிறந்து செய்தால் தெய்வம் உம்மை உயர்த்தும் என்பதே இவரின் வாக்கு.

Advertisment

சிறந்த தமிழ் மொழிப் பற்றாளர், இரக்கத்தின் மறு உருவமாக திகழ்பவர், உழைப்பின் மூலம் முன்னேறி வந்தவர், பல சோதனைத் தடங் களை சாதனைத் தடங்களாக மாற்றியவர், இவரின் மனைவி அமுதா, மகன் தமிழரசன், மகள் தமிழ்ச்செல்வி, மருமகன் மோகன், பேத்தி தமிழ் ஸ்ரீ.

இவர் தனது பக்தி அனுபவங்களை சுவைபட கூறியிருக் கிறார்.

மேட்டூரில் இருந்து பூலாம் பட்டி அருகில் சன்னியாசி முனியப் பன் என்னும் சக்தி வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் நிச்சயம் குழந்தை தரும் கோவில் அது. எனது பெற்றோருக்கு எட்டு ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் அந்த கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் வைத்ததன் மூலம் நான் பிறந்தேன். உடனே, அந்த தெய்வத்தின் அருளால் நான் பிறந்ததால் எனக்கும் சந்நியாசி முனியப்பன் என்றே பெயரை வைத்தார்கள். எனக்கு தமிழ் மொழியின்மீது அலாதி பிரியம் என்பதால் என்னுடைய பெயரை தமிழ்ச்செல்வன் என்று மாற்றிக் கொண்டேன். நான் மட்டுமில்லாமல் எனது குழந்தைகளுக்கும் தமிழ் பெயரை வைத்து மகிழ்ந்தேன். என்னு டைய குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி. தாய்வழியில் மேச்சேரி பத்திரகாளியம்மன்.

என் வாழ்வில் நான் சந்திக்காத துயரங்களே இல்லை. அந்தத் துயரத்தை கடந்து என்னை உயரத்திற்கு உயர்த்தி யது என்றால் என் மனைவியின் ஊரான உளுந்தூர்பேட்டைக்கு அருகில்

சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் மற்றும் தொழிலதிபர் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆன்மிக அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார். இங்கு செய்வதை சிறந்து செய்தால் தெய்வம் உம்மை உயர்த்தும் என்பதே இவரின் வாக்கு.

Advertisment

சிறந்த தமிழ் மொழிப் பற்றாளர், இரக்கத்தின் மறு உருவமாக திகழ்பவர், உழைப்பின் மூலம் முன்னேறி வந்தவர், பல சோதனைத் தடங் களை சாதனைத் தடங்களாக மாற்றியவர், இவரின் மனைவி அமுதா, மகன் தமிழரசன், மகள் தமிழ்ச்செல்வி, மருமகன் மோகன், பேத்தி தமிழ் ஸ்ரீ.

இவர் தனது பக்தி அனுபவங்களை சுவைபட கூறியிருக் கிறார்.

மேட்டூரில் இருந்து பூலாம் பட்டி அருகில் சன்னியாசி முனியப் பன் என்னும் சக்தி வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் நிச்சயம் குழந்தை தரும் கோவில் அது. எனது பெற்றோருக்கு எட்டு ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் அந்த கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் வைத்ததன் மூலம் நான் பிறந்தேன். உடனே, அந்த தெய்வத்தின் அருளால் நான் பிறந்ததால் எனக்கும் சந்நியாசி முனியப்பன் என்றே பெயரை வைத்தார்கள். எனக்கு தமிழ் மொழியின்மீது அலாதி பிரியம் என்பதால் என்னுடைய பெயரை தமிழ்ச்செல்வன் என்று மாற்றிக் கொண்டேன். நான் மட்டுமில்லாமல் எனது குழந்தைகளுக்கும் தமிழ் பெயரை வைத்து மகிழ்ந்தேன். என்னு டைய குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி. தாய்வழியில் மேச்சேரி பத்திரகாளியம்மன்.

என் வாழ்வில் நான் சந்திக்காத துயரங்களே இல்லை. அந்தத் துயரத்தை கடந்து என்னை உயரத்திற்கு உயர்த்தி யது என்றால் என் மனைவியின் ஊரான உளுந்தூர்பேட்டைக்கு அருகில் ஏரிக் கரை முனியப்பன் என்ற கோவிலை சொல்லுவேன். பல போராட்டங் களுக்கு மத்தியில் ஒருமுறை அந்த கோவிலுக்கு சென்று அப்பொழு தெல்லாம் அந்த கோவில் முள் காடாகவும், புதர் மண்டியும் கிடந்தது. அங்குசென்று வணங்கியதன்மூலம் தான் நான் முதன்முறையாக தள்ளு வண்டி கடையை ஆரம்பித்தேன். தற்போது அந்த கோவில் நன்றாக வளர்ந்திருக்கிறது. சாலை வசதிகள், என்ன பிற வசதிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பழனி முருகன் கோவிலும், சபரிமலை ஐயப்பன் கோவிலும் நான் விரும்பி வழங்கும் தெய்வங்கள். வருடத்திற்கு ஒருமுறையாவது இங்கு செல்ல நான் தவறியது இல்லை.

