Advertisment

முருகப்பெருமான் அருள் பாவித்த அனுமன் தீர்த்த திருத்தலம்! - முனைவர் இரா.இராஜேஸ்வரன்

/idhalgal/om/hanuman-theertha-temple-where-lord-muruga-has-graced-dr-irarajeswaran

"இராமருக்கும், இராவணனுக்கு மிடையே மிகத்தீவிரமாக போர் நடந்து கொண்டு இருந்த சமயத்தில் இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் இராமரின் படையி னர் உயிர் இழக்க நேரிட்டது. அதிலும் குறிப்பாக லட்சுமணனும் இறக்க நேரிட்டது.

Advertisment

தம்பி உட்பட பலர் இறந்ததால் இராமர் மிகவும் மனம் கலங்கி சோகமாக போர்க் களத்தில் இருந்தார்.

Advertisment

இந்த சோகக் காட்சியைக் கண்ட விபீஷணன், மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசனை செய்ய அனுமனுடன் ஜாம்பவானை போர்க் களத்தில் தேடினான். காரணம் ஜாம்பவான் கரடிகளின் படைக்குத் தலைவன். எந்த காரியத்தையும் சலிக்காமல் சட்டென சரியாக செய்து முடிக்கும் தனித்திறமை கொண்டவன் என்பதால் அவனைத்தேடி விபீஷணன் சென்றான். நிலமையை உணர்ந்த ஜாம்பவான் இறந்த படை வீரர்களை உடனடியாக பிழைக்கவைக்க தன் மனதில் பட்டதை சட்டெனச் சொன்னான்.

dd

அதாவது வடக்கே பல ஆயிரம் கல் தொலைவில் இருக்கும் மருத்துமலை (சிரஞ்சீவி மலை)யில் வளரும் அற்புத மூலிகை இலையைப் பறித்துவந்து இறந்த படையினரை பிழைக்கவைப்பது என்பது தான் திட்டம்.

மருத்து

மருத்துமலை என்பது இமயமலைக்கு அடுத்தடுத்து இருக்கும் ஏமகூடமலை, நிடதமலை, மேருமலை, நீலகிரிமலை அப்பால் இருக்கும் அற்புதமான மலை. இம்மலையில்,

"மாண்டாரை உய்விக்கும் மருந்தொன்றும்

உடல்வேறு வகிர்க ளாகக்

கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்,

படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்,

மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர்

மெய்ம்மருந்தும், உள; நீ, வீர!

ஆண்டு ஏகிக் கொணர்தி என

அடையாளத்தொடும்

உரைத்தான், அறிவின் மிக்கான்''.

என கம்பர் சொன்னது வண்ணம் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவ கரணி மூலிகைச் செடியும், உடம்பு கூறுகளை ஒன்று படச் செய்யும் சந்தான கரணி மூலிகைச் செடியும், உடம்பின் உள்ளே சென்று படைக் கருவிகளை வெளிப் படுத்த விசல்லிய கரணி மூலிகைச் செடியும், உருவழிந்த உடம்பை மீண்டும் பழைய வண்ணம் உருவம்பெற சாவருணிய கரணி மூலிகைச் செடியும் வளருகிறது. இந்த மூலிகைச் செடியின் மகிமையை விளக் கிய ஜாம்பவான் குறித்த நேரத்தில் காலம் தாளாமல் மூலிகைச் செடியின் இலை களை தனித்தனியாகக் கொண்டு வருமாறு புத்தி மான் அனுமனிடம் சொல்லி விரைவில் வானவெளி வழி யாக வடக்கே செல்லுமாறு அனுமனிடம் சொல்லி விரை வில் வானவெளி வழியாக வடக்கே செல்லுமாறு துரிதப்படுத்தினான்.

விபீஷணன், ஜாம்பா வனின் கட்டளையை ஏற்று மனதில் தன்னுடைய நாதன் இராமனை வேண் டிக்கொண்டு விண்ணில் பறந்தான். வாயு குமாரன் அனுமன் குறுகிய காலத்தி லேயே இமயமலையை அடுத்து இருக்கும் ஒவ்வொரு மலையையும் கடந்து கடைசியாக மருத்து மலையை அடைந்தான்.

மருத்துமலையில் பல்வேறு வகையாக மூலிகைச் செடிகள் இருந்ததால் எதைப் பறிப்பது என்கிற குழப்பம் ஏற்படவே நேரம் வீணாகக்கூடாது என்பதால் செடிகளைப் பார்த்து ஒவ்வொன்றாக பறிப்பதற்குப் பதிலாக அந்த மருத்துமலையையே தன் கைகளால் அசைத்து அப்படியே பெயர்த்து எடுத்துச் செல்ல முயற்சி செய்தான். அதீத பலமும், புத்திக் கூர்மையும் உடைய அனுமன் அந்த மருத்துமலையை ஒரு கையில் ஏந்தி வானவெளியில் வேகமாகப் பறந்து வந்தான். இந்த நிகழ்வை கம்பர் தன் பாடலில்,

"ஆயிரம் யோசனை யகன்று மீதுயர்ந்

தாயிரம் யோசனை யாழ்ந்த தம்மலை

ஏயெனு மாத்திரத் தொருகை யேந்தினான்

தாயின னுலகொலந் தவழ்ந்த சீர்த்தியான்.''

எனப் பாடியுள்ளார்.

பலசாலியான அனு மன் ஒரு பெரிய மலை யையே ஒரு கையால் தாங்கி போர்க்களத் திற்கு விரைவாக வான் வெளியில் வரும்போது வழியில் பயணக் களைப்பால் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. வானவெளியில் பறந்து கொண்டு இருக்கும்போது தண்ணீர் குடிக்க வழியில்லாத காரணத்தால் முருகப்பெருமானை மனதார வேண்டி இதற்கு உதவுமாறு வேண்டினார். புனித காரியத்திற்கு செல்லும் அனுமாரின் பயணம் தங்கு தடையின்றி சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதற்காக தன்னுடைய கூரான வேலால் ஒரு மலையை குத்த அதிலிருந்து தண்ணீர் மிகுந்த வேகத்துடன் வானை நோக்கி சீறிப் பாய்ந்தது. சுவையான அந்தத் தண்ணீரைக் குடித்து தாகத்தையும், களைப்பையும் அனுமன் போக்கிக்கொண்டார். இந்தச் செய்தியை இராம காதையின் உபகதைகளின் மூலம் அறியலாம்.

அனுமனின் தாகத்தைத் தீர்க்க தன் வேலால் குத்திய இடம்தான் இன்றைய கோவை மாவட்டத்தில் இருக்கும் அருள்மிகு அனுவாவி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.

அனுமனின் தாகம் தீர்க்க தனது வேலால் குத்தி நீர் ஊற்று ஏற்படுத் தியதால் அனு (அனுமன்) வாலி (ஊற்று) எனப் பெயர் பின்னாளில் ஏற்பட்டது. இந்த சிறிய மலையில் (500 படிக்கட்டுகள்) மூலவராக வள்ளி- தெய்வானை சமேதராக ஸ்ரீ சுப்ரமணியர் காட்சி யளிக்கிறார்.

அருகே அனுமனுக்கு தனிசந்நிதி உள்ளது. இச்சந்நிதிகளுக்கு மேலே சுமார் 25 படிக்கட்டு கள் ஏறிச்சென்றால் ஒரு சிவன் சந்நிதி உள்ளது. சிவன் கோவிலுக்கு போகும் வழியில், முருகனின் வேலை பக்தர்கள் வழிபடு கிறார்கள். அந்த வேல் இருக்குமிடத்தில் தான் அன்று முருகப் பெருமான், தனது வேலால் மலையை குத்த தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது. வேலுக்கு பின்புறம் இன்றும் தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது.

முருகப்பெருமானால் ஏற்படுத்தப்பட்ட ஊற்று (அனுமன் தீர்த்தம்) இன்று வரை வற்றாது நீரை சுரந்துகொண்டே இருப்பது தான் அதிசயம். மலை ஊற்று நீரானது மலை யைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இன்றும் குடிநீராக பயன்பட்டுவருகிறது.

வரலாற்று சிறப்பும், பெருமையை யும்கொண்ட இக்கோவில் கோவை நகரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சம் பசுமையான மலைத்தொடரில், புகழ்பெற்ற மருதமலைக்கு அருகே அமைந்துள்ளது.

om010224
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe