யாதுமாகி நின்றாள்- 10

/idhalgal/om/i-am-standing-10

"சத்தியவிரதனுக்கு அரிச்சந்திரன் பிறக்க வும், தன் பிள்ளைக்கலி தீர்ந்ததென்று மகிழ்ந் தான். ஒருபுறம் அரிச்சந்திரன் வளரத் தொடங் கிட, சத்தியவிரதனும் மானுட வாழ்வின் முன்பின் பக்கங்களை அடக்கிய பொதுவான வாழ்வு குறித்து மிகவே சிந்தித்தான். சிறு பிள்ளையாகப் பிறக்கிறோம். பின்பு தாய்- தந்தையரால் வளர்க்கப்பட்டு ஆளாகிறோம்.

வளர்க்கப்படும் சூழலுக்கேற்ப கல்வி, கேள்வி, வீரம், ஆணமை, தானம், தவம் முதலியவை அமைகின்றன.

ஒரு மனிதன் தானொரு மனிதன் என்கிற சிந்தனைக்கு ஆட்பட்டு, தானே உயிரினங் களில் மேலானவன் என்பதையெல்லாம் உணர்வதற்கே ஒரு காலமும் நேரமும் தேவைப்படுகிறது. சிலர் இந்த உணர்தலை இருபது வயதளவில் உணர்ந்தால், பலரும் முப்பது வயதிலும் உணராமலே வாழ்வின் பிடியில் பசிக்காக சாப்பிட்டு, வலிக்காக அழுது, எந்த பொருளுமின்றி தன்னையறிய முடியாத ஒரு மிருகம்போலவே வாழ்கின்றனர்.

மனிதப்பிறப்பு மேலானதென்று உணரும் போது மற்ற பிறப்பெல்லாம் எதனால் தாழ்ந் தது என்கிற சிந்தனையும் உண்டாகிறது. கூடவே உயிர்களில் எதற்காக இந்த பேதம் என்கிற கேள்வியும் எழுகிறது. இப்படி நாம் வாழும் வாழ்வில், வாழ்வென்பது எதைக்கொண்டது- அது எதற்காக என்றும் கேள்விகள் எழுகின்றன. சத்திய விரதனுக் குள்ளும் இவ்வகை விசாரங்கள் ஏற்பட்டன.

இவற்றை நீக்கவே என்போன்ற முனிவர் கள் உள்ளோம்'' என்று வியாசர் சத்திய விரதன் பற்றி கூறிவந்த நிலையில் ஒரு இடை வெளிவிட்டார். அந்த இடைவெளிக்குள் புகுந்து ஜெனமேஜெயனும் கேள்விகள் கேட்கலானான்.

""குருவே... தாங்கள் இடைவெளி விட்டாலே என்னை கேள்வி கேட்கத் தூண்டுகிறீர்கள் என்று பொருள். என்னிட மும் சத்தியவிரதனுக்கேற்பட்ட விசாரங் கள் உண்டு. எதற்காக மனிதப் பிறப்பெடுத் துள்ளோம்? இதை மேலான பிறப்பென்று கூறுவது சரியா? மனிதன் உயர்ந்தவன் எனில் ஏனைய உயிரினங்கள் அவ்வளவும் தாழ்ந்தவை என்றாகிறதே- இது சரியா? அதேசமயம் மேலான இந்த மனிதன் தாழ்ந்த உயிரினங்களால்தானே உயிர்வாழ்கிறான்?

மண்ணுக்குள் மண்புழுக் கள் இல்லாவிட்டால் பயிர்கள் செழித்துவளராது. வளரும் பயிரும் ஒரு உயிர்தான்! அவையே நம் பசியைப் போக்கி நம்மை வாழவைக்கின்றன. சொல்லப் போனால் அவற்றின் தியாகமே நம் வாழ்வு என்றாகிறது- ஆனால் தியாகம் மிகுந்த பயிர்களைவிட, அதைத் தின்று வாழும் மனிதன் மேலானவன் என்பது எந்த வகையில் சரி?

இப்படி என்னுள்ளும் உயிர்கள்- அதன் வாழ்வு தொடர்பால் கேள்விகளுண்டு...'' என்று முடித்தான். வியாச

இப்படி என்னுள்ளும் உயிர்கள்- அதன் வாழ்வு தொடர்பால் கேள்விகளுண்டு...'' என்று முடித்தான். வியாசர் புன்னகையோடு அவன் அவ்வளவு கேள்விகளையும் எதிர் கொண்டார். பின் விடையளிக்கத் தயாரானார்.

""ஜெனமேஜெயா! இப்படியெல்லாம் அடுக் கடுக்காய்க் கேள்விகள் கேட்டாய் பார்... இப்படிக்கேட்க மனிதனால் மட்டுமே முடியும். அதனாலேயே மனிதன் மேலானவன் எனப்பட்டது. மேலானவன்தானே அன்றி அவனே உயர்ந்தவன் என்பது தவறான கருத்து!

மேலானவன் என்பது ஒரு நிலைப்பாடு. அவ்வளவுதான். ஒரு புரிதலுக்காக மட்டுமே சொல்லப்படுவது. சொல்லப்போனால் நானும் நீயும் இப்படி மனிதப் பிறப்பெடுப் பதற்கு முன்னர் இதுபோல் புல் பூண்டு முதல் புழு பூச்சி வரை, பின் பாம்பு, பறவை என்று பல பிறப்பெடுத்து இறுதியாகவே மனிதனாகப் பிறந்துள்ளோம்.

உயிரினத்தின் பரிணாம வளர்ச்சி இது!

இந்த வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள சிருஷ்டி யும், அதை உடைய பரம்பொருளும்தான் எல்லாவற்றுக்கும் மூலம். எந்த பரம்பொருள் தன்னுள் இருந்து நம்மையெல்லாம் தோற்றுவித்ததோ அந்த பரம்பொருளை திரும்ப அடைவதே பிறப்புக்குப்பின் உள்ள நோக்கமாகும். அந்த நோக்கத்திற்கேற்ப வாழ்வதே பொருள் மிகுந்த வாழ்வாகும்.''

வியாசர் சுருக்கமாய்- அதேசமயம் மிகத் தெளிவாய் அவன் கேள்விக்கு பதில் கூறினார்.

""மகரிஷி... எனக்கு பதில் கூற நீங்கள் இருக்கிறீர்கள். அதுபோல் சத்தியவிரதனுக்கு யார் பதில் கூறியது?''

""சூரிய குலத்துக்கென்றே தன்னை அர்ப் பணித்துக்கொண்ட வசிஷ்ட மகரிஷி இருக்கிறாரே... பிறகென்ன கவலை?''

""அப்படியானால் சத்தியவிரதனுக்கு வசிஷ்டர் எல்லா விளக்கமும் அளித்தாரா?''

""ஆம். அப்படி அவர் விளக்கமளிக்கப் போய்தான் ஒரு புதிய சிக்கலும் உருவானது.''

""இறைவா... இது என்ன விந்தை!''

""விந்தை என்றால் விந்தை- விபரீதம் என்றால் விபரீதம்!''

""விபரீதமா... எப்படி எப்படி?''

""வசிஷ்டர் சத்தியவிரதனுக்கு மனிதப்பிறப்பின் முன்பின் உள்ள சகலத்தையும் விளக்கி முடித்த நிலையில், சத்தியவிரதன் அடுத்த தாக ஒரு கேள்வி கேட்டான்.

""என்ன கேள்வி?''

""மனிதர்கள் உயிரினங்களில் மேலானவர்கள் எனில், இவர்களைவிட மேலானவர்கள் என்று தேவர்களைக் குறிப்பிடுவது ஏன்?'' என்று கேட்டான்.

""நல்ல கேள்வி... என்னிடமும் அந்த கேள்வி உண்டு.''

""அதற்கும் சேர்த்தே பதில் கூறுகிறேன். இது இங்கே நான் உனக்கு கூறப்போகும் பதில். சத்தியவிரதனுக்கு வசிஷ்டர் கூறிய பதில். அந்த பரம்பொருள்தான் ஆதிநாராயணனாக, ஆதிசிவனாக, ஆதிபராசக்தியாக உள்ளது. இதில் எவர் பெரியவர்- சிறியவர் என்கிற கேள்வி பிழையானது.

ஒரு நெற்கதிர் முற்றித்திரண்டு நிற்கிறதென்று வைத்துக்கொள்... இதில் வேராக இருப்பது சிவம் என்றால் விளைவாக இருப்பது நாரணம். இதில் நெல்மணிகளாய்த் துலங்குவதே சக்தி. மொத்தத்தில் மூன்றும் ஒன்றே! இதில் படைப்பென்று வரும்போது சக்திமிகுந்த ஒன்றாலேயே படைக்க இயலும். அந்த வகையில் சக்தியான தாயம்சத்தை நாம் பெரிதாய் தேவி என்று முன்னிருத்துகிறோம்.

அந்த தேவியின் மகாத்மியத்தையே நீயும் என் மூலமாகக் கேட்டு இன்புற்றும் பண்புற்றும் அன்புற்றும் வருகிறாய்.

அந்த பராசக்தியானவள் ஒரு தான் தோன்றி! அவளொரு சுயம்பு. இந்த பராசக்தி யின் ஆண் வடிவமே நாரணம். நாரணத்தின் இன்னொரு வடிவமே சிவம். இவர்கள் இருவரும் வெவ்வேறல்லர். எனவே விஷ்ணுவே முதலானவர் என்றாலும், சிவனே முதலானவர் என்றாலும், இதில் தவறில்லை. நல்ல ஞானி கள் இவர்களிடையே வேற்றுமைகளைப் பார்க்கவோ உணரவோ மாட்டார்கள்.

அப்படிப் பார்த்தால் அது பார்ப்பவரிடம் இருப்பதன் பொருட்டு தோன்றிய தாகும்.

இவர்களாலேயே முதலில் சப்தப்பிரபஞ்சம் உருவானது.

அதாவது உயிர்கள் தோன்றும் முன் அவ்வுயிர்கள் பேசும் மொழி வேதம் என்னும் வடிவில் உருவாகிவிட்டது. பின் பிரம்ம னைப் படைத்து அவர் மூலமாக உயிரினங்க ளைப் படைத்து உலகம் உருவானது.

இந்த உயிரினங்களில் மேலானவர் கள் பூவுலகில் மனிதர்கள் என்றால், விண்ணுல கில் தேவர்கள் என்கிற நிலைப்பாடு தோற்றுவிக்கப்பட்டது.''

""அப்படியானால் மனிதர்களைவிட தேவர்கள் மேலானவர்களா?''

""ஆம்... மனிதனுக்கு மடிந்துவிடக்கூடிய தேகம் அருளப்பட்டது. தேவர்களுக்கு அப்படி இல்லை. மனிதனுக்கு ஒரு வருடம் என்பது தேவனுக்கு ஒருநாள் கணக்கு... அவ்வகையில் ஆயிரக்கணக்கான வருடங்களானாலும் தேவர்கள் உருவில், திருவில் அப்படியே இருப்பர். அவர்கள் விரும்பினாலே பசித்தி டும்; தாகமும் எடுத்திடும். ஆனாலும் அவர்களுக் கும் வலிவேதனைகள் உண்டு.''

yathumagi

""தேவஉடல் மனிதனுக்கு சாத்தியமில்லையா?''

""இல்லை... இது காமத்தால்- இருவுடல் சேர்ப்பால் விளைந்த ஒன்று. காரண காரியங் கள் முடிந்த நிலையில் இந்த உடலானதும் ஓய்ந்துவிடும்.''

""உங்கள் வரையிலும் இதுதான் நிலையா?''

""ஆம்...''

""அப்படியானால் எனது இந்தவுடலை நான் இந்த மண்ணில் விட்டாலே என் ஆத்மாவுக்கு விண்ணில் வழிகிடைக்குமா?''

""ஆம்...''

""இந்த உடம்போடு இந்த மண்ணைவிட்டுச் செல்ல இயலவே இயலாதா?''

""இயலாது...''

""யாரும் முயன்று பார்க்கவில்லையா?''

""இப்போது கேட்டாயே ஒரு கேள்வி... இதற் காகவே காத்திருந்தேன். ஒருவன் முயன்றான்- அவன்தான் சத்தியவிரதன்!''

""அருமை... அதன்பின் என்னா யிற்று?''

""என்னாகும்? வசிஷ்டர்பிரான் சத்தியவிரதனின் விருப்பம் தவறான விருப்பம் என்று கூறி கோபப்பட்டார்...''

""வசிஷ்டருக்கே கோபம் வந்துவிட்டதா?''

""ஆம்... அப்படி சத்தியவிரதனும் நடந்துகொண்டான். அவரை அதன் நிமித்தம் வேள்விபுரியத் தூண்டினான். பிரம்மன் குறித்து வேள்வி செய்து, பிரம்மனிடம் தன் உடம்போடு விண்ணகம் செல்லவேண்டும் என்று வரம் பெறுவதே சத்தியவிரதனின் கோரிக்கை. ஆனால் "இது சிருஷ்டி விதிகளுக்கு எதிரானது. உன்னைப் பார்த்துவிட்டு எல்லாரும் இதுபோல் தங்கள் உடலோடு சொர்க்கம் புக முயன்றால் கட்டமைப்பே உருக் குலைந்துவிடும்' என்று வசிஷ்டர் அந்த வேள்வி யைச் செய்ய மறுத்தார். ஆனால் சத்தியவிரதன் வசிஷ்டரின் பதிலைப் பொருட்படுத்தாமல், வசிஷ்டருக்கு இணையான முனிவர்களைக் கொண்டு வேள்வி புரியத் தயாரானான். இதையறிந்த வசிஷ்டர் சத்தியவிரதனைத் தடுத்தார். "சத்தியவிரதா, உன் ஆசை மிக மலிவானது. உனக்கு எதற்கு இந்த உடம்பு? இது மண்ணில் பஞ்சபூத சேர்க்கையால் உருவானது. இந்த மண்ணில் இது மறைவதே சரி' என்று எவ்வளவோ சொல்லியும் சத்தியவிரதன் கேட்கவில்லை. இதனால் வசிஷ்டருக்கும் கோபம் வந்துவிட்டது. அந்த கோபத்தோடு அவனை சபித்துவிட்டார். "நீ அருவருப்பான சண்டாள உடம்போடு, பார்க்கத்தகாதவனாகத் திரிவாயாக... அப் போதுதான் உனக்கு உடம்பின் மேன்மை மற்றும் கீழ்மை புரியும்' என்று சபிக்கவும், சத்தியவிரதனும் சண்டாளனாகி தான் ஒரு அரசன் என்பதையும் மறந்து காட்டில் ஒளிந்து வாழ்ந்திடும் நிலைக்கு ஆளானான்!''

""அடக்கொடுமையே... என்றால் அயோத்தி நகரை யார் ஆண்டது?''

""எதற்கு இருக்கிறான் அரிச்சந்திரன்! அவன் அயோத்தி அரசனாகி ஆட்சிபுரிந்தான். தந்தையின் நிலையை எண்ணி வருந்தவும் செய்தான்.

""கொடுமை... வசிஷ்டர் இப்படி ஒரு சாபத்தைக் கொடுத்தது சரியா மகரிஷி!''

""சரிதான் ஜெனமேஜெயா... வசிஷ்டரும் ஒரு மானுடரே! அவருக் கும் தன் உடம்போடு சொர்க்கம்புக ஆசை இருக்கு மல்லவா? ஆனால் இந்த உடம்பென்பது கர்மத்தால் உண்டானது. இதில் நம் முன்னோர் களின் ஏழு தலைமுறைப் பதிவுகளும் உள்ளன.

இதை தேவர்களுக்கு சமமாக்க முயல்வது தங்கத்துக்கு இணையாக செம்பினையும் ஏற்றுக்கொள்ளச் சொல்வது போன்றது.''

""எல்லாம் சரி... அதற்காக அருவருப்பான உடம்புக்கு அவரை ஏன் மாற்ற வேண்டும்?''

""அப்போதுதான் நம்முடல் என்பது பவித் திரமானதல்ல. அது சீழுக்கும் சிரங்குக்கும் ஆட்பட்ட நாற்றமுடைய ஒன்று. இதோடு அமிர்தம் உண்ட தேவர்களுக்கு இணையாகத் திகழ முடியாது என்பது புரியும்...''

""அப்படியானால் இந்தவுடல் மேலான தில்லையா?''

""மாறும் தன்மையும், அழியும் தன்மையும் உடைய எதுவும் மேலானதாக இருக்க முடியாது ஜெனமேஜெயா...''

""நல்ல பதில்... சரி மகரிஷி! அதன்பின் சத்தியவிரதன் என்ன செய்தான்?''

""அருவருப்பான உடலோடு நாட்டில் எப்படி நாலுபேர்முன் வாழமுடியும்? எனவே அரிச்சந்திரனை அரசனாக்கிவிட்டு காட்டுக்குள் சென்று ஒளிந்து வாழ்ந்தான். இவ்வேளையில் காட்டில் தவமிருந்த விசுவாமித்திரர் தன் தவத்தை முடித்துக்கொண்டு தன் மனைவி மக்களைத் தேடிக்கொண்டு வந்தார். அப்படி வந்தவர் தன் மனைவி மக்கள் நலமுடன் வாழ்வதைக் கண்டார். அவர் மனைவியும், அதற்குக் காரணம் சத்தியவிரதன் என்று கூறினாள். விசுவாமித்திரர் மகிழ்ந்து, அவன் நன்றாக இருக்க வேண்டுமென்று வாழ்த்தினார்.

ஆனால் அவர் வாழ்த்துவதைக் கேட்ட அவர் மனைவி சிரித்தாள்.

""ஏன் சிரிக்கிறாய்?'' என்று விசுவாமித்திரர் கேட்கவும், ""சத்தியவிரதன் இப்போது நன்றாக இல்லை. வசிஷ்டரின் சாபத்துக்கு ஆளாகி காட்டில் காணச் சகிக்காதவனாக தலைமறைவாக உள்ளான்!'' என்கிற உண்மையைக் கூறி னாள். இதனால் பாதிக்கப்பட்ட விசுவாமித்திரர், ""அவனுக்கு உதவுவது என் கடமை'' என்று அவனைத் தேடிச்சென்று சந்தித்தார்.

சத்தியவிரதன் அவர்முன் கண்ணீர் சிந்தினான். ""முனிவர் பெருமானே! என் தாய்- தந்தையர் தந்த உடம்போடு விண்ணுலகம் செல்ல நான் ஆசைப்பட்டது ஒரு தவறா?'' என்றும் கேட்டான்.

""அது தவறோ சரியோ... உன் விருப்பத்தை ஈடேற்றுவது என் கடமை. நான் உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அடுத்து எப்போதுமே இந்த தேவர்கள் தங்களுக்கு இணையாக எவரும் வந்துவிடக்கூடாது என்று கருதி செருக்கோடு உள்ளனர். அவர்களுக்கு ஒரு பாடம்புகட்ட வேண்டும். நான்கூட உன்னைப்போல சாமான் யப்பட்ட மனிதன்தான். ஒரு அரசனும்கூட! கௌசிகன் என்னும் அரசனாகத் திகழ்ந்த என்னிடம் "உன்னால் புலன்களை அடக்கித் தவம் செய்து ராஜரிஷியாக முடியாது' என்றார் அந்த வசிஷ்டர். நான் அதை மறுத்து புலன்களை அடக் கித் தவமும் செய்து ராஜரிஷியாகவுமாகி அவர் கருத்தைப் பொய்யாக்கினேன். இப்போது உன்மூலம் அவருக்கு திரும்ப நான் பாடம் புகட்டப் போகிறேன். நீ இதே உடம்போடு சொர்க்கம் புகுவாய். உன்னைப் புகவைப்பேன். இது சத்தியம்!'' என்று சபதமே செய்தார் விசுவாமித்திரர்!

om010119
இதையும் படியுங்கள்
Subscribe