Advertisment

rr

சென்ற ஆண்டு சபரிமலை கோவிலுக்கு சென்றுவிட்டு வடலூரி லுள்ள வள்ளலார் கோவிலுக்கு சென்றி ருந்தேன். அப்போது மனதிற்குள் நிறைய கேள்விகள், குழப்பங்கள் குடி கொண்டிருந்த நேரம் அது. அக்கோவிலில் ஒளியே கடவுள். அங்கு மனதார வேண்டிக் கொண்டு சென்னை வந்ததும் என் கவலைகள் எல்லாம் தீர்ந்தன. கஷ்டங்கள் எல்லாம் ஒழிந்தன, மனம் அமைதியாயின.. மாற்றங் களில் வளர்ச்சியாயின. எவ்வளவு கஷ்டங் கள் வந்தாலும் ஒருபோதும் என் முகத்தில் நான் காட்டிக்கொள்வதில்லை. காரணம் நான் பலருக்கு முன்னோடியாக இருப்பதால் அவர்கள் என்னை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக நான் திகழவேண்டும். உள்ளத் தையும் உடலையும் நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். வெற்றியை எப்போது வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம். இதுதான் நான் அனைவரிடத்திலும் சொல்ல விரும்புவது.

இந்த உலகம் ஒரு போராட்டக் களம். இங்கு ஒன்று உயிர் வாழவேண்டும். ஆனால் அந்தப் போராட்டக் களத்தில் வெற்றிபெற்றாக வேண்டும். எப்போதும் எனக்குள் ஒரு சக்தி இருப்பதாகவே தோன்றும். அது தெய்வ சக்தியா அல்லது வேறு ஏதேனும் சக்தியா என்பது எனக்கு தெரியாது. நான் அதிகம் பயணம் செய்யும் பழக்கம் உடையவன்.

அப்படி இருக்கும்போது நிறைய விபத்துகளை என் கண் முன்னே பார்த்திருக்கிறேன். ஒருமுறை ஒரு பேருந்து முன்செல்லும் ஒரு ஆட்டோவை வேகமாக வந்து மோதி விட்டது, 4-க்கும் மேற்பட்ட முறை சுழன்றி சுழன்றி கீழே விழுகிறது. நானே பார்த்துப் பயந்துவிட்டேன். ஆனால் இறைவனின் அருளால் அவர்களுக்கு ஒன்றுமே ஆக வில்லை. இதுபோல் எத்தனையோ நிகழ்வுகள் என் கண்முன்னே நடந் திருக்கிறது. ஆனால் இதுவரை ஒருவர் கூட உயிரிழந்ததாக நான் செய்தி கேள்விப்பட்டதே இல்லை. இது தெய்வ அருள் என்று சொல்வதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன். ஆனாலும் ஒரு துர்பாக்கியமான நிகழ்வு என்னவென்றால் 17 வயதில் எனது மகன் இரண்டு சக்கர வாகனத்தில் அடிபட்டு 64 நாட்கள் உயிருக்கு போராடி இறந்தார். இதனாலேயே நான் பார்க்கும் எந்த விபத்திலும் யாரும் இறப் பதில்லை என்று நம்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை பக்தி என்பது ஒரு நம்பிக்கை. இங்கு உழைப்பில்லாமல் எதுவும் வந்துவிடாது. ஒவ்வொருவரின் உள்ளம்தான் கோவில். அந்த உள்ளத் தூய்மையை நன்றாக வைத்து உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி என்பது வெகு விரைவில் வந்தடையும். மனசாட்சிக்கு விரோதமான செயல்கள் செய்துவிட்டு எவ்வளவு வேண்டுதல் வைத்தாலும் அது நடக்காது; வெற்றியும் பெறாது. இந்த உள்ளத் தூய்மையை மக்கள் அனைவரும் கடை பிடித்தால் தெய்வம் தானாக நம்முள் குடி கொள்ளும்.

நான் வெற்றி- தோல்வியை தனித்தனியாக பாகுபடுத்துவது இல்லை. செய்வதை சிறந்தே செய்தால், அதுவே நலம் பயக்கும். வள்ளலாரின் தீப ஒளியைக் கண்டு வணங்கிக் கொண்டிருக்கும்போது என்னை அறியாமல் கண் கலங்கியது. அந்தத் தருணம் எனக்குள் ஏற்பட்ட மாற்றம் என் மனம் அப்போது கொண்ட நிகழ்ச்சி என்னை உள்ளத் தூய்மையானவனாய் மாற்றியது என்று சொல்லலாம். அரிசியை வேக வைக்கும்போது, அது முழுமையாய் வெந்தால்தான் உணவாக எடுத்துக்கொள்ளமுடியும். வேகாதபோதே எடுத்து உண்டால் அது உடலுக்குத் தீங்கே விளைவிக்கும். அதுபோலதான் வேலையும். நான் எதையும் எதிர்பார்த்து செய்வது இல்லை. என் மனதிற்கு சரியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே அந்த வேலையை நான் செய்வேன்.

நான் கடவுளுக்குச் செய்யும் பிரார்த்தனை என்று பார்த்தால் முருகனுக்கு விரதமிருந்து கோவிலுக்கு சென்றுவருவேன். சபரிமலை கோவிலுக்கு இதுவரை விரதமிருந்து ஆறுமுறை சென்று இருக்கிறேன். நான் சபரிமலைக்கு செல்கிறேன் என்றால் அதற்கு எனது நண்பர்கள்தான் காரணம். அவர்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அவர்கள் ஒரு நம்பிக்கையோடு என்னை அழைப் பார்கள்.

நான் யாரையும் காயப்படுத்த விரும்பாதவன். நான் கற்றுக்கொண்டது மற்றவர்கள் சொல்லிக்கொடுத்து அவர்களும் உயரவேண்டும் என்று நினைப்பவன்.

என்ன குழந்தை பெற போகிறார் கள் என்று நான் கணிக்கும் கணிப்பு இதுவரை ஒருமுறைகூட பொய்யானது இல்லை. இவர்களுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று சொன் னால் நிச்சயம் ஆண் குழந்தைதான். பெண் குழந்தைதான் பிறக்கும் என்றால் நிச்சயம் பெண் குழந்தைகள்தான். இதில் எந்தவித மாற்றமும் இதுவரை வந்ததில்லை. குழந்தை பிறந்தவுடன் எனக்கு அலைபேசி வாயிலாக அழைப்பார்கள்.

அழைத்தவுடன் நான் சொல்வேன், அவனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக் கிறது. அதை சொல் வதற்காக அழைக் கிறான் என்று சொல்வேன். உடனே அவன் ஆண் குழந்தை எனக்கு பிறந்திருக் கிறது என்று சொல் வார். நான் சொல்வது 90 சதவிகிதம் இதுவரை பலித்திருக்கிறது. இந்தக் கணிப்பு தெய்வசக்தி என்றே சொல்லலாம்.

பக்தி என்பது ஒரு சமுதாயப் பணியாக இருக்க வேண்டும். எந்தக் கடவுளும் வணங்குவோரை வெறுப்பது இல்லை. இறைவன் என்பவர் மற்றவரை மன்னிக்கக் கூடியவராகவும் வழிகாட்டு வதாகவும் இருப்பர்.

நான் வணங்கும் சத்திய சாய்பாபா மற்றும் வள்ளலார் இவர்கள் இருவரும் எனது இரண்டு கண்கள் என்று சொல்வேன். இதயத் தூய்மையா னால் கடவுளே நம்மிடம் வந்து குடிகொள்ளும். இதனால் தினமும் நான் வணங்குவேன்.

பெண்களுக்கு தீட்டு என்பது கிடையாது என்று பெரும் புரட்சிசெய்த பங்காரு அடிகளார் அவர்களை நான் தினமும் வணங்குவேன். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு நான் அடிக்கடி செல்லும் வழக்கமுடையவன்.

உழைப்பின்மீது நம்பிக்கை வையுங்கள், அந்த நம்பிக்கைதான் உங்களை நாளும் நகர்த்தும், வெற்றிக்கு உயர்த்தும் என்ற வாசகத்தின் வழியும், கடவுள் வேறு எங்கும் இல்லை உன் எண்ணம்தான் கடவுள். உன் எண்ணத்தை தூய்மையாக வைத்துக்கொள். கடவுள் உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டார் என்னும் அழகிய சித்தாந்ததைப் பின்பற்றிவரும் புகழ்பெற்ற சேலம் ஆர்.ஆர் பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன் அவர்களை வாழ்த்தி வணங்கி விடை பெற்றோம்.

om010324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe