கோவிலுக்குச் சென்றவுடன் கிடைக்கும் பேரானந்தத்தையும், ஆத்ம திருப்தியை யும் அடைந்தோம், டாக்டர் பூசண்ஜி பழனியப்பன் அவர்களைச் சந்தித்தபோது...
சென்னை கே.கே நகரில் கடந்த 36 வருடங்களாக பிரபல ஜோதிடராக ஜாதகம், எண் கணிதம், பெயரியல் மற்றும் வாஸ்து நிபுணராகவும் புகழ்பெற்ற பூசண்ஜி தனது இறை அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
"எனது பதினாறு வயதுமுதலே பக்திநெறி பரப்பும் சிறந்த குருமார்களின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. பல சித்தர்களின் நட்பும் கிடைக் கப்பெற்றது. கோடி ஸ்வாமி, மாயம்மா, ராகவன் ஸ்வாமிகள், செஞ்சுவாடி ஸ்வாமிகள், மூட்டை ஸ்வாமிகள் என்று பல சித்தர்கள் தொடர்பு கிடைக்கப்பெற்றது. குருவின் பெயர் குத்தூஸ். அவரிடம் ஜோதிடம் பயின்றேன். மந்திரம் மற்றும் அஷ்டகர்ம சாஸ்திரங்கள், முழுமையான பிரயோக முறைகள், மூலிகை பிரயோக முறைகள் அனைத்தையும் குத்தூஸ் ஸ்வாமிகளிடம் கற்றேன்.
னோகர் என்பவரிடம் இருந்து சில தாந்தரீக முறைகள் இதுபோல ஏறத்தாழ 12 குருமார்கள் உள்ளனர். பலவிதமான பிரயோக முறைகளையும், ரத்ன சம்பந்தப்பட்ட சாஸ்திர முறைகளையும் மற்றும் எண் கணிதத்தில் முதன்முதலில் வித்தியாசமான எகிப்து பிரமிட் நம்பர் பற்றி அறிந்தேன். அதற்கும் மாந்தரீக சாஸ்திரத்திற்கும் தொடர்பு உண்டு. அதனையும் கற்றுத் தேர்ந்தேன்.
பாலாவின் மூல மந்திர தொடர்பைக் கண்டுபிடித்து நியூமராலஜியில் 96 சதவிகிதம் வெற்றி வாய்ப்புகளைக் கண்டுபிடித்தேன். அம்பிகை கொடுத்த இறை அருளால் இதை அறிந்தேன். எப்படிக் கொடுத்தாள் என்பது ஆச்சர்யமான விஷயம். நல்ல முழுமையான தியானம் தெரிந்தவர்களுக்கு சில உத்தரவுகள் பிரபஞ்சத்தில் இருந்து வந்துகொண்டு இருக்கும். இங்கு எல்லாமே நிர்ணயிக்கப்பட்டது. இது இறை அருளால் திரிபுரவித்யா பாலா உபாசனை எடுத்து வந்தது.
அப்புறம் பல உபாசனைகள் சிறு தேவதைகளால் வந்தது. இந்தக்கலை இறை அருளால் மட்டுமே சித்திக்கப்பட்டது.
1999-ஆம் ஆண்டுமுதல் ராஜ் டிவியில் 21 ஆண்டுகள் தினமும் சிறுசிறு ஆன்மிக குறிப்புகள் கூறி பெரும் புகழும், வரவேற்பும் பெற்றேன். இதற்கு நான் வணங்கிய குருமார்கள், சித்தர்கள், தெய்வங்கள் அருள்தான் என்னுள் இருந்து பேசி மக்களின் மனதில் பதிந்து பயன் பெறச் செய்தது.
அன்னையின் பேரருளால் சிறுசிறு ஆன்மிகப் பரிகாரங்களை ராஜ் தொலைக்காட்சியில் பேசியது இன்றும் பலரால் பாராட்டப்படுகிறது.
விஜய் டிவியில் ஐந்து வருடம் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தினேன்.
புதுயுகம் டிவியில் முதன்முதலாக "நேரம் நல்ல நேரம்' ஆன்மிகம், ஜோதிடம் பற்றி பேசத்துவங்கி தற்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிமுதல் 7.30 மணிவரை பேசி வருவதும் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது.
திருமணப் பொருத்தம் பார்ப்பதில் பயன் ஏதும் இல்லை. பல பொருத்தம் பார்த்து நடந்த திருமணங்களில் பிரிவினை ஏற்பட்டு இருக்கிறது.
எண்கள் பற்றியும் விளக்கி இருக்கிறேன். 3-க்கும் 6-க்கும் பொருந்தாது என்பதெல்லாம் கிடையாது. அதற்கான முழுமையான காரணத்தையும் வெளியிட்டு இருக்கிறேன்.
மீனத்தில் சுக்கிரன் உச்சமாகிறது.
இதனால் 4-க்கும் 8-க்கும் உள்ள தொடர்பு என்ன?
திருமணம் என்பது சிவன் சக்தி கான்செப்ட். இது இறையருளால் நிர்ணயிக்கப்படுகிறது, பரிகாரங்கள் என்பது எழுபது, எண்பது சதவிகிதம்தான் பலன் அளிக்கும்.
அதாவது பத்து நாள் கணவன்- மனைவி சண்டையை எட்டு நாளாக வேண்டுமானால் பரிகாரத்தினால் குறைக்கலாம். பல பூஜைகள், எளிய மந்திரங்களை என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வருபவர்களுக்குத் தந்து வருகிறேன்.
பைரவர் பேரருளால் ஸ்ரீ பைரவர் சுவாமி வழிபாடு பற்றி நிறைய சொல்லிவருகிறேன். கோவில்களுக்கு சென்று பைரவர் வழிபாடு செய்வது மகத்தான சக்திவாய்ந்தது. அதுபற்றி பலருக்கும் தெரியாமல் இருப்பதை தெரியவைத்து வருகிறேன். பைரவரின் மூலமந்திரம் பலருக்கும் தந்துள்ளேன்.
750 குடும்பங்களுக்குமேல் மகாகணபதி ஹோமங்கள் மற்றும் எண்ணில் அடங்கா ஹோமங்கள் செய்து பயன் அடையச்செய்து தெய்வ சக்திகளின் அற்புதங்களை நிரூபித்து காட்டி இருக்கிறேன்.
பிரயோக முறை பூஜைகள், பிரயோக முறை பிர யோகங்கள் எந்த இடத்தில் சேர்த்து செய்ய வேண்டும் என்ற அமைப்பு, ஹீலிங் முறைகள், மலர் மருத்துவம், பக்க விளைவுகள் இல்லாத சித்தா முறைகளை விளக்கிச் சொல்லி மருந்துகள் அளித்து பூரண குணம் அடைய செய்துவருவதை இறையருள் எனக்கு தந்த வரம் என்றே சொல்வேன்.
தெய்வம் தண்டிக்கக்கூடியது அல்ல என்பதை நிரூபித்து இருக்கிறோம். "ஆன்மிகக் குறிப்பு' என்ற நூலை எழுதி அனைவரும் தெய்வ அருள்பெற வழங்கிவருகிறேன்.
வீட்டில் "பாசிடிவ் வைப்ரேஷன்' ஏற்படுத்த விசேஷ மூலிகைகள் அளித்து ஆனந்த வாழ்வை இல்லங்களில் இடம் பெறச் செய்து வருகிறேன்.
எதற்கு எதை பயன்படுத்த வேண் டும், எதோடு எதை சேர்த்தால் பலன் கிடைக்கும் என்பது தான் முக்கியம்.
கடுக்காய்பவுடர் தினமும் இரவில் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் மிகப் பெரிய பிராணசக்தியை அளிக்கும். அதே கடுக்காய் பவுடரை அதி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு முழுமையாக சுத்தமாகும்.
முருங்கை கீரை மிகவும் சக்திவாய்ந்தது. இதனை சமையல் செய்யும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் நல்லது.
ரத்தினங்களில் உபரத்தினங்களை பயன்படுத்தும் முறைகளை முதன்முதலாக தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து பல குழந்தைகளுக்கு அணியவைத்து படிப்பில் முதலிடம் பெறவைத்த பெருமை பெற்றேன். பெயரியலில் குழந்தைக்கு நல்ல பெயர் சூட்டி அந்த குழந்தை எல்லா நலன்கள், வளங்களுடன் வளர்ந்து பெரியவர்கள் ஆகி அவர்களின் குழந்தைகளுக்கும் பெயர் வைத்து புகழ் பெற்றுள்ளேன்.
இத்தனை நற்செயல்களையும் நான் பரிபூரண சரண் அடைந்துவிடும் தெய்வ அருளே செய்கிறது.
சிவகங்கை மாவட்டம் ஆலத்தம்பட்டி "ஒளிவீரன்' எங்கள் குலதெய்வம். அதற்கு என்று தனிப்பட்ட வரலாறு உண்டு. மிக உக்கிரமான கடவுள் என்று கூறுவார்கள். ஆனால் எந்த தெய்வமும் யாரையும் தண்டிப்பதில்லை.
குற்றம், தவறு செய்பவர்களுக்கு அவர்களது மனமேதான் தண்டனை தருகிறது. மனமே கடவுள். உள்ளமே பெருங்கோவில். கடவுள் உங்களுக்குள்ளே இருக்கிறார். அதனைக் கண்டுபிடிக்கத்தான் பல முயற்சிகள் செய்துகொண்டு இருக்கிறோம்.
நம்மால் முடிய வில்லை என்பதால் சித்தர்கள் பல ஆலயங்களை உருவாக்கி ஜீவ சமாதி ஆகி இருக்கிறார்கள். ஒன்றே கடவுள்... ஒருவனே தேவன் என்பது நிதர்சமான உண்மை.
ஆலயங்கள் நிர்ணயிக்கப்படும் போது ஆறு ஆதார சக்கரங்களும் அமைக்கப்படுகிறது. நம்மிட முள்ள குறைகளை சரிசெய்யவே ஆலயங்கள் செல்கிறோம். சித்தர்கள் சொல்லித் தந்தது இன்றும் பலருக்கு புரியவில்லை.
நிம்மதியாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வதற்கு சொல்லிக் கொடுக்கும் மிக அற்புதமான கலை ஜோதிடக்கலை.
ஆலய பிரதிஷ்டையின்போது அதில் பயன்படுத்தும் சமீத்கள் அத்தி, ஆலரசு, விண்ணி, கருங்காலி மூலிகைகளைச் சேர்த்து பிரதிஷ்டை செய்யவேண்டும். தற்காலத்தில் பல பலகைகளையும், சவுக்கையும் பிரதிஷ்டையில் பயன்படுத்துவது தவறு. நேரடியாக தயாரிக்கப்பட்ட பசு நெய்யைப் பயன்படுத்தலாம்.
பிரதிஷ்டை செய்யும்போது சுவாமி சிலையில் இருந்து கோபுர கலசத்திற்கு காப்பர் கம்பி ஒன்று தொடர்பை ஏற்படுத் தும். அதை யாரும் முறைப்படி செய்வதில்லை. யாரையும் குற்றம் சொல்வது என் நோக்கம் இல்லை. சரியான ஆன்மிக முறையின்படி செயல்பட்டு நன்மைகளை பெறமுடியும் என்பேன்.
பட்டினத்தார் முதல் பல சித்தர்கள் பாடல்கள் வரை பிறப்பு முதல் இறப்புவரை நிர்ணயிக்கப்பட்டதுதான் நடக்கும். தெய்வ வழிபாடுகளால் மட்டுமே நமக்கு நடக்கும் நன்மை- தீமை அளவுகளை சரிசெய்யும்.'
பூசண்ஜி பழனியப்பன் அவர்களின் ஆன்மிக ஆராய்ச்சிகளைக் கேட்டு மன நிறைவோடு, மனத் தெளிவோடு விடைபெற்றோம்.
பேட்டி படங்கள்: விஜயா கண்ணன்