Advertisment

குருவாய் வருவாய் குகனே! - மும்பை ராமகிருஷ்ணன்

/idhalgal/om/guruvay-revenue-kugane-mumbai-ramakrishnan

வைகாசி விசாகம் 12-6-2022

று சிவ ஜோதிகளை வாயுவும் அக்னியும் ஏந்தி கங்கையிலிட, கங்கை சரவணப் பொய்கையிலிட அவை ஆறு குழந்தைகளாயின. கார்த்திகை மாதர் பாலூட்ட, உமையும் சிவனும் அங்கு வர, உமை அழைக்க, குழந்தைகள் வர, அனைவரையும் அவள் அணைக்க, ஆறுமுகம், பன்னிரு கரங்கள், ஓருடல் என சண்முகனானான்.

Advertisment

ஆக, சிவகுமாரன், உமை மைந்தன், வாயு குமாரன், அக்னிபூர், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், கந்தன் (ஒன்று சேர்ந்தவன்) என பல பெயர்கள் அவனுக்குண்டு. அழகான உருவம் உடையவன் என்பதால் அவன் முருகன். இவ்வாறு முருகன் அவதரித்த தினம் வைகாசி விசாகமாகும். கச்சியப்ப சிவாச்சாரியார் இந்த அவதார நிகழ்வை இவ்வாறு புகல்வார்:

"அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங

வைகாசி விசாகம் 12-6-2022

று சிவ ஜோதிகளை வாயுவும் அக்னியும் ஏந்தி கங்கையிலிட, கங்கை சரவணப் பொய்கையிலிட அவை ஆறு குழந்தைகளாயின. கார்த்திகை மாதர் பாலூட்ட, உமையும் சிவனும் அங்கு வர, உமை அழைக்க, குழந்தைகள் வர, அனைவரையும் அவள் அணைக்க, ஆறுமுகம், பன்னிரு கரங்கள், ஓருடல் என சண்முகனானான்.

Advertisment

ஆக, சிவகுமாரன், உமை மைந்தன், வாயு குமாரன், அக்னிபூர், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், கந்தன் (ஒன்று சேர்ந்தவன்) என பல பெயர்கள் அவனுக்குண்டு. அழகான உருவம் உடையவன் என்பதால் அவன் முருகன். இவ்வாறு முருகன் அவதரித்த தினம் வைகாசி விசாகமாகும். கச்சியப்ப சிவாச்சாரியார் இந்த அவதார நிகழ்வை இவ்வாறு புகல்வார்:

"அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒரு திருமுருகன் ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய.'

அவன் பிரம்மம்- ஆக சுப்பிரமணியன், சிவ சுப்பிர மணியன்; அன்பர்கள் இதயக் குகையில் உறைபவன் என்பதால் குகன்; சிவனுக்குப் பிரணவப் பொருள் உரைத்தவன் என்பதால் சிவகுருநாதன், சுவாமிநாதன், தகப்பன் சுவாமி, குரு குகன்.

ff

Advertisment

முருகனின் இந்த அவ தாரம் சூரபத்மனை அழிக்கவே. இராமனுக்கு வில், அம்பு என்றால், கந்தனுக்கு அம்பாளே சக்திவேலாக மாறினாள். முருகன் சூர பத்மாதியரை சம்ஹரித்த தலம் திருச்செந்தூர் எனும் ஜயந்திபுரம்.

விஷ்ணுவுக்கு வாகனம் கருடன் என்றால் கந்தனுக்கு மயில். அது வேத பிரணவ சொரூபம். போரின்போது இந்திரனே மயில் வாகனமா னான். அக்னியே சேவல் கொடியானது. சூரபத்மன் சம்ஹாரம் நிகழ்ந்தபிறகு, சூரனை மயில் வாகனமாகவும் சேவல் கொடியாகவும் முருகன் ஏற்றுக்கொண்டான். பிள்ளை யாருக்கும் மயூரேஸ்வரரில் (புனே அருகே) மயில் வாகனம் உள்ளது. அவரே கந்தனுக்கு வாகனத்தைத் தந்தாராம்.

முருகனின் மயில் வாகன மானது நம்மைப் பார்த்திருந் தால் அது பிரணவ மயில். முருகனின் வலப்புறம் மயிலின் முகம் இருந்தால் அது சூரன் உருமாறிய மயில். முருகனின் இடப்புறம் மயிலின் முகம் இருந்தால் அது இந்திர மயில்.

"வேல், மயில், சேவல், குகனே துணை' என்பது மகாமந்திரம்.

வேலை வணங்குவதே நம் வேலை.

சேவலே தீர்க்கும் நம் கவலை.

மயிலே தரும் மனசாந்தி.

குகனே குருவாய் ஞானம்

அருள்வான்!

எனவேதான் கந்தரனுபூதியில் அருண கிரியார்,

"ஆடும் பரிவேல் அணி சேவல் எனப்

பாடும் பணியே பணியாய் அருள்வாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே'

என்கிறார்.

மகாவிஷ்ணுவுக்கு ஸ்ரீதேவி, பூதேவிபோல, கந்தனுக்கு வள்ளி, தேவசேனை என இரு தேவிகள் அருள்மழை பொழிய!

வைகாசி விசாக நன்னாளில் கந்தனை எண்ணி, அவனருளில் தோய்ந்து நெகிழ்ந்து மகிழ்ந்து உய்வோம்.

__________

பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

ன்மிகத்தில் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. சில விஷயங்களில் நமக்குத் தெரியாமல் தவறு நடந்துவிடும். இது இயற்கையே. ஆனாலும் நாம் செய்யக் கூடாத சில விஷயங்கள் இதோ...

* மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்துகொள்ள வேண்டும்.

* பெண்கள் கோவிலில் அங்கப் பிரதட்சிணம் செய்யக்கூடாது. (பெண்களின் மார்புப் பகுதி பூமியில் படக்கூடாது.)

* கோவில்களில் பிரசாதமாகத் தரப்படும் துளசியை தலையில் வைத்துக்கொள்ளக்கூடாது.

* பெண்கள் எப்போதும் முந்தானையைத் தொங்கவிட்டு நடக்கக்கூடாது.

* கோவிலில் தெய்வத்தை வணங்கும்போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு, முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

* தலை குளிக்கும்பொழுது சுமங்கலிப் பெண்கள் சிறிது மஞ்சளை உறைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்கவேண்டும்.

* கோலமிடும்போது தெற்கே பார்த்து நின்று கோலமிடக் கூடாது.

* திருமணமான பெண்கள் ஒரேவொரு விரலில் மட்டுமே மெட்டி அணியவேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணியக்கூடாது. அவ்வாறு அணிந்தால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்படையும்.

* கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோவிலுக் குப் போககூடாது.

* ண்கள் கிழக்கு திசையை நோக்கி நின்று, குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணமாகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளக்கூடாது.

* அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலமிடக் கூடாது.

-பா. கவிதா

om010622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe