Advertisment

அவனே பரம்பொருள்! - யோகி சிவானந்தம்

/idhalgal/om/he-substance-yogi-sivanandam

வநம்பிக்கை, அதீத நம்பிக்கை, நம்பிக்கை ஆகிய மூன்றில் ஒரு மனிதனுக்கு எதுவேண்டும்? "தன்னம்பிக்கை' ஒன்று மட்டுமே வேண்டும். ஏனென்றால் தன்னம் பிக்கை என்பது உயிரைப் போன்றது. அவ நம்பிக்கையும், அதீத நம்பிக்கையும் மரணத்தைப் போன்றது. தன்னம்பிக்கை பற்றி தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்.

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.'

Advertisment

ஒன்றின்மீது விருப்பமோ வெறுப்போ இல்லாத- எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்களுக்கு எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்தக் காலத்தி லும் துன்பம் என்பது துளியும் இல்லை.

இதுபோன்று சிவபெருமான்மீது இடைவிடாத பக்திகொண்டிருந்த ஒரு பக்தனின் தன்னம்பிக்கை யைப் பற்றிக் காணலாம்.

முன்பொரு காலத்தில் சோழவள நாட்டில் கஞ்சபுரம், கஞ்சபுரி எனும் ஊர் அமைந்திருந்தது. (தற்போது கும்பகோணத்திற்கும் மயிலாடுதுறைக் கும் இடையிலுள்ள திருக்கஞ்சனூர் எனும் கஞ்சனூர்).

Advertisment

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு கஞ்சனூரில் ஒரு தெருவில் சைவர்களும், மற்றொரு தெருவில் வைணவர்களும் வாழ்ந்துவந்தனர். வைணவர்களுக்கு வாசுதேவர் எனும் பிராமணர் ஆச்சார்ய ராக இருந்தார். அவர் மகாவிஷ்ணு விடம் மாறாத பக்தி கொண்டவராகத் திகழ்ந் தார். மகாவிஷ்ணுவே தனக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென்று எண்ணினார்; தவமிருந்தார்.

அவரைப்போலவே அடுத்த தெருவில் வசித்து வந்த சைவப் பிராமணரும் சிவபக்தரருமான சுப்ர தீபர் தனக்கு மகாலட்சுமி யைப்போல் ஒரு மகள் வேண்டித் தவமியற்றினார்.

ssa

இவர்களின் தவத்திற்கிணங்க வாசுதேவருக்கு சுதர்சனன் என்னும் மகன் பிறந்தான். சுப்ரதீபருக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள். வைணவரான வாசுதேவர் தன் மகன் சுதர்சனனுக்கு திருமண் இட்டுத் துளசிமாலை அணிவித்து

வநம்பிக்கை, அதீத நம்பிக்கை, நம்பிக்கை ஆகிய மூன்றில் ஒரு மனிதனுக்கு எதுவேண்டும்? "தன்னம்பிக்கை' ஒன்று மட்டுமே வேண்டும். ஏனென்றால் தன்னம் பிக்கை என்பது உயிரைப் போன்றது. அவ நம்பிக்கையும், அதீத நம்பிக்கையும் மரணத்தைப் போன்றது. தன்னம்பிக்கை பற்றி தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்.

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.'

Advertisment

ஒன்றின்மீது விருப்பமோ வெறுப்போ இல்லாத- எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்களுக்கு எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்தக் காலத்தி லும் துன்பம் என்பது துளியும் இல்லை.

இதுபோன்று சிவபெருமான்மீது இடைவிடாத பக்திகொண்டிருந்த ஒரு பக்தனின் தன்னம்பிக்கை யைப் பற்றிக் காணலாம்.

முன்பொரு காலத்தில் சோழவள நாட்டில் கஞ்சபுரம், கஞ்சபுரி எனும் ஊர் அமைந்திருந்தது. (தற்போது கும்பகோணத்திற்கும் மயிலாடுதுறைக் கும் இடையிலுள்ள திருக்கஞ்சனூர் எனும் கஞ்சனூர்).

Advertisment

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு கஞ்சனூரில் ஒரு தெருவில் சைவர்களும், மற்றொரு தெருவில் வைணவர்களும் வாழ்ந்துவந்தனர். வைணவர்களுக்கு வாசுதேவர் எனும் பிராமணர் ஆச்சார்ய ராக இருந்தார். அவர் மகாவிஷ்ணு விடம் மாறாத பக்தி கொண்டவராகத் திகழ்ந் தார். மகாவிஷ்ணுவே தனக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென்று எண்ணினார்; தவமிருந்தார்.

அவரைப்போலவே அடுத்த தெருவில் வசித்து வந்த சைவப் பிராமணரும் சிவபக்தரருமான சுப்ர தீபர் தனக்கு மகாலட்சுமி யைப்போல் ஒரு மகள் வேண்டித் தவமியற்றினார்.

ssa

இவர்களின் தவத்திற்கிணங்க வாசுதேவருக்கு சுதர்சனன் என்னும் மகன் பிறந்தான். சுப்ரதீபருக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள். வைணவரான வாசுதேவர் தன் மகன் சுதர்சனனுக்கு திருமண் இட்டுத் துளசிமாலை அணிவித்து மகிழ்ந்தார்.

ஆனால் சுதர்சனனோ அதீத சிவபக்தனாக இருந்தான். தெருவில் விளையாடும்போது யாரேனும் சிவனடியார்களைக் கண்டால் தனது நாமத்தை அழித்துவிட்டு அவர்களிடம் திருநீறு வாங்கிப் பூசிக்கொண்டு, துளசிமாலையைக் கழற்றிவிட்டு ருத்ராட்ச மாலையை வாங்கி அணிந்துகொள்வான். இது தொடர்கதையாக இருந்தது. இதைக்கண்டு கோபமடைந்த வாசுதேவர் தன் மனைவியிடம், ""இவன் நம் குலத்துரோகி. இவனுக்கு இனி சோறு போடாதே'' என்று கூறி சிறுவன் சுதர்சனனை அடித்து வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்.

சிறுவனோ மனம் தளராமல் அக்னீஸ்வரர் ஆலயம் சென்று சிவபெருமானிடம் தஞ்சமடைந்தான். சிவபெருமானையும் அம்பிகையையும் வலம்வந்து வணங்கினான். அங்கேயே தியானத்தில் ஆழ்ந்துவிட்டான். தியானம் கலைந்து எழுந்தபோது இரவாகிவிட்டது. அர்ச்சகர்கள் கதவைப் பூட்டிச் சென்றுவிட்டனர். எம்பெருமானே கதி என்று அரற்றினான். அளப்பரிய கருணையாளனான எம்பெருமான் குடும்ப சமேதராகக் காட்சியளித்து, ""வேண்டிய வரத்தைக் கேள்'' என்றார். சிறுவன், ""இறைவா தங்களின் பாதக்கமலங்களைப் பிரியாதிருக்கும் வரம் வேண்டும்'' என்றான். ""நீ சகல சாஸ்திரங்களிலும் தேர்ச்சிபெறும்படி அருள்பாலிக்கிறேன்'' என்றார். ஆனால் திருப்தியடையாத சுதர்சனன், ""எத்தனை சாத்திரங்களைப் படித்தாலும், கல்வி கேள்விகளில் தேர்ச்சிபெற்றாலும் அதன் பயன் தங்களை முழுமையாக அறிவதுதானே. எனக்கு சாத்திர ஞானம் வேண்டாம். தங்களை நேரில் கண்டதே நான்பெற்ற மகாபாக்கியம்'' என்றான். இப்போது சிவபெருமான் சுதர்சனனை வேண்டும் நிலை வந்துவிட்டது.

""குழந்தாய்... நீ இந்த உலகத்தில் சிவத்தொண்டு புரிந்து வைணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சிவத்தின் பலனை போதித்து புகழோடு வாழ்ந்துவருவாயாக. காலக்கிரமத்தில் எம்மோடு உம்மை அழைத்துக்கொள்கிறேன்'' என்று ஆசி வழங்கி, ""நீ உன்னு டைய உடல், பொருள், ஆவி மூன்றையும் எமக்கு தத்தம் செய்துகொடு'' என்று கூறினார். சிறுவன் சுதர்சனனும் சிறிதும் தயங்காமல் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தத்தம் செய்து கொடுத்தான். அப்போது சிவபெருமான், ""இன்றுமுதல் நீ ஹர தத்தன் எனும் திருநாமத்தோடு விளங்கு வாயாக'' என்றருளி, தனது மலர்க்கரங் களால் திருநீறு அளித்து, ருத்ராட்ச மாலை அணிவித்து, ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, ஸ்படிக லிங்கத்தைக் கொடுத்து, சிவபூஜை விதிகளை உபதேசித்தார்.

தாயை சந்தித்தான் சுதர்சனன்.

மகனைக் கண்ட தாய் அகம் மகிழ்ந் தாள். தான் தன்னை இறைவனுக்குத் தத்தம் கொடுத்ததையும், அதன்காரண மாக தனக்கு சிவபெருமான் "ஹரதத்தர்' எனும் திருநாமம் சூட்டி தீட்சை அளித்ததையும் தாயிடம் கூறினான்.

சிவக்கோலத்தோடும், கையில் சிவலிங்கத்தோடும் தன் மகனைக் கண்ட வாசுதேவர், "குலத்துரோகியே, ஒரு கணமும் உனக்கு வீட்டில் இடமில்லை... வெளியே போ...'' என்று விரட்டினார்.

""ருத்ராட்சம் அணிந்து, திருநீறு பூசுவது வைணவக் குலத்துரோகமா? அப்படியென்றால் முன்பொருசமயம் திருவீழிமிழலையில் மகாவிஷ்ணு விபூதி தரித்து, ருத்ராட்சம் அணிந்து, தனது கண்ணையே தாமரை மலராக அர்ச்சனை செய்து வழிபட்டதை நீங்கள் அறியவில்லையா? அப்படி யெனில் மகாவிஷ்ணுவும் வைணவக் குலத்துரோகியா?'' என்று கேட்டான் ஹரதத்தன்.

தந்தைக்கும் மகனுக்கும் நடந்த விவாதத்தைப் பார்த்து தெருவாசிகள் கூடிவிட்டனர். வைணவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் புராணம், உபநிஷதம், வேதம் என்று பல நூல்களி லிருந்து உதாரணத்துடன் விளக்கம் அளித்தான் ஹரதத்தன்.

அவ்வூரிலுள்ள வைணவ பிராம ணர்கள் ஒன்றுகூடி, "இச்சிறுவனை இப்படியே விட்டுவிட்டால் வைணவ சமயமே அழிந்துபோகும்' என்று சிறுவனை ஒழித்துவிட சூழ்ச்சி செய்தனர்.

""சிறுவனே... நீ இப்படி வெறும் வாயால் சிவபெருமானை நேரில் பார்த்தேன் என்பதை யெல்லாம் நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம். நன்றாக பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்து, கைகூப்பி மூன்றுமுறை சத்தியம் செய்தால் மட்டுமே நாங்கள் நம்புவோம். அதுமட்டுமல்ல; நாங்கள் யாரும் சிவன் கோவிலுக்கு வரமாட்டோம். இங்கே அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் சந்நிதியில் நாங்கள் தீ வளர்க்கிறோம்'' என்றனர்.

இதனை தலைவணங்கி ஏற்றுக்கொண்ட ஹரதத்தன் நீராடி, திருநீறுபூசி, ருத்ராட்சம் அணிந்து ஆத்மார்த்தமாக சிவபூஜையை முடித்து அக்னீஸ்வரரையும், அன்னை கற்பகாம்பாளையும் வணங்கினான்.

அதன்பிறகு வரதராஜப் பெருமாள் சந்நிதிக்கு வந்தான். அங்கே நெருப்புக்குழியும், அதன்மீது இரும்பு முக்காலியும் தகதகவென தகித்தது. ஹரதத்தன் வரதராஜப் பெருமாளை நோக்கி, ""பெருமாளே, நீவீர் சக்கரம் பெறுவதற்கு கண்மலரிட்டு சிவனை வழிபட்டதாலும், இராமனாக அவதரித்தபோது இராமேஸ்வரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதா லும், கிருஷ்ணாவதாரத்தில் உபமன்ய முனிவரிடம் சிவதீட்சைப் பெற்று சிவபூஜை செய்ததாலும் தாங்களும் ஒரு சிவனடியார் ஆவீர். உம்மை வணங்குகிறேன். நான்கு வேதங் களுக்கும், புராணங்களுக்கும், அண்டசராசரங் களுக்கும் முக்கண்ணன் சிவனே பரம்பொருள் என்பது உண்மையானால் இந்த நெருப்புக்குழி பொய்கையைப்போல குளிரட்டும். இங்குள்ள இரும்பிலான மழுமுக்காலியும் தாமரை மலர்போல் குளிரட்டும்'' என்று கூறியபடி தீக்குழியில் இறங்கி மழுமுக்காலியில் ஏறி அமர்ந்தான் ஹரதத்தன்.

சிவபெருமானே பரம்பொருள் என்பதை உறுதிப்படுத்த இரண்டு கரங்களையும் உயர்த்தி சிவபரத்துவ சுலோகங்களையும், நான்கு வேதங்களிலுள்ள இருபத்திரண்டு காரணங்களுடன்கூடிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் பாடினான். தேவதுந்துபிகள் முழங்கின. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

அங்கு கூடியிருந்த சைவர்களும் ஊர்மக்களும் "ஹரஹர மகாதேவா' என்று விண்ணதிர முழங்கினர். தீக்குழியிலிருந்து எழுந்துவந்த ஹரதத்தனை மக்களும் வைணவர்களும் வீழ்ந்து வணங்கினார்கள். தூற்றியவரெல்லாம் உளமாரப் போற்றினர்.

தனது மகனிடம் வெளிப்பட்ட ஞானப் பிரவாகத்தைக் கண்டு தந்தை வாசுதேவரும் வணங்கினார். தனக்கும், மற்றுமுள்ள வைணவர் களுக்கும் சிவதீட்சை செய்துவைக்கும்படி வேண்டினார்.

ஹரதத்தர் உலகே வியக்கும்படி பல அற்புதங்களைச் செய்தார். ஒருநாள் சிவபெரு மான் உமையொருபாகனாக இடபத்தில் ஏறிச் சிவகணங்கள் புடைசூழ ஹரதத்தருக்குக் காட்சி கொடுத்தார். ""ஹரதத்தா, உமக்கு இப்போது கயிலாய பதம் தந்தோம்'' என்றார். அதன்பின் ஹரதத்தர் கயிலாயத்தில் இறைவன் ஈஸ்வரனோடு இரண்டறக் கலந்தார்.

ஹரதத்தர் எழுதிய "ஹரஹரதாரதம்மியம்' எனும் நூல் "சிவனே பரம்பொருள், அவனே சகலமும்' என்பதை விளக்குகிறது. அதுமட்டு மல்லாமல் அவர் எழுதிய "சுலோக பஞ்சக விஷயம்' எனும் நூலில் நான்கு வேதங்களிலுள்ள இருபத்திரண்டு சுலோகங்களிலும் "எங்கும் சிவம், எதிலும் சிவம், எல்லாம் சிவம்' என்பதை ஆதாரங்களோடு விவரித்துள்ளார்.

தன்னம்பிக்கையின் உச்சமான ஹரதத்தரைப் பார்த்தோம். திருமூலர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்போம்.

"அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றி செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.'

சிவப்பரம்பொருள் இல்லாமல் தேவர்கள் இல்லை. சிவனருள் இல்லாமல் செய்யப்படும் மேலான தவமென்று எதுவுமில்லை. சிவ பெருமானின் அருட்துணை இல்லாமல், ஆக்கல், அழித்தல், காத்தல் எனும் முத்தொழிலையும் செய்யும் பிரம்மன், திருமால், உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளாலும் எதுவும் செய்ய இயலாது. சிவனருள் இல்லாமல் விண்ணுலக வாழ்வடையும் வழியையும் எவராலும் அறியமுடியாது. நானும் அறியேன்.

அண்டமெல்லாம் சிவம்... அருட்பேராற்றல் எனும் கருணையாளனே சிவம்... அன்பே சிவம்!

om011019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe