அசுரர்களின் ஆதிக்கத்தால், கொடுமைகளால் துன்புற்ற பூமாதேவி பிரம்மாவை சரணடைந்து, தன்னைக் காக்குமாறு முறையிட்டாள். பிரம்மா தேவர்களை நோக்கி, "பூமியில் வெவ்வேறு பாகங்களில் பிறப்பெடுங்கள். அசுரரை அழியுங்கள். கந்தர்வர், அப்சரஸ்களும் தத்தம் அம்சப்படி, மனிதப் பிறவி எடுங்கள்'' என்று கூறினார்.
அதன்படி விப்ரசித்தி ஜராசந்தனாகவும், ஹிரண்யகசிபு சிசுபாலனாகவும், பிரகலாதனின் தம்பி ஸம்ஹ்லாதன் சல்லியனாகவும், ஸ்வர்பானு உக்ரசேனனாகவும், தீர்கஜிஹ்வ
அசுரர்களின் ஆதிக்கத்தால், கொடுமைகளால் துன்புற்ற பூமாதேவி பிரம்மாவை சரணடைந்து, தன்னைக் காக்குமாறு முறையிட்டாள். பிரம்மா தேவர்களை நோக்கி, "பூமியில் வெவ்வேறு பாகங்களில் பிறப்பெடுங்கள். அசுரரை அழியுங்கள். கந்தர்வர், அப்சரஸ்களும் தத்தம் அம்சப்படி, மனிதப் பிறவி எடுங்கள்'' என்று கூறினார்.
அதன்படி விப்ரசித்தி ஜராசந்தனாகவும், ஹிரண்யகசிபு சிசுபாலனாகவும், பிரகலாதனின் தம்பி ஸம்ஹ்லாதன் சல்லியனாகவும், ஸ்வர்பானு உக்ரசேனனாகவும், தீர்கஜிஹ்வன் காசி ராஜனாகவும், விக்ஷரன் பாண்டிய நாட்டு மன்னனாகவும், காலநேமி கம்சனாகவும், பிருஹஸ்பதியின் அம்சம் பரத்வாஜரின் மகனான துரோணச்சாரியராகவும், யமன், காமம், குரோதம் அசுவத்தாமனாவாகவும், ஹம்சன் திருதராஷ்டிரனாக வும், சூரியபுத்திரர்- தர்மராஜனின் அம்சம் விதுரராகவும், கலி அம்சம்- துரியோதனனாகவும், புலஸ்தியகுல அரக்கர்கள்- துரியோதனனின் சகோதரர்களாகவும்; தர்மத்தின் அம்சம்- யுதிஷ்டிரராகவும், வாயு வாம்சம்- பீமனாக வும், இந்திர அம்சம்- அர்ஜுனனாகவும், அசுவினிகுமாரர்கள் அம்சம்- நகுல- சகாதேவராகவும்;
சந்திரனின் வர்சா என்ற அம்சம் அபிமன்யுவாகவும், அக்னியின் அம்சம்- திருஷ்டத்யும்னனாகவும், ராட்சஸ அம்சம் சிகண்டியாகவும், விஸ்வேதேவகணங்கள்- திரௌபதியின் ஐந்து புதல்வராகவும், சூரிய அம்சம் கர்ணனாகவும், பகவான் நாராயணர் கிருஷ்ணராகவும், சேஷனின் அம்சம் பலராமனாகவும், சனத்குமாரரின் அம்சம் ப்ரத்யுமனாகவும்;
அப்சரஸ்கள் 16,000 தேவிகளின் உருவில், ஸ்ரீகிருஷ்ணரின் பத்தினிகளாகவும்; மகாலட்சுமி ருக்மிணியாகவும், சசியின் அம்சம் திரௌபதியாவும், சித்தி- த்ருதி- குந்தி- மாத்ரியாகவும், மதிதேவி- காந்தாரியாகவும்- இதுபோல் இன்னும் பல தேவ, கந்தர்வர்களும், அசுரர்களும் அவரவர் தன்மைக்கேற்ப மானிட உருவில் அவதரித்தனர். இதில் சந்திரனின் வர்சா என்னும் புகழ்பெற்ற குமாரன் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவாகப் பிறந்தான்.
அப்போது சந்திரன் தேவர்களிடம், "என் உயிருக்கும் மேலான மகனைப் பிரிந்து நீண்டநாள் என்னால் இருக்க இயலாது; அதனால் என் மகன் வர்சா 16 ஆண்டுகள் மட்டுமே பூமியில் இருப்பான். அவனது 16-ஆவது வயதில் மகாபாரதப் போர் நிகழும். அப்போது செயற்கரிய செயல்களின் மூலம் அரைநாளில் பகைவரின் கால்பகுதியை எமலோகம் அனுப்பிவிடுவான். பின் சதிச்செயல்மூலம், மாலையானதும் என்னிடம் திரும்ப வந்துவிடுவான். அவனது வம்சாவளியான ஒரே மகனே பரதகுலத்தை மறுபடியும் தோற்றுவிப்பான்'' என்று கூறினார்.
மகாபாரத போர் என்பது கௌரவபாண்டவ யுத்தமாகத் தெரிந்தாலும், இதன் உள்ளீடாக தேவர்- அசுர யுத்தமே நடந்துள்ளது.
-ஆர். மகா