குருமார்களின் அதிஷ்டானம்! -யோகி சிவானந்தம்

/idhalgal/om/good-luck-priests-yogi-sivanandam

வ்வொரு மனிதனின் மனோபாவமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். மனிதனின் பிறவி குணம் என்றும் மாறாது. ஆனால் மனம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும் அவரவரின் மனப்பான்மைக்கேற்றவாறு அவர்களைப் பக்குவப்படுத்துபவரே மகாகுரு.

உலக நன்மைக்காக இறைவனைப் பிரார்த்தனை செய்பவரே குரு. குரு எனப்படுபவர்கள் உண்மையை உணர்ந்தவர்கள். பிரதிபலன் எதிர்பாராதவர்கள். பிறரது துன்பத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள். கருணை மனம், நன்மைகளைச் செய்து அள்ளிக்கொடுக்கும் குணம் என்பது அவர்களது இரண்டு கண்கள்.

சாஸ்திர சம்பிரதாயங்களில் திடமான நம்பிக்கையுடன் திகழ்பவர்கள். சத்வகுணம்கொண்ட சத்தியசீலர்கள். பிரம்மத்தில் ஒன்றியவர்கள், தனக்குத் துன்பத்தைக் கொடுத்தாலும், அவர்களுடைய துன்பத்தைத் தீர்த்து நன்மையைக் கொடுப்பவர்கள்.

guru

"குரு' என்ற சொல்லில், "கு' என்பது அஞ்ஞானம், அறியாமை, மாயை என்பதாகும். "ரு' என்பது "நான் நான்' என்ற அகம்பாவத்தையும், மூவாசைகளையும், தீயகுணத்தையும் விடுவித்தல் என்பதாகும். ஆக் குரு என்பவர் ஞானம், அறிவு தந்து எல்லா தீயகுணங்களிலிருந்தும் நம்மை விடுவிப்பவர் என்பதாகும்.

துருவனுக்கு நாரதரே குருவாக இருந்து நாராயண நாமம் உபதேசித்தார்

துருவனுக்கு நாரதரே குருவாக இருந்து நாராயண நாமம் உபதேசித்தார். அந்த குரு கடாட்சத்தால் அவன் வானத்தில் துருவ மண்டலத்திற்கு உரியவனான். பிரகலாதனுக்கு அவனுடைய அன்னையின் கர்ப்பத்தில் இருந்தபோதே நாரதர் குருவாக இருந்து நாராயண நாமத்தை போதித்தார். பிரகலாதன் நாராயண பக்தனாகி, அந்த பக்தியே இரண்யகசிபுவை அழித்தது. சுந்தரருக்கு திருவாரூர் சிவபெருமானே குருவாக இருந்து அடி எடுத்துக்கொடுத்து அவரை "பித்தா பிறைசூடி' என்று பாடவைத்தார். "முத்தைத்தரு பத்தித் திருநகை' என்ற அடியை முருகப்பெருமானே குருவாக இருந்து எடுத்துக் கொடுத்து அருணகிரியாரை 16,000 பாடல்கள் கொண்ட திருப்புகழைப் பாடவைத்தான். அர்ஜுனனுக்கு கண்ணன் குருவாக இருந்து "பகவத்கீதை'யை உரைத்து, அவனுடைய அஞ்ஞானத்தை அகற்றினான். சுவாமிமலை முருகன் தனது தந்தைக்கே உபதேசம் செய்து "சுவாமிநாதன்' ஆனான்.

இதுபோன்று மனித வடிவிலும், தெய்வ வடிவிலும் பல குருமார்கள் இருந்திருக்கிறார்கள். பக்திமார்க்கத்திற்கும் ஞானமார்க்கத்திற்கும் பாலமாக குருமார்கள் இருந்திருக்கிறார்கள். நான்கு சாலையின் இணைப்பிலுள்ள கைகாட்டியானது நாம் எந்த ஊர்செல்ல வேண்டுமோ அந்த ஊருக்கு செல்லும் வழியைக் காட்டுவதுபோல, குருகாட்டும் வழியில்தான் நம் வாழ்க்கைப் பாதையைக் கண்டறிந்து ஊர்போய்ச் சேர்கிறோம்.

எனவே, குரு என்பவர் நமக்கு சரியான வழிகாட்டுபவர்.

இவ்வளவு சிறப்புப்பெற்ற குருமார்கள் ஒரு காலகட்டத்தில் "ஸத்யோமுக்தி'யை அடைகிறார் கள். அவர்கள் வேறு உலகங்களுக்குப் போகாமல் இறைவனிடம் ஐக்கியமாகிறார்கள். இப்படி சித்தியடைந்த குருமார்களின் அனுக்கிரக சக்தி ஊன்றிநின்று பக்தர்களுக்கு அருள்புரியும்படியான ஒரு சந்தானத்தை ஏற்படுத்துகிறது. எனவேதான் மகாகுருமார்களின் சமாதி "அதிஷ்டானம்' என்று அழைக்கப்படுகிறது. மகான்களின் சமாதி- அதாவது அதிஷ்டானங்களுக்குச் சென்று வழிபட்டால் அந்த குருமார்களின் ஆசிர்வாதங்கள் நமக்குத் தானாகவே வந்து சேர்ந்துவிடும். குருமார்களின் உபதேசமும், தரிசனமும், சேவையும் மனிதர்களுக்கு என்றென் றும் எல்லா நன்மைகளையும் பயக்கக்கூடியது. அதிலும் "அதிஷ்டானம்' சென்று வழிபட்டால் நடப்பதெல்லாம் நன்மையே.

தமிழ் நாட்டில் காவேரிக் கரையோரத்தில் நிறைய குருமார்களின் அதிஷ்டானங்கள் இருக்கின்றன. குறிப்பாக சத்குருஸ்வாமிகள், போதேந்திர ஸ்வாமிகள், ஸ்ரீதர ஐயாவாள் போன்றோரின் அதிஷ்டானங்கள் திருவாரூர் மாவட்ட காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. இதுதவிர பல்வேறு இடங்களில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள், பத்ராசல ராமதாஸர், வடஇந்தியாவில் சில பண்டரிநாத பக்தர்களின் அதிஷ்டானங்கள் உள்ளன. இன்றும் பல சித்தர்களின் அதிஷ்டானங்கள் ஆங்காங்கே உள்ளன.

இந்த அதிஷ்டானங்களுக்குச் சென்று அவர்களை மனமார வழிபட்டால், நமது துன்பங்கள், துயரங்களை அவர்கள் நீக்குகிறார் கள். அவர்கள் நம் துயர்துடைக்க என்றென் றும் காத்திருக்கிறார்கள். நாம்தான் அவர் களை நாடுவதில்லை.

ஒருசமயம் வேடன் ஒருவன் மானைத் துரத்திக்கொண்டே ஓடினான். மானோ சிக்காமல் துள்ளிக் குதித்தோடி, ஒரு மலை உச்சிக்குப் போய் நின்றுவிட்டது. வேடனும் அதை நெருங்கி வில்லையும் அம்பையும் எடுத்து அந்த மானை வீழ்த்த குறிவைத்தான். ஆனால் என்ன காரணத்தாலோ அவனது மனம் திடீரென மாறியது. மானைக் கொல்ல மனம்வராமல் போகவே, வீட்டுக்குத் திரும்ப வந்துவிட்டான். இந்த திடீர் மனமாற்றம் ஏன் ஏற்பட்டது என்பது அவனுக்குப் புரியவில்லை. இரவு முழுவதும் அதே சிந்தனையில் இருந்துவிட்டு, மறுநாள் எழுந்ததும் அந்த மான் ஓடிச்சென்று நின்ற இடத்திற்குப் போய்ப் பார்த்தான். அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது- அந்த மான் நின்ற இடம் ஒரு மகானின் ஜீவசமாதியான அதிஷ்டானம் என்று. அந்த மகானின் மனோதத்துவ உணர்வால் இவனுக்கு ஒரு உயிரைக் கொலைசெய்யக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, அந்தக் கொலையுணர்வு நீங்கியதை உணர்ந்தான்.

ஆகவே ஜீவன் முக்தர்கள், மகான் களின் அனுக்கிரக சக்தி அவர்களது அதிஷ்டானங்களில் எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் நம் தீய குணங்கள் நீங்கும். நற்குணங்களே நிரம்பும். நம் வேதனைகளை அங்கு கொட்டித் தீர்த்தோமானால் நமக்கு நல்லவழியை அவர்கள் காட்டியருள்வார்கள்.

குருவின் அதிஷ்டானங்களில் நாம் தலைவைத்து வணங்கினால் அந்த சக்தி நம்மிடம் எளிதில் வந்துசேரும். சிலசமயம் பிரம்மா எழுதிய நமது தலை யெழுத்தையேகூட மாற்றிவிடும். நமக்குப் பூரண ஞானம்கிட்டும்.

ஒரு குழாயின்கீழ் பாத்திரத்தை வைத்தால், எப்படி குழாயிலிருந்து வரும் தண்ணீர் பாத்திரத்தை நிரப்புகிறதோ, அதுபோன்றது மகான்களின் அதிஷ்டான அனுக்கிரகம். ஆற்றுவாரின்றி தேற்று வாரின்றி நாம் புலம்புகிறோம். நம்மை ஆற்றுவதும் காப்பாற்றுவதும் நம் மகா குருக்களின், ஜீவன் முக்தர்களின் அதிஷ்டானமாகும்.

குருவை நாம் வாசல்வரை கொண்டுவந்து நிறுத்திவிட்டால்போதும்; தெய்வம் தானா கவே நம் வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொள்ளும்.

om010421
இதையும் படியுங்கள்
Subscribe