தஞ்சைப் பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நிகழ்ந்த அதேநாளில், கொங்கு மண்டலத்திலுள்ள ஒரு ஊரில் மூன்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடலிலில் நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்தூரில் அருள்மிகு செல்வக் குமாரசுவாமி, அத்தனூர் அம்மன், குப்பயன சுவாமி ஆகியோருக்குதான் இந்த திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மற்றும் பெரும்சாந்திப் பெருவிழா தை மாதம் 22-ஆம் தேதி (5-2-2020) புதன்கிழமையன்று காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
3-2-2020, திங்கள்கிழமை காலை கொடுமுடி காவிரியாற்றங்கரையிலிருந்து தீர்த்தம் எடுத்துவந்து, சேரம்பாளையம் மாரியம்மன் கோவிலிலில் தீர்த்தமும், முளைப்பாரியும் எடுத்து, அனைத்து மூர்த்திகளையும் வாகனங்களில் அலங்காரத்தோடு எழுந்தருளச் செய்து, முத்தூர் பஸ் நிலையம், சின்னமுத்தூர் தண்ணீர்ப்பந்தல் வழியாக செல்வக் குமாரசுவாமி கோவிலை தீர்த்தக் குழு அடைந்தது. அங்கிருந்து அத்தனூர் அம்மன் எழுந்தருளியிருக்கும் முத்தூருக்கு வந்துசேர்ந்தது. அந்த ஊர்வல
தஞ்சைப் பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நிகழ்ந்த அதேநாளில், கொங்கு மண்டலத்திலுள்ள ஒரு ஊரில் மூன்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடலிலில் நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்தூரில் அருள்மிகு செல்வக் குமாரசுவாமி, அத்தனூர் அம்மன், குப்பயன சுவாமி ஆகியோருக்குதான் இந்த திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மற்றும் பெரும்சாந்திப் பெருவிழா தை மாதம் 22-ஆம் தேதி (5-2-2020) புதன்கிழமையன்று காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
3-2-2020, திங்கள்கிழமை காலை கொடுமுடி காவிரியாற்றங்கரையிலிருந்து தீர்த்தம் எடுத்துவந்து, சேரம்பாளையம் மாரியம்மன் கோவிலிலில் தீர்த்தமும், முளைப்பாரியும் எடுத்து, அனைத்து மூர்த்திகளையும் வாகனங்களில் அலங்காரத்தோடு எழுந்தருளச் செய்து, முத்தூர் பஸ் நிலையம், சின்னமுத்தூர் தண்ணீர்ப்பந்தல் வழியாக செல்வக் குமாரசுவாமி கோவிலை தீர்த்தக் குழு அடைந்தது. அங்கிருந்து அத்தனூர் அம்மன் எழுந்தருளியிருக்கும் முத்தூருக்கு வந்துசேர்ந்தது. அந்த ஊர்வலத்தில் ஏறத்தாழ 20,000 பேர் தீர்த்தம் எடுத்து வந்தனர்.
22-ஆம் தேதி காலை 6.00 மணியிலிலிருந்து 7.00 மணிக்குள் அத்தனூர் அம்மன் மற்றும் குப்பயனசாமி நன்னீராட்டு விழா முடிந்தவுடன், 8.00 மணியிலிருந்து 9.00 மணிக்குள் செல்வக் குமாரசுவாமி கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இரண்டு கோவில்களின்மீதும் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள்மீதும் ஹெலிலிகாப்டர்மூலம் பூக்களும் தீர்த்தமும் தெளிக்கப்பட்டன. கும்பாபிஷேக சமயத்தில் மூன்றரை லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அனுக்கிரகம் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியிலிருந்து புதன்கிழமை மதியம்வரை நடைபெற்றது. இதில் சுமார் பத்து லட்சம்பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
மேற்படி ஆலய நிர்மாணம், வெள்ளோட்டைச் சேர்ந்த சிற்பக்கலை ரத்னா டாக்டர் சி. முருகேசன் ஸ்தபதியின் வழிகாட்டுதலிலின்படி நடைபெற்றது. 2007-ஆம் வருடம் தொடங்கி ஏறக்குறைய 13 வருடங்களாக இந்த வேலைகள் தொடர்ந்து நடைபெற்றன. திருக்குடமுழுக்கை வி.எஸ். தண்டபாணி குருக்கள் முன்னின்று நடத்திக்கொடுத்தார். இதில் அமைச்சர்கள், மாவட்ட அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
முத்தூர் செழிப்பான மேய்ச்சல் நிலம். ஆடு, மாடுகளை மேய்ப்பது இங்கு வாழும் மக்களின் ஒரு பகுதி தொழிலாக இருந்தது. முன்னொரு காலத்தில், முள்ளி மாங்குழி என்ற புதரில் கன்று ஈன்ற பசுக்கள் சென்று பால் சொரிந்துவிட்டு வந்தன. இதை கவனித்த விவசாயிகள் ஏன் இவ்வாறு செய்கின்றன என்று அங்குசென்று பார்த்தனர்.
அப்போதுதான் அத்தனூர் அம்மன் சுயம்பு வடிவாக அங்கிருப்பதைக் கண்டனர்.
பிறகு இந்த அம்மனை வழிபடத் தொடங்கினார்கள்.
அடுத்து, கேரள மாநிலத்திலிருந்து புஜபல பராக்கிரமம் கொண்ட குப்பயனன் என்ற வாலிபர் தனது மூன்று சகோதரிகளான பேச்சி, சடச்சி, பசிரி ஆகியோருடன் கொடுமுடியிலுள்ள மகுடேஸ்வரரை வழிபட வந்திருக்கிறார். வழியில் கரையூர் என்னும் நத்தக்கடையூரில் தங்கியிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த விவசாயிகள் குப்பயனனைப் பார்த்து, ""எங்களுக்கு நீங்கள் உதவமுடியுமா'' என கேட்டுள்ளார்கள். என்னவென்று அவர் கேட்க, விவசாயிகள், ""ஐயா, தென்னிலையிலிலிருந்து இங்குவந்து எங்கள் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்துச் செல்கிறது ஒரு கும்பல். அவர்களை எங்களால் அடக்கமுடியவில்லை. நீங்கள் நினைத்தால் முடியும். அத்தனூர் அம்மனை வழிபட்டு நீங்கள் இந்த காரியத்தைச் செய்யமுடியுமா?'' என கேட்டனர். அதற்கு குப்பயனன் "செய்கிறேன்' என உறுதி கூறியதோடு, முத்தூர் வந்து அத்தனூர் அம்மனை வழிபட்டு, "தென்நிலையில் நான் வெற்றிபெற வேண்டும்' என வேண்டுகோள் வைத்ததோடு, "வெற்றிபெற்றபிறகு உனக்கு அதிர்வேட்டுகள் வெடிக்கிறேன்' எனக் கூறிவிட்டு தென்னிலை சென்ற குப்பயனன், அந்த கொள்ளைக் கும்பலை முழுமையாக அழித்துவிட்டு மீண்டும் கரையூர் திரும்பினார்.
அதன்பிறகு அத்தனூர்
அம்மனிடம்போய் தனது வேண்டுதல்படி அதிர்வேட்டுகள் செய்து வழிபட்டுள்ளார். அப்போது அத்தனூர் அம்மன், ""குப்பயனா, நீ மக்களைக் காத்ததுபோல எனக் கும் காவலிலிருக்க முடியுமா?'' என்று கேட்க, ""எனது சகோதரிகள் மூவரும் அங்கிருக்கிறார்களே?'' என குப்பயனன் கூற, ""அவர்களை யும் அழைத்துவந்து என்னோடு வைத்துக்கொள்கிறோன்'' என அத்தனூர் அம்மன் சொன்னா ளாம். அதன்படியே அத்தனூர் அம்மனோடு குப்பயனன் இருந்து கொண்டதாகவும், அவரது சகோதரிகளையும் கொண்டுவந்து அத்தனூர் அம்மன் அருகிலேயே அமர்த்திக்கொண்டதாகவும் கோவில் வரலாறு கூறுகிறது.
அதேபோல் பிள்ளைவரம் கேட்ட ஒரு குடும்பத்திற்கு செல்வக்குமரன் என்ற பிள்ளையை அத்தனூர் அம்மன் கொடுத்ததாகவும், பின்பு அந்த செல்வக்குமரன் என்கிற செல்வக் குமாரசாமியை, சின்னமுத்தூர் என்கிற நட்டூரில் இருந்தபடி மக்களுக்கு நன்மை செய்யுமாறு அம்மன் அனுப்பியதாகவும் கூறுகிறது இந்த வரலாறு.
ஆக, மூன்று தெய்வங்களும், அவர்களுடன் இருக்கும் மற்ற துணை தெய்வங்களும் சேர்ந்து இந்தக் கோவில்களில் உள்ளனர். நீண்டவருட பாரம்பரியம் கொண்ட இந்தக் கோவில்கள் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவை. காவல் தெய்வமான குப்பயனனுக்கு ஆடு, கோழி பலிலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது இப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது. செல்வக் குமாரசாமி, அத்தனூர் அம்மனோடு, முத்தூரில் வீற்றிருக்கும் குப்பயனன், கொங்கு மண்டலத்தின் காவல் தெய்வமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையோடு பேசப்பட்டுவருகிறார்.
இந்தக் கோவிலின் குடமுழுக்குதான் மிகச்சிறப்பாக நடைபெற்று மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.