Advertisment

கை இரண்டு, கால் இரண்டு கொண்ட வீடு! அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 12 - இரா த சக்திவேல்

/idhalgal/om/house-two-arms-and-two-legs-arunagirinathar-gandhar-alakram-12-ira-tha-sakthivel

பாடல்: 23

"தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே

வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்

ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு

கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து காத்தருளே.'

பொருள்: இறைத்தன்மை வாய்ந்த உயர்ந்த திருச்செங்கோடு மலையில் அருள்பாலிக்கிற மாசற்ற ஜோதியே; கூர்மையான வேலாயுதத்தை கைக்கொண்ட தெய்வமே! உன்னை ஒருபோதும் மறக் கவே மாட்டேன். பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் உணர்தல் ஆகிய ஐம்புலன்கள் எளிதில் வசப்படுத்தத் தோதாக கால்கள் இரண்டையும், கைகள் இரண்டையும் வைத்த வீடு எனும் இந்த உடல், ஐம்புலன்களால் சீர்கெடும் முன்னமே வந்து காத்தருள்கவே.

Advertisment

ss

மாட்டுக்கார வேலன்!

முன்னொரு காலத்தில்... விஷ்ணுவின் பாற்கடல் படுக்கையாக இருக்கிற ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷனுக்கும், வாயுபகவானுக்கும் இடையே "யார் பலசாலி?' என்கிற போட்டி உண்டானது.

தெய்வங்களும், தேவர்களும் வாழும் மேரு மலையை ஆதிசேஷன் பாம்பு தன் உடலால் இறுக்கிக் கொண்டது. அந்தப்

பாடல்: 23

"தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே

வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்

ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு

கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து காத்தருளே.'

பொருள்: இறைத்தன்மை வாய்ந்த உயர்ந்த திருச்செங்கோடு மலையில் அருள்பாலிக்கிற மாசற்ற ஜோதியே; கூர்மையான வேலாயுதத்தை கைக்கொண்ட தெய்வமே! உன்னை ஒருபோதும் மறக் கவே மாட்டேன். பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் உணர்தல் ஆகிய ஐம்புலன்கள் எளிதில் வசப்படுத்தத் தோதாக கால்கள் இரண்டையும், கைகள் இரண்டையும் வைத்த வீடு எனும் இந்த உடல், ஐம்புலன்களால் சீர்கெடும் முன்னமே வந்து காத்தருள்கவே.

Advertisment

ss

மாட்டுக்கார வேலன்!

முன்னொரு காலத்தில்... விஷ்ணுவின் பாற்கடல் படுக்கையாக இருக்கிற ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷனுக்கும், வாயுபகவானுக்கும் இடையே "யார் பலசாலி?' என்கிற போட்டி உண்டானது.

தெய்வங்களும், தேவர்களும் வாழும் மேரு மலையை ஆதிசேஷன் பாம்பு தன் உடலால் இறுக்கிக் கொண்டது. அந்தப் பிடியை விடுவிக்க வாயு அழுத்தம் கொடுத்து வீசியது. இதன் விளைவாக மேரு மலை சில பாகங்களாகச் சிதறியது. அதில் ஒன்றுதான் திருச்செங்கோடு மலை. ஆதிசேஷனின் ரத்தம் தான் இந்த மலை செந்நிறத்தில் தெரியக் காரணம் என புராணக் கதைகள் சொல்கிறது. அதனால் தான் இந்த மலைக்கு "நாக மலை' என பாம்புவைக் குறிக்கும் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த உயர்ந்த மலைக் கோவிலில் சக்தியும், சிவனும் சேர்ந்த வடிவாக "மாதொரு பாகனாக' சிவன் இருந்தபோதிலும் இங்குள்ள செங்கோட்டு வேலர் எனும் முருகன் கோயில் மிகுந்த பெருமை பெற்றது.

காலங்காலமாக இங்கு ஒரு செவிவழிக் கதை சொல்லப்பட்டு வருகிறது.

முருக பக்தரான குணசீலர் என்ற புலவர் கொங்கு மண்டலமான இங்கு வாழ்ந்து வந்தார். முருகன்மீது பாடல் இயற்றுவதே அவரின் கடமையாக இருந்தது. தென்பாண்டி நாட்டு ஊரான ஆழ்வார் திருநகரியில் பயங்கரன் பாண்டிப் புலவரேறு எனும் புலவர் இருந்தார். தன்னைவிட வறிய புலவர்களிடம் எதிர் வாதம் செய்து வம்பு பண்ணுவதே இவருடைய வேலையாக இருந்தது. திருச்செங்கோடு கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தவர் புலவர் குணசீலரைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை வாதத்திற்கு அழைத்தார். வாதத்தில் தோற்றால் அவருக்கு அடிமை சாசனம் எழுதித் தரவேண்டும். இதனால் குணசீலர் மனம் குழம்பி, செங்கோட்டு வேலவரிடம் முறையிட்டார்.

மறுநாள்....

எதிர்வாதம் நடத்த வந்த பாண்டிநாட்டுப் புலவர், மலையடிவாரத்திலிருந்து மலையைப் பார்த்தபடி இதை நாகமலை; சர்ப்ப கிரி என்கிறார்கள். பாம்பு மலை என்றால் இம்மலை படமெடுத்து ஆடாது ஏன்?

சமர முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயிலமென்னில் அமரிற் படம்விரித் தாடாத தென்னை?

-என ஒரு பாடலை ஆரம்பித்து பாடியபடி மலைப்படி ஏற வந்தார். ஆனால் அடுத்தடுத்த வரிகள் அவருக்கு வரவில்லை. அப்போது செங்கோட்டுவேலர் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து...

அஃது ஆய்ந்திலையோ நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாடுயர்ந்த குமரன் திருமருகன் மயில் வாகனம் கொத்தும் என்றே எனப் பாடி அந்தப் பாடலை முடித்தார்.

பாம்பைக் கண்டால் மயில் கொத்தும். இது இயற்கை குணம். இதை வைத்தே "ஆராய்ந்து பார்க்கவில்லையா? முருகனின் வாகனமாகிய மயில் கொத்தும் என்பதால்' (சர்ப்பகிரி படம் எடுத்து ஆடவில்லை) என வேலன் பாடியதுடன், பாண்டிப் புலவருக்கு பதிலும் உரைத்தார்.

மாடு மேய்ப்பவனிடம் இத்தனை அறிவா? என வியந்த வம்புப் புலவர் "நீ யாரப்பா?' என விசாரிக்க; நான் புலவர் குணசீலரின் மாணவர்களில் கடைசி மாணவன் என்று சொன்னாராம்.

"கடைசி மாணவனிடமே இவ்வளவு திறமையா?' என வியந்த வம்புப் புலவர், ஒரு கட்டத்தில் "வந்திருப்பது திருச்செங்கோட்டு வேலர்' என அறிந்து கொண்டு, வணங்கி விட்டுச் சென்றாராம்.

தன்னை நம்பியவரை கைவிடாத திருச்செங்கோட்டு வேலவராகிய முருகனை "என் உடலெனும் வீடு சீர்கெடும் முன்வந்து அருள் தருவாயாக' என அருணகிரியார் பாடியுள்ளார்.

காதோடு சொன்ன ரகசியம்!

பாடல்: 24

"கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன

குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்

சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை

முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே.'

பொருள்: குறிஞ்சி நிலத்து குறிச்சி ஊரின் தலைவரின் மகளை (நம்பிராஜன் மகளான வள்ளியை) திருமணம் செய்யும் முயற்சியுடன், கொம்பு உள்ளிட்ட வாத்தியங் கள் இசைக்க, அன்று குறிச்சி சென்றவனே! என் துன்பத்தையும் நீ உன் மனதில் எண்ணி, அத்துன்பம் போக்கும் வழியை என் காதுகளில் அந்த நாளில் உபதேசித்தாய்.

அந்த ரகசியம் என்னை ஞானமயமாக்கி விட்டது.

அந்த ரகசியம்!

அருணகிரியார் தன் வாழ்வில் பெரும் மனத் துயருக்கு ஆளாகி, திருவண்னாமலை கோபுரத்திலிருந்து தற்கொலை முயற்சியாக, தலைகீழாக குதித்தபோது, அவரின் தலை தரையை அடைவதற்குள் முருகப்பெருமான் தாக்கிப் பிடித்து, காதில் போதனை செய்தார். அதைத்தான் குறிப்பிடுகிறார் அருணகிரியார்.

பொதுவாக துன்பம், துயரம், வேதனை, சோதனை என எத்தகைய வடிவத்தில் சிரமம் வந்தாலும் வடிவேலனின் மலர்ப் பாதங்களைச் சரணடைவது தான் தீர்வு என்பதே அருணகிரியார் குறிப்பிடுவது. (முருகனை வள்ளி சரணடைந்த கந்த புராணக் கதையை ஏற்கனவே குறிப்பிட்டிருக் கிறோம்.)

(பாட்டு வரும்)

Advertisment
om010525
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe