ஆண்மகனை மதிப்பிட குதிரையேற்றம்! - அடிகளார் மு.அருளானந்தம் 43

/idhalgal/om/horsemanship-judge-man-adikalar-marulanandam-43

றிவர் மடத்திற்குள் மீண்டும் பிரவேசிப்போம்...

அறிவர் மடத்தில் கற்றுத்தரப்பட்ட வில் வித்தைகளில் பல படிகள் இருந்துள்ளன. ஒன்று, வில் செய்வதற் கான மரங்களானது, முதல் பயிற்சியிலிருந்து பல படிகளில் வெவ்வேறு மரங்களாக மாற்றப்பட்டன. ஆரம்பப் பயிற்சிக்கு, கல் மூங்கில்களை வளைத்து நாணேற்றி, அதே கல் மூங்கில் குச்சிகளின் முனைகளில் இரும்புத் துண்டுகளைக் கூர்மையாக்கி இணைத்து, அவற்றைப் பயன்படுத்தி நிலையாக இருக்கும்™ குறிகளை இரண்டு காத தூரத்திலிருந்து குறிபார்த்து, அம்பு தைக்கப் பழகித்தருவர்.

விதவிதமான வில் பயிற்சிகள்!

பிறகு, ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகரும் இலக்குகளை, அவற்றின் வேகமறிந்து எய்து வீழ்த்தப் பழகித்தருவர். அதன்பிறகு, ஒரு வாகனத்தில் பயணித்துக்கொண்டே நகரும்- நகரா இலக்குகளை சரியாக அம்பு தைக்கப் பழக்குவார்கள். இதனைத் தொடர்ந்து, குதிரைமீதிருந்து இலக்குகளைத் தாக்கப் பழக்குவார்கள். அடுத்து, தீப்பந்து அம்புகளை எதிரிகள் இருக்கும் நிலைகளைக் கண்ணளவினால் அளந்து, அவற்றினைச் சென்றடையும் வண்ணம் அம்புகளை மேல்நோக்கிப் பிடிக்கும் கோணங்களின் அளவினைக் கற்றுத் தருவார்கள். இவற்றைத் தரையிலும், பின் குதிரைமீதிருந்தும், யானைமீதிருந்தும், கோட்டை மற்றும் மலையுச்சிமீதிருந்தும் எய்வதற்கான கோண அளவுகளைக் கற்றுத்தந்தனர்.

ss

அம்புகளின் நுனியில் பாம்பின் விஷம்!

வில்லின் மீள்தன்மை, அம்புவகை, நாண் ஆகியவற்றின்மூலம் எட்டு வகைகளாகப் பிரித்துக் கற்றுத் தரப்பட்டன. கைகளில் ஏந்தாமல், கோட்டைகளின் உச்சியில் நிலைகளில் பொருத்தப் பட்ட மிகப்பெரிய விற்களிலிருந்து, மூன்றடுக்கு முறைகளில் பாய்ந்து செல்லும் அம்பு களை இயக்கும் திறன்கள் கற்றுத் தரப்பட் டன. குறிப்பாக, இது கோட்டைக் குள்ளிருக்கும் அகப்படை வீரர் களுக்காகக் கற்றுத்தரப்பட்டன. இவற்றின் நாண்கள் காட்டெருமைத் தோலாலும், யானைத் தோலா லும் தயாரிக்கப்பட்டன. போருக் கான வில்களின் நாண்கள் சிங்கங்களின் நரம்புகளால் உருவாக்கப்பட்டன. போருக்கான அம்புகளின் நுனியில் பாசானம் தடவப் பட்டன. பாசானம் என்பது, தற்போது அறிவியலில் சயனைடு என்று சொல்லப்படும் விஷமாகும். இவற்றில் ஒன்பது வகைகள் கையாளப்பட்டன. இவற்றில் மிகக் கொடூரமானவை கார் முகில் பாசானமும் பாம்பின் விஷமுமாகும்.

யானை அம்பாரிகளில் போர்க்கருவிகள்!

மேலும் ஈட்டி எறிதல், ஈட்டி குத்துதல் முதலியவை கற்றுத்தரப்பட்டன. விலங்குகளை யும் பகைவர்களையும் முன்பகுதியில் குத்தி னால் மறுபக்கம் வருமளவுக்கு விசையோடு குத்தும் பயிற்சிகள் தரப்பட்டன. வாள் பயிற்சி கொடுப்பதற்குமுன் சிலம்பப் பயிற்சி கற்றுத்தரப்படும். அதன்பின் நெடுவாள் பயிற்சி, சுருள்வாள் பயிற்சி, குறுவாள் பயிற்சி, குறுவாள் வீச்சு, திருகுவாள் பயிற்சி, மான்கொம்பு, களறிப் பயிற்சி போன்றவை கற்றுத்தரப்படும். இவையனைத் தும் யானையின் மீதமர்ந்து போராடும் வீரர்களுக்குக் கற்றுத்தரப்படும்.

யானையின்மீதுள்ள அம்பாரி களில் ஐவகைப் போர்கருவிகள் வைக்கப் பட்டிருக்கும். போர்ச் சூழலுக்கேற்ப அவற்றினைப் பயன்படுத்தி, 360 பாகை யில் சுழன்று போர்செய்யும் திறன்களைக் கற்றுக்கொடுத்து வந்தனர். பிறகு, கேடயம் தாங்கி அம்புகள், ஈட்டிகள், வாள்கள் தங்கள் மீது தாக்காதவாறு தடுக்கும் பயிற்சிதனை இறுதியாகக் கற்றுத் தந்துள்ளனர்.

உடலுறுப்புகள் செயலிழக்க வர்மப் பயிற்சி!

மல்யுத்தப் பயிற்சியில் முதன்முதலில் தொடுவர்மம் எனப்படும் பயிற்சியைக் கொடுத்தனர். தொடுவர்மம் என்றால், தன் கைவிரல்களால் எதிரியின் உடம்பிலிருக்கும் முக்கிய நரம்புகளைச் சுருளவைத்து, அவர்களின் உடலுறுப்புகளில் செயலிழக்கும் தன்மையை உருவாக்குவது. இதேபோல் எதிரிகள் செய்துவிட்டால், அவற்றை உடனுக்குடன் தானே சரிசெய்யும் முறைகளையும் கற்றுதந்து வந்தனர். இவற்றைக் கற்பதற்குமுன், நம் உடலி-ருக்கும் நரம்பு மண்டலங்களைப் பற்றியும், தசை வகைகள், அவற்றின் தன்மைகள் பற்றியும் கற்றுத்தரப்பட்டன. பிறகு, எதிரிகளின் உடலைத் தன் முதுகினால் தூக்கி தரையில் எளிதாக அடித்து வீழ்த்தும் தந்திர முறைகள் கற்றுத்தரப்பட்டன. ஒரேநபர், தன்னைச் சூழ்ந்திருக்கும் எட்டு நபர்களை சமாளித்து வெளிவருவது இறுதிப் பயிற்சியாக இருந்தது. இது மெய்க் காப்பா ளர்களுக்கும், அரச குடும்பத்தைச் சார்ந் தவர்களுக்கும் கற்றுத் தரப்பட்டன. ஒரு வரைப் பாதுகாப்பதற் காக அவரைச் சுற்றி வட்ட வடிவத்தில் சுழன்று தாக்கும் கோட்ட மல்யுத்தப் பயிற்சிகளை அகப்படையினருக்கு சிறப் பாகக் கற்றுத்தந்தனர்.

போர் வெற்றியை நிர்ணயிக்கும் குதிரைப்படை!

குதிரையேற்றம் என்பது மிகக் கடுமையான மற்றும் முக்கிய பயிற்சியாகக் கருதப்பட்டது. ஆதிகாலத்தில் குதிரையேற்றம் பழகிய இளைஞர்களின் அடித்தொடைகள் இறுகிக் கண்ணிப்போகாமல் இருந்தால், அவர்கள் ஆண்மகனாக மதிக்கப்படமாட்டார்கள். அந்த அளவுக்கு குதிரையேற்றப் பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஒரு போரில் வெற்றி- தோல்விகளை நிர்ணயம் செய்வது குதிரைப் படையின் அளவாகும். எந்த மன்னனிடம் குதிரைப் படைகள் அதிகமாக உள்ளதோ, அவனே போரில் வெற்றிவாகை சூடுவான் என்பது மரபு. குதிரைப் படையின் அளவைப் பெரிதாக்குவதற்காக, தன்னுடன் நட்புறவோடிருக்கும் அரசர்களின் குதிரைப் படைகளையே ஒரு மன்னன் கேட்டு வாங்குவான்.

ss

அக்காலத்தில் போக்கு வரத்து சாலைகளற்ற இடங் களிலும், மேடுபள்ளங்கள் நிறைந்த கானகப் பகுதிகளிலும் பயணம்செய்து எளிதாகக் கடந்துசெல்ல குதிரைகள் மட்டுமே பயன்பட்டன. விரைவாகச் செல்லவேண்டிய பயணங்களுக்கும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. அதேபோல், போர்க் காலங்களில் நீண்ட தூரப் பயணங்களுக்காக குதிரைகள் பயன்பட்டன. அரபு நாடுகளிலிருந்து தமிழகத் துறைமுகங்களில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றின் குணங்களையும் தன்மைகளையும் வியாபாரி கள் நன்கு விளக்கிக் கூறியே வியாபாரம் செய்வார்கள். அவற்றை குதிரை வாங்குபவர் கள் நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள். இருந்தபோதிலும் போருக்காகப் பயன் படுத்தப்படும் குதிரைகளுடன் ஒரு வருடகாலம் பழகி, அவற்றின் விருப்பு- வெறுப்பு, எதனைக் கண்டால் வெறிக்கும் என்பதையெல்லாம் தெரிந்து பயிற்சியளிப்பார்கள். குதிரைகளுக்கு மென்நடை, நன்நடை, வன்நடை, கால் பாய்ச்சல், இருகால்களைத் தூக்கி எதிரிகளை மிதித்தல், மலையேற்றம், மலையிறக்கம், நீரோட்டம், பள்ளம் கண்டு அஞ்சாமை, யானை, புலி, கரடி இவற்றின் உருமல் கேட்டு அஞ்சாமை, சங்கு, தாரை, தப்பட்டை இவற்றின் ஒலிகேட்டு மிரளாமை, நெட்டோட்டம், வலஞ்சுழி, இடஞ்சுழி யோட்டம், சுழியோட்டம், மறியோட்டம் போன்றவை கற்றுக்கொடுக்கப்படும்.

கடிவாளம் ஒருகையில்; உடைவாள் மறுகையில்!

ஒரு குதிரைக்குப் பயிற்சி தந்த பயிற்சியாளன் அல்லது குதிரைவீரன் ஆகியோரைத் தவிர வேறு யாரும் அதன் முதுகில் ஏறிவிடமுடியாது. குதிரையேற்றப் பயிற்சியென்பது ஒரு கடினமான செயல். குதிரைப் பயணத்தில் கைகள் பற்றிகொள்ள எதுவுமிருக்காது. குதிரையின் முதுகிலமர்ந்து, தன்னை ஒவ்வொரு நொடியும் புவியீர்ப்பு மையத்தோடு சமநிலைப் படுத்திக்கொண்டேயிருப்பது கடினமான செயல். குதிரை ஓடத் தொடங்கியதும், அதன் முதுகில் ஏற்படும் ஏற்ற- இறக்கத் துள்ளலுக்கு ஏற்றாற்போல் அமர்ந்தும் எழுந்தும், அது இடப்புறம், வலப்புறம் வளைந்து வளைந்து செல்லும்போது குதிரையிலிருந்து சரிந்து விழாமலிருப்பதற்கு தன் கால்களால் மட்டுமே குதிரை வீரர்கள் குதிரையை அணைத்து தன்னை நிலைநிறுத்தவேண்டும். குதிரையின் கடிவாளத்தை ஒருகையிலும், உடைவாளை மறுகையிலும் பிடித்துப் போர் செய்வதென்பது ஒரு வருடகாலப் பயிற்சிக்குப் பின்புதான் கைகூடும்.

மரணிக்கும் தறுவாயிலும் கடமையாற்றும் குதிரை!

மலைப்பகுதிகள் மற்றும் கானகப் பகுதிகளில் குதிரைப் பயணம் மேற்கொள்ளும்போது குதிரை செல்லும் வேகத்தைப் பொருத்து, தனக்கு முன்னால் நூறடி தூரத்திலிருக்கும் பொருள்களை கவனித்து குதிரையைச் செலுத்தவேண்டும். வேகம் அதிகரிக்க அதிகரிக்க, 200 மற்றும் 300 அடி தூரத்திலிருக்கும் மரம், செடி, கொடிகளைப் பொருத்து குதிரையை ஓட்டவேண்டும். ஒரு குதிரைப் பயிற்சியில், குதிரையின் மூச்சின் கதியும், குதிரைப் பயிற்சியாளர்- அதாவது குதிரை வீரனின் மூச்சின் கதியும் ஒன்றாக இருக்கும் நிலை ஏற்பட்டபின், குதிரையானது தன் பயிற்சியாளனுக்கு உற்ற நண்பனாகவும், அவனைப் பாதுகாக்கும் தந்தையாகவும் மாறிவிடும். எவ்வாறெனில், போர்க்காலத்தில் தன் குதிரை வீரன் களைப்புற்றுச் சோர்வடை யத் தொடங்கிவிட்டான் என்பதை அறிந்து கொள்ளும். அந்நிலையிலோ அல்லது குதிரைமீதுபட்ட உடல் காயங்களால் தான் மரணிக்கப் போகிறோம் என்பதை அறிந்தோ, தன் முதுகில் அமர்ந்திருக்கும் தன் தலைவனை அவனது ஆட்கள் நிறைந்த பகுதிக்குக் கொண்டுசென்று இறக்கிவிட்டே உயிர்துறக் கும். இதற்காகத்தான் ஒரு நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடை அமைப்பை உருவாக்கி, அவ்வாடை அமைப்புடையவர்கள் தன் தலைவனின் இனத்தைச் சேர்ந்தவர்கள் என குதிரைகள் புரிந்துகொள்ளும் விதத்தில் குதிரைகளுக்குப் பயிற்சியளித்திருப்பார்கள்.

குதிரைப் பயணத்தில் பரிவாகடம் அவசியம்!

ஒரு குதிரைப் படையில் நீண்டதூரப் பயணத்தின்போது, இடப்பக்கம் பெண் குதிரை களையும், வலப்பக்கம் ஆண் குதிரைகளையும், நடுவே இனப்பெருக்கத் தடைக்கான பொருட்களை சுமக்கக்கூடிய குதிரைகளையும் செலுத்துவார்கள். இவ்வாறில்லாமல், பெண் குதிரைகளையும் ஆண் குதிரைகளையும் பக்கம் பக்கமாகப் பயணிக்கவிட்டால் இரண்டும் சேர்ந்து திசைமாறி குளறுபடியாக்கிவிடும். முன்செல்லும் குதிரைகளில் செல்பவர்களில் அனுபவமானவர்கள் இருந்தால், அவர்களைப் பின்தொடரும் குதிரைகள், அவர்களைப் பின்பற்றி சீரான முறையில் சென்றுகொண்டே இருக்கும். இரண்டாயிரம் குதிரைகள் செல்லும் பயணமாக இருந்தாலும், வரிசை மாறாமல் செல்லும் இயல்புடையவை குதிரை இனம். குதிரையேற்றப் பயிற்சியின்போதே குதிரைக்கு வரும் நோய்களைப் பற்றியும், அவற்றைப் போக்கும் மருந்து வகைகளையும் குதிரை வீரர்களுக்குக் கற்றுத்தருவார்கள். இத்துறைக்கு "பரிவாகடம்' என்று பெயர். இவற்றில் குறிப்பிடப்படும் அனைத்து மருந்து வகைகளையும், நீண்டதூர குதிரைப் பயணத்தின்போது உடனெடுத்துச் செல்ல வேண்டுமென்பது ஆதிகால மரபு. ஏனெனில், குதிரைப் பயணமென்பது 1,000 மைல் தூரமுடையதாக இருக்கும். தான் செல்லும் குதிரை பாதுகாப்பானதாக இருந்தால்தான் நலமுடன் வீடுவந்து சேர இயலும். அதனால் பரிவாடகம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

யானைக்குப் பெயர் சூட்டல் திருவிழா!

வேள வனப்பு என்பது யானைகளைப் பற்றிய முழு அறிவியலாகும். ஒரு கானகப் பகுதியிலிருந்து, யானைக் கூட்டங்களிலிருந்து, ஓராண்டு முதல் மூன்றாண்டு நிறைவுற்ற யானைக் குட்டிகளை எப்படி பிடித்துவருவது, அதனை யானைக் கொட்டத்தில் அடைத்து நாட்டு யானைகளுடன் சேர்ந்து எவ்வாறு பழகவிடுவது என கற்றுக்கொடுப்பார்கள். இவ்வேலையை செய்வதற்காகவே ஒரு இனம் ஆதிகாலத்தில் இருந்தது. பின், பெண் யானை, ஆண் யானைகளின் பருவ குணங்கள், யானை யின் கூரிய அறிவாற்றல், நினைவுக்கூர்மை ஆகியவற்றைக் கற்றுத்தருவார்கள். பிடித்துவரப்பட்ட யானைக்குப் பெயர் சூட்டல் திருவிழா நடைபெறும். அத்திருவிழா வில் யானைகளுக்குப் பிடித்தமான காட்டுத் தீவணங்களும், நாட்டுச் சுவைமிக்க உணவுக் கவளங்களும் பலநூறு பேர்களிடம் கொடுக்கப் பட்டு, அந்த யானைக்குச் சூட்டப்பட்ட பெயரைச் சத்தமாகக் கூறிக்கூறி அப்புதிய யானைக்குக் கொடுப்பார்கள். அது பல நாட்கள் நடைபெறும். யானையிடம் அன்பாகப் பழகி உணவுகொடுப்பதால், அப்பெயர் சொன்னதும் அந்த யானை தலையை ஆட்டத் தொடங்கும்.

நாமும் பின்தொடர்வோம்...

om010922
இதையும் படியுங்கள்
Subscribe