கண்டேன் கடவுளை! (3) - கலைஞானம்

/idhalgal/om/i-saw-god

பிரபலங்கள் கண்ட அற்புதங்கள்!

கலைஞானம்

3

டந்த இதழில் சின்னப்பா தேவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லிலியிருந்தேன். அவர் கூப்பிட்ட குரலுக்கு மயில் வடிவில் வந்தான் முருகன், பலரும் அறிய. அந்த சம்பவத்தைக் காண்பதற்குமுன் ஒரு அற்புதமான ஆலயம் பற்றிப் பார்த்துவிடுவோமா?

1983-ல் "மிருதங்கச் சக்கரவர்த்தி' படத்தைத் தயாரித்தேன். அதன் படப்பிடிப்புக்காக சுசீந்திரம் சென்றிருந்தோம். படப்பிடிப்பு நேரம் தவிர நானும், நடிகர் திலகம் சிவாஜியும், என் உதவியாளரும் கோவில் வளாகத்தில் தனியே அமர்ந்திருப்போம். அங்கே பழமையான ஒரு மரத்தை கம்பி வேலிலியிட்டு பாதுகாத்து வைத்திருந்தார்கள். கிளைகள் எதுவுமில்லை. அதை மரம் என்றுகூட சொல்லமுடியாத அளவுக்கு ஒரு கல்போல இருந்தது.

நாங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தபோது ஆலய குருக்கள் வந்தார். ""என்ன சாமி அதையே பார்த்துக்கிட்டிருக்கீங்க'' என்று கேட்டார்.

அதற்கு நான், ""இது மரமா கல்லா? யாரும் கிட்ட போகமுடியாத அளவுக்கு எதுக்கு இவ்வளவு பாதுகாப்பு?'' என்று கேட்டேன்.

""அது ஒரு பெரிய கதை. அகலிலிகை கதை உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார் குருக்கள்.

""சொல்லுங்கோ'' என்றார் சிவாஜி.

murugan

குருக்கள் சொல்லத் தொடங்கினார்.

கௌதம முனிவரின் மனைவி அகலிகை. அவள் அழகில் மயங்கிய இந்திரன் முனிவர் இல்லாத நேரத்தில் அவரைப்போவவே வடிவம் கொண்டு அகலிலிகையின் கற்பைக் குலைத்தான். அந்த நேரம் முனிவர் வர, இந்திரன் பூனையுருக் கொண்டு தப்பியோட முயன்றான். கோபம் கொண்ட முனிவர் "மாபாதகம் செய்த உன் உடலெங்கும் ஆயிரம் பெண்குறிகள் தோன்றட்டும்' என்று சபித்தார். பின் அகலிகையைக் கல்லாகும்படி சபித்தார். (பின்னர் ராமபிரானின் திருவடித் துகள்பட்டு அகலிகைக்கு சாப விமோசனம் கிடைத்தது.)

peacock

சாபம் பெற்ற இந்திரன் யார் கண்ணிலும் படாமல் மறைந்து திரிந்து மிகுந்த வேதனைக்குள்ளானான். பின்னர் கயிலை சென்று மறைந்திருந்தவாறு பார்வதி தேவியைத் துதித்தான். "தாயே, நான் உன் பிள்ளைபோன்றவன். அறியாமல் தவறு செய்துவிட்டேன். எனக்கு சாபவிமோசனம் தந்தருளவேண்டும் தாயே' என கண்ணீர் விட்டான். அதற்கு அம

பிரபலங்கள் கண்ட அற்புதங்கள்!

கலைஞானம்

3

டந்த இதழில் சின்னப்பா தேவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லிலியிருந்தேன். அவர் கூப்பிட்ட குரலுக்கு மயில் வடிவில் வந்தான் முருகன், பலரும் அறிய. அந்த சம்பவத்தைக் காண்பதற்குமுன் ஒரு அற்புதமான ஆலயம் பற்றிப் பார்த்துவிடுவோமா?

1983-ல் "மிருதங்கச் சக்கரவர்த்தி' படத்தைத் தயாரித்தேன். அதன் படப்பிடிப்புக்காக சுசீந்திரம் சென்றிருந்தோம். படப்பிடிப்பு நேரம் தவிர நானும், நடிகர் திலகம் சிவாஜியும், என் உதவியாளரும் கோவில் வளாகத்தில் தனியே அமர்ந்திருப்போம். அங்கே பழமையான ஒரு மரத்தை கம்பி வேலிலியிட்டு பாதுகாத்து வைத்திருந்தார்கள். கிளைகள் எதுவுமில்லை. அதை மரம் என்றுகூட சொல்லமுடியாத அளவுக்கு ஒரு கல்போல இருந்தது.

நாங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தபோது ஆலய குருக்கள் வந்தார். ""என்ன சாமி அதையே பார்த்துக்கிட்டிருக்கீங்க'' என்று கேட்டார்.

அதற்கு நான், ""இது மரமா கல்லா? யாரும் கிட்ட போகமுடியாத அளவுக்கு எதுக்கு இவ்வளவு பாதுகாப்பு?'' என்று கேட்டேன்.

""அது ஒரு பெரிய கதை. அகலிலிகை கதை உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார் குருக்கள்.

""சொல்லுங்கோ'' என்றார் சிவாஜி.

murugan

குருக்கள் சொல்லத் தொடங்கினார்.

கௌதம முனிவரின் மனைவி அகலிகை. அவள் அழகில் மயங்கிய இந்திரன் முனிவர் இல்லாத நேரத்தில் அவரைப்போவவே வடிவம் கொண்டு அகலிலிகையின் கற்பைக் குலைத்தான். அந்த நேரம் முனிவர் வர, இந்திரன் பூனையுருக் கொண்டு தப்பியோட முயன்றான். கோபம் கொண்ட முனிவர் "மாபாதகம் செய்த உன் உடலெங்கும் ஆயிரம் பெண்குறிகள் தோன்றட்டும்' என்று சபித்தார். பின் அகலிகையைக் கல்லாகும்படி சபித்தார். (பின்னர் ராமபிரானின் திருவடித் துகள்பட்டு அகலிகைக்கு சாப விமோசனம் கிடைத்தது.)

peacock

சாபம் பெற்ற இந்திரன் யார் கண்ணிலும் படாமல் மறைந்து திரிந்து மிகுந்த வேதனைக்குள்ளானான். பின்னர் கயிலை சென்று மறைந்திருந்தவாறு பார்வதி தேவியைத் துதித்தான். "தாயே, நான் உன் பிள்ளைபோன்றவன். அறியாமல் தவறு செய்துவிட்டேன். எனக்கு சாபவிமோசனம் தந்தருளவேண்டும் தாயே' என கண்ணீர் விட்டான். அதற்கு அம்பிகை, "மும்மூர்த்திகளையும் ஒன்றாக எப்போது நீ காண்கிறாயோ அப்போது உனக்கு விமோசனம் கிட்டும்' என்றாள். மும்மூர்த்திகளையும் ஒன்றாகக் காண்பது எப்படி என்று கலங்கி நின்றான் இந்திரன்.

இந்த நிலையில், முப்பெரும் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருக்குள், கற்பில் தங்களுள் உயர்ந்தவர் யார் என்னும் போட்டி வந்தது. அப்போது சிவபெருமான், "உங்களைவிட உயர்ந்த பதிவிரதை பூலோகத்தில் இருக்கிறாள். அத்திரி முனிவரின் பத்தினி அனுசுயா தேவி' என்றார்.

இதனால் அனுசுயாமீது பொறாமை கொண்ட முப்பெரும் தேவியரும் அவளது கற்புநெறியை பரிசோதிக்குமாறு தங்கள் கணவர்களையே நிர்பந்தப்படுத்தினார்கள். "உங்களுக்கு அறிவு புகட்டுவதற்காக நீங்கள் சொன்னபடியே செய்கிறோம்' என்று மும்மூர்த்திகளும் ஞானாரண்யம் எனப்படும் சுசீந்திரம் பகுதிக்கு வந்தனர். அங்குதான் அத்திரி முனிவரும் அனுசுயா தேவியும் குடிலமைத்து தவ வாழ்வு மேற்கொண்டிருந்தனர். இவர்கள் வரும்போது முனிவர் இமயமலைக்குச் சென்றிருந்தார். மூவரும் முனிவர் வேடத்தில் குடிலருகே சென்று "பவதி பிட்சாந்தேஹி' என்றனர்.

வெளியே வந்த அனுசுயா அவர்களை முறைப்படி வரவேற்று குடிலுக்குள் அமரவைத்து உணவு பரிமாற முற்பட்டாள். அப்போது மூவரும், "ஆடையின்றி பிறந்த மேனியுடன் இடப்படும் அன்னத்தையே நாங்கள் ஏற்போம்' என்றனர்.

avmrajanஒரு கணம் திடுக்கிட்டாலும், தன் கற்பின் வலிமையால் வந்திருப்பவர்கள் யாரென்பதை அனுசுயா புரிந்துகொண்டாள். தன் கணவரை தியானித்து அவர்கள்மீது நீர்தெளிக்க, மும்மூர்த்திகளும் குழந்தைகளாகிப் போனார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அமுதூட்டிய அனுசுயா அங்கிருந்த மரத்தில் தொட்டில் கட்டித் தூங்கச் செய்தாள். நடந்த நிகழ்வுகளை நாரதர் மூலம் அறிந்துகொண்ட தேவியர் மூவரும் அனுசுயா தேவியின் குடிலுக்கு ஓடோடி வந்தனர்.

"அம்மா, உலகில் சிறந்த பதிவிரதை நீயே. எங்களுக்கு புத்தி புகட்டவே இவ்வாறு நடந்துகொண்டனர்.

எங்களை மன்னித்து, எங்கள் கணவர்களை முன்புபோல உருமாற்றி அருளவேண்டும்' என்று வேண்டினர்.

அதற்கு அனுசுயா,

"அவர்கள் யாரென்பதை அறிந்துகொண்டேன். ஏதோ ஒரு நற்காரியத்தின் பொருட்டே வந்திருக்கிறார்கள் என்றும் புரிந்துகொண்டேன். அதனாலேயே குழந்தைகளாக மாற்றினேன்' என்று சொல்லி,

குழந்தைகள்மீது நீர்தெளித்து முன்பிருந்த நிலைக்கு மாற்றினாள். அப்போது அங்கு வந்து சேர்ந்த அத்திரி முனிவரும் மும்மூர்த்தியர் தரிசனம் கண்டு மகிழ்ந்தார். அதே தரிசனத்துக்காக மறைந்து அலைந்துகொண்டிருந்த இந்திரனும் இக்காட்சியைக் கண்டு சாப விமோசனம் பெற்றான்.

""அனுசுயா தேவி குழந்தை களைத் தொட்டில் கட்டித் தூங்கச் செய்தது இந்த மரம்தான்'' என்றார் குருக்கள்.

இரண்டாயிரம் ஆண்டு களுக்குமேல் பழமையான அந்த கொன்றை மரத்தை வியப்போடு பார்த்து வணங்கினோம்.

குருக்கள் தொடர்ந்தார். ""அந்த மும்மூர்த்திகளோட ஒருங்கிணைந்த அம்சமே இங்கிருக்கிற மூலவர் தாணு மாலயன். "தாணு'ன்னா சிவன்; "மால்'னா மகாவிஷ்ணு; "அயன்'னா பிரம்மா'' என்று விளக்கினார். பயபக்தியுடன் வணங்கினோம்.

""சுசீந்திரம்னு இந்தவூருக்கு பேர் வந்தது ஏன்னு கேட்கலையே'' என்றார் குருக்கள்.

""சொல்லுங்க'' என்றோம்.

""இந்திரன் சாபம் நீங்கின இடமிது. 'இந்திரன் சுகப்பட்ட ஊர்'ங்கற பொருள்ள சுசீந்திரம்னு இந்த தலத்துக்குப்பேர்.''

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிவாஜி, படப் பிடிப்புக்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இயக்குனர் சங்கரைக் கூப்பிட்டு, ""இங்க எவ்வளவு பெரிய வரலாறு இருக்கு... இதைக் கேக்காம அங்கென்ன வேலை...'' என்றார். சங்கரும் எங்களுடன் சேர்ந்தார்.

sivaji

நாங்கள் போயிருந்தது "மிருதங்கச் சக்கரவர்த்தி' படப்பிடிப்புக்காக. அது சம்பந்தமாக ஒரு நிகழ்வையும் குருக்கள் விளக்கினார்.

நான்கைந்து தலைமுறைக்குமுன் சுப்பையா பிள்ளை என்னும் மிருதங்க வித்வான் இருந்தார். ஆழ்ந்த சிவபக்தர். சிவனுக்காக மட்டுமே மிருதங்கம் வாசிப்பார். ஆலயத்தில் அமர்ந்து விதவிதமாக வாசிப்பார். அப்போது ஒரு நாள் கொச்சி அரசர் சுவாமிதரிசனம் செய்யவந்தார். முன்னால் வந்த காவலர்கள் சுப்பையாவிடம் சென்று, "மகாராஜா வருகிறார். விலகி நில்' என்றனர். "எனக்கு இந்த சிவனே மகாராஜா' என்றார் பிள்ளை. உடனே காவலர்கள் அவரை பலவந்தமாக அப்புறப்படுத்த முயல, இப்படி ஒருவர் பேசுகிறார் என்றால் அவரிடம் ஏதோ இருக்கவேண்டும் என்பதை உணர்ந்துகொண்ட மன்னர் காவலர்களை விலக்கிவிட்டு சுப்பையா பிள்ளையிடம் வந்தார்.

""இந்த சிவன்தான் உமக்கு மகாராஜாவா?'' என்று கேட்டார்.

""ஆமாம்'' என்றார் சுப்பையா.

""நிரூபித்துக் காட்ட முடியுமா?''

""முடியும்.''

""எப்படி?''

""நீங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ அப்படி.''

உடனே காவலனை அழைத்த கொச்சி மன்னர்,

காயாக உள்ள வாழைத்தாரைக் கொண்டுவந்து கட்டச்சொன்னார். சுப்பையா பிள்ளையைப் பார்த்து, ""நீ மிருதங்கம் வாசித்து இந்தக் காய்களைக் கனியச் செய்யவேண்டும். அப்படி நடந்துவிட்டால் நீ மிகச்சிறந்த சிவபக்தன். இந்த தாணுமாலயனின் அருள்பெற்றவன் என்பதை ஒப்புக்கொள்கிறோம்'' என்றார்.

சுப்பையா பிள்ளை வாசிக்க ஆரம்பித்தார். வாசிக்க வாசிக்க காய்களின் பச்சை நிறம் மாறத் தொடங்கியது. கனிந்து கனிந்து கீழே உதிரவும் தொடங்கியது. அவ்வளவுபேரும் பிரமித்துப் போயினர்.

தற்போதும் அந்த இடத்தை சுசீந்திரம் ஆலயத்தில் காணலாம். அங்கிருந்தே நாங்கள் படக்காட்சியை ஆரம்பித்தோம். சுப்பையா பிள்ளையின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர் அங்கிருந்தார். அவரை அழைத்துவந்து மரியாதை செய்தோம்.

மும்மூர்த்திகள் ஒன்றாகத் தோன்றிய இடம், அனுசுயாவின் பதிவிரதாத்தன்மை வெளிப்பட்ட இடம், இந்திரன் சாபம் நீங்கிய இடம், சுப்பையா பிள்ளை முக்திபெற்ற இடம் என்று இன்னும் பல பெருமைகள் கொண்டது சுசீந்திரம்.

இப்போது தொடக்கத்தில் சொன்ன நிகழ்ச்சிக்கு வருகிறேன். "துணைவன்' என்னும் பக்திப்படத்தை தேவர் 1962-ல் தயாரித்துக்கொண்டிருந்தார். கோவிலுக்குச் செல்லும் கணவன்; கோவிலுக்கே செல்லாத மனைவி. "ஏன் கோவிலுக்கு வரமாட்டேங்கற' என்று கணவன் ஆதங்கப்பட, "உங்களுக்கு முருகன் தெய்வம்னா, எனக்கு நீங்க தெய்வம்' என்று சொல்லிலி மறுத்துவிடுவாள் மனைவி.

ஒருசமயம் அவர்களது குழந்தைக்கு உடல்நலமில்லாமல் போய்விடும். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், "உன் தெய்வமான நான் கூப்பிடறேன். நம்ம குழந்தைக்காக என் தெய்வத்தைப் பார்க்க வா' என்று கணவன் மனைவியை அழைப்பான். குழந்தை நல மானால் சரி என்று கோவிலுக்குச் செல்வாள் மனைவி. (கணவனாக ஏ.வி.எம். ராஜனும், மனைவியாக சௌகார் ஜானகியும் நடித்தனர்.)

மருதமலை முருகன் கோவிலில் படப்பிடிப்பு. குழந்தையைப் புல்தரையில் படுக்க வைத்துவிட்டு, கணவனும் மனைவியும் முருகனை வேண்டுவார்கள். அப்போது ஒரு நாகம் ஊர்ந்துவந்து குழந்தையருகே படமெடுக்கும். உடனே இருவரும் "முருகா முருகா' என்று அபயக்குரல் எழுப்புவார்கள். அப்போது எங்கிருந்தோ பறந்துவரும் மயில் பாம்பைத் தூக்கிச் சென்றுவிடும்.

இதுதான் எடுக்கப்பட வேண்டிய காட்சி.

குழந்தை அருகே பாம்பைவிட்டு பாம்பாட்டி மகுடி ஊத, பாம்பு பட மெடுத்தது. அதைக் கவ்விச்செல்ல ஒன்றுக்கு நான்கு மயில்களைக் கொண்டு வந்திருந்தனர். அவற்றை ஒவ்வொன்றாகப் பறக்கவிட, நான்கு மயில்களுமே பாம்பைத் தூக்கவில்லை. மீண்டும் மீண்டும் பறக்க விட்டதில் சோர்வடைந்து காட்டுக்குள் சென்றுவிட்டன.

பொதுவாக பாம்பைக் கண்டால் மயில் விடாது. கொத்திக் குதறிவிடும். ஆனால் இங்கு நான்கு மயில்களும் ஓடிவிட்டன.

தேவர் "அப்செட்' ஆகிவிட்டார். கோபம் வந்தால் தன் இஷ்டதெய்வம் முருகனை ஆவேசமாகத் திட்டுவார். கோவிலை நோக்கித் திரும்பியவர் "அடேய்... முருகா... முருகா...' என்று சத்தமாக அரற்றினார்.

அப்போது "ம்மோவ்...' என்று மயிலின் அகவல் சத்தம் கேட்டது. உடனே கேமரா சுழல ஆரம்பிக்க, பாம்பாட்டி மகுடி ஊதினார். பாம்பு படமெடுத்தது. கோவில் கோபுரத்திலிலிருந்து ஒரு விமானம்போல பறந்து வந்த மயிலொன்று பாம்பைத் தூக்கிச் சென்றது. கொண்டு வந்த நான்கு மயில்களும் கைகொடுக்காத நிலையில், கோவில் மயில் அதைச் செய்ததால் சிலிலிர்த்துப் போனார் தேவர். அவர் மட்டு மல்ல; அங்கிருந்த அனைவருமே சிலிலிர்த்து நின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் தமிழகத்திலுள்ள பல திரையரங்குகளில், முருகன் படத்துடன் "நம்பினார் கெடுவதில்லை' என்னும் வாசகத்துடன் சிலைடு போட தேவர் ஃபிலிலிம்ஸ், சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

அதோடு நின்றதா அந்த மருதமலை அற்புதம்? நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவத்துக்கும், அதற்கு நிவாரணம் கிடைத்த நிகழ்வுக்கும் சம்பந்தம் கொண்ட சாட்சியாக இன்றளவும் உள்ளது. அது...

(தொடரும்)

om010818
இதையும் படியுங்கள்
Subscribe