Advertisment

இறையருள் இருந்தால் எதிலும் ஜெயிக்கலாம் - விஜயாகண்ணன்

/idhalgal/om/if-you-have-gods-grace-you-can-win-anything-vijayakannan

மிழ்நாடு ஹோமியோபதி மெடிக்கல் கவுன்சிலின் (TNHMC) தலைவர் டாக்டர் என்.ஆர். ஜெயகுமார். இந்தியாவிலேயே முதன்முதலாக "மதன் மொபைல் ஹோமியோ கிளினிக்'கை 15 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கி, அழைத்தால் வீடுதேடிவரும் ஹோமியோபதி மருத்துவ முறையை அறிமுகம் செய்த பெருமை பெற்றவர். 1991 ஆகஸ்ட் 22 சென்னை தினத்தன்று, சென்னை ஆதம்பாக்கத்தில் "மதன் ஹோமியோ கிளினிக்' துவங்கி, நங்கநல்லூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம் ஆகிய இடங்களிலும் கிளைகள் அமைத்து சிறப் பாக செயலாற்றிவருகிறார். சுமார் 33 ஆண்டுகள் ஹோமியோபதி மருத்துவ அனுபவமுள்ள அவரை ஆதம்பாக்கம் மருத்துவமனையில் சந்தித்து, அவரது பக்தி, தெய்வ வழிபாடு ஈடுபாடுகள் பற்றிக் கேட்டோம்.

முதலில் நங்கநல்லூர் கிளையை நிர்வகித்துவரும் அவரது துணைவியார் ஹோமியோபதி டாக்டர்

மிழ்நாடு ஹோமியோபதி மெடிக்கல் கவுன்சிலின் (TNHMC) தலைவர் டாக்டர் என்.ஆர். ஜெயகுமார். இந்தியாவிலேயே முதன்முதலாக "மதன் மொபைல் ஹோமியோ கிளினிக்'கை 15 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கி, அழைத்தால் வீடுதேடிவரும் ஹோமியோபதி மருத்துவ முறையை அறிமுகம் செய்த பெருமை பெற்றவர். 1991 ஆகஸ்ட் 22 சென்னை தினத்தன்று, சென்னை ஆதம்பாக்கத்தில் "மதன் ஹோமியோ கிளினிக்' துவங்கி, நங்கநல்லூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம் ஆகிய இடங்களிலும் கிளைகள் அமைத்து சிறப் பாக செயலாற்றிவருகிறார். சுமார் 33 ஆண்டுகள் ஹோமியோபதி மருத்துவ அனுபவமுள்ள அவரை ஆதம்பாக்கம் மருத்துவமனையில் சந்தித்து, அவரது பக்தி, தெய்வ வழிபாடு ஈடுபாடுகள் பற்றிக் கேட்டோம்.

முதலில் நங்கநல்லூர் கிளையை நிர்வகித்துவரும் அவரது துணைவியார் ஹோமியோபதி டாக்டர் உமா ஜெயகுமார் மற்றும் அலோபதி டாக்டர்களாக உருவாகி, ஒருங்கிணைந்த அலோபதி, ஹோமியோபதி மருத்துவ சிகிச்சைகள் வழங்கவிருக்கும் இரு மகன்களுக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்து, என்.ஆர். ஜெயகுமார் கூறியதை இங்கே வழங்கியுள்ளோம்.

Advertisment

ge

"என் சொந்த ஊர் திருச்செந்தூர் அருகிலுள்ள எள்ளுவிளை கிராமம். குலதெய்வம் உடையார் சுவாமி திருக்கோவிலிலுள்ள உடையார் சுவாமிதான். அவருக்கு சிலை இல்லை; வடிவமைப்புதான். வருடம் ஒருமுறை என் மனைவி, இரு மகன்களுடன் குலதெய்வ வழிபாடு செய்துவர தவறியதே இல்லை. எங்கள் ஹோமியோபதி மருத்துவம், சமூக சேவை வெற்றிகளுக்கு அருள்தந்து வருகிறார் உடையார் சுவாமி. எங்களுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை அகற்றி அற்புதங்கள் நிகழ்த்திவருபவர் எங்கள் குலதெய்வம்.

முதல் தெய்வம் என்னைப் பெற்றெடுத்த என் தாயார் பெரிய பிராட்டி அம்மாள். உடன்குடி அருகே செட்டியம்பத்து ஐந்துவீட்டு சாமி கோவிலின் அம்மனின் பெயர்தான் என் அம்மாவின் பெயர். பெயரில் அபூர்வம் இருப்பதுபோல், அபூர்வ தாயாகத் திகழ்ந்தவர். நான் அன்புவழி, அறிவுவழி, பிறரை நேசித்து உதவும் வழிபோன்ற பல உயர் பண்புகளை என் சிறுவயதுமுதலே எனக்கு ஊட்டி வழிகாட்டி வளர்த்து, இன்று நான் பலரும் அறிந்த மருத்துவராக்கியதே என் தாய்தான். அப்பா ராஜபாண்டியன் விவசாயி.

முதலில் தாயை வணங்கி, பிறகு குலதெய்வத்தை வழிபட்டு, பிறகு திருச்செந்தூர் முருகன், திருப்பதி வேங்கடாசலபதி, சீராடி சாய்பாபா போன்ற இஷ்ட தெய்வங்களை வேண்டிவிட்டுதான் எங்கள் குடும்பத்தினர் பணிகளைத் துவங்கி வெற்றி, நற்பெயர் பெற்றுவருகிறோம்.

பிறந்த ஊருக்கு தூய குடிதண்ணீர் கிடைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை எங்கள் சொந்த செலவிலும், நண்பர்கள், சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்தும் செய்து கிராம மக்களின் பாராட்டுகளைப் பெறும் புண்ணியம் பெற்றிருப்பதைப் பெருமையுடன் கூற விரும்புகிறேன்.

"மதன் ஹோமியோபதி கிளினிக்' சார்பில், ஏழை எளியோரின் உடல்நல பாதிப்புகளைத் தீர்த்துவைக்கும் இலவச முகாம்களையும் நடத்திவருகிறோம்.

சிக்கன்குனியா, கொடிய கொரோனா நேரங்களில் 2,80,000 நோயாளிகளுக்குமேல் எங்கள் "ஹோமியோபதி கிளினிக்'மூலம் நேரில்சென்று, அரசு அனுமதிதந்த மருந்துகளை அளித்துக் காப்பாற்றி, அரசு மற்றும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றது குலதெய்வம் மற்றும் என் தாயின் அருளால்தான்!

அன்றைய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் என்னையும் எனது துணைவியாரையும் அழைத்து வாழ்த்துகூறி, ஆலோசனை பெற்றதை தெய்வ அருள் என்றுதான் கூறுவேன்.

நான்கு லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை யளித்து, பூரண குணமடைந்த சாதனை செய்து, இன்றும் கம்பீரமாய் எங்கள் "ஹோமியோ கிளினிக்' திகழ கடவுள் அருளே மூலகாரணம். பல்வேறு உயர் விருதுகள் பெற்று நாங்கள் கௌரவிக்கப்பட்டிருக்கிறோம் என்றால், அதற்கு எங்கள் மருத்துவக் குழுவின் கடும் உழைப் பும், தெய்வ சக்திகளின் பேரருளும்தான் காரணம்.

"இதயம் தொட்ட என் சிகிச்சைகள்' என்ற தமிழ் நூல் மற்றும் சிக்கன் குனியா சிகிச்சை பற்றிய ஆங்கில ஹோமியோபதி நூல் வெளியிட்டுள்ளோம். அவை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதும் ஆண்டவனின் அருளால்தான்.''

கைபேசி தொடர்பிற்கு: 92821 13030.

டாக்டர். ஜெயகுமார், அவரது துணைவியார், மருத்துவக் குழு அனைவருக்கும் வாழ்த்து கூறி விடைபெற்றோம்.

Advertisment
om011224
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe